Jump to content

கூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கோரியுள்ளோம் - கமலதாஸ்


Recommended Posts

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பததை கோரியுள்ளோம் எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்தர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.


IMG-68870121e1c3111d45b2517e62508fa0-V.j


இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழருக்கு செயல்திறன் மிக்க தலைவர்கள் வேண்டும். விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புககளும், தன்டனைகளும், எங்களுடைய தமிழ் மக்களுடைய நிலபுலங்கள் பறிபோவதற்கான முன்னுதாரணமாகவே அமைந்திருந்தன.

சட்டக்கோவையை படித்தவர்ககளுக்கு நன்கு தெரியும். அரச காணி என்றபேரில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளும், பூர்வீக காணிகளும் அபகரிக்கப்பட்டிருக்கின்றன.

வேடுவ மக்களுடைய வெம்பு பூமி என்று சொல்லக்கூடிய அவர்களின் வாழ்வாதார நிலங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

காணி அபகரிப்பு சட்டத்தின் கீழ் சிறீலங்கா சுதந்திர கட்சியால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்று வரை தமிழ் மக்களுக்கோ, சிறுபான்மை மக்களுக்கோ வழங்கப்படாமல் இன்று வரை கபடத்தனமாக மண் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

இன்று பலர் நீதியரசர் என்றும் சட்டத்தரணிகள் என்றும் வந்தாலும் கூட அவர்கள் இந்த காணி அபகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததும் இல்லை அதனை முறியடித்ததும் இல்லை. அவ்வாறானவர்களின் அரசியல் போராட்டம் ஜனநாயக ரீதியாக மக்களுடைய அங்கீகாரத்தை ஏமாற்றி பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் இதுவரை எந்த சாதனையைதான் செய்திருக்கிறார்கள். எந்த சட்டத்தைதான் உடைத்திருக்கிறார்கள் அதனை நிரூபித்து காட்டட்டும் பார்ப்போம்.

இவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் வாக்களித்து தெரிவு செய்வதற்கு நாங்கள் கொத்தடிமைகள் அல்ல. அவர்கள் சரியான ஒரு தலைமையை முன்வைப்பார்களே ஆனால் விக்னேஸ்வரன் அல்ல செயற்திறன் உள்ள தலைமையை முன்வைத்தால் எமது கட்சி ஆதரவளிக்கதான் போகிறோம்.</p>
உறதியானதும் பற்றுதியுமான, நேர்மையுமான செயற்திறன் உள்ள ஒருவரை வேட்பாளராக நியமியுங்கள் என தமிழரசுகட்சியிடம் நான் கூறியிருந்தேன்.

அது மாத்திரமின்றி எங்களுடைய கட்சியின் தலைவர் கருணா அம்மான் ஒருவரிற்கு சந்தர்ப்பம் தாருங்கள் எனவும் கூறியிருந்தோம். அவ்வாறு அவருக்கு சந்தர்ப்பம் தந்தால் பின்புலமாக இருந்து நாமும் செயற்பட்டு 22 அல்லது 25 பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கு, மலையகம், கொழும்பு உட்பட்ட பகுதிகளில் பெறுவதற்கு .முயற்சிப்போம்.

ஆனால் அந்த தலைக்கணமிக்க, பிரபுத்துவம் உள்ள சிந்தனை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை வழி நடத்திக்கொண்டிக்கிறவர்கள் இன்று வரை இறங்கி வந்ததாக இல்லை. ஆனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும் இன்றும் எம்முடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76008

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

ஆனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும் இன்றும் எம்முடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என அவர் தெரிவித்தார்.

இது நம்ம லிஸ்டில் இல்லையே..

DzBX9lKUUAApnzm.jpg

☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது நம்ம லிஸ்டில் இல்லையே..

DzBX9lKUUAApnzm.jpg

☺️

 இதென்ன இது? சேர்த்திட்டா போச்சு. மண் தின்னுறதை மனிசன் திண்டால் எண்ட பொலிற்ரிக்ஸ் இப்ப எல்ல இடமும் வேலை செய்யுதெல்லோ...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தாளுற கப்பலில் ஏறுவதற்கு விக்கியை குறை சொல்லி சீட்டு கேக்குது. அவ்வளவு தரம் குறைந்து நிக்குது சம்பந்தனின் ராஜ தந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

பாவம் தாளுற கப்பலில் ஏறுவதற்கு விக்கியை குறை சொல்லி சீட்டு கேக்குது. அவ்வளவு தரம் குறைந்து நிக்குது சம்பந்தனின் ராஜ தந்திரம்.

வெற்றியடைந்த பின்பு கட்சி மாறி அமைச்சர் பதவி எடுக்க நல்லாவே பிளான் போடுகிறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கட்சிக்கு சங்கூதத்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

 கட்சிக்கு சங்கூதத்தான். 

ஏற்கனவே அந்த நிலை தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்த முரளிதரனுக்கு கருணா அம்மான் என்று பெயர் சூட்டி, தளபதி என்கிற மகுடம் வைத்து, புகழின் உச்சிக்கே கொண்டுபோன தலையையே அற்ப சலுகைக்காக விழுங்கி ஏப்பம் விட்டது. சம்பந்தன் எம்மாத்திரம்? இருந்தாலும் துரோகத்துக்கு பிரதிபலன் துரோகமே. துரோகிகள் எல்லோருக்கும் அது பொருந்தும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குக்கு அடிச்ச வெளிச்சத்திலே 
இப்போ தூங்குவதுக்கு கூட இரவில்லாமல் 
கிழக்கு மக்கள் தவிக்கிறார்கள்  ....

இனியும் வெளிச்சமா?
பாவம் ஐயா சனங்கள் 

Link to comment
Share on other sites

கூடடமைப்பாடாக கருணா போட்டியிட கோரிக்கை।  கருணை அம்மன்தான் கோரிக்கை வைத்திருக்கிறார்।  அவர்கள் எப்படியம் போகட்டும்। ஏன் என்றால் இணையப்போராளிகள் அவர்களை தோற்கடித்துவிடப்படியால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது।

 ஆனால் தற்போதைய செய்தியின்படி விக்கி ஐயா பிள்ளையானுக்கு தூது அனுப்பி இருக்கிறாராம் தங்களுடன் சேர்ந்து கேட்க்கும்படி। இது எப்படி இருக்குது? தான் சிறைக்கு சென்று பிள்ளையானை சந்திப்பதட்கும் தயாராக இருக்கிறாராம்। இது எங்க போய்  முடியப்போகுதோ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையா?...  பிள்ளையாரப்பா! காப்பாத்தப்பா தமிழ் மக்களை.  ஓ... உமக்கும்  தமிழ்  விளங்காதோ? யாரிடம் போய் முறையிட??

Link to comment
Share on other sites

On 2/19/2020 at 6:33 PM, ampanai said:

இன்று பலர் நீதியரசர் என்றும் சட்டத்தரணிகள் என்றும் வந்தாலும் கூட அவர்கள் இந்த காணி அபகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததும் இல்லை அதனை முறியடித்ததும் இல்லை. அவ்வாறானவர்களின் அரசியல் போராட்டம் ஜனநாயக ரீதியாக மக்களுடைய அங்கீகாரத்தை ஏமாற்றி பெற்றிருக்கிறார்கள்.

மட்டக்களப்பில் 200 கிராமங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று முதன்முதலில் பகிரங்கமாக கூறியவர் விக்னேஸ்வரன்.

சில வருடங்கள் அரசியல் அனுபவமுள்ள விக்னேஸ்வரன் அரை நூற்றாண்டு அரசியல் அனுபவமுள்ள சம்மந்தனைப் போல தான்தோன்றித்தனமாக, அரசியல் கத்துக்குட்டியாக  செயற்பட்டாலும் அவ்வப்போது பல உண்மைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் நல்ல குணமும் அவரிடம் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.