Jump to content

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேச்சையாகப் போட்டியிட வைக்கத் தீர்மானம் - இந்து குருமார் பேரவை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

அது அவர்களின் தப்பல்ல, சுயநலத்திற்கு விலைபாேகிறவர்களின்பாெதுப்பண்பு.

எல்லோரிடமும் ஆகக் குறைந்த அளவிலேனும் பொது நலனில் அக்கறை இருக்க வேண்டும். அல்லது நாகரீகங்கள் கற்காலத்திற்கு திரும்புவது தவிர்க்க முடியாதது.

Link to comment
Share on other sites

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

Link to comment
Share on other sites

’பிரிவினையை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்’

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக பிரிவினையை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டியது ஆன்மீகத் தலைவர்களின் கடமையென, மன்னார் நகர சபை உறுப்பினர் செல்வக்குமரன் டிலான் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 24ஆவது அமர்வு, சபை மண்டபத்த்லி,  நேற்று (20) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் அரசியல் ரீதியாக எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லையெனவும் இனியும் அவ்வாறான பிரச்சினைகள் நடக்க கூடாதெனவும் கூறினார்.

ஆன்மீகம் என்ற ரீதியில் அரசியல் செய்கின்றபோது, பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த அவர், அந்த வகையில், ஆன்மீகத் தலைவர்கள் சரியான முறையில் உணர்ந்து, மக்களுக்கும் மதங்களுக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.

எனவே, ஆன்மீகத்தையும் அரசியலையும் வைத்து மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்காமல் செயற்பட வேண்டுமெனவும், செல்வக்குமரன் டிலான் கேட்டுக்கொண்டார்.

http://www.tamilmirror.lk/வன்னி/பிரிவினையை-ஏற்படுத்துவதை-தடுக்க-வேண்டும்/72-245819

Link to comment
Share on other sites

47 minutes ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

😢😢😢😢😢😢😢😢😢😢😢

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

அவ்வாறு மாறுவதற்கு எந த புறக காரணிகளும் இல்லை. ஆர். எஸ் எஸ் பயங்கரவாதிகளுக்கு அது பொறுக்காமல் இப்படியான போலித்தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தமிழ்மக்களிடம் இவ்வாறான மதரீதியான பிளவை ஏற்படுத்த முயல்கிறார்கள். எம்மிடையே சிறிய அளவில் ஊடுருவியுள்ள சங்க பரிவார விஷமிகளை களை எடுப்பதுதான் இவ்வாறான முரண பாடுகளை வேரறுக்க வழி. 

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

இலங்கையில் மத சுதந்திரம் அரசியல் அமைப்பின் சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சனநாயக நாடுகளில் உள்ள பண்பு. 

ஆனால், இலங்கையில் புத்த முதன்மை மதமாகவும், அரசியலில் ஈடுபடும்  மதமாகவும், வன்முறைகளில் ஈடுபடும் மதமாகவும் உள்ளது. அண்ணளவாக வருடம் ஒன்றிற்கு முன்னராக நடந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் இன்னொரு சிறுபான்மை மதமாகவும் மூன்றாவது சிறுபான்மை மதம் குறிவைக்கப்பட்டது. 

எனவே வேரறுப்பதில் அந்தந்த மதங்களிலும் செய்திருந்தால் இந்த மதமும் தானாக இருந்திருக்கும். 

ஆக. நான்காவது சிறுபான்மை மதம் மட்டும் தொடர்ந்தும் அமைதியாகவும் உரிமைகளை இழந்தும் மௌனமாக இருக்கும் என எதிர்பாக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

அப்படியானால் சிறுபான்மை மதமான சைவ சமயம் பவுத்த மதத்திற்கெதிராகத்தான் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

அப்படியானால் சிறுபான்மை மதமான சைவ சமயம் பவுத்த மதத்திற்கெதிராகத்தான் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அது தற்பாதுகாப்பு 'போராட்டமாக' இருப்பதில் தவறில்லை. 

Link to comment
Share on other sites

22 hours ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

பௌத்த மதம்  ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

Link to comment
Share on other sites

22 hours ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

15 hours ago, ampanai said:

இலங்கையில் மத சுதந்திரம் அரசியல் அமைப்பின் சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சனநாயக நாடுகளில் உள்ள பண்பு. 

ஆனால், இலங்கையில் புத்த முதன்மை மதமாகவும், அரசியலில் ஈடுபடும்  மதமாகவும், வன்முறைகளில் ஈடுபடும் மதமாகவும் உள்ளது. அண்ணளவாக வருடம் ஒன்றிற்கு முன்னராக நடந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் இன்னொரு சிறுபான்மை மதமாகவும் மூன்றாவது சிறுபான்மை மதம் குறிவைக்கப்பட்டது. 

எனவே வேரறுப்பதில் அந்தந்த மதங்களிலும் செய்திருந்தால் இந்த மதமும் தானாக இருந்திருக்கும். 

ஆக. நான்காவது சிறுபான்மை மதம் மட்டும் தொடர்ந்தும் அமைதியாகவும் உரிமைகளை இழந்தும் மௌனமாக இருக்கும் என எதிர்பாக்க முடியாது. 

மனித வாழ்வுக்கு மதங்கள் ஏன் தேவை என்று கேள்வி எழுப்பும் போது மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துகின்றன மதங்கள் அன்பை போதிக்கின்றன, மனித வாழ்வுக்கு மேலான கடவுளை அடைதல்  என்றெல்லாம் கூறும் அதை நம்பும் அதே  மதக்கருத்தியல் தான் மதங்களை காப்பாற்றும்  நோக்கத்திற்காக மனிதன் தனக்குள் சண்டையிடலாம் என்றும்  நல்லவனாக, அல்லது கெட்டவனீக வாழ்வது மற்றயவர்களால் தான முடிவெடுக்கப்படுகிறது என று வெறுப்பையும் விதைக்கிறது. என் மதம் உன் மதம. என்று தமக்குள ஈகோவை வளர்ககும் போதே ஆன்மீகம் அவர்களுக்குள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  

இவ்வாறான தாம் முன்பு சொன்னதையே வெட்கமின்றி மறுதலிப்பது மதங்களின் இயல்பு. கடவுளுக்கு  எல்லாம் தெரியும்.உலகில் வாழும் எல்லல ஜீவராசிகளையும் அவனே படைத்தான். அனைத்தும் அறிந்தவன் அவன்  என்று  பக்தர்களை நம்ப வைத்த அதே கும்பல் தான் கடவுளுக்கு தமிழ் தெரியாது. தமிழில் பூசை செய்தால் கடவுளுக்கு புரியாது  சமஸ்கிரகத்தில் மட்டும் தான் பூசை செய்ய வேண்டும் என்பதையும் ஒரே நேரத்தில்  கூறி பகதர்களை நம்ப வைத்துள்ளது. சிந்திக்கும் ஆற்றலை இழந்து இரண்டையும் ஒரே நேரத்தில்  நம்பும்  கூட்டம் தான் பக்த கூட்டமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

பௌத்த மதம்  ஒரு சிறுபான்மை மதம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

சிரிப்பொலி,
காமெடி பஜார்,
கோமாளிபாக்கம்,
கொழும்பு 🙂 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

மனித வாழ்வுக்கு மதங்கள் ஏன் தேவை என்று கேள்வி எழுப்பும் போது மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துகின்றன மதங்கள் அன்பை போதிக்கின்றன, மனித வாழ்வுக்கு மேலான கடவுளை அடைதல்  என்றெல்லாம் கூறும் அதை நம்பும் அதே  மதக்கருத்தியல் தான் மதங்களை காப்பாற்றும்  நோக்கத்திற்காக மனிதன் தனக்குள் சண்டையிடலாம் என்றும்  நல்லவனாக, அல்லது கெட்டவனீக வாழ்வது மற்றயவர்களால் தான முடிவெடுக்கப்படுகிறது என று வெறுப்பையும் விதைக்கிறது. என் மதம் உன் மதம. என்று தமக்குள ஈகோவை வளர்ககும் போதே ஆன்மீகம் அவர்களுக்குள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  

இவ்வாறான தாம் முன்பு சொன்னதையே வெட்கமின்றி மறுதலிப்பது மதங்களின் இயல்பு. கடவுளுக்கு  எல்லாம் தெரியும்.உலகில் வாழும் எல்லல ஜீவராசிகளையும் அவனே படைத்தான். அனைத்தும் அறிந்தவன் அவன்  என்று  பக்தர்களை நம்ப வைத்த அதே கும்பல் தான் கடவுளுக்கு தமிழ் தெரியாது. தமிழில் பூசை செய்தால் கடவுளுக்கு புரியாது  சமஸ்கிரகத்தில் மட்டும் தான் பூசை செய்ய வேண்டும் என்பதையும் ஒரே நேரத்தில்  கூறி பகதர்களை நம்ப வைத்துள்ளது. சிந்திக்கும் ஆற்றலை இழந்து இரண்டையும் ஒரே நேரத்தில்  நம்பும்  கூட்டம் தான் பக்த கூட்டமாக உள்ளது. 

துல்பன்,
நீங்கள் மதத்தை பற்றி கூறும் கருத்துக்கள் உயர்ந்தவையாகவும் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், நாம் இருக்கும் இடத்திற்கு அது சரி வருமா என்பதே வினா? இல்லை அந்த மாற்றம் அவர்களுக்குள்  இருந்து வர வேண்டும். 

உதாரணத்திற்கு, ஒருவருக்கு தமிழ் தெரியும் என்பதை விட அதை எங்கே எப்படி யாரிடம் எதை பேச வேண்டும் மற்றும் எதை பேசக்கூடாது என்பது முக்கியமானது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.