Jump to content

இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை சி.வி வரவேற்றமை தேசத்துரோக செயல்- தயாசிறி


Recommended Posts

இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை சி.வி வரவேற்றமை தேசத்துரோக செயல்- தயாசிறி

 

by : Yuganthini

daya.jpg

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை, வட.மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வரவேற்றுள்ளமை தேசத்துரோக செயற்பாடென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2015 ஆம் ஆண்டு 31/1 பிரேரணயில் கையெழுத்திட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்தமையே தற்போது ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் பிரதான காரணமாகும்.

ஜஸ்மின் சூக்காவின் ஏற்றுக் கொள்ளப்படாத அறிக்கையைக் கொண்டே இராணுவத் தளபதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படாத குற்றங்களை காரணம் காட்டி இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் அமெரிக்கா மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றது.

அத்தோடு தனிநபர் ஒருவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதேவேளை புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்னேஷ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர். இது தேசதுரோக செயற்பாடாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இராணுவ-தளபதிக்கு-விதிக்க/

Link to comment
Share on other sites

"இதேவேளை புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்னேஷ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர். இது தேசதுரோக செயற்பாடாகும்” என குறிப்பிட்டுள்ளார்."

முடிந்தால் உள்நாட்டு சட்டங்களுக்கு அமைய திரு. விக்னேஷ்வரன் மீது நடவடிக்கை எடுங்கள்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தேவைப்படும்போது அமெரிக்காவின் உதவி தேவை. இப்போ அமெரிக்காவை குற்றம் கூறி என்ன பிரயோசனம்?  முடிந்தால் ஆதாரங்களை, அமெரிக்கா செய்த  போர் உதவிகளை திரட்டி அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரலாம்.  அடுத்து ஒவ்வொருவராக பட்டியல் நீளும் என்று பதறுகினம். ஏனைய நாடுகளும் இதை பின்பற்றும் என நம்பலாம்.

Link to comment
Share on other sites

போற போக்கை பாத்தால் சொறிலங்கா அரசை ஒரு பயங்கரவாத அரசாக பிரகடப்படுத்துவதே சர்வதேசத்துக்கு இருக்கும் ஒரே ஒருவழி போலத் தெரியுது.

Link to comment
Share on other sites

On ‎2‎/‎18‎/‎2020 at 5:52 AM, nunavilan said:

இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை சி.வி வரவேற்றமை தேசத்துரோக செயல்- தயாசிறி

 

by : Yuganthini

daya.jpg

 

அத்தோடு தனிநபர் ஒருவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதேவேளை புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்னேஷ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர். இது தேசதுரோக செயற்பாடாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இராணுவ-தளபதிக்கு-விதிக்க/

இலங்கையின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில்  அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு வெளிநாட்டு அதிகாரியொருவர் பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்தால் அந்த நபரும் அவருடைய குடும்பத்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுவைதற்கு தகுதியற்றவர்கள் என இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 தெரிவிக்கின்றது.

சவேந்திர சில்;வாவிற்கு எதிராக தடைவிதிப்பதற்கு அப்பால் அவருடைய குடும்பத்தவர்களிற்கு எதிராகவும் பயணதடைவிதிக்கப்படுகின்றது.

ஐக்கியநாடுகளும் ஏனைய அமைப்புகளும் முன்வைத்துள்ள ஆவணப்படுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகதன்மை மிக்கவை என அமெரிக்க இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/75669

US bans visits by Sri Lanka army chief over war crimes

The United States said Friday it would refuse entry to Sri Lanka's army chief over “credible” evidence of human rights violations in the bloody 2009 finale to the civil war.

The Department of State has designated Lieutenant General Shavendra Silva, current Commander of the Sri Lanka Army and Acting Chief of Defense Staff, as required under Section 7031(c) of the Department of State, Foreign Operations, and Related Programs Appropriations Act, due to credible information of his involvement, through command responsibility, in gross violations of human rights, namely extrajudicial killings, by the 58th Division of the Sri Lanka Army during the final phase of Sri Lanka’s Civil War in 2009.

Section 7031(c) provides that, in cases where the Secretary of State has credible information that foreign officials have been involved in a gross violation of human rights or significant corruption, those individuals and their immediate family members are ineligible for entry into the United States.  The law also requires the Secretary of State to publicly or privately designate such officials and their immediate family members.  In addition to the public designation of Shavendra Silva, the Department is also designating his immediate family members.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.