Jump to content

ஒதுக்கப்பட்ட பணம் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு அபிவிருத்தி இலக்குகள் முன் நிறுத்தப்பட்டு செலவழிக்கப்பட்டது என யாராலும் சொல்ல முடியாது


Recommended Posts

 
 
Image may contain: outdoor and nature
 
 

வடக்கு மாகாணத்தில் ஏறத்தாழ 1, 960 km மாகாண வீதிகளையும் 7,600 km கிராமிய வீதிகளையும் கொண்டு இருக்கிறது. வடக்கு மாகாண வீதி திணைக்களமானது 1,960 km நீளமான வீதிகளுக்கு பொறுப்பாக இருக்கிறது .இதில் 1,115 km வீதிகள் A & D தர தார் வீதிகளாகவும் ஏனையவை கிரவல் வீதிகளாகவும் இருக்கின்றன

நல்லாட்சி அரசாங்க காலத்தில் கறம்பொலியா திட்டத்தின் கீழ் தொகுதிகள் ரீதியாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் இந்த ஒதுக்கீடுகளுக்கு சிபாரிசுகளை தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள் செய்தார்கள் . இந்த ஒதுக்கீடுகளை கையாளுவதற்கு 200, 000 மேலதிக கொடுப்பனவும் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு கீழாக சிபாரிசுகளை செய்ய குறுநில மன்னர்கள் உருவாக்க பட்டர்கள் . சரவணபவானின் சிபாரிசுகளை பெற வேண்டும் என்றால் பிரதாப ராஜா என்கிற ஆசிரியரின் தயவு தேவை பட்டது. சுமந்திரனின் சிபாரிசு தேவை என்றால் சயந்தன் (தென்மராட்சி) சுகிர்தன் (வடமராட்சி ) உதவி தேவை பட்டது. உண்மையில் பாராளமன்ற உறுப்பினர்கள் சார்பில் சிபாரிசுகளை செய்தது இவர்கள் தான்

இந்த வகையில் தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள் 2019 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை மட்டும் 1,086 மில்லியன் பெறுமதியான கறம்பொலியா திட்டத்திற்கான ஒதுக்கீடுகளுக்கு சிபாரிசுகளை சமர்ப்பித்து இருந்தார்கள் இதில்,யாழ்ப்பாணதிற்கு 536 மில்லியன் ரூபாவும் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் ரூபாவும் மன்னார் மாவட்டத்திற்கு 143 மில்லியன் ரூபாவும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 121 மில்லியன் ரூபாவும் வவுனியா மாவட்டத்திற்கு 86 மில்லியன் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இதில் 30 % வீதத்திற்கான ஒதுக்கீடுகள் 30 M -300 M வரை நீளமான கிராமிய வீதிகளுக்கு என சொல்ல பட்டது . இந்த ஒதுக்கீடுகளின் கீழ் எத்தனை வீதிகள் செப்பனிடப்பட்டன ? இந்த திட்டத்திற்க்காக எந்த பொறிமுறையின் கீழ் வீதிகள் தெரிவு செய்யப்பட்டன ? இதற்காக ஏன் வடக்கு மாகாண வீதி திணைக்களத்துடன் இணைந்து ஒரு திட்டம் தயாரிக்க பட வில்லை ? வட மாகாண வீதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வீதிகளுக்கு ஒதுக்கீடுகள் மத்திய அரசின் பிரதேச செயலகங்களுக்கு ஊடக செய்யப்பட்டது ஏன் ? பல இடங்களில் ஒரு வருட காலத்திற்குள் போடப்பட்ட வீதிகள் வெள்ளத்துடன் அள்ளுண்டு போக காரணம் என்ன ? இவளவு பெரும் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டும் வீதி பாதுகாப்பை மேம்படுத்தல் , தரமான வீதி இணைப்புகளை ஏற்படுதல் போன்ற அடிப்படை விடயங்களில் கூட அக்கறை செலுத்தப்படாமல் இருந்ததிற்கு யார் காரணம் ? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை

உண்மையில் பாராளமன்ற உறுப்பினர்களின் சார்பில் சிபாரிசுகளை செய்த சயந்தன் , சுகிர்தன் உட்பட எல்லோரும் எழுந்தமானமாகவே சிபாரிசுகளை செய்தார்கள். தேவை மதிப்பீடு , முன்னுரிமை அறிக்கை என எதுவுமே இல்லை. உள்ளுராட்சி தேர்தல்களில் தமிழரசு கட்சி வென்ற வட்டாரங்களுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டது என்றும் தோல்வி அடைந்த வட்டாரங்கள் கண்டு கொள்ளப்படவில்லை என்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்களே சமூக தளங்களில் விமர்சனம் செய்யும் அளவிற்கு நிலைமைகள் இருந்தன. வென்ற வட்டாரங்களில் கோவில் தேர் ஓடும் வீதிகளுக்கு கூட கல்லு போட்டு தார் ஊற்றப்பட்டது.இவற்றுக்கு திறப்பு விழா , அடிக்கல் நாட்டும் விழா ஆகியனவும் கோலாகலமாக நடத்தப்பட்டன. மறுபுறம் பிரதேச செயலகங்கள் தெரிவு செய்த ஒப்பந்த தாரர்கள் , அவர்களின் வேலை நிறைவேற்றல் அறிக்கை, தொழில்நுட்பவியலாளரது குறிப்பு என்வற்றில் பல முறைகேடுகள் அவதானிக்கப்பட்டன. இந்த திகதி வரை எந்த நடவடிக்கையும் இல்லை

பாராளமன்ற உறுப்பினர்களோ அல்லது அவர்களின் உதவியாளர்களோ பணத்தை திருடி விட்டார்கள் என சொல்லவில்லை. மாறாக எங்கள் ஆட்களின் inefficent தான் இவளவு நேர்த்தி இன்மைக்கும் காரணம். UNP பிரமுகர்கள் வடக்கு கிழக்குக்கு அதிக பணம் ஒதுக்கப்பட்டது என்றும் இதனால் தான் தேர்தலில் தோல்வி அடைய நேரிட்டது என்றும் தெற்கு மேடைகளில் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஒதுக்கப்பட்ட பணம் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு அபிவிருத்தி இலக்குகள் முன் நிறுத்தப்பட்டு செலவழிக்கப்பட்டது என யாராலும் சொல்ல முடியாது

படம் : கறம்பொலியா வீதி ஒன்றின் இன்றைய அவலம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.