புத்தக திருவிழா - மட்டக்களப்பு.!
-
Tell a friend
-
Topics
-
0
By யாயினி
தொடங்கப்பட்டது
-
Posts
-
தலைவன் எங்கே படிக்க வைச்சான்? குடிக்கவல்லே வைச்சான்! 🤣
-
By யாயினி · பதியப்பட்டது
தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது; 4 மீனவர்களைக் காணவில்லை வைகோ கடும் கண்டனம் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை மூழ்கடித்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ இந்திய மீனவர்களின் நிலை என்ன என்பதை இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 18 .01.2021 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகும் சென்றது. 1. மெசியா (30), த/பெ அந்தோணி ராஜ், தங்கச்சிமடம், 2. நாகராஜ் (52), த/பெ வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சபுளி, 3. சாம் (28), த/பெ நேச பெருமாள், மண்டபம், 4. செந்தில்குமார் (32), த/பெ செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம் ஆகிய நான்கு மீனவர்களும் அந்தப்படகில் சென்றனர். எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கைக் கடற்படையின் இரண்டு படகுகள் சீறிப் பாய்ந்து வந்து, மேற்கண்ட படகு மீது முட்டி மோதின. படகு மூழ்கத் தொடங்கி விட்டது என்று, அந்த மீனவர்கள் வாக்கி டாக்கியில் எழுப்பிய அலறல் குரல், மற்ற படகில் இருந்த மீனவர்களுக்குக் கேட்டது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து, எந்தத் தகவலும் இல்லை. நேற்று19.01.21 காலை 10.30 மணிக்குக் கரை திரும்ப வேண்டியவர்கள், இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. விசைப்படகைத் தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளார்கள். நம்பிக்கை அளிக்கின்ற எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் மீனவர் குடும்பங்கள் கண்ணீரில் பரிதவிக்கின்றன. அவர்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று, இலங்கைக் கடற்படை கூறுகின்றது. அவர்களுடைய தொடர் தாக்குதல்களில் இருந்து, தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படை காப்பாற்றவில்லை. கடந்த வாரம் இலங்கைக்குச் சென்ற இந்திய அயல்உறவு அமைச்சர் ஜெய்சங்கர், அங்கே சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார். இனி அதற்குத் தேவை இல்லை; கைது செய்யப் போவது இல்லை; கடலுக்குள் மூழ்கடித்து விடுவோம் என்று இலங்கை காட்டி இருக்கின்றது. பாகிஸ்தான் மீது கொலைவெறிக் கோபம் காட்டுகின்ற இந்தியா, தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கையின் சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுக்கின்றது. நாங்களும் தமிழர்களுக்கு எதிரிதான் என்பதைக் காட்டுகின்றது. காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன என்பதை, இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றேன். Thinakkural.lk -
By யாயினி · பதியப்பட்டது
இலங்கையிலும் ஒரு ஹிட்லரும் ஒரு சார்லி சப்ளினும் உள்ளனர்- ஹரீன் இலங்கைக்கு என ஒரு ஹிட்லரும் ஒரு சார்லிசப்ளினும் உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புசால்வை அணிந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஹிட்லரும் சார்லிசப்ளினும் மீசைவைத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். இருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள் ஆனால் வேறு வேறு குணாதிசயங்கள் உள்ளவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஹிட்லர் உலகை அழவைத்தார் சார்லிசப்ளின் உலகை சிரிக்கவைத்தார். இலங்கையிலும் இதேபோன்றவர்கள் உள்ளனர் இதன் காரணமாக மக்கள் அச்சமடைவது இயல்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். Thinakkural.lk -
By goshan_che · Posted
ஹரி நாடாரின் பனங்காட்டு படை என்ன சதவீதம்? போன நங்குநேரி இடை தேர்தலில் 3 ம் இடம் எடுத்தது. -
By யாயினி · பதியப்பட்டது
மேய்ச்சல் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல்தரைகாணியை சிங்கள மக்கள் அத்துமீறி பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று புதன்கிழமை (20) பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து ஆர்ப்பாட்டமாக பிரதேச செயலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவில் உள்ள பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான மணல்ஏற்றம், காத்தாடியார்சேனை ,பொன்னாங்கண்ணிசேனை, பனையடிவெட்டை, மலையடிவெட்டவிச்சுகுளம். ஆகிய வன பிரதேச கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பண்ணையாளர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சில வருடங்களாக சிங்கள மக்களால் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டுவருவதுடன், 1500 ஏக்கருக்கு அதிகமான காடுகள் அழிக்கப்படுவதுடன் முட்கம்பிகள் பயன்படுத்தப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது இதந்த மேச்சல் தரை அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் பட்டடிப்பளை பிரதேச சபைக்கு முன்னாள் ஒன்று கூடிய கால்நடை பண்ணையாளர்கள் அரசியல் வாதிகள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து அங்கிருந்து பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை ஆர்ப்பாட்டமாக சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனையடுத்து இதில் கலந்து பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன். மற்றும் பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கொண்ட பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்ததையடுத்து அங்கிருந்து ஆர்ப்பாட்டகாரர்கள் விலகிச் சென்றனர். Thinakkural.lk
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.