Sign in to follow this  
ampanai

வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் - கே.கே.மஸ்தான்

Recommended Posts

வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு இம்மாதத்தில் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.


masthana.jpg

யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்தனை திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பாக வன்னி மக்களிற்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க இருக்கின்றது. இவ்விடயம் சென்ற அரசில் இருக்கின்ற அமைச்சர்களாலும் தொடர்ச்சியான சந்திப்புக்களாலும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியினாலும் இதற்குரிய அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக வர்த்தகமானியில் அறிவிக்க வேண்டிய விடயம் மட்டுமே உள்ளது. அரசாங்கங்கள் மாறும் போது ஆட்சி அதிகாரம் மாறும் போது இத்திட்டங்கள் கிடப்பில் போடப்படும். ஆனால் அவ்வாறு இல்லாமல் இவ்வாட்சியிலும் இது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் ஏன் பல்கலைக்கழகம் எமது மாவட்டத்திற்கு வரவேண்டும் என்பது தொடர்பாக தற்போதைய அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

அதன்படி இம்மாதத்திலேயே வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/75843

Share this post


Link to post
Share on other sites

மஸ்தான் பல்கலைக்கழகம்...ரிசாத்து பல்கலை ..அல் அமீனா என்று மாத்தாமல் இருந்தால் சரி..

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, alvayan said:

மஸ்தான் பல்கலைக்கழகம்...ரிசாத்து பல்கலை ..அல் அமீனா என்று மாத்தாமல் இருந்தால் சரி..

அவர்களது முயற்சியால் கிடைக்கும் நன்மைகளுக்கு நன்றியாக, அவர்களது நற்செயலை வரலாற்றில் நினைவுகூரத்தக்கதாக அவர்களது பெயரை வைப்பது நியாயமானது அல்லவா?

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, alvayan said:

மஸ்தான் பல்கலைக்கழகம்...ரிசாத்து பல்கலை ..அல் அமீனா என்று மாத்தாமல் இருந்தால் சரி..

இப்போதைக்கு அப்படி நடக்க சந்தர்ப்பம் இல்லை। இப்போது அவர் வாழ்வா , சாவா என்ற நிலைமையில் இருக்கிறார்। ராஜபக்ச ஆட்சி அவரை நிராகரித்துவிடடபடியால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை। நிறைய வழக்குகளை எதிர்நோக்கி இருக்கிறார்।எதிர்க்கட்சி இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு ஆட்சியை நினைத்துப்பார்க்க முடியாது। எனவே அல்-அக்ஸா பல்கலைக்கழகமாக மாற இப்போதைக்கு சந்தர்ப்பம் இல்லை। 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this