• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ஈழம் மகிழ்நன்

அகமும் அந்தரங்கமும்

Recommended Posts

 

 அத்தை மகள் அங்கே சோலையில் அத்திப்பழம் பறிக்க

 அவள் அழகை கண்டு

 அக்கா மகன் மனம் தடுமாற

 திட்டம் போட்டு திருட தானோ

 பொழுதெல்லாம் கண்டும்

 காணாத மாதிரி நோட்டம் விடுகிறான்

 என அவள் எண்ண

 சந்தர்ப்பங்களில்

 சந்திக்க முற்படும்போதெல்லாம்

 நாணமும் பிறந்து

 நாழிகையும் இறக்குதே

 உரையாடமல் நடைபோட்டு

 இருவரும் விலகி சென்றதாலே

 கண்மூடித்தனமான எண்ணங்கள் பிறக்குதே

 திருமணத்திற்கு பின்பு கணவன்

 பிறை நுதலில் இடும் முத்தம் திருத்தாமாகுதே

 திருமணத்திற்கு முன்பு காதலன்

 இதழில் வைக்கும் முத்தம் கீழான

 உணர்வு மேலும் வளர காரணமாகுதே 

 ஊடலில் ஏற்படும் பிரிவுகளே

 உண்மையான அன்பை விரிவாக்கும் தூண்டுக்கோலே

 

நவீனம் வளர்ந்தும் நாகரீகம் தாழ

 கருத்தடை பயன்படுத்தால்

 கட்டிலில் உணர்வினை கட்டுபடுத்தமால்

 எல்லை மீறியதால் தான் தொட்டிலில் நிறையுது பிள்ளைகள்....

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

நீங்களும் கவிதைதானா ?? சரி எழுதுங்கோ தொடர்ந்து

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்களும் கவிதைதானா ?? சரி எழுதுங்கோ தொடர்ந்து

நன்றி சகோதரி.... முடிந்தவரை நல்லதை கோர்த்து வாக்கியமாக விரல் நுனியில் கதைக்கிறேன்...

Share this post


Link to post
Share on other sites
On 2/17/2020 at 5:32 PM, ஈழம் மகிழ்நன் said:

கட்டிலில் உணர்வினை கட்டுபடுத்தமால்

கட்டிலில் உணர்வை விசுவாமித்திரராலும் கட்டுப்படுத்தமுடியாத போது அற்ப மானிடர் என்ன செய்யமுடியும்?😂

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, கிருபன் said:

கட்டிலில் உணர்வை விசுவாமித்திரராலும் கட்டுப்படுத்தமுடியாத போது அற்ப மானிடர் என்ன செய்யமுடியும்?😂

சிரிப்பலை தான்  இலக்கிய (அ) இந்து மத இதிகாச நிகழ்வுகளை நினைக்கையில்

ஆனால் அற்ப மனிதர் குடுமத்தை சீர்மையாக நடத்தும் வருமானம் கூட இல்லாமல் மக்கள் தொகையை

பெருக்குவது நியாமா அவனுக்கும் உதவித்தொகை தருமா  இந்தியா அரசு?

சில அயல் நாடுகள் அரசாங்கம் போல்!

Share this post


Link to post
Share on other sites

கவிதையே அழகுதான்.....இதில் அத்தை மகளைப்பற்றி எழுதினால் சொல்லவா வேணும்.......!  😁

Share this post


Link to post
Share on other sites

மகிழ்நன் ஆதி கொஞசம் மக்கு நீங்க காதலை இரசிக்கச் சொல்றியளா இல்ல கட்டுப்பாடா கலவி செய்யச் சொல்றியளா? கட்டுப்படாமல் கலவி செய்ய சொல்றியளா... ஆதிக்கு இந்தக் கவிதையை வாசிச்ச பெறவு மூளை கொஞ்சம் மார்க்கமா சிந்திக்குது.....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இவரின் பல நிகழ்ச்சிகள் பாத்திருக்கிறேன்.நான்நினைக்கிறேன் மனிசியுடன் ஒரு ஒப்பந்தம் இருக்கும் என்டு.இல்லை என்டால் இவளவு காலம் இவர் வண்டி ஓடாது;
    • ஆண்கள் தைரியசாலிகளாக இருக்கலாம் பெண்கள் புத்திசாலிகள். எம்ஜிஆர் எவ்வளவு கஸ்ரப்பட்டு அதிமுக வை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தார்.  பின்னாளில் ஜெயல்லிதா சுலபமாக ஆட்சியைப் பிடிக்கவில்லையா? 
    • லெப். கேணல் அசோக் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். On Apr 2, 2020 லெப். கேணல் அசோக் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகாவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அரசி / இதயா, மேஜர் லக்சனா, லெப்டினன்ட் மணிநிலா, 2ம் லெப்டினன்ட் கிளிமொழியாள், வீரவேங்கை கலைமகள், வீரவேங்கை பூங்கொடி, வீரவேங்கை தமிழிசை / மதுரா ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது இத்தாவில் பகுதியில் கண்டிவீதியை ஊடறுத்து நிலைகொண்டிருந்த வேளை இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியின்போது எமது மோட்டார் எதிரியின் கையில் அகப்படக்கூடாது என்பதற்காக மற்றவர்களை தளம் அனுப்பிவிட்டு மேட்டாருடன் குண்டை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் இசைவளவன் / நறுமுத்து அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் புவீந்திரன் / மண்ணரசன், லெப்டினன்ட் கூத்தரசன் / நிலவன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை குயில்வண்ணன், வீரவேங்கை தமிழன்பன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று மணலாறு கோட்டத்தில் மருதவோடைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் கிட்டு, மேஜர் அன்பு, 2ம் லெப்டினன்ட் ஜெயசீலன், 2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று திருமலை மாவட்டம் மூதூர் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் இளமாறன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சின்னவத்தை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை குருமதன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2007 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு கோட்ட கோப்பாவெளிப் பகுதியில் முன்னேற முயன்ற சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நவசங்கர், மேஜர் விழியரசன், மேஜர் ஜெகநாதன், லெப்டினன்ட் எழில்நிலா, 2ம் லெப்டினன்ட் நிமலன், வீரவேங்கை புவனேந்திரன், வீரவேங்கை சுடரோன், வீரவேங்கை செந்தமிழினி, வீரவேங்கை வசீகமாறன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.04.2007 அன்று வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் திராவிடன் / ஆரியன், லெப்டினன்ட் நெடியோன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.04.2007 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரவேங்கை சுபதீபன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் விடிவிற்காக 02.04.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் இளம்புலி, கப்டன் புரட்சித்தம்பி, கப்டன் அமலன், லெப்டினன்ட் கரிகாலினி / மதியருவி, லெப்டினன்ட் பரணி, லெப்டினன்ட் கதிரவன், லெப்டினன்ட் பகீரதன், லெப்டினன்ட் குயிலினி, 2ம் லெப்டினன்ட் போர்வாணன், 2ம் லெப்டினன்ட் இளங்கீரன், வீரவேங்கை பொய்கைக்கிளி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.04.2009 அன்று முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருட னான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் அசோக் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.   https://www.thaarakam.com/news/120724  
    • கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி? கிறிஸ்டி ப்ரூவர் பிபிசி MStudioImages / getty images சித்தரிக்கும் படம் கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது.  இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்ய தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். செய்திகள் மற்றும் கொரோனா குறித்து படிப்பதை கட்டுப்படுத்துங்கள் கொரோனா வைரஸ் குறித்து தினமும் கேட்கும் செய்திகள் நமக்கு கவலை அளிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இந்த செய்திகள் இன்னும் அதிகம் பாதிப்படைய செய்யும். கொரோனா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியபோது உலக சுகாதார நிறுவனம் மன நிலையை பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகள் சமூக வலைதளத்தில் அதிகம் வரவேற்கப்பட்டன. EMMA RUSSELL பதற்றம் அடைபவர்கள் குறித்து பிரிட்டனின் நிக்கி லிட்பெட்டர் கூறுகையில், ''கட்டுப்பாட்டை மீறி நிலைமை மோசமடையும்போது ஏற்படும் அச்சம், நிச்சயமற்ற தன்மையை பொறுத்துக்கொள்ளமுடியாமல் ஏற்படும் கவலை, இவை இரண்டும்தான் நாம் பதற்றம் அடைய காரணமாக உள்ளது'' என்கிறார். எனவே இயல்பாகவே பதற்றத்துடன் இருக்கும் நபர்களுக்கு இந்த சூழ்நிலையை எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது,'' என்கிறார். ''நாம் அறியாத பல விஷயங்கள் குறித்துதான் பொதுவாகப் பதற்றம் ஏற்படும். ஏதாவது நடந்து விடுமோ என்ற உணர்வில்தான் பதற்றம் வேரூன்றி இருக்கிறது,'' என்கிறார் மனநிலைக்கான அறக்கட்டளை ஒன்றின் செயற்பாட்டாளர் ரோஸி. செய்திகளைப் படிக்கும்போது கவனம் தேவை. கேண்டில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிக், கொரோனா வைரஸ் குறித்து அதிக செய்திகளைப் படிப்பதே கவலை அளிக்கிறது என்கிறார். ''நான் கவலை அடையும்போது, என் எண்ணங்கள் கட்டுப்பாட்டை மீறி, பேரழிவின் விளைவுகள் மீது செல்லத் தொடங்கியது,'' என கூறுகிறார். மேலும் தனது பெற்றோர்கள் மற்றும் தனக்குத் தெரிந்த முதியவர்களின் நிலை குறித்தும் கவலையாக இருக்கிறது என்கிறார். ''பொதுவாக கவலையில் இருந்தால், அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வேன். ஆனால் தற்போது அப்படி செய்ய முடியவில்லை,'' என்கிறார். கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்  Pandemic என்றால் என்ன?  கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?  முறையாக கை கழுவுதல் எப்படி? கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? இணையத்தில் செய்திகளைப் படிப்பது மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது உள்ளிட்ட சில அறிவுரைகளை நிக் கடைபிடித்ததால், தான் தற்போது நல்ல மனநிலையில் இருப்பதாக தெரிவிக்கிறார். உங்களை பாதிக்கக்கூடிய செய்திகளை காண்பதையும் படிப்பதையும் தவிருங்கள். மாறாக அடிப்படை செய்திகளை அறிய குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் செய்திகளை கவனியுங்கள். நிறைய தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவிவருகின்றன. எனவே சரியான செய்திகளை ஒளிப்பரப்பும் ஊடகம் அல்லது அரசாங்கம் வெளியிடும் தகவல்களை மட்டும் நம்புங்கள். சமூக ஊடகத்தில் இருந்து விலகி இருங்கள். சமூக வலைத்தளம் அதிகம் வேண்டாம் மான்செஸ்டரில் வசிக்கும் அலிசன், ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் குறித்த அனைத்து செய்திகளையும் படித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக இருந்த எல்லா ஹாஷ்டேகுகளையும் பின் தொடர்ந்துள்ளார். ஆனால் நாளடைவில் இதனால் மனம் வருந்தி பல முறை அழுததாக கூறுகிறார். எனவே தற்போது சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவிடாமல், விலகி இருப்பதாகவும், தமக்கு கவலை அளிக்கும் எந்த செய்திகளையும் பார்ப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார். கொரோனா வைரஸ் குறித்து அடிக்கடி தகவல்களை வெளியிடும் வாட்ஸ் ஆப் குருப்புகளை மியூட் செய்யவும். பேஸ்புக்கில் உங்கள் மனதை காயப்படுத்தும் பதிவுகளை ஹைட் செய்யுங்கள்.  கை கழுவுங்கள் - ஆனால் அடிக்கடி வேண்டாம். கைகளை கழுவுங்கள், ஆனால் அதீதமாக அல்ல ஓ.சி.டி எனப்படும் ஒரு செயலை பலமுறை செய்ய தூண்டும் மனநோய்க்கு ஆளாகி, தேவையான ஆலோசனைகள் பெற்று தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு தற்போது குழப்பம் நிலவுகிறது. EMMA RUSSELL குறிப்பாக ஓ.சி.டி யால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவகையினர் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மேற்கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை தவிர்க்கும் முயற்சியில் டுபட்டிருப்பார்கள். ஆனால் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர்களுக்குள் தற்போது குழப்பம் நிலவும். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க தற்போது அவர்கள் மீண்டும் சோப் மற்றும் சானிடைசர் பயன்படுத்த ஆரம்பித்தால், பிறகு மீண்டும் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது சவாலாக இருக்கும். எந்த வகையான ஓ.சி.டி யால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தங்களை திசைத்திருப்பி கொள்ள வெளியில் செல்வார்கள். ஆனால் தற்போது அவர்களை திசைத்திருப்பிக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எவ்வாறு? நண்பர்களுடன் பேசுங்கள் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வரும் இந்த சூழலில் பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நேரலாம். எனவே இந்த நேரத்தில் நீங்கள் அக்கறைகொள்ளும் அனைத்து நண்பர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரியை கேட்டுவாங்கிக்கொள்ளுங்கள். அவர்களுடன் உரையாட நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் தனிமைப்பட்டிருந்தால் உங்களுக்கென சில வேலைகளை பட்டியலிட்டு கொள்ளுங்கள்.  ஒவ்வொருநாளும் வெவ்வேறு பனிகளில் ஈடுபடுங்கள். இதனால் இறுதியில் உங்கள் தனிமையான நாட்களை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினீர்கள் என்ற நிறைவு ஏற்படும். உங்கள் மனம் இயற்கையை அணுகட்டும் EMMA RUSSELL இயற்கையையும் சூரிய ஒளியையும் முடிந்தவரை உங்கள் மனம் அணுகட்டும். நல்ல உணவு உண்ணுங்கள், நிறைய தண்ணீர் குடிங்கள், நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள். நீங்கள் சாதாரணமாக செயல்படுவதைப் போல செயல்பட வேண்டாம். சிறிதும் எதிர்வினையாற்றவேண்டாம். அமைதி காக்கவும். நீங்கள் நினைக்கும் அனைத்தும் சரி தான் என்று நம்பாதீர்கள். அது வெறும் உணர்வோ, யோசனையோ மட்டும் தான். உங்கள் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் எதிர்வினையாற்றத் தேவையில்லை.  இந்த தருணத்தை பற்றி மட்டும் சிந்தியுங்கள். ஏனென்றால் இந்த தருணம் நன்றாகத்தான் உள்ளது. https://www.bbc.com/tamil/science-52113854