Jump to content

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்து இந்தியா வரலாற்று தவறை இழைத்துவிட்டது: விக்னேஸ்வரன் ஆதங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்து இந்தியா வரலாற்று தவறை இழைத்துவிட்டது: விக்னேஸ்வரன் ஆதங்கம்

“இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது. தமிழ் நாடு அதன் அங்கத்துவப் பிரதேசம் என்ற படியால் மட்டுமல்ல எதிர்கால பாரதநாட்டுப் பாதுகாப்பையும் உத்தேசித்தே இக்கூற்று பொருத்தமாகின்றது” என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

“இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளும் கொல்லப்பட்டபோது இந்தியா அதனை வேடிக்கை பார்த்து நின்று ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்திருந்தது. யுத்தத்தை நிறுத்துவதற்கான பல வெளிநாட்டு ராஜதந்திர முயற்சிகள் நடைபெற்றபோதும் இந்தியா அவற்றுக்கு ஆதரவு அளிக்காமல் குந்தகமாக செயற்பட்டமை வெள்ளிடைமலையான ஒரு உண்மையே. ” என்றும் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

விக்னேஸ்வரன் அளித்துள்ள முழுமையான பதில் வருமாறு,

இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது. தமிழ் நாடு அதன் அங்கத்துவப் பிரதேசம் என்ற படியால் மட்டுமல்ல எதிர்கால பாரதநாட்டுப் பாதுகாப்பையும் உத்தேசித்தே இக்கூற்று பொருத்தமாகின்றது.

1987ல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைக் காட்டி போராட்ட இயக்கங்களை ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஆயுதப் போராட்டத்தைக் கைவிடச் சொன்னது இந்தியாவே. இந்தியாவின் நேர்மை மீது நம்பிக்கை இழந்த புலிகள் இந்தியாவுடன் நேரடியாக மோதிய காரணத்தினால் இந்தியா – இலங்கைத் தமிழ் மக்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டமை காரணம் என்று பலர் எழுதி இருக்கின்றார்கள். அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன ராஜீவ் காந்தியை தனது சாணக்கியத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக திருப்புவதில் வெற்றி கண்டார் என்று சிலர் கூறுவதிலும் உண்மைகள் இல்லாமல் இல்லை. பின்னர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதும் விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசல் அடைந்ததுடன் இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடாக் கொள்கையை நீண்ட காலம் இந்தியா கடைப்பிடித்தது.

ஆனால், இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளும் கொல்லப்பட்டபோது இந்தியா அதனை வேடிக்கை பார்த்து நின்று ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்திருந்தது. யுத்தத்தை நிறுத்துவதற்கான பல வெளிநாட்டு ராஜதந்திர முயற்சிகள் நடைபெற்றபோதும் இந்தியா அவற்றுக்கு ஆதரவு அளிக்காமல் குந்தகமாக செயற்பட்டமை வெள்ளிடைமலையான ஒரு உண்மையே. இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பில் அப்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தமையும், எமது நாட்டு அரசியல்வாதிகள் இந்திய உயர்ஸ்தானிகர்களை உச்சி குளிரச் செய்து எம் நாட்டுத் தமிழர்கள் பற்றிப் பிழையான கருத்துக்களை அவர்களுக்குப் புகட்டி வந்தமையும், இலங்கை அரசாங்கங்கள் சீனாவைப் பயன்படுத்தி பூச்சாண்டி காட்டி இந்திய அரசாங்கத்தை இலகுவாக ஏமாற்றி வந்தமையும் இந்த வரலாற்றுத் தவறுக்கான காரணங்கள் எனலாம்.

இதே ஏமாற்று வித்தையை தற்போதும் இலங்கை அரசாங்கம் பயன்படுத்த எத்தனித்து வருகின்றது. ஆனால், கௌரவ மோடி தலைமையிலான அரசாங்கமும் தற்போதுள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்களும் இவற்றை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள் என்றே நம்புகின்றேன். ஆனாலும், எமக்கு எதிராகத் தொடரும் இனஅழிப்பை நிறுத்தி எமது இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்குக் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்காமல் ஒரு சில கூற்றுக்களைக் கூறிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றமை எமக்கு ஏமாற்றம் அளிக்கின்றது.

1987ன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக வந்த 13வது திருத்தத்தின் மூலம் கிடைத்த குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட மாகாண சபை அமைப்பை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட வடக்கு – கிழக்கு இணைப்பு இன்று இல்லை. அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர், கிராம சேவகர் போன்றோர் இப்போது மாகாண அரசின் அதிகாரத்தின்கீழ் இல்லை. கல்வி சுகாதாரத் துறைகள் சம்பந்தமாக மாகாண சபைக்கு தரப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டுள்ளன. 13வது திருத்தத்தின் கீழ் தரப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்கள் அன்றிலிருந்து தரப்படவே இல்லை. அதே போல 16ம் திருத்தத்தின் மூலமாக கூறப்பட்ட மொழி உரிமைத் தத்துவத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழே ஆட்சி மொழி என்ற அரசியல் அமைப்பின் 22வது விதி கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மத்தியில் இருந்து கடிதங்கள் பல தடவைகள் மாகாணத்திற்குத் தனிச்சிங்களத்திலேயே இன்றும் அனுப்பப்படுகின்றன. 99மூ தமிழர் வாழும் பிரதேசங்களில் கூட தமிழைப் பெயர்ப்பலகைகளில் முதலாவதாக எழுதக்கூடமுடியாதுள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த 30:1 தீர்மானத்தினை இன்னமும் நிறைவேற்றாத நிலையில், அதில் இருந்து இலங்கை வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அது எடுத்துவரும் நிலையில், இந்தியாவின் ஆதரவினைத் தமக்கு அது சம்பந்தமாக பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சியாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் அண்மைய விஜயம் அமைந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எம்மக்கள் மத்தியில் இருக்கின்றன.

ஆனால், மனித உரிமைகள் சபையின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து மனித உரிமைகள் சபையின் ஊடாக இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கைக்கு இருக்கும் பொறுப்பு கூறல் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா முன்னின்று செயற்படவேண்டும். வெறுமனே இலங்கையுடன் பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக பொறுப்புக்கூறல் விடயத்தை இந்தியா பயன்படுத்தக் கூடாது. தமிழ் மக்களுக்கான நீதி, நிலையான தீர்வு என்பவற்றுக்கான ஒரு கருவியாகவே பொறுப்புக்கூறலை இந்தியா பயன்படுத்த வேண்டும். இதுவே இந்தியாவுக்கு பல வழிகளிலும் அனுகூலமாக அமையும்.

இந்தியா எது செய்தாலும் இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவிற்கு விஸ்வாசமாக இருக்கப் போவதில்லை என்பதை இந்தியா உணர வேண்டும். எவ்வளவு தான் இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கினாலும் இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் இந்தியாவைத் தமிழர் சார்பான நாடாகவே பார்ப்பன. ஆகவே தமிழர் சார்பாக இந்தியா நடவடிக்கைகள் எடுப்பதை எவரும் பிழை கூறமாட்டார்கள். எவரும் பிழை கூறமுடியாது. இந்தியா துணிந்து நீதியை நிலைநாட்டலாம். நிலையான தீர்வைக் கொண்டு வரலாம்.

அண்மையில் ஒரு அரசதலைவர் வருகின்றபோது கடைபிடிக்க வேண்டிய சில இராஜதந்திர சம்பிரதாய வரைமுறைகளையே இந்தியா மகிந்த ராஜபக்ஷவுக்கு அளித்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு இந்தியா மீது மிகுந்த நம்பிக்கை உண்டு.

தற்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் இலங்கை விடயத்தில் நீண்ட அனுபவமுடையவராகவும் சர்வதேச அரசியலில் மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் இருக்கிறார். அவரது திறமை, சாணக்கியம், ராஜதந்திரம் ஆகியவற்றை தற்போதைய ஆட்சியாளர்கள் நன்கு உணர்வர். ஆகவே, இந்திய வெளியுறவு அமைச்சர் எமது பிரச்சனையைத் திறம்பட கையாள்வார் என்று நாம் நம்புகின்றோம்.

இந்தியாவின் பாதுகாப்பானது தென்கோடியில் இருக்கும் தமிழ் மக்களின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது என்பதை கடந்தகால பட்டறிவிலிருந்து இந்தியா உணர்ந்திருக்கும் என்று நம்புகின்றேன். அதற்கேற்ப திரைமறைவில் நகர்வுகளை மேற்கொள்வர் என்பது எனது எண்ணப்பாடாகும். ஆனால் அதற்காக நாம் விரும்பும் எல்லாம் எமக்குக் கிடைக்கும் என்பதல்ல இதன் அர்த்தம். ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்பதற்கேற்ப நாம் திரும்பத்திரும்ப எமது நிலைப்பாடுகளை அவர்களிடத்தில் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும். எமது நிலைப்பாடுகளில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். என்றோ ஒருநாள் எமக்கான கதவு திறக்கப்படும்.

ஆனால், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம் பெற்றுக்கொண்ட சலுகைகள், சுக போகங்களுக்காக இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்புகள் காட்டாமலும் ‘விலாங்கு மீன் பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுவது போல’ செயற்பட்டு வந்துள்ளார்கள். சலுகைகளுக்காக தமது மௌனத்தை இதுகாறும் இவர்கள் விலை பேசி விற்றுவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

 

http://www.samakalam.com/செய்திகள்/முள்ளிவாய்க்கால்-இனப்ப-2/

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்து இந்தியா வரலாற்று தவறை இழைத்துவிட்டது: விக்னேஸ்வரன் ஆதங்கம்

சில வரலாற்று உண்மைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டுவது அவசியம் தான்.

ஆனால், தங்களைத் தாமே மாற்றுத் தலைமைகளாக கருதுபவர்கள் இவ்வாறான அறிக்கை அரசியலுக்கு அப்பால் ஈழத் தமிழினத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான நீண்டகால தீர்வை நோக்கி காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்பதை உணர வேண்டும்.

Link to comment
Share on other sites

6 hours ago, போல் said:

சில வரலாற்று உண்மைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டுவது அவசியம் தான்.

ஆனால், தங்களைத் தாமே மாற்றுத் தலைமைகளாக கருதுபவர்கள் இவ்வாறான அறிக்கை அரசியலுக்கு அப்பால் ஈழத் தமிழினத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான நீண்டகால தீர்வை நோக்கி காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்பதை உணர வேண்டும்.

சரியான கருத்தை பதிவிட்டிருக்கிறீகள்। இருந்தாலும் விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியாவின் தாளத்துக்கு ஆடுபவர்கத்தான் இங்கு அடையாளப்படுத்தப்படுகிறார்।

நேற்றும் டிவியில் ஒரு விவாதம் நடந்தது। அதில் கஜேந்திரன் பேசும்போது தங்களை இந்த புதிய கட்சியில் சேர்க்க வேண்டாமென்று இந்தியா தங்களிடம் கூறியதாக விக்னேஸ்வரன் தன்னிடம் கூறியதாக கூறினார்। விக்கியின் கட்சி சார்பாக பங்கேற்றவர் மறுப்பு தெரிவிக்கவில்லை।

எனவே இங்கு எங்கே எப்போது ஒற்றுமை கட்சிகளிடம் உருவாக்கப்போகின்றது। அது வரைக்கும் எமக்கு தீர்வோ அல்லது நல்ல முடிவோ வரப்போவதில்லை। இருந்தாலும் மக்களின் தீர்மானம் , தெரிவு வருகிற தேர்தலில் தெரிய வரும் । அது வரைக்கும் எதுவும் கூற முடியாது।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுகில் குத்துவதே அவர்கள் வரலாறாக இருக்கும் போது வரலாற்று தவறு இழைத்ததாக நாம் கருதுவது தவறு ; அது அவர்களுடைய பணி ; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.