Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கொச்சிகட நாவல் - ஈழத்துயர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கொச்சிகட நாவல் | ஈழத் துயர்; அலைதலின் வேட்கை | கிருஷ்ணகோபாலன்

85074122_1918122498332046_11748547386513

சமகால தமிழீழ படைப்பாளியிடமிருந்து ஒரு படைப்பு வருகிறதென்றால் உடனடியாக அதை வாசித்துப் பார்க்க வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்கும் இயல்பாக வந்து விடுகிறது .மக்கள் அகதிகளாகி அல்லலுறச் செய்த போர் சூழலை, சிங்கள இனவாதத்தின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுவது என்பது தமிழீழ படைப்பாளிகளின் தார்மீகக் கடமை…

அந்த வகையில் மு. புஷ்பராஜின் ஈழப்போரில் எனது சாட்சியங்கள். கட்டுரைத் தொகுப்பு விடுதலை இயக்கங்களின் வேறொரு முகத்தைக் காட்டியது.மேலும் அகரமுதல்வன்,தமிழ்நதி,ஷோபாசக்தி போன்ற படைப்பாளிகளின் படைப்புகளின் வழியே ஈழம் குறித்து அங்கு செயல்பட்ட விடுதலை இயக்கங்களின் சாதக பாதகங்களையும் குறித்து அறிய முடிகிறது..

தற்போது ஈழவாணியின் கொச்சிக்கட vs கும்மிடிபூண்டி நாவல், கடந்த ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு அன்று கொழும்பு கொச்சிக்கட உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்தும் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் நிகழ்ந்த இனப் பேரழிவையும் non -லீனியர் முறையில் கானவி என்கிற பிரதான பெண்கதாபாத்திரத்தின் வழியே தொட்டுச் செல்கிறது.

2009 முடிவுக்கு வந்ததாக கருதப்படும் ஈழப் போருக்குப் பிறகு இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களை அச்சத்தில் உறையவைக்கவும் ,வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்கள் தமிழர்கள் மீது கொண்ட வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி அவர்களுக்குள் இணக்கமான சூழல் உருவாவதை தடுக்கவும் இலங்கை அரசப் படைகளே இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்கிற சந்தேகமும் நாவலில் பதிவாகியிருக்கிறது.

சிங்கள மற்றும் தமிழர்களுக்கிடையே நல்லுறவை பேணும் நோக்கம் என்கிற போர்வையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ‘சமாதானப் பாலம், என்ற அமைப்பின் வழியே சிங்கள இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் தமிழ் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை சமாதான சுற்றுலா வழியே சந்திக்க செய்து அவர்களுக்குள் காதல் உருவாவதன் மூலம் இனக்கலப்பு ஏற்படுவதன் வழியே அங்கு தமிழின அழிப்பை செய்யும் அரசாங்கத்தின் சூழ்ச்சியும் நாவலில் பதிவாகியிருக்கிறது.

81466643_1883348665142763_43108145227313

அங்கு சிங்கள இளைஞனான நுவனுக்கும் தமிழ் பெண்ணான கானவிக்கும் காதல் அரும்புகிறது. முகத்தில் எப்போதுமே இறுக்கத்தை தேக்கி வைத்திருக்கும் கண்ணன் என்னும் கதாபாத்திரம் கானவியை காதலிக்கிறான் அவன் விடுதலைபுலிகள் இயக்கத்தில் செய்திகள் பிரிவில் பணியாற்றுகிறான் என்பதே கானவிக்கு முள்ளிவாய்க்கால் யுத்த சமயத்தில்தான் தெரிய வருகிறது.முள்ளிவாய்கால் இறுதி போரிலிருந்து தப்பித்து ஆஸ்ரேலியாவுக்கு போவதாக போன் செய்து விட்டும் ஒரு மாதத்தில் போனில் அழைப்பதாக சொல்லிச் சென்றவன் மறுபடியும அழைக்கவே இல்லை.அவன் என்ன ஆனான் என்பதை குறித்து அறியாத கானவி கலங்கி நிற்கிறாள். கடந்த வருடத்தில் கூட ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றவர்கள் கடலோரப் படையினரிடம் அகப்பட்டுக் கொண்டதையும் இதோடு இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

வாழ்க்கை என்பது நேர்கோட்டுத்தன்மை உடையதல்ல முள்ளிவாய்கால் பிரச்சனையை ஒட்டி கானவி சென்னைக்கு வருகிறாள். இறுதிப்போரில் அம்மா இறந்துப் போவதை அறிகிறாள்.அண்ணன் ஒருவன் ஏற்கனவே விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறான் இன்னொருவன் தாய் குண்டடிப் பட்டு இறந்ததும் விடுதலைக்கான போர் களத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அம்மாவோடு கடைசி நிமிடங்கள் உடனிருந்த புனிதாவை சென்னையில் சந்திக்கிறாள். போர் சூழலில் கையிழந்து உயர்பிழைத்த புனிதா மேலும் சில தகவல்களைச் சொல்கிறாள். சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்படுவர்கள் தனியே முகாம்களில் அடைக்கப்பட்டு ஸ்லோபாயிசன் ஊசிப் போடப்பட்டு வெளியே அனுப்புவதும் அவர்கள் வெளியே வந்து ஒரு வருடகாலத்திற்குள் திடீர் திடீரென இறந்துப் போவதும் குறித்து சொல்லும் தகவல்கள் அதிர்ச்சி அளித்தது.

ஜோசப் கேம் .இலங்கை பூராவும் வாழக்கூடிய தமிழர்கள் தெரிந்திருக்கும் இடம்.இங்கு சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்டு வருபவர்களும், அரச குற்றவாளிகள் எனப்படுவோரையும் அடைத்து வைக்கும் சித்திரவதைச் செய்யும் முகாம்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாமில் அகதிகள் குறித்து ஒரு டாக்குமெண்டரி எடுக்கும் போது பூமணி ஆச்சியை சந்திக்கிறாள் கானவி . தொடர்ந்து பூமணி ஆச்சியோடுள்ள உறவில் குழந்தை யாழினியோடு நீண்ட ஸ்நேகம் உருவாகிறது . ஒரு பொழுது யாழினியை இலங்கையில் இருக்கும் அவள் அம்மா லெஷ்மியிடம் ஒப்படைப்பதற்காக கொழும்பு வரும் போது கொச்சிக்கட அந்தோணியார் கோவிலுக்கு பிராத்தனைக்காக உள்ளே செல்லும் பூமணி ஆச்சி குண்டு வெடிப்பில் கொல்லப்படுகிறாள்.

இப்போது குழந்தையை அவள் அம்மாவிடம் ஒப்படைக்கும் பொறுப்பு கானவியிடம் வந்துசேர்கிறது. லெஷ்மி இலங்கையில் உள்ள மடுவை என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் குழந்தைகளை பராமரிக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டவள் முடிவில் கானவி யாழினியிடம் கொண்ட பேரன்பை பூமணி ஆச்சி லஷ்மியிடம் சொல்லியிருப்பதால் குழந்தையை கானவியிடமே ஒப்படைக்கிறாள் லெஷ்சுமி.அவள் பயணப்பட்டு வந்த நான்கு சக்கரவாகனத்தின் ஓட்டுனர் முன்பு சமாதான பாலம் நிகழ்வில் வலுகட்டாயமாக கானவியின் மீது காதல் கொண்ட சிங்கள இளைஞன் நுகன். முடிவில் யாழினியோடு வண்டியில் பயணப்படும் போது நுகன் வண்டியில் ஒரு பாடலை ஓட விடுகிறான் கானவி கண்மூடியப்படியே பாடலைக் கேட்கிறாள்.

தன் கண்முன்னாலே கொத்துக் கொத்தாக தன் இனம் கொல்லப்படுவதை கண்ட மனிதர்கள் உயிர் வாழ, இனமற்ற இனமாக மாறுவதைத் தவிர வேறு வழி இல்லை போலும் .அனாதையாக்கப்பட்ட யாழினியை தன்மகளாக பாவிக்கவும் சிங்கள இளைஞனை தன் வாழ்க்கைத் துணையாகவும் ஏற்றுக் கொள்ளவும் ஒரு மன நிலையை போர்சூழல் உருவாக்கி விட்டது போல் நாவலின் முடிவு வருகிறது. உண்மையில் ஈழ மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது? தனி ஈழம் என்கிற கனவு தகர்ந்துக் கொண்டு வருகிறதா?

ஒரு போர் சூழல் மக்களை அகதிகளாக புலம் பெயர்த்துகிறது. வழமையான எல்லா செயல்பாடுகளையும் கலைத்துப் போடுகிறது.நிலையற்ற திருமண உறவுகளுக்குள் நகர்த்துகிறது .அது வரையிலும் புனிதமாக கருதிவந்த எல்லா மதிப்பீடுகளின் மீதும் கேள்வி எழுப்புகிறது. கடவுளின் இடத்தை காலியாக்கி புதிய கோட்பாடுகளின் பிறப்பிடமாக மாறுகிறது.

இந்நாவல் விவாதங்களை கிளப்பும் பல விஷயங்களை அடிக் கோடிட்டு கடந்துச் சென்றாலும் வலுவான ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை குறுக்கும் நெடுக்குமாக விசாரணை செய்யும் வாய்ப்பு இருந்தும் அதை தவறவிட்டிருக்கிறார் நாவலாசிரியர்.மேலும் மொழியை சற்று கூர்மைப் படுத்தி இருக்க வேண்டும் .வாசகனுக்கு விளங்காமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் பல இடங்களில் விளக்கம் கொடுக்கிறார்.அது அவசியமில்லை என்பது என் எண்ணம்.

நாவலில் பயன்படுத்தும் பல வார்த்தைகள் குமரிமாவட்டத்தில் மக்களிடையே புழங்கு மொழியாக இருப்பவை.

–கிருஷ்ணகோபாலன்

http://www.vanakkamlondon.com/eelavani-17-02-2020/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • Published By: NANTHINI 02 APR, 2023 | 12:45 PM   800 சாரதிகள் மற்றும் 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என இ.போ.ச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையில் 1,035 சாரதி வெற்றிடங்கள் மற்றும் 450 நடத்துநர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிய ஆட்சேர்ப்பு மூலம் இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என இ.போ.ச தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/151946
  • விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், எந்தவித குற்றங்களுமின்றி😂
  • மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதற்கு 'குசு தாக்குதல்' (Fart Attack) என்று பெயரிடப்பட்டது. டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் இந்த அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது. கட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம் தேச எல்லைகள் கடந்து சூட்கேஸில் பயணம் செய்த பத்து வயது சிறுவன் சரி, இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது. இந்த சம்பவத்தின் மையப்புள்ளியான அந்த பயணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? உடலில் இருந்து ஏன் காற்று வெளியேறுகிறது?   பட மூலாதாரம்,GETTY IMAGES அந்தப் பயணி வேண்டுமென்றே காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார். இதற்கு காரணம் என்ன? காற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறது? இது நோயா? இதை கட்டுப்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஹெல்த்லைன் என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. நாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது. உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது. புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது? அதன் வடிவம் மாறும்போது, கடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும், மணமாகவும் உருமாறுகிறது. நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டது. வாயு அதிகமாகும்போது, அது வாய் வழியாக வெளியேறினால் 'ஏப்பம்' என்றும், மலக்குடல் வழியாக வெளியேறினால் 'குசு' என்றும் அழைக்கிறோம். உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்: கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது. சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன. எப்போது வயிற்று வலி ஏற்படும்? பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்? வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும். ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும், சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும். இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையான நபர் இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும். உதாரணமாக ஒரு பலூனை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் அதில் காற்றை செலுத்தினால் அது பெரிதாகும். காற்றை செலுத்தச் செலுத்த விரிவடைந்துக் கொண்டே போகும் அதன் தாங்கும் திறனுக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா? சரி உடலில் அழுத்தம் கொடுக்கும் வாயுவை அடக்க முயற்சித்தால் என்ன நடக்கும்? பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் இப்போது கட்டுப்படுத்தினாலும், அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டு, காற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம், அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது. பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, குடல் தசைகள் விரிவடைகின்றன. அப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.   இது கவலைக்குரியதா? நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம். இதைத் தவிர, சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும், இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும். வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பது, வேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடு, இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டம் (NHS) என்ற வலைத்தளத்தில் இவ்வாறு காணப்படுகிறது, 'ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.' பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது. வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். சரி, மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி? உணவு முறையில் மாற்றம் மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால், உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும். உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோ, பால் ஒவ்வாமை இருந்தாலோ, பால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம். பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால், உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும். உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும், பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால், காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால், திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம், அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள் சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும். ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம், நன்கு மென்று சாப்பிடவும். உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும். அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறது. எனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாது, ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை, லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ், குளுக்கோஸ்), இன்சுலின், நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES சோடா, பீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள், உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது. இவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. எனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர், தேநீர், பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம். நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றன. புரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதேபோல, மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும், அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லை. அதற்காக கவலைப்படவேண்டாம். உணவு முறையையையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும், பொதுவான சில மருந்துகளே போதுமானது. ஆனால், வாயு அதிகமாக வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்கமுடியாது. டையபுலிமியா - உலகின் மிகவும் அபாயகரமான நோய் எனவே காற்று அதிகமாக வெளியேறும் போது, அதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கலாம் என்று அறிவுறுத்துகிறோம்: வலி தலைசுற்றல் வாந்தி வயிற்றுப்போக்கு மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ இந்த கட்டுரையை படித்த பிறகு தெளிவு ஏற்படலாம். உங்களை கேலி செய்பவர்களுக்கு படித்தும் காட்டி உங்களிடம் இருந்து வெளியேறிய காற்று கட்டுப்படுத்த தேவையற்றது, அதற்கு நீங்கள் காரணமல்ல என்பதையும் நிருபிக்கலாம். ஆனால், இது அனைவரும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம். ஏனெனில் ஒருவரின் உடலில் இருந்து வெளியேறிய காற்று விமானத்தையே தரையிறக்கிவிட்டதே... https://www.bbc.com/tamil/india-43166184
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • அந்த  மூன்று பேரில் ஒருத்தன், கூடப் பிறந்த சகோதனாம். எவ்வளவு கீழ்த்தரமான மனிதர்கள். 😡
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.