Sign in to follow this  
ampanai

‘எங்கள் சேவையில் உங்களையும் இணைத்திடுங்கள்’

Recommended Posts

image_11154178e7.jpg

அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத்

“எங்கள் சேவையில், உங்களையும் இணைத்திடுங்கள்” எனும் தொனிப்பொருளில், உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தால் கொடி வாரம்,  கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பீ. தர்ஷினியால் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பார்வையற்ற, பார்வைக் குறைபாடு உடையவர்களை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரம், கல்வி, கலை, விளையாட்டு போன்ற துறைகளை மேம்படுத்தி, சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குரிய செயற்பாடுகளை, மேற்படி அமைப்பு முன்னெடுத்து வருவதாக, உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களைத் தலைமையேற்று நடத்துபவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் போன்ற பல்வேறு தேவைப்பாடு உடைய அங்கத்தவர்கள், இந்த அமைப்பின் ஊடாக வழங்கப்படும் அனைத்துச் சேவைகளையும் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றுத் தொடக்கம் இம்மாதம் 28ஆம் திகதி வரை இந்தக் கொடி வாரம்  அனுஷ்டிக்கப்பட உள்ளதாக, உதயம் விழிப்புலனற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் டி.பேனாட், மாவட்டச் சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் திருமதி  பிரகலா சுதர்சன், தலைமையக  சிரேஷ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/திருகோணமலை/எஙகள-சவயல-உஙகளயம-இணததடஙகள/75-245637

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • New York governor increases fines to $1,000 for violating state's social distancing directive New York governor says it's a "good sign" that new hospitalizations are down in the state
    • எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தன்னுடைய கதை ஒன்றில் இப்படி ஒரு உதவியாளர் வாயில் தன்னுடைய பெயர் சிக்கி சிதிலமடைவதை நகைச்சுவையாய் குறிப்பிட்டுள்ளார் எந்த கதை என்பது மறந்து விட்டது .
    • யாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை ! யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தற்போதைய கட்டுப்பாட்டுகளுடன் இருந்துவிட்டால் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிவிடலாம் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.   யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 பேரை மாத்திரமே பரிசோதனை செய்துள்ளோம். எனவே அனைவரது மாதிரிகளையும் மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்யவேண்டுமாயின் ஆயிரம் தடவைகள் ஆய்வுகூடச் சோதனைக்குட்படுத்தவேண்டும். அதனை விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைவிட சிலர் வெளியில் இருக்க முடியும். அதனால் கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்திவிட்டோம் என்று கூறமுடியாது. எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துவைத்து மக்களின் நடமாட்டைத்தைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டிய நிலமை உள்ளது. அத்துடன், யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தொற்றுப் பரம்பல் அதிகரித்தால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலோ அல்லது மாகாண வைத்தியசாலைகளிலோ போதியளவு வசதிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் அடையாளப்படுத்தி முதலாவது கோரோனா நோயாளி கொழும்புக்கும் ஏனைய 6 பேரும் வெலிகந்தைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 கொரோனா நோயாளிகள் வரும் போது அங்குள்ள மருத்துவ சேவையாளர்கள் மத்தியில் ஒருவகை அச்சம் உருவாகும்  என்றார். https://www.virakesari.lk/article/79433
    • கலைத்துக் கலைத்து அடி போடுவாங்கள்  என்பது  தவறுதலாக அடி போடுங்கள் என வந்துவிட்டதோ ? 🤔 உங்களிடம் எதைத் திருடினார்கள் ?  😜 வெட்கத்தையோ ? 😂