Sign in to follow this  
ampanai

"உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலின் ஓராண்டு நினைவில் மக்கள் இன, மத பேதமின்றி கலந்துகொள்ள வேண்டும்"

Recommended Posts

(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று முதலாவது நினைவுதின நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதலே ஆரம்பிக்கபட இருப்பதாக தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார்.


30-Malcom_Ranjith.jpg
கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

உயிர்த் ஞாயிறுதின தாக்குதல்களின் போது 300 அளவிலானோர் உயிரிழந்துள்ளதுடன் , 500 பேர் வரை காயமடைந்திருந்தனர். இதன்போது நாடுபூராகவும் பதற்றநிலைமை ஏற்பட்டிருந்தது. பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இவ்வாறான சந்தரப்பத்திலே நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டிருந்ததுடன்,பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவித பேதமுமின்றி உதவி ஒத்தாசைகளையும் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்று ஒருவருட பூர்த்தி இன்னும் இரு மாதங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் கத்தோலிக்க திருச்சபையினால் நினைவு தினத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 , 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அனைத்து தேவாலயங்களிலும் இரவு 7 மணி தொடக்கம் 8 மணிவரை விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதுடன் , 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புனித ஜொசப் வித்தியாலயத்தில் தியானம் மற்றும் ஆராதனை பாடல்கள் இடம்பெறவிருப்பதுடன் , இறந்தவர்களுக்கு ஆத்மசாந்தியை வேண்டி இலத்தின் மொழியிலான பாடல்களும் பாடப்படவுள்ளன. இதன்போது சுமார் 2000 மாணவர்கள் நிகழ்வுகளில் பங்குப்பற்றவிருக்கின்றனர்.

அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மாதம்பிட்டி மயானத்திலும் , 5 மணிக்கு கனத்த மயானத்திலும் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நினைவுத் தூபிகள் திறக்கப்படவுள்ளன.

மறுநாள் தொடக்கம் கொச்சிகடை மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் இவை 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 8.45 மணியளவில் ஆரம்பிக்கப்படும் நிகழ்வுகள் மறுநாள் 21 ஆம் திகதி காலை 8.45 வரை இடம்பெறும். பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிமுக நிகழ்வு இடம்பெறுவதுடன் , இதனையடுத்து உயிரிழந்தவர்களை நினைவு படுத்தும் வகையில் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்படும்.

இதன்போது நாட்டிலுள்ள அனைவரையும் இந்த செயற்பாட்டுடன் இணைநச்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் , ஆலையங்கள் மற்றும் விகாரைகளிலுள்ள மணிகளை ஒலிக்கச் செய்து ஏனையோருக்கு விழிப்பு ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

இதற்கு பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றுதல் , ஆராதனை பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன. கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இவ்வாறான ஆராதனைகள் இடம்பெறவிருப்பதுடன் , சீயோன் தேவலாயத்திலும் இவ்வாறான நினைவுதின நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.இதுபோன்ற அழிவு மீண்டும் நாட்டில் ஏற்படாமல் இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் உண்மைத்தன்மையை அரசாங்கத்தினர் தனது அரசியல் இலாபத்திற்காக மறைத்து வருகின்றார்களோ என்ற எண்ணம் எமக்கு எழுந்துள்ளது.

தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாக உண்மையான குற்றவாளிகளை கட்டறிய வேண்டும். தாக்குதல் தொடர்பாக முன்னரே தகவல் கிடைத்திருந்த பொதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை  தொடர்பான காரணம் தொடர்பிலும் கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/75943

Share this post


Link to post
Share on other sites

"நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார்."

 

மேலோட்டமாக நல்ல கருத்து போல தெரியும் இந்த வார்த்தை யாலம் 
எனக்கு சரியாக விளங்குவதில்லை 

எல்லோரும் எதோ ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் 
எல்லோரும் எதோ ஒரு மதத்தைதை சேர்ந்தவர்கள் 

சிங்களவர்கள் சிங்களவர்களாகவும் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாகவும் சேர முடியாத போது 
இன மத பேதம் இன்றி ஆடு மாடுகள் போல சேர்வதால் என்ன பயன்?  

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ampanai said:

தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாக உண்மையான குற்றவாளிகளை கட்டறிய வேண்டும். தாக்குதல் தொடர்பாக முன்னரே தகவல் கிடைத்திருந்த பொதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை தொடர்பான காரணம் தொடர்பிலும் கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அப்படியே இலத்தீன் மொழியில் யார் யாருக்கு என்னென்ன பங்கு இந்த படுகொலையில் இருந்தது என நீங்கள் கூறிவிடுங்கள்

 

2 hours ago, ampanai said:

இறந்தவர்களுக்கு ஆத்மசாந்தியை வேண்டி இலத்தின் மொழியிலான பாடல்களும் பாடப்படவுள்ளன. இதன்போது சுமார் 2000 மாணவர்கள் நிகழ்வுகளில் பங்குப்பற்றவிருக்கின்றனர்.

 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ampanai said:

இந்நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்று ஒருவருட பூர்த்தி இன்னும் இரு மாதங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் கத்தோலிக்க திருச்சபையினால் நினைவு தினத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுஷன் இன்னும் 2 மாதமிருக்க இப்ப ஏன் குத்திமுறிக்கிறார்.

பல கிறீஸ்தவர்களே இந்த ஆளின் கூத்துக்களைப் பாத்து பம்மி பம்மி சிரிக்கீனம்.

இதுக்குள்ள ஒருசில ஆட்கள் இவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவர் என்டு ரீல் விடவும் தவறுவதில்லை.

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, Maruthankerny said:

"நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார்."

 

மேலோட்டமாக நல்ல கருத்து போல தெரியும் இந்த வார்த்தை யாலம் 
எனக்கு சரியாக விளங்குவதில்லை 

எல்லோரும் எதோ ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் 
எல்லோரும் எதோ ஒரு மதத்தைதை சேர்ந்தவர்கள் 

சிங்களவர்கள் சிங்களவர்களாகவும் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாகவும் சேர முடியாத போது 
இன மத பேதம் இன்றி ஆடு மாடுகள் போல சேர்வதால் என்ன பயன்?  

உண்மையில் உங்களுக்கு விளங்கவில்லையா அல்லதுவேறேதும் கூற முனைகிறீர்களா மருது ? 

1 hour ago, Rajesh said:

இந்த மனுஷன் இன்னும் 2 மாதமிருக்க இப்ப ஏன் குத்திமுறிக்கிறார்.

பல கிறீஸ்தவர்களே இந்த ஆளின் கூத்துக்களைப் பாத்து பம்மி பம்மி சிரிக்கீனம்.

இதுக்குள்ள ஒருசில ஆட்கள் இவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவர் என்டு ரீல் விடவும் தவறுவதில்லை.

குண்டுத்தாக்குதலை எதிர்க்கிறீர்களா அல்லது வரவேற்கிறீர்களா அதைக் கூறுங்கள் முதலில் ? 

 

 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, Maruthankerny said:

"நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார்."

மேலோட்டமாக நல்ல கருத்து போல தெரியும் இந்த வார்த்தை யாலம் 
எனக்கு சரியாக விளங்குவதில்லை 

எல்லோரும் எதோ ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் 
எல்லோரும் எதோ ஒரு மதத்தைதை சேர்ந்தவர்கள் 

 

இவர் பொதுவாக சிங்கள கத்தோலிக்கர்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்। தமிழ் கத்தோலிக்கர்கள் பொதுவாக இவரை ஏற்றுக்கொள்வதில்லை।

இந்த தாக்குதலுக்கு பிட்பாடு அவர் மடடக்களுப்புக்கு போய் அங்குள்ள தமிழ் கிறிஸ்தவர்களை உடனே சந்திக்கவில்லை। எல்லா இடங்களுக்கும் சென்றார், ஏன் உண்ணாவிரதமிருந்து ரத்தன தேரரை பார்க்க கண்டிக்கு சென்றார்।

பத்திரிகைகள் இதைப்பற்றி கடுமையாக விமர்சிக்க தொடங்கினவுடன்தான்  மட்டக்களப்புக்கு ஓடிப்போனார்। இருந்தாலும் சொல்லக்கூடிய அளவுக்கு ஏதும் உதவி செய்யவில்லை।

ஆனால் சமாதானம் , ஒற்றுமை இப்படியாக வார்த்தைகளில்மட்டும்தான் இவரின் செயல்களை காணலாம்। மற்றப்படி இவர் ஒரு இனவாதிதான்।

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, Kapithan said:

குண்டுத்தாக்குதலை எதிர்க்கிறீர்களா அல்லது வரவேற்கிறீர்களா அதைக் கூறுங்கள் முதலில் ?

இந்த மனுஷன் இன்னும் 2 மாதமிருக்க இப்ப ஏன் குத்திமுறிக்கிறார்.

பல கிறீஸ்தவர்களே இந்த ஆளின் கூத்துக்களைப் பாத்து பம்மி பம்மி சிரிக்கீனம்.

இதுக்குள்ள ஒருசில ஆட்கள் இவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவர் என்டு ரீல் விடவும் தவறுவதில்லை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஹாஹா.. நானும் தெளிவாகக்  கூறியுள்ளேன். உருட்டும் இடத்தில் இருப்பவர்கள் திருடர்கள் என்று.😂
    • பட்டது + படிச்சது + பிடித்தது - 215                                        1980 ஆரம்ப காலம்.   நான் பாடசாலை விடுமுறையில் ஊர் வந்தால் இவருடன் தான் அதிகம் யாழ்ப்பாணத்தில் சுற்றியதுண்டு. எனக்கு ஒன்று விட்ட அண்ணர் இவர் என்ற போதும் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தம்பி என்று இவர் என்னை அழைப்பதே தேனூறும்.                          இவருக்கு சின்னக்கடை பகுதியில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அது அதிகாலை நான்கு மணியளவில் திறக்கப்பட்டு பின்னேரம் நான்கு மணியளவில் பூட்டப்படும். அதன் பின்னர் குளித்து விட்டு வெளிக்கிட்டால்  நேரே ஜந்து லாம்புச்சந்தியிலுள்ள வாப்பா கடையில் நல்ல மாட்டிறைச்சி சாப்பாட்டு. (முதல் முதலில் இந்த கடையை எனக்கு அறிமுகப்படுத்தியது இவர் தான்). அதன் பின்னர் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு கடைசி பஸ் இல் என்னை ஏற்றிவிட்டு கடையில் போய் படுத்துக் கொள்வார். அடுத்த நாள் காலையில் எனக்கு யாழ்ப்பாணத்தில் அலுவல் இருக்கு நானும் உங்களுடன் கடையில் தங்குகின்றேன் என்றால் அங்கு உனக்கு வசதி காணாது தம்பி இந்த வாழ்க்கை எங்களோட போகட்டும் நீ நன்றாக படி என்று  கடைசி பஸ்வரை வந்து ஏற்றி அனுப்புவார்.      அங்கேயே சொந்த தொழில் செய்து நன்றாக வாழ்ந்தவர் வெளிநாடு வரவேண்டிய எந்த தேவையும் அற்றவர். அவரது மரணம் ஒரு அண்ணனை நல்ல நண்பனை இழந்த இரட்டிப்பு சோகத்தை தருகிறது. இந்த நேரத்தில் இதை எழுதாமல் விட்டால் எப்போதும் எழுதமுடியாது போகலாம்.   ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறேன் அண்ணா நண்பா.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       (புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை "பால்குடி" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றையதினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்)பட்டது + படிச்சது + பிடித்தது - 215                                        1980 ஆரம்ப காலம்.   நான் பாடசாலை விடுமுறையில் ஊர் வந்தால் இவருடன் தான் அதிகம் யாழ்ப்பாணத்தில் சுற்றியதுண்டு. எனக்கு ஒன்று விட்ட அண்ணர் இவர் என்ற போதும் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தம்பி என்று இவர் என்னை அழைப்பதே தேனூறும்.                          இவருக்கு சின்னக்கடை பகுதியில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அது அதிகாலை நான்கு மணியளவில் திறக்கப்பட்டு பின்னேரம் நான்கு மணியளவில் பூட்டப்படும். அதன் பின்னர் குளித்து விட்டு வெளிக்கிட்டால்  நேரே ஜந்து லாம்புச்சந்தியிலுள்ள வாப்பா கடையில் நல்ல மாட்டிறைச்சி சாப்பாட்டு. (முதல் முதலில் இந்த கடையை எனக்கு அறிமுகப்படுத்தியது இவர் தான்). அதன் பின்னர் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு கடைசி பஸ் இல் என்னை ஏற்றிவிட்டு கடையில் போய் படுத்துக் கொள்வார். அடுத்த நாள் காலையில் எனக்கு யாழ்ப்பாணத்தில் அலுவல் இருக்கு நானும் உங்களுடன் கடையில் தங்குகின்றேன் என்றால் அங்கு உனக்கு வசதி காணாது தம்பி இந்த வாழ்க்கை எங்களோட போகட்டும் நீ நன்றாக படி என்று  கடைசி பஸ்வரை வந்து ஏற்றி அனுப்புவார்.      அங்கேயே சொந்த தொழில் செய்து நன்றாக வாழ்ந்தவர் வெளிநாடு வரவேண்டிய எந்த தேவையும் அற்றவர். அவரது மரணம் ஒரு அண்ணனை நல்ல நண்பனை இழந்த இரட்டிப்பு சோகத்தை தருகிறது. இந்த நேரத்தில் இதை எழுதாமல் விட்டால் எப்போதும் எழுதமுடியாது போகலாம்.   ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறேன் அண்ணா நண்பா.                                                                                                                                                                                                                                                                                                                                                                        கு                                                                                      (புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை "பால்குடி" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றையதினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்) பட்டது + படிச்சது + பிடித்தது - 215                                        1980 ஆரம்ப காலம்.   நான் பாடசாலை விடுமுறையில் ஊர் வந்தால் இவருடன் தான் அதிகம் யாழ்ப்பாணத்தில் சுற்றியதுண்டு. எனக்கு ஒன்று விட்ட அண்ணர் இவர் என்ற போதும் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தம்பி என்று இவர் என்னை அழைப்பதே தேனூறும்.                          இவருக்கு சின்னக்கடை பகுதியில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அது அதிகாலை நான்கு மணியளவில் திறக்கப்பட்டு பின்னேரம் நான்கு மணியளவில் பூட்டப்படும். அதன் பின்னர் குளித்து விட்டு வெளிக்கிட்டால்  நேரே ஜந்து லாம்புச்சந்தியிலுள்ள வாப்பா கடையில் நல்ல மாட்டிறைச்சி சாப்பாட்டு. (முதல் முதலில் இந்த கடையை எனக்கு அறிமுகப்படுத்தியது இவர் தான்). அதன் பின்னர் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு கடைசி பஸ் இல் என்னை ஏற்றிவிட்டு கடையில் போய் படுத்துக் கொள்வார். அடுத்த நாள் காலையில் எனக்கு யாழ்ப்பாணத்தில் அலுவல் இருக்கு நானும் உங்களுடன் கடையில் தங்குகின்றேன் என்றால் அங்கு உனக்கு வசதி காணாது தம்பி இந்த வாழ்க்கை எங்களோட போகட்டும் நீ நன்றாக படி என்று  கடைசி பஸ்வரை வந்து ஏற்றி அனுப்புவார்.      அங்கேயே சொந்த தொழில் செய்து நன்றாக வாழ்ந்தவர் வெளிநாடு வரவேண்டிய எந்த தேவையும் அற்றவர். அவரது மரணம் ஒரு அண்ணனை நல்ல நண்பனை இழந்த இரட்டிப்பு சோகத்தை தருகிறது. இந்த நேரத்தில் இதை எழுதாமல் விட்டால் எப்போதும் எழுதமுடியாது போகலாம்.   ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறேன் அண்ணா நண்பா.                                                                                                                                                                                                                                                                                                                                                                        கு                                                                                      (புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை "பால்குடி" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றையதினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்)
    • எதுக்காக அமெரிக்கா, இந்தியாவின் கழுத்தினைப் பிடித்து மருந்தை வாங்குகின்றது என்று பல இந்தியர்களுக்கே குழப்பம். மருந்தியல் துறை குறித்த விளப்பம் இருந்தால் இதனை புரிந்து கொள்ள முடியும். மேலை நாடுகளில், ஒரு மருந்து தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன.  பரிசோதனை கூட கான்செப்ட் வெற்றி என்றால், மிருகங்களில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். அது வெற்றி என்றால் மட்டுமே மனிதரில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி பெற மிக கடுமையான, highly regularise விதிமுறைகள் உண்டு. அவசரமாக செய்து பெற முடியாது. இவர்கள் மருந்து தயாரித்து வெளியே விட 18 தொடக்கம் 24 மாதங்கள் ஆகலாம் என்று சொல்லி விட்டனர். அதுக்குள் கோரோனோ சன்னதம் ஆடி முடித்து, உருமாறி வேறு கோலமெடுத்திருக்கும். இந்தியா போன்ற நாடுகள் மருந்தியல் துறையில் மிக வேகமாக முன்னேறி வர காரணம் என்னவென்றால் அங்கே மிருகங்களில் பரிசோதனை என்பது பெயரளவில் தான் உண்டு. காரணம் மருந்துக்கே பணம் இல்லாத ஏழைகளுக்கு, இந்த மருந்துகளை செலுத்தி பரிசோதனை செய்து பார்த்துவிடுகின்றனர். ஆகவே விரைவாக மருந்து சந்தைக்கு வருகின்றது. இலங்கைக்கும் இந்த வகை மருந்து போயுள்ளது. இந்த நிறுவனங்கள் செலவு செய்வதால், ஏழைகளுக்கு மருந்து செலவு இல்லை. சிலவேளை பணமும் கிடைக்கும் என்பதால், அவர்களும் கையெழுத்தினை போட்டு விட்டு இசைந்து போகின்றனர். அவர்களுக்கும் வேறு வழி இல்லை என்பதே நிதர்சனம்.  இத்தகைய வழியில் பரிசோதனை செய்யப்பட்ட மருந்து குறித்த விபரம் அறிந்தே, பெரும் சிக்கலில் உள்ள அமெரிக்காவின் ஜனாதிபதி, இந்தியாவின் கழுத்தினை பிடித்து தனக்கு தருமாறு கேட்டு இருக்கிறார். மேலே உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுப்பு மிக முக்கியமானது. (certified) இது இல்லாமல் அமெரிக்கா அந்த மருந்தினை இறக்குமதி செய்து அமெரிக்காவில் பயன்படுத்த முடியாது.
    • இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட ஆண்டு 1520. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது 1505ம் ஆண்டு. அப்போது இலங்கையில் கோட்டை, சீதாவாக்கை, கண்டி, யாழ்ப்பாணம் ( நல்லூர்) ஆகிய  நான்கு ராஜிஜங்கள் இருந்தன. யாழ்ப்பாணம், கண்டி  தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக பிரித்து பதவிக்கு வர முனைந்த அவனது மூன்று மகன்மாரால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள். தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது  பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந்து வந்த பொருள், ஆள், ஆயுத பலத்தினால் தென் இலங்கை குறித்து அசராமல் இருந்தது.  இடையே வடக்கே மக்கள் வாழாத அல்லது குறைவான மக்களைக் கொண்ட தீவுக்கூடங்களை பிடித்துக் கொண்டனர் போர்த்துக்கேயர். இதனூடாக, தென் இந்திய உதவி தடுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் ராஜ்யம் மடக்கப்பட, போர்த்துகேயர்களுக்கு இசைந்து போகவேண்டி வர, தமது பொம்மை அரசரை 1520 அளவில் பதவி ஏற வைத்தனர். அந்த அரசரின் பேரன் சங்கிலியன் அரசனாகி  முரண்டு பிடித்த போது, போரிட்டு அவனைக் கொன்று நேரடி ஆளுமைக்கு கொண்டு வந்தனர். சிதைந்த போர்த்துக்கேயர் கோட்டை, நெடுந்தீவு இதேபோலவே கோடடையின் அரசனான (கொல்லப்பட்ட விஜயபாகுவின் ஒரு மகன்) புவனேகபாகுவை மன்னர், அந்தப்புரத்தில் உப்பரிகையில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அறிவித்து, (மேலிருந்து ஒரு போர்த்துகேயனால் தள்ளி விழுத்தி கொலை செய்யப்பட்ட) பின்னர் அவனது பேரனை, கிறிஸ்தவனாகி பதவியில் அமரத்தினார்கள் பொம்மையாக. இந்த 2020ம் ஆண்டு, இந்த யாழ்ப்பாணம் ராஜ்யம் தனது சுதந்திரத்தினை பறிகொடுத்த 500 வது வருட நிறைவு.