Jump to content

யாழிலிருந்து சென்னைக்கான விமான சேவை  மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் ; இந்திய விமான நிறுவனம் அறிவிப்பு


Recommended Posts

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை வரும் மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் என்று இந்திய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


01.jpg

 

மேலும் யாழ்ப்பாணம் சென்னை இடையேயான விமானக் கட்டணம் அதிகரிப்புக்கு இரண்டு மடங்கு வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் விமான நிலைய அதிகாரிகள், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் ஒரே அளவிலான விமான நிலைய வரி அறிவிடப்படுவதாகத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள இந்தியன் எயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் சந்தித்தனர்.

இதன்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை கடந்த 3 மாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அதனால் வடக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக பாதக நிலைகள் தொடர்பில் அலைன்ஸ் எயார் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் தற்போது வாரத்தில்

3 நாட்கள் இடம்பெறும் சேவை இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலிருந்து வாரத்தில் 7 நா்ட்களும் விமான சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இரட்டை வரி காரணம் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. நாட்டில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் (கட்டுநாயக்க, மத்தல) பயணி ஒருவரிடம் 60 டொலர் அறிவிடப்படுகிறது.

எனினும் கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையங்களிலிருந்து சென்னைக்கு புறப்படும் விமானங்கள் 150 பயணிகளுக்கு மேல் பயணிக்க முடியும். எனினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடு பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக 70 பயணிகள் பயணிக்கும் விமானே சேவையில் ஈடுபட முடியும். அதில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

இதனால் எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் காரணமாக சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுகிறது. அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிக்கவுள்ளோர் 3 வாரங்களுக்கு முன்னர் முற்பதிவு செய்து கொண்டால் கட்டணம் குறைந்த பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய காலத்துக்குள் பயணச்சீட்டை பதிவு செய்தால் அதிகளவு கட்டணம் அறவிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/76026

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் தற்போது வாரத்தில் 3 நாட்கள் இடம்பெறும் சேவை இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலிருந்து வாரத்தில் 7 நாட்களும் விமான சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளது.இதேவேளை யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் அதிக வரியுடனான கட்டணம் அறவிடப்படும் குற்றச்சாட்டை பலாலி விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிக்கவுள்ளோர் 3 வாரங்களுக்கு முன்னர் முற்பதிவு செய்து கொண்டால் கட்டணம் குறைந்த பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய காலத்துக்குள் பயணச்சீட்டை பதிவு செய்தால் அதிகளவு கட்டணம் அறவிடப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இரட்டை வரி காரணம் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது.ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. நாட்டில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணி ஒருவரிடம் 60 டொலர் அறிவிடப்படுகிறது.

கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையங்களிலிருந்து சென்னைக்கு புறப்படும் விமானங்கள் 150 பயணிகளுக்கு மேல் பயணிக்க முடியும்.எனினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடு பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக 70 பயணிகள் பயணிக்கும் விமானே சேவையில் ஈடுபட முடியும். அதில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இதனால் எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் காரணமாக கட்டணம் அதிகரித்துக் காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து நாளாந்த விமான சேவை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் எயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் நேற்று சந்தித்த பின்னர், நடந்த ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டது.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணம்-சென்னை-இடை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு கப்பல் விடுகிறாங்கள் ,பிலேன் விடுறாங்கள்.....அப்படி அந்த மண்ணில் என்ன தான் இருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, putthan said:

யாழ்ப்பாணத்திற்கு கப்பல் விடுகிறாங்கள் ,பிலேன் விடுறாங்கள்.....அப்படி அந்த மண்ணில் என்ன தான் இருக்கு....

ஓம் என்ன......மட்டக்களப்பு பக்கம் தட்டிவான்கூட விடுறாங்கள் இல்லை. :grin:
கொழுத்திப்போடுவம் எரிஞ்சால் எரியட்டுமன்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

ஓம் என்ன......மட்டக்களப்பு பக்கம் தட்டிவான்கூட விடுறாங்கள் இல்லை. :grin:
கொழுத்திப்போடுவம் எரிஞ்சால் எரியட்டுமன்😎

பத்தினால் சரி....வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை தமிழர்களுக்கு கொடுக்க முடியாமல் போன  படியால் யாழ்நகருக்கு கப்பலும் பிலேனும்  விடுகினம் போல......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

யாழ்ப்பாணத்திற்கு கப்பல் விடுகிறாங்கள் ,பிலேன் விடுறாங்கள்.....அப்படி அந்த மண்ணில் என்ன தான் இருக்கு....

வெளிநாட்டுக்காசு இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'யாழப்பாணத்துக்கு போதிய பயணிகள் இல்லாததால் விமான சேவையை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல்' என சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்ததே, அதெல்லாம் பொய்யா கோபால்..? :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ராசவன்னியன் said:

'யாழப்பாணத்துக்கு போதிய பயணிகள் இல்லாததால் விமான சேவையை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல்' என சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்ததே, அதெல்லாம் பொய்யா கோபால்..? :innocent:

போதிய பயணிகள் இல்லாதது என்பதில் உண்மை உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.