Jump to content

கொரோனா வைரஸ்; 2020 இல் உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்- சர்வதேச நாணய நிதியம்


ampanai

Recommended Posts

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி 2020 இல் பாதிக்கப்படலாம் என சர்வதேச நாணயநிதியம் எச்சரித்துள்ளது.

வைரஸ் காரணமாக 0.1 முதல் 0.2 வரையான வீழ்ச்சியை எதிர்பார்க்கின்றோம் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜ்கிவா தெரிவித்துள்ளார்.

எவ்வளவு வேகமாக வைரசினை கட்டுப்படுத்துகின்றோம் என்பதை பொறுத்தே தாக்கத்தின் அளவு காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டிய முடிவுகளிற்கு வரவேண்டாம் என நான் அனைவருக்கும் ஆலோசனை வழங்குகின்றேன் என குறிப்பிட்டுள்ள அவர் இன்னமும் பெருமளவு நிச்சயமற்ற நிலை காணப்படுகின்றது,பலவகையான சூழல்களிற்கு மத்தியில் நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனவைரசினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினை தற்போது முழுமையாக கணிப்பிடமுடியாது ஆனால் சுற்றுலாத்துறை போக்குவரத்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜ்கிவா தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் என்ன வகையானது என்பது இன்னமும் தெரியாததால்  தற்போதைய நிலையில் எதனையும் தெரிவிக்க முடியாதுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் சீனாவால் எவ்வளவு வேகமாக இந்த வைரசினை கட்டுப்படுத்தமுடியும் என தெரிவிக்க முடியாது,உலகின் ஏனைய பகுதிகளிற்கு இது பரவுமா என்பதும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

வைரசினை விரைவில் கட்டுப்படுத்த முடிந்தால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவது குறைவடையும் அதேவேளை வேகமாக மீண்டும் சர்வதேச பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/75776

Link to comment
Share on other sites

ஒவ்வொரு பேரிடரும் யாரோ ஒருவருக்கு வருமானத்தை ஈட்டி தருகிறது. அப்படித்தான் கொரோனா வைரஸும். உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்க தனியார் ஜெட் விமானங்களின் வருவாய் இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பல மடங்கு உயர்ந்துள்ளது.

என்ன காரணம்?

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தால் பெரும் பணக்காரர்கள் மக்களுடன் மக்களாக விமானங்களில் பயணிக்க அஞ்சுகிறார்கள். தங்கள் பயணங்களுக்கென தனி விமானங்களை ஏற்பாடு செய்ய சொல்லி விமான நிறுவனங்களை (Charter Jets) அணுகுவது அதிகரித்திருக்கிறது. இப்படியான பயணங்களின் கட்டணம் மிக அதிகம்.

ஆனால் அதே நேரம், ஆள்பற்றாகுறை, கொரோனா அச்சம் காரணமாகத் தேவைக்கேற்ற விமானங்களை ஏற்பாடு செய்ய முடியவில்லை.

பிபிசியிடம் பேசிய ஆஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்ட டாரின் வோல்ஸ் பிரைவேட் பிசினஸ் ஜெட் நிறுவனம், "பலர் எங்களை அணுகுகிறார்கள். ஆனால், ஆள்பற்றாகுறை காரணமாக தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை," என்கிறது.

சிங்கப்பூரை நிறுவனமான மைஜெட் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி லோகன் ரவிசங்கர், "80 - 90 சதவீதம் அளவில் எங்களது சேவை அதிகரித்துள்ளது," என்கிறார்.

எவ்வளவு கட்டணம்?

கொரோனா வைரஸ்: மரண அச்சத்திற்கு இடையே லாபம் கொழிக்கும் நிறுவனங்கள் - சில தகவல்கள்படத்தின் காப்புரிமை Getty Images

பத்து பேர் அமரக் கூடிய இதுமாதிரி விமானங்களை வாடகைக்கு எடுக்க ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தது 420,000 ரூபாய் ஆகும்.

நான்கு பேர் அமரக்கூடிய சிறிய ரக விமானங்கள் என்றால் ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தது 168000 ரூபாய் ஆகும்.

https://www.bbc.com/tamil/global-51541047

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.