Jump to content

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்...


Recommended Posts

பொதுவாக, பறவைகள் மரங்கள் நிறைந்த பகுதிகளில்தான் வாழும். அதுவும் குறிப்பாக, பழம் உண்ணும் வௌவால்கள் பழம் தரும் மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் வாழும்.

ஆனால், தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியில், அதுவும் பழ மரங்களே இல்லாத ஓர் ஊரை ஆயிரக்கணக்கான வௌவால்கள் தங்கள் வாழ்விடமாக வைத்திருக்கிறது என்பது ஆச்சர்யம்தான். கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர் கிராமம்தான் வவ்வால்களின் விருப்பத்துக்குரிய பகுதியாக மாறியிருக்கிறது.

க.பரமத்தி, கடந்த 3 வருடங்களாக வேலூரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக, தமிழக அளவில் முதலிடம் பிடித்துவருகிறது. இந்தப் பகுதியில் பசுமையான மரங்களைப் பார்ப்பதே அரிது. இந்த ஊரையொட்டியிருக்கிற கோடந்தூர் கிராமத்தின் முகப்பில் இருக்கிறது, ராஜலிங்கமூர்த்தி கோயில்.

இந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் பத்துக்கும் மேற்பட்ட புளிய மரங்களும், வேப்ப மரங்களும் இருக்கின்றன. இந்த மரங்களில்தான், ஆயிரக்கணக்கான பழம்தின்னி வௌவால்கள் பகல் பொழுது முழுவதும், மரக்கிளைகளில் தொங்கியபடி வாழ்ந்து வருகின்றன.

இந்த வௌவால்களைப் பற்றிச் சொல்வதற்கு அந்த ஊர் மக்களிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. ஓர் அதிகாலையில், அந்தக் கிராமத்துக்குப் பயணமானோம்.

ஊர் முகப்பில் உள்ள ராஜலிங்கமூர்த்தி கோயிலை நெருங்கியதுமே, இருள் விலகியும் விலகாததுமான அந்த அதிகாலை பொழுதில் வானத்தில் வட்டமிட்டப்படி எண்ணற்ற வௌவால்கள் சுற்றிக்கொண்டிருந்தன.

ரம்மியமான அந்தக் காட்சிகளை உள்வாங்கியபடி, கோயிலை வலம் வந்தோம். அதற்குள் நாம் வந்திருப்பதை அறிந்த அந்தக் கோயிலின் நிர்வாகி எம்.என்.சண்முகவேல், "இன்னைக்கு நேத்தியில்லை, 600 வருஷங்களுக்கு முன்னால இந்தக் கோயில் அமைஞ்சப்ப இருந்தே, இந்த வௌவால்களும் கூட்டம் கூட்டமா இருந்திருக்கு. எதனால் அதுங்களுக்கு எங்க ஊர் புடிச்சுச்சுங்கிற காரணம் தெரியலை.

எங்க ஊர் அப்ப இருந்தே வறட்சியான ஊரா, வானம் பார்த்த பூமியாதான் இருந்திருக்கு. பழ மரங்களும் எங்க ஊர்ல இல்லை. ஆனா, பகல் முழுவதும் இந்த வௌவால்கள் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் மரங்களில் தங்கும். மாலை ஆறு மணிக்கெல்லாம், 300 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள கொடைக்கானல் மலைகளுக்கு இரைக்காகப் பறந்து போய்விடும். விடியக்காலை அஞ்சு மணிக்கெல்லாம் மறுபடியும் எங்க ஊருக்கு வந்துவிடும்.

அஞ்சு மணியில் இருந்து ஆறு மணி வரை வர்ற வௌவால்கள் எல்லாம், கோயிலுக்கு உள்ளே உள்ள மரங்களில் அடையும். ஆறு மணிக்குப் பிறகு வர்ற வௌவால்கள், கோயிலுக்கு வெளியே உள்ள மரங்களில் தங்கும். வௌவால்களின் இந்த 'நேர மேலாண்மை' விசயத்தைக் கேட்டு பலரும் ஆச்சர்யப்படுவாங்க. சுமார் நூறு வருடங்களுக்கு முன்னாடி யாரோ வெளியூர் ஆள் எங்க மக்களுக்குத் தெரியாம வைத்தியத்துக்காக வௌவால் ஒன்றை வேட்டையாடிட்டார்.

அதனால் எல்லா வௌவால்களும் மறுநாள் எங்க ஊருக்கு வராம நாமக்கல் மாவட்டத்துல உள்ள நஞ்சை இடையார்ங்கிற ஊர்ல போய் தங்கிவிட்டதாம். இதனால், பரிதவிச்சுப்போன எங்க ஊர் மக்கள், நேரா அந்த ஊருக்குப் போய் வௌவால்கள்கிட்ட மன்னிப்பு கேட்டதோடு, மேளதாளம் வச்சு அதுங்களை மறுபடியும் எங்க ஊருக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்காங்க. அதன்பிறகு, வௌவால்கள் வேறு ஊரைவிட்டு வேறெங்கையும் போய் தங்குறதில்லை. நாங்களும் எங்க ஊர்ல வௌவால்களை யாரும் வேட்டையாட அனுமதிப்பதில்லை" என்றார்.

ராஜலிங்கமூர்த்தி கோயிலின் பூசாரி ராசப்பனிடம் பேசினோம்.

"பழ மரங்களே இல்லாத எங்க ஊர்ல இவ்வளவு வௌவால்கள் தங்குவதற்கு காரணம், ராஜலிங்கமூர்த்திதான். அதனால், 'ராஜலிங்கமூர்த்தியும், வௌவால்களும் வேறில்லை'னு நெனச்சு, இந்த வௌவால்களை சாமியா வணங்குறோம். வௌவால்களுக்கு நாங்க எந்த இடைஞ்சலும் கொடுக்கமாட்டோம். அறுபது வருஷத்துக்கு முன்னாடி வரை, கோயில் பிராகாரத்துல உள்ள கருப்பண்ணசாமிக்கு கொடையின்போது, அதிர்வேட்டுப் போடுவோம்.

அந்தச் சத்தம் வௌவால்களுக்கு இடைஞ்சலா இருந்ததால், அப்படி வெடி போடுறதை நிறுத்திட்டோம். அதேபோல், தீபாவளி போன்ற பண்டிகை காலம், கோயில் திருவிழா காலம், வீடுகளில் நடக்கும் விசேஷங்களின்போதும் வெடி போடுறதை நாங்க அனுமதிக்கிறதில்லை.

எங்க ஊரை மத்த கிராம மக்கள், 'வௌவால் கிராமம்'னுதான் சொல்லுவாங்க. பழ சீசன் காலத்துல, 3000 க்கும் மேற்பட்ட வௌவால்கள் பெருகிடும். ஆனா, கோடைக்காலங்களில் வௌவால்களின் எண்ணிக்கை கணிசமா குறைஞ்சுரும். இந்த வௌவால்கள் வாழும் மரங்களை நாங்க எந்தக் காரணத்துக்காவும் வெட்டமாட்டோம்'னு உறுதி எடுத்திருக்கிறோம்.

வௌவால்கள் இயற்கையா இறக்க நேர்ந்தா, ஊரே சேர்ந்து அதை அடக்கம் பண்ணுவோம். பழம்தின்னி வௌவால் கறி குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான், டி.பி நோய்களுக்கு நல்ல மருந்துனு சொல்லிட்டு, சிலர் எங்க கிராமத்துக்கு வந்து, 'ஒரு வௌவாலை அடிச்சுக்கிறோம்'னு கேட்பாங்க. ஆனா, அவங்களை திட்டி விரட்டிவிட்டிருவோம். எங்க காலத்துக்குப் பிறகும் இந்த வௌவால்களை சாமியா நெனச்சு பாதுகாக்க, அடுத்தடுத்த தலைமுறையையும் அறிவுறுத்தியே வளர்க்கிறோம்" என்றார்.

https://www.vikatan.com/living-things/animals/karur-village-people-invited-the-bats-back-to-their-village

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für வௌவால்

கொரோனாவை... வெத்திலை பாக்கு வைத்து, அழைக்கிறார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பகிர்வு.நன்றறி அம்பானி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.