கிருபன்

நல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக...

Recommended Posts


 

நல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக...

காரை துர்க்கா   / 2020 பெப்ரவரி 18

வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன், ‘மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம்’ என்ற அமைப்பு, புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.   

யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்டின் பேணார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள், புலமை சார்ந்தோர் இணைந்து, மேம்பாட்டு மன்றத்தில் செயற்பட முன்வந்துள்ளனர்.  

இந்தப் பூமிப்பந்தில், பிரச்சினைகள் இல்லாத தனிநபர்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லாத சமூகங்கள் இல்லை. ஆகவே, பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுவானவையே. 

இவ்வாறாக, பிரச்சினைகள் அனைவருக்கும் பொதுவானவைகளாக இருந்தாலும், போர் அரக்கன் மூர்க்கத்தனமாகக் கோரத்தாண்டவம் ஆடிய மண்ணில் வாழும் தமிழ் மக்களது பிரச்சினைகள், வேறு விதமானவைகளாகவும் சிக்கல்கள் நிறைந்தவைகளாகவும் காணப்படுகின்றன; தொடர்கின்றன. 

ஆயுதப் போர் நிறைவுக்கு வந்து, பத்து ஆண்டுகள் ஓய்ந்துவிட்ட போதிலும், தமிழ் மக்களது அன்றாடப் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை; தீர்வதற்கான அறிகுறிகளையும் காணவில்லை. மாறாக, பிரச்சினைகள் மேலும் சிக்கலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினை அப்படியே இருப்பதாகும். அதுகூட, மேலும் சிக்கலுக்குள்ளேயே சிக்கியுள்ளது. 

மறுவளமாக, இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற, அனுபவிக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு, அரசியல் பிரச்சினையே பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது. 

உதாரணமாக, யாழ்ப்பாணம், வலிகாமம்  வடக்கு உயர்ப் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒருவரது வீடும் விவசாயக் காணியும் கையகப்படுத்தப்பட்டு இருப்பின், அவரது இருப்பும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி, அவர் அன்றாடப் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டிருப்பார்.ஆனால், அவரது வீடும் காணியும் விடுவிக்கப்படாமைக்குக் காரணம், அடிப்படைப் பிரச்சினையான அரசியல்  பிரச்சினையே ஆகும். 

இவ்வாறாக, 72 ஆண்டுகால இனப்பிணக்கான அரசியல் பிணக்கு தீராத வரை, நாளாந்தம் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அன்றாடப் பிரச்சினைகளும் தீரப்போவது இல்லை. 

ஆனாலும், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்படுமா? அதற்காக, இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தமிழினம் காத்திருக்க வேண்டுமென்று எவருக்கும் தெரியாது. 

இந்நிலையில், ஒருபுறம் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் மறுபுறம், அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணவேண்டிய தேவைப்பாடுகள் நிறையவே இருக்கின்றன. 

இது இவ்வாறு நிற்க, இதுவரையான காலப்பகுதியில், எமது அரசியல்வாதிகளால் அன்றாடப் பிரச்சினைகளைக் கணிசமான அளவில்கூடப் பூர்த்திசெய்ய முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியே உள்ளது. 

2010ஆம் ஆண்டில் போர் நிறைவுபெற்ற காலங்களில், ஆட்சியில் இருந்தவர்களுடன் ஐக்கியமாக இருந்தவர்களாலும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான நல்லாட்சி காலப்பகுதியில் ஆட்சி அமைக்கவும் அவ்வாறாக அமைத்த ஆட்சியை நடத்தவும் ஆதரவு வழங்கியவர்களாலும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாரியளவில் உயர்த்த முடியவில்லை. அன்றாடப் பிரச்சினைகளைப் பெருமளவில் தீர்க்க முடியவில்லை. 

இதற்கிடையே, இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள், வெறுமனே அரசியல்வாதிகளாலும் அரச திணைக்களங்களாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் மாத்திரம் தீர்க்கப்படக் கூடியதும் அல்ல என்பதையும், நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். 

ஆகவே, இந்நிலையில் இதுபோன்ற அபிவிருத்தி மன்றங்களது வருகை அவசியமானதே; வரவேற்கக்கூடியதே. ஆனால், மறுபுறத்தில் அவற்றினது இயலுமை, தொடர்ச்சித் தன்மை என்பன குறித்துக் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.  

புதிதாக அமைப்புகளைத் தொடங்குவது மிகச் சுலபம். ஆனால், அவற்றை வினைத்திறன் உள்ளதாகத் தொடருவது ரொம்பக் கடினம். ஆகவே, இன்று இவ்வாறு சமயத் தலைவர்களாலும் புத்திஜீவிகளாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு, பத்தோடு பதினொன்றாக இருக்க முடியாது. இவற்றுக்குப் பாரிய சமூகப் பொறுப்பு உள்ளது. 

இன்று தமிழ் மக்கள் மத்தியில் பல சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதற்கு, கணிசமான புலம்பெயர்ந்த உறவுகள், பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள். 

ஆனாலும், இவ்வாறான அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு, குறைவாகவோ, இல்லாமலோ உள்ளது என்றுகூடக் கூறலாம். ஆகவே, புதிதாகத் தற்போது உருவாக்கம் பெற்றுள்ள மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம், சமூக அமைப்புகளுக்கான ‘தாய்’ அமைப்பாக மிளிர வேண்டும். 

தமிழ் மக்களிடையே ஆங்காங்கே அவ்வப்போது, மதம் சார்ந்த முரண்பாடுகள் தோன்றுகின்றன அல்லது, தோற்றுவிக்கப்படுகின்றன.இது போன்ற நிலைமைகள், போர் நடைபெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கு மண்ணில் காணப்படவில்லை; தோன்றவில்லை. தமிழ் மக்கள் அப்போது மதத்தால் இரண்டாக இருந்தாலும், இனத்தால் (தமிழ்) ஒன்றுபட்டிருந்தோம்.

ஆனால், இன்று ஏற்பட்டுள்ள இவ்வாறான சி(று)ல முறுகலுக்குள் எண்ணெய் வார்க்க, பல தரப்புகள் கங்கணம் கட்டி வரிசையில் நிற்கின்றன. ஆகவே, இந்து - கிறிஸ்தவ மத அமைப்புகளின் தலைவர்கள் இணைத் தலைவர்களாகச் செயற்படுகின்றபோது, இவ்வாறு ஏற்படுகின்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறியலாம்; கிள்ளி எறிய வேண்டும். 

அதுபோல, வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும், இவ்வாறான இணைத் தலைமையிலான உறவு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த இணைத் தலைமை, பிறப்பில் இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ வாழுபவர்களை அடிப்படையில் தமிழர்களாக இணைக்க வேண்டும். 

தமிழ் மக்களது வெளிச் சூழலை, பிறிதொருவர் நிர்ணயித்தல் (சுதந்திரம்) அடிமைத்தனம் எனப்படும். ஆனால் இன்று, எங்கள் அரசியல்வாதிகளுக்கு  இடையே புரிந்துணர்வுகள் அ(றுந்து)ற்று, எங்களது உளச்சூழலைக் கூட (மனதை), வெளியே இருப்பவர்கள் நிர்ணயிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

இவற்றின் தோற்றக் காரணத்தைக் கண்டுபிடித்தாலே, வெற்றிக்கான திறவுகோலை வடிவமைத்துக் கொள்ளலாம். 

ஆகவே, வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம், தமிழ் அரசியல்வாதிகளால் உதாசீனம் செய்ய முடியாத பலம்கொண்ட அமைப்பாக எழுச்சி பெறவேண்டும்.

தமிழ் மக்கள், தங்களது அரசியல்வாதிகள் மீது முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள். யார் உண்மையானவர்கள்; யார் உண்மை போல நடிக்கின்றார்கள் என, முழுமையாகக் குழம்பிய நிலையில் உள்ளார்கள். 

முன்பு போல இல்லாது, அரசியல் விமர்சனங்கள் நிறைந்த உலகத்தில், தற்போது நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை விட, சமூக வலைத்தளங்கள் வழியாக நாளாந்தம் பல கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனது உண்மைத் தன்மை தொடர்பிலும், மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

ஒரு பொதுமகன், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். அது அவரது தெரிவு விருப்பம். ஆனால், அவ்வாறு வாக்களித்து வெற்றி பெறுபவர் அடுத்து வருகின்ற ஐந்து ஆண்டுகள் ஆசனத்தில் இருக்கப் போகின்றார். ஆகவே, பிழையானவர்களைத் தெரிவுசெய்தால், மீண்டும் சரியானவர்களை மீளத் தெரிவுசெய்ய, ஐந்து ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும். 

இன்று அனைத்துச் செயற்பாடுகளிலும் அரசியல் நுழைந்துவிட்டது. நகர சபையினர் குப்பையை எடுக்கும்போது, சில கட்சிகளைச் சார்ந்தவர்களின் வீடுகளில் மாத்திரமே குப்பைகளைச் சேகரிப்பதாக மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்துள்ளார். 

ஆகவே, குப்பை அள்ளுவது வரை அரசியல் சென்று நாற்றம் அடிக்கின்றது. இவ்வாறு நாற்றம் அடிப்பதாலேயே, நல்லவர்கள், கௌரவமானவர்கள், சமூகநோக்கில் நடுநிலை நிற்பவர்கள் போன்றோர் அரசியலுக்குள் வர அச்சப்படுகின்றார்கள். 

ஆகவே, நாற்றம் எடுக்கும் அரசியலை மாற்றத்துக்குள் கொண்டுசெல்ல, இவ்வாறான பொது அமைப்புகள் முயற்சி செய்யவேண்டும். 

தென்னிலங்கையில், தங்களது மதம் சார்ந்து பௌத்த அமைப்புகள் நடந்து கொள்வது போல, மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றமும், தங்களது இனம் சார்ந்து நடந்துகொள்ள வேண்டும். 

போரால் தமிழ்ச் சமூகம் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ளது. அந்தச் சமூகத்தின் கட்டமைப்புகள் சிதைவடைந்து கிடக்கின்றன. ஒழுங்கமான சமூக அமைப்புகள் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடக்கின்றன. 

இந்நிலையில், இருக்கின்ற இந்த நிலையிலேயே, எமது சமூகம் தொடர்ந்தும் இருக்க முடியாது. அல்லது, “இந்த நிலையையே, இவ்வாறு ஏற்று வாழ வேண்டும்” என எவரும் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நல்ல-தொடக்கம்-தொடரட்டும்-நல்லபடியாக/91-245663

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு செயற்பாடு

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

தமிழ் மக்கள் அப்போது மதத்தால் இரண்டாக இருந்தாலும், இனத்தால் (தமிழ்) ஒன்றுபட்டிருந்தோம்.

முயற்சி திருவினையாகட்டும். திருவினையாக ஒருதலைமுறையாவது செல்லவேண்டும். ஏனெனில் முயற்சி பாடப்புத்தகமாகி, அது பாலர் வகுப்பிலிருந்து அறிவூட்டப்பட்டு, அங்கிருந்து தொடங்கவேண்டும். அத்துடன் இன்றைய முதிர்ந்த தலைமுறை மக்களில் மாற்றமுடிந்தவர்களை மாற்ற முயற்சிக்கலாம். முதிர்ந்ததை  வளைப்பது கடினம், 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • எமது தளபதிகள், தோற்றுப் போய், மக்களையும் அழியவிட்டு தாமும் மறைந்து போனார்கள். அமெரிக்க தளபதிகள் இன்றும் மேலாண்மையுடன் இருக்கிறார்கள். வித்தியாசம் தெரிகிறதா?
    • Global cases: At least 1,141,190 Global deaths: At least 60,960 US cases: At least 278,942 US deaths: At least 7,174 Canada’s Trudeau won’t retaliate over US blocking mask imports   CDC director says coronavirus won’t be a one-time foe NYC mayor pleads for more doctors and nurses: ‘The worst is actually ahead’
    • தென்காசியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கை மீறி வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய முயன்ற 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர். தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதியின்றி ஏராளமானோர் தொழுகைக்காக கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் நடுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றனர். பின்னர் ஐமாத் தலைவரை அழைத்து, அனைவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், அங்கு வந்திருந்த இஸ்லாமியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தை கலைக்கவும், தாக்குதலை தடுக்கவும் போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் 4 பேரை கைது செய்து பிணையில் விடுவித்தனர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் பிபிசி தமிழிடம் பேசுகையில், "வெள்ளிக்கிழமை நடுப்பேட்டை பள்ளி வாசலில் தொழுகைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடினர். மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது இவ்வாறு கூடுவது தவறு என எச்சரித்தோம். ஆனால் அங்கு கூடியிருந்தவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு இல்லாமல், அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க கூடியிருந்தவர்களை காவல்துறையினர் கலைத்தனர்." "அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், வைரஸ் தொற்று பரவக் காரணம், 144 தடையை மீறி ஒன்று கூடியது, அரசு அதிகாரிகளை திட்டியது என நான்கு பிரிவுகளின் கீழ் 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார். மேலும் அவர் பேசுகையில், நேற்று (வெள்ளிகிழமை) மாலை மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறை சார்பில் இஸ்லாமிய தலைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பள்ளி வாசலுக்கு யாரும் தொழுகைக்காக வரவேண்டாம் என்றும், கொரோனா தொற்று குறித்து இஸ்லாமிய மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.   https://www.bbc.com/tamil/india-52167258
    • அந்த ஆள் கப்பலின் அந்த நவீன விமானத்தாங்கி கப்பலுக்கு கப்டனாக இருக்க தகுதி இல்லாதவர் எங்கேயோ பயணிகள் கப்பலின் ஆளை இந்தகப்பலுக்கு இடம்மாற்றி விட்டார்களாக்கும் .இவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒன்றை அரசியல்வாதி போல் பேப்பருக்கு செய்தி குடுத்திருக்கிறார் . எந்த வளமும் இல்லாமல் வன்னிக்காட்டில் இருந்து சண்டை போட்ட  எமது தளபதிகள் கண்முன்னே வந்து போகினம்  இப்ப உலகமே வெண்டிலேற்றர் என்று ஓடுகினம் அங்கெல்லாம் வெண்டிலேற்றர்  இல்லாமல்தான் மருத்துவமே நடந்தது .
    • இந்த வைரஸ்களுக்கு தமிழர்கள் மருந்து கண்டு பிடிக்க வேண்டும்: நிலாந்தன். இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூமி முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஒன்றில் ஊரடங்கு சட்டம் அல்லது சனங்கள் தாங்களாகவே தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொள்ளும் ஒரு நிலை. நோயில் வாடும் ஒருவருக்கு மருந்து மட்டும் போதாது. அருகிலிருந்து அன்பாக யாராவது கவனிக்க வேண்டும் அருகில் இருப்பவரின் அன்பான அரவணைப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.அன்பைத் தவிர வேறு அருமருந்து கிடையாது. ஆனால் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் உங்களுக்கு எவ்வளவுதான் நெருக்கமானவராக இருந்தாலும் நீங்கள் அவருக்கு அருகே இருக்க முடியாது. அவருடைய கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டோ அல்லது அவருடைய தலையை அரவணைப்பாக வருடிக் கொடுத்தோ உங்களுடைய அன்பை காட்ட முடியாது. அப்படி செய்தால் உங்களுக்கும் வைரஸ் தொற்று வரும். சில சமயம் அவர் இறந்தால் நீங்கள் தூர இருந்து அவர் மூச்சுத்தி திணறி இறப்பதை இயலாத்தனத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதையும் செய்யமுடியாது. அவரை தொட்டு அழவும் முடியாது. தூர இருந்தே அழவேண்டும். இறந்த பின் அந்த உடல் உங்களுக்குச் சொந்தமானது அல்ல. அது அரசாங்கத்திற்கு உரியது. அதை நீங்கள் அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ முடியாது. தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டவரின் உடலைப் போல.அரசாங்கம் தான் அதைச் செய்யும். சில சமயங்களில் நீங்கள் அந்த இறுதிக் கணங்களை கிட்ட இருந்து பார்ப்பதற்கும் அனுமதி. இல்லை தூர நின்று பார்ப்பதற்கும் அனுமதி இல்லை. இறுதி வணக்கம் செலுத்தவும் அனுமதி இல்லை. “என்னுடைய தகப்பனை ஒரு நாயைப் போல ஒரு பன்றியைப் போல இறக்க விட்டேன்” என்று ஓர் இத்தாலியப் பெண் அழுகிறார். அதாவது அவருடைய தந்தையை ஒரு மனிதருக்கு கொடுக்க வேண்டிய இறுதி மரியாதைகள் எவையும் இன்றி சடங்குகள் எவையும் இன்றி மிருகங்களை போல அடக்கம் செய்ய வேண்டி வந்தது என்று அவர் கூறுகிறார். “சடங்குகளில்லாத தகனங்கள்?” மனித நாகரீகம் எனப்படுவது மிருகங்களிடம் இருந்து வேறுபட்ட பிரதானமான இடங்களில் அது ஒன்று. இறந்த உடலை மதிப்பது அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து அடக்கம் செய்வது. ஆனால் மனித நாகரிகத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒன்றாகிய அந்த விடயமே இப்பொழுது ஆபத்தானது ஆகிவிட்டது. மனிதர்கள் ஒருவர் மற்றவரை தொட்டுக் கொள்ளாமல் அன்பு காட்டுவது எப்படி? தாய்மையை, தந்தைமையை, காதலை, பாசத்தை, சகோதரத்துவத்தை தொடாமல் எப்படி வெளிக் காட்டுவது? மிருகங்கள் கூட பூச்சிகள் கூட அதை தொடுகை மூலம் தான் வெளிப்படுத்துகின்றன. மனிதக் கூர்ப்பில் தொடக்கத்திலிருந்தே தொடர்ச்சியறாமல் காணப்படும் ஓர் அம்சம் அது. அன்பை காதலை ஸ்பரிசம் மூலம் வெளிப்படுத்துவது. ஆனால் இப்பொழுது அது ஆபத்துக்குள்ள்ளாகியிருக்கிறது. மனிதர்கள் மனிதர்களை தொடுவது மட்டுமல்ல நோயாளிகள் தொட்ட எதையுமே குறிப்பாகக் காசையும் கூட தொட முடியாத ஒரு நிலை. இதனால் பெருமளவிற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் மனிதர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். ஆட்களற்ற தெருக்களை பாடல்களால் நிரப்புகிறார்கள். ஆசிய ஐரோப்பிய நகரங்களில் ஊரடங்கு அல்லது ஊரடங்கு போல வீடுகளுக்குள் முடங்குவது. இது ஏறக்குறைய ஒரு யுத்த காலத்தை ஒத்தது. “நமது பெற்றோரை போருக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள் நாங்கள் உங்களை வீடுகளுக்குள் இருங்கள் என்று அழைக்கிறோம்” என்று இத்தாலிய பிரதமர் கூறினார். இது தொடுதிரை உலகைப் பொருத்தவரை அதிர்ச்சியூட்டும் ஒரு மாற்றம். எனினும் வெள்ளைக்காரர்கள் அதை சந்தோஷமாக எதிர்கொள்வதாகவே தெரிகிறது. நோர்வேயில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழர் சொன்னார் வேர்ச்சுவல் அலுவலகங்களை இயக்குவதற்காக பயன்படுத்தப்படும் செயலிகளை பயன்படுத்தி இளைஞர்கள் குடித்து மகிழ்வதாக. திடீரென்று வீட்டுக்குள் முடக்கப்பட்ட மனிதர்கள் இணையத்தின் மூலம் செயலிகள் மூலம் இணைக்கப்படுகிறார்கள்.அதுமட்டுமல்ல இணைய வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த மனிதர்கள் இப்பொழுது ஓய்வாக இருக்கிறார்கள்.வாசிக்கிறார்கள் யோசிக்கிறார்கள் மனைவி பிள்ளைகளோடு ரிலாக்ஸாக இருக்கிறார்கள். இலங்கையில் சிலர் மனைவிமார்களை அடிக்கிறார்கள். எதுவாயினும் வழமைக்கு மாறாக அதிர்ச்சியூட்டும் விதத்தில் கிடைத்திருக்கும் இந்த ஒன்று கூடலை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை யுத்தகாலத்தில் ஊரடங்கு நாட்களில் அவர்கள் வீடுகளுக்குள் சிறிய அளவில் ஒன்றுகூடுவார்கள். தாயம் விளையாடுவார்கள் , கரம் விளையாடுவார்கள் , கார்ட்ஸ் விளையாடுவார்கள். இப்போது இணையம் வந்து மேற்சொன்ன விளையாட்டுக்களை மாற்றீடு செய்துவிட்டது. எனினும் பூனை தன் குட்டிகளை காவுவது போல குறிப்பாக பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் காவிக்கொண்டு திரிந்த பெற்றோர் இப்பொழுது பிள்ளைகளோடு ரிலாக்சாக இருக்கிறார்கள். மனம்விட்டு கதைக்கிறார்கள்.அப்படி கதைப்பதற்கு நேரம் இருக்கிறது. அதுமட்டுமல்ல பூகோள மயப்பட்ட உலகில் எல்லாவற்றுக்கும் மற்றவர்களோடு நிபந்தனையின்றி பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு வாழ்க்கைச் சுழலுக்குள் பல்பொருள் அங்காடிகள் மைய வாழ்வுக்கு பழக்கப்பட்ட சமூகங்கள் இப்பொழுது உணவுக்கு தமது வீட்டு வளவுக்குள்லேயே எதையாவது தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒரு நிலை. தனது வீட்டுக்குள்ளேயே தனக்கு வேண்டிய காய்கறிகளை வளர்க்கலாமே என்று சிந்திக்கும் ஒரு காலகட்டம். அதாவது அதிகபட்சம் தற்சார்பான தன்னிறைவான உணவு முறை குறித்து அதிகம் சிந்திக்க வேண்டிய ஒரு தேவை. ஒரு காலம் எங்களிடம் உயிர்வேலி இருந்தது. அந்த உயிர் வேலியில் அரிய மூலிகைகள் விளைந்தன. ஒவ்வொரு நாளும் சுண்டிச் சாப்பிட அல்லது மசித்துச் சாப்பிட ஏதோ ஒரு காய்கறி அந்த வேலியில் விளைந்தது. ஆனால் பல்பொருள் அங்காடி பமய வாழ்க்கை வந்தபின் எல்லாமும் பக்கேஜ் ஆகிவிட்டது. கொரோனா வைரஸ் வந்து அந்த வாழ்க்கைச் சுழலுக்குள் இடையீடு செய்திருக்கிறது. இது தீமைக்குள் விளைந்த ஒரு நன்மை. இதுபோன்ற பல நன்மைகளை அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்பொழுது தெருக்களில் வாகனங்கள் குறைவு. எனவே காற்றில் புகை குறைவு. கடலில் கப்பல்கள் குறைவு. விமான நிலையங்களில் விமானங்கள் தூங்குகின்றன. மிகக்குறுகிய காலகட்டத்துக்குள் சுற்றுச்சூழல் மாசாக்கம் சடுதியாக குறைந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். சீனா முகமூடி அணியத் தொடங்கியது கடந்த சில மாதங்களாக மட்டும் அல்ல. கொரோனா வைரசுக்கு முன்னரே சீனர்கள் மாநகரங்களில் முகமூடி அணியத் தொடங்கி விட்டார்கள். ஏனெனில் காற்று மாசாகத்தின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சம் சீனர்கள் இறக்கிறார்கள்.இது, சீனாவில் இது வரையிலுமான கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட இறப்பு விகிதத்தை விடப்  பல மடங்கு  அதிகமானது. இப்படிப் பார்த்தால் கொரோனா வைரஸின் தாக்கத்தால் சுற்றுச்சூழல் ஒப்பீட்டளவில் சுத்தமாகியிருக்கிறது. இயற்கை தன்னை ஏதோ ஒரு விகிதமளவுக்காவது சமநிலைப் படுத்திக்கொள்ள அவகாசம் கிடைத்திருக்கிறது. அதேசமயம் மனிதர்களும் இயற்கைக்கும் தமக்கும் இடையிலான ஒரு புதிய சமநிலையை குறித்து சிந்திக்க வேண்டிய காலம். ஒருபுறம் பூகோளமயமாதல் அதன் இயலாமையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் தகவல் புரட்சி மட்டும் மனிதனுக்கு இன்பத்தை தராது அதை விடவும் அதிகமான இன்பங்கள் வாழ்க்கையில் உண்டு என்பதனை ஓர் உலக பெருந் தொற்று நோய் உணர்த்தியிருக்கிறது. இலத்திரனியல் இன்பம் மட்டும் போதாது என்று கருதிய ஐரோப்பியர்கள் வீட்டில் முடங்கி இருக்கும் பொழுது பல்கனிகளில் நின்றபடி கைகளைத் தட்டிப் பாடுகிறார்கள். அதுமட்டுமல்ல உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஒரு பேருண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.வைரஸின் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக அவர் கூறும் ஆலோசனைகளில் ஒன்றில் மனிதர்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது இரு தடவை மட்டும் செய்திகளை வாசிப்பது நல்லது என்று அவர் கூறுகிறார். ஏன் அப்படி கூறுகிறார்? செய்திகளுக்குப் பதிலாக வதந்திகளே மனிதர்களை வேகமாக வந்தடைகின்றன. இது ஒரு பெருநோயை எதிர்கொள்வதற்கான உளவியல் தயாரிப்பை பலவீனமாக்குகிறது. எனவேதான் தகவல் யுகத்தில் ஓர் உலகப் பொது நிறுவனத்தின் தலைவர் குறைந்த அளவு தகவல்களை நுகருங்கள் என்று கூறும் ஒரு நிலைமை. எனவே கொரோனா வைரசுக்கு பின்னரான உலகம் எனப்படுவது அரசியல் சமூக பொருளாதார மற்றும் உளவியல் அர்த்தத்தில் ஒரு புதிய வடிவத்தை பெறுமா ? இலங்கைத்தீவில் ராஜபக்சக்கள் கொரோனாவை வைத்து தமது அரசியல் வெற்றிகளை திட்டமிட தொடங்கிவிட்டார்கள். ராணுவ தளபதிக்கும் படைத் தரப்புக்கும் வெள்ளை அடிப்பதற்கு இது மிகச் சிறந்த ஒரு தருணம் என்று அவர்கள் கருதக்கூடும். அதுமட்டுமல்ல பொதுமக்களை கொன்றதற்காக நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட படைவீரருக்கு மன்னிப்பு கொடுப்பதற்கும் இதுதான் தருணம் என்று அவர்கள் கருதுவதாக தெரிகிறது. கொரோனாக் காலத்திலும் இனவாதம் பதுங்கவில்லை. ராஜபக்சக்களைப் பொறுத்தவரை கொரோனா ஒரு வரப்பிரசாதம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை? கொரோனா வைரசுக்கு முன்னரே தமிழ் மக்களிடம் தீண்டாமை இருந்தது. அது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிரானது. சுமார் 38 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் பின்னரும் தமிழ் மக்கள் மத்தியில் தீண்டாமையானது வைரஸைப் போல தன்னை அப்டேட் செய்து வருகிறதா? 2009 க்குப் பின்னரான கடந்த 10 ஆண்டுகால அரசியலில் சாதியின் பெயராலும் சமயத்தின் பெயராலும் பிரதேசவாதத்தின் பெயராலும் தமிழ் மக்களைக் கூறுபோடும் நிலைமைகளே அதிகரித்து வருகின்றன.தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் கொரோனாக்கள் அதிகரித்து வந்த ஒரு சூழலில் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனினும் யாழ்ப்பாணத்துக்கு வைரஸை கொண்டுவந்தவர் என்று ஒரு போதகரைச் சுட்டிக்காட்டி அதன் பெயரால் தமிழ் மக்களை மதரீதியாகப் பிரித்துத் தோற்கடிக்க முற்படும் சில வைரஸ்கள் தீவிரமாக பரவி வருகின்றன. கொரோனாவை வெற்றி கொண்டபின் உடனடியாக இந்த வைரஸ்களுக்கு தமிழ் மக்கள் மருந்து கண்டு பிடிக்க வேண்டி இருக்கும். http://www.vanakkamlondon.com/nilanthan-30-03-2020/