Jump to content

ஆட்டத்தை ஆரம்பிக்கிறதா அமெரிக்கா?


Recommended Posts

.நா மனித உரிமைகள் பேரவையின்  43 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்.

இறுதிக்கட்டப் போரின் போது லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது டிவிசன் படையினர், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கிடைத்த நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டதற்கான நம்பகமான ஆதாரங்களை அமெரிக்க இராஜாங்க செயலர் கொண்டிருந்தால், அந்த நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தகுதியற்றவர்கள் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்  வெளிநாட்டு செயற்பாடுகளுடன்  தொடர்புடைய 7031 (சி) இலக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையிலேயே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

.நா மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்,  தீவிரமானவை, நம்பகமானவை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிவிப்பு வெளியானவுடன், வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில்  இருந்தே அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில், கூறப்பட்டிருப்பதைக் கொண்டே, இவ்வாறானதொரு அறிவிப்பை அதுவும் தற்போதைய தருணத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கருத முடிகிறது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவுடனேயே அமெரிக்கா அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. கொழும்பில் அமெரிக்க தூதரகமும் வொஷிங்டனில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன. அத்துடன், இந்த நியமனத்தினால் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது. அந்த அறிவிப்பை அப்போதைய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.  இது புதிய அரசாங்கத்துக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்தது.

அதனால் தான், கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணவரத்ன ஓய்வுபெற்றதை அடுத்து, பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை, நியமித்திருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் .

இந்த நியமனத்தின் மூலம், அவர், .நா.வுக்கும் ஒரு செய்தியை வழங்கியிருந்தார். .நா அல்லது சர்வதேச நெருக்குதல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்பதே அந்த செய்தி. அந்த செய்தியை அமெரிக்கா புரிந்து கொண்ட பின்னரே, இலங்கையின் இராணுவத் தளபதி மற்றும் குடும்பத்தினருக்கு தமது நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதித்திருக்கிறது.

இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், பாதுகாப்பு மறுசீரமைப்பு போன்றவற்றுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கா, போர்க்குற்றச்சாட்டுகள் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வந்திருப்பதை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது அரசாங்கம்.

இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதும் அமெரிக்கா எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஆனாலும், அதனை இலங்கை அரசாங்கம் கருத்தில் கொள்ளாமல் தான், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக நியமித்திருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் .

அந்த நியமனம், இடம்பெற்று 45 நாட்களுக்குள் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறது அமெரிக்கா.

.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி தொடங்கப் போகிறது. இந்த அமர்வில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கு வழங்கிய கால அவகாசம் முடிவடையும் நிலையில், இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இந்தநிலையில், தற்போதைய அரசாங்கம் காலக்கெடுக்களுக்கு அமைய செயற்படத் தயாரில்லை என்று கடந்த வியாழக்கிழமை, .நா பாதுகாப்புச் சபையில், அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான அமைதி மோதல்கள் மற்றும் மோதல்களுக்குப் பிந்திய நிலைமைகளில், நிலைமாறுகால நீதி என்ற தலைப்பில் நடந்த திறந்த அமர்வில்,  உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி சேனுகா செனிவிரத்ன அறிவித்திருக்கிறார்.

எனவே, ஜெனீவாவில் இம்முறை இலங்கை அரசாங்கம், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை ஏற்றுச் செயற்படும் என்று கருத இடமில்லை. இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அல்லது இம்முறை கூட்டத்தொடர் விடயத்தில் கடும்போக்கு நீடிக்கும் என்ற செய்தியைக் கொடுக்க முயன்றிருக்கலாம் அமெரிக்கா.

இலங்கையில் போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள் என்ற அடிப்படையில், அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள் பலர். இராணுவ அதிகாரிகள் மாத்திரமன்றி, விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகர்கள் பலரும் கூட, அவ்வாறான தடையில் இருக்கின்றனர்.

ஆனாலும், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பற்றி, இவ்வாறானதொரு பகிரங்க தடை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இது தான் முதல் முறை. ஏற்கனவே தற்போதைய பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகளுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்திருந்தது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் கூட அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

இவர்கள் அனைவருக்கும் வீசா மறுக்கப்பட்டதே தவிர, அது பற்றி அமெரிக்கா பகிரங்கப்படுத்தவில்லை. தனிப்பட்ட நபர்களின் வீசா கோரிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றே அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.

அத்துடன், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவ அதிகாரிகளுக்கு மாத்திரம் வீசா மறுக்கப்பட்டதே தவிர, அவர்களின் குடும்பத்தினருக்கு மறுக்கப்படவில்லை. ஆனால், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பகிரங்கமாகவே தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதுடன், அவரது நேரடி குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது, இலங்கையில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை அணுகுகின்ற விடயத்தில் அமெரிக்கா இன்னுமொரு படி முன்னே சென்று முடிவெடுத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதனால் தான், “பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. ஆனால், இது இலங்கைக்கு எதிரான கடுமையானதொரு நடவடிக்கை அல்ல. இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான முடிவுகளையும் அமெரிக்கா எடுக்கவில்லை. இராணுவத் தளபதிக்கு எதிராக, அவரது குடும்பத்தினருக்கு எதிராகவே அமெரிக்கா முடிவுகளை எடுத்திருக்கிறது. அதேவேளை இலங்கையுடன் உறவுகள், ஒத்துழைப்புகள் தொடருவதற்கான சமிக்ஞைகளையும் காட்டியிருக்கிறது.

அமெரிக்காவின் இந்த முடிவை, இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்த்திருக்கிறது. இது குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல், ஆதாரங்களை சரிபார்த்து இந்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று வழக்கம்போலவே தட்டிக்கழிக்க முனைந்திருப்பதுடன், ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு இராணுவத் தளபதியை நியமிக்கும் உரிமையை வெளிநாடு ஒன்று கேள்விக்குட்படுத்தும் விடயமாகவே பார்ப்பதாகவும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் குறுக்கீடு என்றே கருதுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே, புறச் சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டின் இறைமை, சுதந்திரம் போன்ற விடயங்களில் யாருக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் கூறிவந்திருக்கிறது.

அதனையே தான் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை சற்று வேறுபட்ட மொழிநடையில் வெளிப்படுத்தியிருக்கிறது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை, .நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறாது என்று கூறியுள்ளதானது, நீதியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தெம்பைக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது.

 

https://www.virakesari.lk/article/75823

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனும் தம்பியும் சீனாவுக்கு போய் வந்தால் அமெரிக்காவின்ரை முகம் கறுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம் முடியுறதுக்குள்ள தமிழற்ற சீவன் முடிஞ்சிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன்ர அரசியல் எப்படியோ போக .. உந்த ஆய்வாளர்கள் தொல்லை தங்காதே..!😢 பசுபிக் கடலை தொட்டு அண்டார்டிகாவை றச் செய்வினம்.. தலைப்பு அருமை ..! 😊 .. இன்னும் குறை கட்டுரைகள் வருவதற்குள் ஊரை காலி செய்குக..! ☺️

04-1420368972-vadivelu1-comedy-600.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உந்த ஆய்வாளர்கள் தொல்லை தங்காதே.

 

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்னும் குறை கட்டுரைகள் வருவதற்குள் ஊரை காலி செய்குக..! ☺️

மிகச் சரியாக சொன்னீர்கள் தோழர்💯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்டப் போரின் போது லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாதலைமையிலான 58 ஆவது டிவிசன் படையினர், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களில்ஈடுபட்டதாக கிடைத்த நம்பகமான ஆதாரங்களின்அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்காகூறியிருக்கிறது.

அதே காலகட்டத்தில் அமெரிக்க பிரஜை கோத்தபய ராஜபக்சதானே பாதுகாப்பு செயலாளராக இருந்து போரை வழிநடத்தினார் என்பதையும் அதனால் அவருக்கும் மேலே சொல்லப்பட்ட அனைத்து குற்றங்களிலும் பங்கு உண்டு  என்பதை தெரிந்திருந்தும்  ஏன் அமெரிக்கா இதுவரை அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

இறுதிக்கட்டப் போரின் போது லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாதலைமையிலான 58 ஆவது டிவிசன் படையினர், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களில்ஈடுபட்டதாக கிடைத்த நம்பகமான ஆதாரங்களின்அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்காகூறியிருக்கிறது.

அதே காலகட்டத்தில் அமெரிக்க பிரஜை கோத்தபய ராஜபக்சதானே பாதுகாப்பு செயலாளராக இருந்து போரை வழிநடத்தினார் என்பதையும் அதனால் அவருக்கும் மேலே சொல்லப்பட்ட அனைத்து குற்றங்களிலும் பங்கு உண்டு  என்பதை தெரிந்திருந்தும்  ஏன் அமெரிக்கா இதுவரை அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

அதன் பெயர் இராச தந்திரம். 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM   காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
    • 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்    
    • அது மூட்டைப் பூச்சி…! இது நுளம்பு…!
    • உந்த கடிக்கதை முன்னரும் கேட்ட மாதிரி இருக்கே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.