Jump to content

சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு!

Recommended Posts

சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு!

TNA-1.jpg

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தீர்வுத்திட்டம் தொடர்பாக பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட வேண்டும் என இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக இந்த சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பரவலாக்கலானது முழு நாட்டிற்கும் அமுலாக வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் இதன்போது  வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்தால் சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸ்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடானது மிகவும் ஆக்கப்பூர்வமான ஒன்றென குறிப்பிட்டுள்ளார் அத்தோடு நியாயமாக தீர்வினை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரித்தானியா தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://athavannews.com/சிங்கள-மக்களும்-ஏற்றுக்க/

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் கடந்து நாம் பயணிக்க வேண்டும். 

மீண்டும் மீண்டும் இந்த சக்கரத்திலேயே சுற்றிய வண்ணம் இருக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்குக் கிழக்கை மொத்தமாக சிங்கள மயமாக்கனும். மொத்த இலங்கையும் சிங்களத் தீவாகும்.  இப்ப அந்தத் தீர்வு தான் அமுலாகிக்கிட்டு இருக்குது. 

எனவே தீர்வு கிட்டிட்டுது.  கூட்டமைப்பு மொத்தமாகப் போய் பெட்டிக்குள் படுத்துக்கவும்.

முட்டாள் பயல்களா.. எவனாவது தனது தீர்வை மற்றவனின் விருப்புக்கு பெற முடியுமாடா...?!

பிரித்தானியா போய் இங்கிலாந்தில் வாக்கெடுப்பு நடத்தவில்லை ஸ்காட்லாந்து பிரிவதற்கு. ஸ்காட்லாந்தில் தான் வாக்கெடுப்பு நடத்தினார்கள். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஸ்காட்லாந்து பிரியனுமா இல்லையா என்பதை எனி இங்கிலாந்திலும் வேல்ஸிலும் வாக்கெடுப்பு நடத்தி தான் தீர்மானிப்பார்கள் போலும்.

மொக்கன் சம்பந்தனால்.. தமிழினம் இலங்கைத் தீவில் இருந்ததற்கான அடையாளமே வெகுவிரைவில் இல்லாமல் செய்யப்படும். 

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பந்தன் தனக்கு சொகுசு வீடும் பின்கதவால கோடி கோடியா காசை தரவிரும்புற பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே குறிப்பிடுகிறார் என்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுக்கு புரிஞ்சிருக்குமோ தெரியல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..  ஊ.. என்டா எல்லாம் சொல்லி வைத்தார் போல் திருநெல்வேலிக்கே போவினம்.. அதைவிட சுவையானது பல இருக்கு.. நாம அறிமுகம் செய்வம்..

maxresdefault.jpg

7 hours ago, nunavilan said:

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

அதைத்தானே சிங்கள அரசாங்கங்களும் சொல்லி வருகுது. எந்த ஜென்மத்திலும் நடவாத ஒன்றை கற்பனை செய்கிறார் தலீவர். அவர் விடுகிற பகிடியில இதுவும் ஒன்று, போங்கோ. 

Link to comment
Share on other sites

சிங்களவர்கள்  ஏற்றுக்கொள்ளும் தீர்வு என்பது பிழையான கருத்து। ரணிலும் அவருடன் சேர்ந்தவர்களும் சிங்களவர்கள்தானே। அவர்கள் தீர்வை கொடுக்கும்போது சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள மாடடார்கள்।

ராஜபக்சேவின் கொடுக்கும் தீர்வு என்று சொல்லியிருக்க வேண்டும்। ராஜபக்சவின் ஈழம் கொடுத்தாலும் சிங்களவர்களுக்கு பிரச்சினை இல்லை। இங்குதான் இனவாத கூடாரம் இருக்கின்றது।

எனவே எதை ராஜபக்சவினர் கொடுக்கிறார்களோ அதுதான் தீர்வு। ரணில் கிராம சபை கொடுத்தாலும் சிங்களவனுக்கு ஈழம் மாதிரித்தான் தெரியும்। அதுதான் இங்குள்ள கள நிலவரம்।

ஆகாயத்தில் சிலம்பம் அடிக்கும் இணையதள போராளிகளின் எதிர் கருத்தும் வரவேற்கப்படுகின்றது।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனிசனை தலைவராய் வைச்சுக்கொண்டு ஈழத்தமிழினம் படுறபாடு இருக்கே சொல்லி வேலையில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் விருப்பம் தமிழர்களுடன் இரண்டர கலப்பது.....இதை அதிகமான சிங்கள புத்திஜீவிகள் சொல்லிக்கொண்டிருக்கினம்

Link to comment
Share on other sites

19 minutes ago, குமாரசாமி said:

இந்த மனிசனை தலைவராய் வைச்சுக்கொண்டு ஈழத்தமிழினம் படுறபாடு இருக்கே சொல்லி வேலையில்லை....

பேசாம ஐயாவை கூப்பிட்டு ஒரு தலைக்குத்துச் சடங்கு ஒன்று செய்ய வேண்டியதுதான்... பத்து இளநிரும் குடுத்து கொஞ்சம் எண்ணையும் தேச்சுவிட்டாச் சரி... ! 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, சாணக்கியன் said:

பேசாம ஐயாவை கூப்பிட்டு ஒரு தலைக்குத்துச் சடங்கு ஒன்று செய்ய வேண்டியதுதான்... பத்து இளநிரும் குடுத்து கொஞ்சம் எண்ணையும் தேச்சுவிட்டாச் சரி... ! 😉

ஐயா பிறகு பக்கத்து வீட்டு சின்ன பெடியனை கூட்டிக்கொண்டு பட்டம் விட போய்விடுவார்....

Link to comment
Share on other sites

6 minutes ago, putthan said:

ஐயா பிறகு பக்கத்து வீட்டு சின்ன பெடியனை கூட்டிக்கொண்டு பட்டம் விட போய்விடுவார்....

அப்படி எண்டாலும் திண்ணை காலியானா சரிதானே... ஆனால் அவருக்கு பிறகு திண்ணை யாருக்கு போகுதோ தொியேல.. அல்லது வீட்டையே யாரும் வாங்குவினமோ தொியேல..? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சாணக்கியன் said:

அப்படி எண்டாலும் திண்ணை காலியானா சரிதானே... ஆனால் அவருக்கு பிறகு திண்ணை யாருக்கு போகுதோ தொியேல.. அல்லது வீட்டையே யாரும் வாங்குவினமோ தொியேல..? 🤔

திண்ணை, வீடு அது இது எல்லாத்தையும் பக்கத்திலையே ஒற்றைக்கால்ல நிக்கிற புறோக்கர் பாத்துக்கொள்ளுவார். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, சாணக்கியன் said:

அப்படி எண்டாலும் திண்ணை காலியானா சரிதானே... ஆனால் அவருக்கு பிறகு திண்ணை யாருக்கு போகுதோ தொியேல.. அல்லது வீட்டையே யாரும் வாங்குவினமோ தொியேல..? 🤔

அம்மான் மூலம் மகிந்தா வாங்கினாலும் வாங்க கூடும்

Link to comment
Share on other sites

சிங்கள மக்கள் எதிர்க்கின்ற ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக எம்மிடம் என்ன பலம் / சாதகமான அம்சங்கள் இருக்கின்றன?

1. இராணுவ பலம்?
2. பொருளாதார பலம்?
3. சர்வதேச ஆதரவு?
4. இயற்கை வளங்கள்?

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள சாமானிய மக்கள் தீர்வு என்றால் என்ன என்டு கேட்க்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2020 at 1:55 AM, நிழலி said:

சிங்கள மக்கள் எதிர்க்கின்ற ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக எம்மிடம் என்ன பலம் / சாதகமான அம்சங்கள் இருக்கின்றன?

1. இராணுவ பலம்?
2. பொருளாதார பலம்?
3. சர்வதேச ஆதரவு?
4. இயற்கை வளங்கள்?

?

நீங்கள் கூறிய எவையும் எம்மிடம் இல்லை....  சிறுபான்மையினரின் மொழியும் ,மதமும் வல்லரசுகள்,வல்லரசாக வரத்துடிக்கும் நாடுகள் போன்றவற்றின் அரசியல் தேவைக்கு  அதாவது பெரும்பான்மைக்கு  கடிவாளம் போட பாவிப்பார்கள் ....
எமக்கு இதனால் எந்த வித ஆதாயமும் இல்லை என்பது வேறு விடயம்

Link to comment
Share on other sites

On 2/20/2020 at 6:55 AM, நிழலி said:

சிங்கள மக்கள் எதிர்க்கின்ற ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக எம்மிடம் என்ன பலம் / சாதகமான அம்சங்கள் இருக்கின்றன?

1. இராணுவ பலம்?
2. பொருளாதார பலம்?
3. சர்வதேச ஆதரவு?
4. இயற்கை வளங்கள்?

?

என்ன நிழலி இப்படி கேட்கிறீர்களே? எங்களுடைய முக்கியமான பலத்தை நீங்கள் பட்டிலிடவில்லையே?

கீழே போட்ட கேள்விக்குறிக்குள் அது அடக்கம் என்பதால், இதோ அந்த பலம்:

எல்லாவற்றையும் குறை கூறி எழுதும் பலம் எங்களிடம் நிறைவாக இருக்கிறது, இது ஒன்றே காணாதா?

Link to comment
Share on other sites

On 2/20/2020 at 4:23 PM, சுவைப்பிரியன் said:

இங்குள்ள சாமானிய மக்கள் தீர்வு என்றால் என்ன என்டு கேட்க்கினம்.

அந்த அரசியல் வாதிகளுக்கு கிடைக்கும் அபிவிருத்தி நிதி 100 கோடியில் இருந்து 200 கோடி கிடைத்தால அது அதன் தீரவுங்கோ

Link to comment
Share on other sites

On 2/20/2020 at 12:27 PM, Kavi arunasalam said:

A63-C3626-9-BE5-4-F52-AC02-3-F90-D64-EC4

அருமை!
இரண்டுபேரும் ஒன்டையே சொன்னாலும் தீர்வு வந்தபாடில்லை.
இதுல ஊர் உலகை ஏமாத்துறது சம்பந்தன் என்டு குஞ்சு குறுணிகளுக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

On 2/20/2020 at 3:55 PM, நிழலி said:

சிங்கள மக்கள் எதிர்க்கின்ற ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக எம்மிடம் என்ன பலம் / சாதகமான அம்சங்கள் இருக்கின்றன?

1. இராணுவ பலம்?
2. பொருளாதார பலம்?
3. சர்வதேச ஆதரவு?
4. இயற்கை வளங்கள்?

?

ஒரு காலத்தில் பலமான அரசியல் பலத்தை உருவாக்கக்கூடிய சட்ட வல்லுனர்கள் இருந்தும் அதைச் செய்யாது மக்களை உசுப்பேற்றி வாக்கு அறுவடை செய்து சுயநலத்துடன்  காலத்தை வீணாக்கி  தமிழ் அரசியல் வாதிகள் செய்த தவறுகளுக்கும்,  அதன் பின்னர் தம்மால் உருவாக்கப்பட்ட இராணுவ பலத்தை மட்டும் நம்பி தூர நோக்கின்றி அரசியல், பொருளாதார சர்வதேச ஆதரவு போன்ற  பலங்களை  கட்டி எழுப்ப தவறிய புலிகள் விட்ட தவறுகளுக்குமான   விலையை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

என்ன நிழலி இப்படி கேட்கிறீர்களே? எங்களுடைய முக்கியமான பலத்தை நீங்கள் பட்டிலிடவில்லையே?

கீழே போட்ட கேள்விக்குறிக்குள் அது அடக்கம் என்பதால், இதோ அந்த பலம்:

எல்லாவற்றையும் குறை கூறி எழுதும் பலம் எங்களிடம் நிறைவாக இருக்கிறது, இது ஒன்றே காணாதா?

இல்லை இது தப்பு.....உரிமை என்பது வேறு ...நக்கல் என்பது வேறு....இதை அறிந்த எம் இனம்  வாழ்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.