Jump to content

மனிதப் பசளை ரெடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

A body is seen covered by a sheet on a bed of woodchips

எனி மனிதர்கள் இறந்தால் அவர்களின் உடலை தகனம் செய்யவோ.. அல்லது ஒரு ஒதுக்குப்புறமாக புதைக்கவோ தேவையில்லை. 

மனித உடலை பசளையாக்கி உறவினர்கள்.. இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக தமது வீட்டுத் தோட்டத்திலேயே தாவரங்களுக்கு தூவி விடலாம்.

அமெரிக்காவில் இறந்த உடல்களை வைத்து மேற்கொண்ட ஆய்வில்.. மனித உடலில் உள்ள மென் திசுக்களையெல்லாம்..  30 நாளைக்குள் பாதுகாப்பாகவும் திறமையாகவும்.. உக்க வைத்துவிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

மேலும்.. இதனால்.. யாருக்கும் தீங்கும் வராதாம்.

அதுமட்டுமன்றி இது ஒரு சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பை உண்டு பண்ணாத வழிமுறையாகவும் கருதப்படுகிறது.

An artist vision of a future Recompose facility shows circular vessels in a honeycomb structure in a garden

A US firm has given scientific details of its "human composting" process for environmentally friendly funerals.

https://www.bbc.co.uk/news/science-environment-51389084

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பலாக்கித் தூவும் துணிவே எம்மிடையே இல்லை. இதில் உரமாக்கி ..... ஐயோ வேண்டாம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு  படத்தில் பார்த்தேன்...இறந்தவர்களது நினைவாக அவர்களது சாம்பலை எரித்து, அந்த சாம்பலையும் சேர்த்து டட்டூ போடுகிறார்கள்:51_scream: 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா நாட்டில் இறந்தவர் உடலை கரைக்கும் தொழில் நுட்பம் பாவிக்கப்படுவதாக வாசித்தேன். உடலைக் கரைத்தபின் எஞ்சும் அலும்பை எரித்து விடுகின்றனர். 

Link to comment
Share on other sites

நல்ல வழிதானே சூழல் மாசுபாடும் குறையும் நிலங்கள் தேவை அதிகரிக்கும் காலம் இப்போது செலவு குறைவாக இருக்கவும் வேண்டுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

A body is seen covered by a sheet on a bed of woodchips

எனி மனிதர்கள் இறந்தால் அவர்களின் உடலை தகனம் செய்யவோ.. அல்லது ஒரு ஒதுக்குப்புறமாக புதைக்கவோ தேவையில்லை. 

மனித உடலை பசளையாக்கி உறவினர்கள்.. இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக தமது வீட்டுத் தோட்டத்திலேயே தாவரங்களுக்கு தூவி விடலாம்.

வீட்டுக்குள்... பிணமா? பேய்... பிடிக்கப் போகுது.  🎃
வேண்டாம் ஐயா... இந்த விபரீத விளையாட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

வீட்டுக்குள்... பிணமா? பேய்... பிடிக்கப் போகுது.  🎃
வேண்டாம் ஐயா... இந்த விபரீத விளையாட்டு. 

சிறித்தம்பி! நாங்களும் முன்னேறின நாடுகளை  பார்த்து முன்னேற வேணும் கண்டியளோ 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

வீட்டுக்குள்... பிணமா? பேய்... பிடிக்கப் போகுது.  🎃
வேண்டாம் ஐயா... இந்த விபரீத விளையாட்டு. 

வீட்டுக்குள்.. செத்த மான் கொம்பு... புலிப் பல்லு.. ஆனை முடி.. தந்தம்.. மான் தோல்.. மயிலிறகு.. சிப்பி.. சங்கு...இப்படி இஸ்தியாதி ஐட்டங்களை எல்லாம் வைத்து அழகு பார்க்கும்.. தாங்களா. பேய்க்குப் பயப்படுகிறீர்கள்..??! 

அதென்ன.. மனிதன் இறந்தால் தான் அவன் ஆவி பேய் ஆகுமா.. ஏன் பிற உயிரினங்களை ஆயிரக்கணக்கில் கொன்று அதன் பிணத்தை தின்கிறமே.. அப்ப அவற்றின் பேய் பிடிக்காதா.

அப்படிப் பார்த்தால்.. எத்தனை.. கோழிப் பேய்.. மாட்டுப் பேய்.. ஆட்டுப் பேய்.. பன்றிப் பேய்கள்.. மீன் பேய்.. நண்டுப் பேய்.. கணவாய் பேய்... இறால் பேய்.. கத்தரிக்காய் பேய்.. முருங்கைக்காய் பேய்.. உருளைக்கிழங்குப் பேய்...  இப்படி இன்னும் இன்னும்.. இந்த உலகில் அலைந்து கொண்டிருக்க வேண்டும். நம்மை பிடித்து தின்றிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை..??!

ஆனால் இங்கு பாருங்கள் மனிதனின் சுத்த சுயநலத்தை..

கூட இருந்த ஓர் உறவின் உயிர் பிரிந்த உடலை பிணம்.. பேய்.. பிசாசு.. என்று தூரக் கிடத்தி தான் தப்ப நினைக்கிறான். அது அவனை ஈன்றவர்களாகக் கூட இருக்கலாம். 

பேய் என்ற ஒன்றிருந்தால்.. அது கோழியை கொன்று வெட்டி கொத்தி.. அதன் பிணத்தில்...  ப்ரியாணி போட்டு சுவைக்கும் போதே பேய் பிடித்திருக்க வேண்டும். அதுதானே யதார்த்தம். 😆

கொஞ்சம்.. நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.. எவ்வளவு முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள் மனிதனை மனிதன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2020 at 9:17 PM, ரதி said:

நான் ஒரு  படத்தில் பார்த்தேன்...இறந்தவர்களது நினைவாக அவர்களது சாம்பலை எரித்து, அந்த சாம்பலையும் சேர்த்து டட்டூ போடுகிறார்கள்:51_scream: 

ரதி, டாப்சி நடித்து தமிழில் ‘ஹேம் ஓவர்’ என்றொரு படம் வந்திருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       
    காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்        
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         
    பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.            1.1.1
        
    முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு          
    வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்      
    கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்         
    பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.      1.1.2
        
    நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி      
    ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்          
    ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்            
    பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.        1.1.3
        
    விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்            
    உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்      
    மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்            
    பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே.        1.1.4
        
    ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன        
    அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்      
    கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்     
    பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.        1.1.5
        
    மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி        
    இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்          
    கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்           
    பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.     1.1.6
        
    சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த         
    உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்      
    கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்           
    பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.        1.1.7
                
    வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த        
    உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்       
    துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்     
    பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.         1.1.8
        
    தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்        
    நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்        
    வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்         
    பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.      1.1.9
        
    புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா        
    ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்      
    மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்     
    பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.      1.1.10
        
    அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய     1.1.11
    பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை         
    ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த        
    திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.   

காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன் 

உண்மையான அன்பு காதல் இருந்தால் இப்படித்தான் செய்ய தோன்றும் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.