Jump to content

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேச்சையாகப் போட்டியிட வைக்கத் தீர்மானம் - இந்து குருமார் பேரவை

Recommended Posts

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார்.

mannar.jpg

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை  அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள்.

எதிர் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்   மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைக்குழுவாக  போட்டியிட உள்ளோம்.

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

கடந்த 2 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு பிரதி நிதியை; கேட்டிருந்தோம்.ஆனால் கைகூடாமல் போய் விட்டது.

இந்த முறையும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ்விடையம் தொடர்பாக கதைத்த போதும் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீடு வளங்க அவர்கள்; விரும்ப வில்லை.ஆசன ஓதுக்கீடு தரவும் இல்லை.

அதன் அடிப்படையில் எங்களுடைய மக்கள் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும்.

ஏன் என்றால் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு வேட்பாளர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

ஒவ்வொறு மாவட்டத்தில் இருக்கின்றவர்களும் ஒவ்வொறு சமையத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதி நிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத்தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயேட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற  பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்விடையம் தொடர்பில் ஆலயத்தின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,புத்தி ஜீவிகள்,கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.அதற்கமைவாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு  எங்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் உறுவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர். அதற்கமைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எந்த எந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்து ஆலோசித்து வருகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் பிரதி நிதிகள்,இந்துக் குருக்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/75902

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான போட்டி. 

பாவம் பிரபாகரனும் அவனின் பிள்ளைகளும்.

(அடுத்தது என்ன சாதிக்கொரு வேட்பாளரா ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள் அரசியலுக்கு ஏற்றதல்ல......
இதனால் தான் இனவாத பிக்குகளை திட்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

6 hours ago, ampanai said:

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

சிங்கள அரசு புத்த மதத்தை முதன்மை மதமாக்கி, சிறுபான்மை மதங்களை அழித்து வருகின்றது. இங்கே, தமிழ் பேசும் அரசியல் வாதிகள் உட்பட சிறுபான்மை அரசியல்வாதிகளால் எதுவுமே செய்ய முடியாத நிலை.

ஆனால், அதற்கு தீர்வாக இவ்வாறான அணுகுமுறை தீர்வை தருமா என தெரியவில்லை. இருந்தாலும், சிங்கள தரப்பில் பல வேறு புத்த மதத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகளும் அமைப்புக்களும் உள்ளன. அவைகள் அரசியல் செல்வாக்கும் கொண்டவை, பாராளுமன்றத்திலும் உள்ளார்கள். அதனால், இந்த அணுகுமுறையும் சரியாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

எப்படி 

சாதிக்கொரு கட்சி, சமயத்திற்கு ஒரு கட்சி என்றா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

இந்தியா, சிரியா, ஈராக், மத்திய கிழக்கு மற்றும் பல கிறீத்துவக் குழுக்கள் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடியும் மஹிந்தவும் சேர்ந்து காய்ச்சிய கூழின் பருக்கை இவர்கள். சீ நல்லிணக்கம்.  தமிழரை கூறு போடுகினமாம் மானங்கெடட தமிழன் இருந்தாலென்ன அழிந்தாலென்ன?

Link to comment
Share on other sites

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Dash said:

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

அரசியல் என்னும் சாக்கடை.

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

முதல்ல கோவில்களில் கொள்ளையடிப்பதை நிப்பாட்டுங்க.
அதுக்கு பிறகு உங்க கோஷ்டி அரசியலுக்கு லாயக்கா இல்லையா என்டு யோசிப்பம்.

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

உங்கள் கருது சரியாக இருந்தாலும் தற்போதைய நிலவரம் வேறுமாதிரி இருக்கிறது।

சட்டத்தரணி புனிதநாயகம் தலைமையில் கத்தோலிக்கர்கள் இப்போது ஒரு அணியாக போட்டியிடப்போகிறார்கள்। இந்துக்கள் தமது அணியாக போட்டியிடப்போகிறார்கள்।

கத்தோலிக்கர்கள் வாக்குப்பலம் அங்கு அதிகமாக இருப்பதால் நிச்சயமாக இந்த அணி வெல்லக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது। இதட்கு அங்குள்ள ஆயர்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகின்றது।

எனவே நிச்சயமாக அடைக்கலத்துக்கு இம்முறை ஆப்பு வைக்கப்படும் போலத்தான் தெரிகிறது। அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வளர்க்க  முயட்சிக்கிறார்களே ஒழிய மக்களை பற்றி சிந்திப்பதில்லை। இதுதான் கள நிலவரம்।

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார்.

mannar.jpg

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை  அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள்.

எதிர் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்   மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைக்குழுவாக  போட்டியிட உள்ளோம்.

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

கடந்த 2 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு பிரதி நிதியை; கேட்டிருந்தோம்.ஆனால் கைகூடாமல் போய் விட்டது.

இந்த முறையும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ்விடையம் தொடர்பாக கதைத்த போதும் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீடு வளங்க அவர்கள்; விரும்ப வில்லை.ஆசன ஓதுக்கீடு தரவும் இல்லை.

அதன் அடிப்படையில் எங்களுடைய மக்கள் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும்.

ஏன் என்றால் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு வேட்பாளர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

ஒவ்வொறு மாவட்டத்தில் இருக்கின்றவர்களும் ஒவ்வொறு சமையத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதி நிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத்தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயேட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற  பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்விடையம் தொடர்பில் ஆலயத்தின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,புத்தி ஜீவிகள்,கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.அதற்கமைவாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு  எங்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் உறுவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர். அதற்கமைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எந்த எந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்து ஆலோசித்து வருகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் பிரதி நிதிகள்,இந்துக் குருக்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/75902

நிச்சயமாக உங்களால் மன்னர் மாவட்த்திலிருந்து இந்த அமைப்பூடாக ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியாது। மன்னாரில் ஏறக்குறைய ஐந்து வீதமான இந்துக்களே இருக்கிறார்கள்। அப்படி என்றால் ஒரு இந்து அமைப்பால் வெல்வது மிக கடினம் ।

அத்துடன் வவுனியா, முல்லைத்தீவில் எந்தவொரு கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை।

எனவே நீங்கள் செய்ய நினைப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்। இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ வாக்குகள் மத ரீதியாக பிரியும்போது முஸ்லிம்களுக்கு அது வாய்ப்பாக அமையும்। அல்லது தமிழர் அல்லாத தரப்புக்கு வாய்ப்பாக அமையும்।

இருந்தாலும் மன்னாரில் கத்தோலிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட்தாக அறிகிறேன்। அவர்களும் கத்தோலிக்க ஆயர்களின் துணையுடன் ஒரு சடடதரணி தலைமையில் போட்டியிடப்போகிறார்கள்। எனவே அவர்கள் நிச்சயமாக மன்னாரில் வெல்லுவார்கள்।

இது தமிழர்களுக்கு ஒரு பின்னடைவே . நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைக்கு காரணம்.. சிக்கல்களை சரியாகக் கையாளத் தெரியாத... தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம் சும் மாவை சாவை கும்பலே.

அவர்கள்.. தமிழர்களை முற்றாக அரசியல் அநாதைகளாக்கும் வேலையையே 2009 மே க்குப் பின்னிருந்து செய்து வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க விடயம். 

இதனைச் சீர்செய்ய வேண்டியது தமிழர் மண்ணின் மீது மக்கள் மீது பற்றுறுதி கொண்ட இளையோரே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Vankalayan said:

அப்போ வட கிழக்கிலுள்ள கிறீத்துவர்களின் நிலை ? அவர்கள் தமிழர்கள் இல்லையா? இது பிற மாவட்டங்களிலுள்ள கிறீத்துவர்களை காட்டிக் கொடுக்கும் செயல் இல்லையா ? முத்தையா (😜) முரளீதரனின் செய்கைக்கும் இதற்கும் வேறுபாடு இல்லையே ?

ஐயா பிரபாகரா ! நீ எங்கேயய்யா இருக்கிறீர்? உன்னுடைய சனத்தின் கேவல நிலையை ஒரு தரம் திரும்பிப் பாருமையா!

இந்த கேடுகெட்ட இனத்துக்காகவா நீயும் உன்னுடைய பிள்ளைகளும் உயிர் கொடுத்தீர் !

Link to comment
Share on other sites

47 minutes ago, Kapithan said:

கபித்தான், என்ன செய்வது। இப்படி இந்துக்கள் தனியே போனால் , கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் தனியேதான் போக வேண்டும்। வேறு ஏதும் வழி இருப்பதாக தெரியவில்லை।

பார்ப்பம் மாற்று  தலைமையும் வந்துவிட்ட்து।  இணையப்போராளிகளும் இருக்கிறார்கள்। அவர்களாவது எதாவது செய்யட்டும்।பிரபாகரன் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது।

Link to comment
Share on other sites

யுத்தம் நடந்த காலத்தில் இந்து குருமார் மக்களுக்காக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டதான எனக்கு ஞாபகம் இல்லை. ஒப்புக்கு சில சர்வமத பேரணிகளில் கலந்து கொண்டிருப்பார்கள். அதைக்கூட  ஒழுங்கு செய்தவர்கள் வேறு அமைப்புக்கள் தான். அதே வேளை யுத்த காலத்தில் ஐரோப்பிய பத்திரிகளில் புலிகளுக்கு எதிராகவும் தமிழரின் போராட்டதை கொச்சைப்படுத்தி  வந்த அத்தனை கட்டுரைகளுக்கும் மூலம் எது என்று பார்த்தால் அத்தனையும் டெல்லியில் இருந்து இந்து பார்பன பத்திரிகையாளர்களால் எழுத‍ப்பட்டவையாகவே இருந்தன.  இந்த லட்சனத்தில் தமிழர்களிடம் மத ரீதியான பிளவுகளை உருவாக்க  முனையும் இப்படியான மதகுருமார் என்ற விஷ செடிகளை தமிழ் மக்கள் இணைந்து தோற்கடிப்பதோடு நில்லாது வேரறுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

இந்த நிலைக்கு காரணம்.. சிக்கல்களை சரியாகக் கையாளத் தெரியாத... தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம் சும் மாவை சாவை கும்பலே.

அவர்கள்.. தமிழர்களை முற்றாக அரசியல் அநாதைகளாக்கும் வேலையையே 2009 மே க்குப் பின்னிருந்து செய்து வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க விடயம். 

இதனைச் சீர்செய்ய வேண்டியது தமிழர் மண்ணின் மீது மக்கள் மீது பற்றுறுதி கொண்ட இளையோரே. 

ஆம், கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பின் தோல்வியே காரணம். அவர்கள் பதவியில் இருந்து மக்களை ஏமாற்றியதால் ஒரு அரசியல் தலைமை இல்லாத இனமாக மாறி உள்ளோம். 

விளைவு - இவ்வாறான தன்னிலை முன்னெடுப்பு. 

ஆனால், இறுதியில் நீங்கள் குறிப்பிட்டது போன்று, அடுத்த அரசியல் தலைமுறை உருவாக்கம் பெற இது வழிகோலுகின்றது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fNeMN5.gifமன்னார்ஸ்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ, தமிழரசுகட்சி, த .தே. கூட்டணியில் எத்தனை கிறிஸ்தவ உறுப்பினர் இருக்கிறார்கள்? ஓரிருவரை தவிர எல்லோருமே இந்துக்கள் தானே. இதுபற்றி கிறிஸ்தவர்கள் யாரும் கவலைப்படவில்லையே. இப்போமட்டும் இந்துக்களுக்கு ஏனிந்த வீணான கவலை? முன்னாள்  மன்னார் ஆயர், சிங்கள அரசியலின் அநீதிகளை  எடுத்துக்காட்டும்போது கிறிஸ்தவன், இந்து என்கிற பேதம் இல்லாமல் தமிழர் என்கிற ஒருமைப்படியே நடந்தார். கிறிஸ்தவர்களில் என்ன பெரிய பிழையைக்கண்டு இப்பிடி பிரிச்சுக்கொண்டு நிக்கினம். பதவி, பணம், சொந்தப் புத்தி இல்லை.  மக்களை செம்மறிக் கூட்டம் எண்டு நினச்சு மேய்க்க நிக்கினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎18‎/‎2020 at 10:41 PM, குமாரசாமி said:

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

ஓம் அண்ணா ...இல்லாட்டில் ஒரு காலத்தில் முஸ்லீம்களது நாடாயிருக்கும் 

On ‎2‎/‎18‎/‎2020 at 10:32 PM, Kapithan said:

எப்படி 

சாதிக்கொரு கட்சி, சமயத்திற்கு ஒரு கட்சி என்றா ?

குட்டக்  குட்ட ஓரளவுக்குத் தான் குனியலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

ஓம் அண்ணா ...இல்லாட்டில் ஒரு காலத்தில் முஸ்லீம்களது நாடாயிருக்கும் 

குட்டக்  குட்ட ஓரளவுக்குத் தான் குனியலாம் 

சமயத்திற்கொரு கட்சிச்,  சாதிக்கொரு கட்சி தொடங்கலாம் என்கிறீர்கள். 

நானும் இரதியை ஓரளவு வளர்ந்தவர் என நினைத்திருந்தேன். இப்பத்தான் தெரிகிறது வினாயகமூர்த்தியருக்கு சிறிய வயதிலும் மகள் இருக்கிறார் என்று. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2020 at 7:42 PM, Vankalayan said:

 நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

மன்னார் மறைமாவட்டத்தின் கவலை, உண்மையான எல்லா தமிழனுக்கும் உள்ள கவலை. வாக்குறுதிகளை காெடுத்து, வாக்கு வாங்கி பாராளுமன்றம் செல்பவர்கள் அந்த மக்களை, அவர்களது தேவைகளை தட்டி கழித்து, சர்வாதிகாரிகளைப் பாேல் அவர்களுக்கு பதிலளிப்பது ஏற்புடையதல்ல. அதனாலேயே இந்துவான விக்கினேஸ்வரனை அரசியலுக்கு காெண்டுவர ஊக்கம் காெடுத்தது. ஆனால் சதி எல்லாவற்றையும் பழைய நிலையிலிருந்து நகர விடவில்லை. அதனால் இப்படி சிந்தித்து செயற்பட்டு உரிமைகளை பெற நினைக்கலாமே ஒழிய, இந்துக்களுக்கு எதிராகவாே, அரச நன்மைகளுக்காகவாே செயற்படமாட்டார்கள். செயற்படவும் கூடாது. அப்படி செயற்பட்டால் அது உண்மையான கத்தாேலிக்க, அப்பாேஸ்தலிக்க திருச்சபையாகாது. சில விலைபாேனதுகள் அவ்வாறு கருதலாம் அல்லது அவர்களையும் மாற்ற நினைக்கலாம். அது தவறானது. சிலர் தீட்டிய மரத்தில் கூர் பார்க்க நினைத்து, அவதூறு செய்வதன் மூலம் தங்கள் சின்னத்தனத்தையும், நன்றிகெட்ட தனத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நானும் இரதியை ஓரளவு வளர்ந்தவர் என நினைத்திருந்தேன். இப்பத்தான் தெரிகிறது வினாயகமூர்த்தியருக்கு சிறிய வயதிலும் மகள் இருக்கிறார் என்று.

அது அவர்களின் தப்பல்ல, சுயநலத்திற்கு விலைபாேகிறவர்களின்பாெதுப்பண்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.