Jump to content
Sign in to follow this  
நிழலி

’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்

Recommended Posts

boy-1.jpg

 

பாய்  பெஸ்டி என்பவன்

கனவுகளால் ஆனவனல்ல

கண்ணீரால் ஆனவன்

 

ஒரு பாய் பெஸ்டி

பாதி மிருகமாகவும்

பாதி மனிதனாகவும்

வாழ்பவனல்ல;

அவன் வாழ்வது

பாதிக் கணவனாக

பாதிக் காதலனாக

 

ஒரு பாய் பெஸ்டி

ஒரு பெண் உடுக்கை இழக்கும்

ஒரு கணத்திற்காக

இடுக்கண் களைய

அவள் அருகிலேயே காத்திருக்கிறான்

ஒரு நிழலாக

அதுகூட அல்ல

ஒரு நிழலின் நிழலாக

 

ஒரு பாய் பெஸ்டிக்கு

ஒரு பெண்ணின் கணவனின் முன்

எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும்

என்று தெரியும்

அதே சமயம் அவன் நண்பனாகவும்

 

ஒரு பாய் பெஸ்டிக்கு

ஒரு பெண்ணின் காதலன் முன்

எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்

என்று தெரியும்

தான் ஒரு அண்டைவீட்டான்

அல்லது வழிப்போக்கன் என்பதை

ஒவ்வொரு கணமும் நிரூபித்துக்கொண்டே

 

ஒரு பெண் கண்ணீர் சிந்தும்போது

தன்னை ஒரு கைக்குட்டையாக

பயன்படுத்துகிறாள் என

ஒரு பாய் பெஸ்டிக்கு தோன்றாமலில்லை

கைக்குட்டையாகவாவது

இருக்கிறோமே என நினைத்ததும்

அவன் மனம் சமாதானமடைந்து விடுகிறது

 

ஒரு பாய் பெஸ்டி

ஒரு பெண்ணின் நலக்குறைவை சரி செய்வதில்

ஒரு மருத்துவரைவிடவும் கவனமாகச் செயல்படுகிறான்

ஒரு பெண் துயரமடையும்போது

ஒருவனை அவனது தாய் தேற்றுவதுபோல

அவளைத் தேற்றுகிறான்

 

ஒரு பாய் பெஸ்டி

ஒரு பெண்ணின் சிறிய கஷ்டங்களை பெரிதாக்கிக்கொண்டு

தன் தோளில் சுமக்கிறான்

அவள் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டால்

அதற்காக ஒரு நீருற்றைத் தேடிச் செல்கிறான்

 

ஒரு பாய் பெஸ்டி எப்போதும்

உணவகங்களில் பில்களை செலுத்துவதில்

ஆர்வமுடையவனாக இருக்கிறான்

ஒரு பெண்ணிற்கு பரிசு வங்குவதற்காக

நீண்ட நேரம் செலவிடுகிறான்

ஒரு பெண் படியில் காலிடறும்போது

அது இந்த உலகின் அநீதிகளில் ஒன்றாக

அவனுக்குத் தோன்றிவிடுகிறது

 

ஒரு பாய் பெஸ்டியை

ஒரு பெண் பிரியத்தோடு அணைத்துகொள்கிறாள்

ஆதரவாக அவன் தோளில் சாய்ந்துகொள்கிறாள்

ஒரு பாய் பெஸ்டி

தான் எப்போதாவது அப்படி

அணைத்துக்கொள்ளவோ

சாய்ந்துகொள்ளவோ முடியுமா என

குழப்பமடைகிறான்

 

ஒரு பாய் பெஸ்டி என்பவன்

சங்கிலியால் கட்டப்பட்ட

ஒரு நாய்போல சிலசயம் தன்னை உணர்கிறான்

அன்பைக் காட்டவும்

அன்பைப் பெறவும்

சங்கிலியின் நீளம் எவ்வளவோ

அவ்வளவே அனுமதி என்பது

அவனை மனமுடையச் செய்கிறது

 

ஒரு பாஸ் பெஸ்டி

எப்போதும் தன்னை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய

ஒரு ஆயத்த நிலையில் வைத்திருக்கிறான்

ஒரு போர்வீரனைப்போல உத்தரவிற்குக் காத்திருக்கிறான்

அவன் அன்பின் புரவிகள்

எப்போதும் பாய்ந்து செல்லக் காத்திருக்கின்றன

 

ஒரு பாய் பெஸ்டி எப்போதும் காத்திருக்கிறான்

ஒரு பெண் அவள் காதலனால் துரோகமிழைக்கப்படுவதற்காக

அவள் கணவனால் அவள் சந்தேகிக்கப்படுவதற்காக

அவள் நண்பனால் அவள் காயப்படுவதற்காக;

அப்போதுதான் அவன் அங்கு அவதரிக்க இயலும்

அப்போதுதான் அவனுக்கு ஒரு சிறிய கதவு திறக்கிறது

அப்போதுதான் அவனுக்கு அவனது வசனங்களுக்கான

அவகாசம் கிட்டுகிறது

 

ஒரு பாய் பெஸ்டி

எப்போதாவது ஒரு பெண்ணிடம்

அந்த அற்புதம் நிகழ்ந்துவிடும் என

ரகசியமாக கனவு காண்கிறான்

அது ஒருபோதும் நிகழ்வதில்லை

அது வேறு யாருக்கோ கண்முன்னால் நிகழும்போது

அவன் இன்னும் பொறுமை தேவை

என்று தன்னைத்தானே உறுதிப்படுத்திக்கொள்கிறான்

இரண்டு நாள் பேசாமல் இருந்துவிட்டு

மூன்றாவது நாள் பெருந்தன்மையின்

முகமூடியை  அணிந்துகொண்டு

அவனே அலைபேசியில் அழைக்கிறான்

தன் தற்கொலை முடிவுகளை

ஒருபோதும் நிறைவேற்ற முடியாத

ஒரு கோழையாக இருக்கிறான்

 

ஒரு பெண் தன்னோடு ஒருபோதும்

இல்லாதபோதும்

அவள் ஏன் எப்போதும்

தன்னுடன் இருக்கிறாள் என்பதை

ஒரு பாய்பெஸ்டியினால்

ஒருபோதும் புரிந்துகொள்ள முடிவதில்லை

 

ஒரு காதலனின் பொறுப்பற்றத்தனங்களோ

ஒரு கணவனின் அதிகாரங்களோ

ஒருபோதும் ஒரு பாய்பெஸ்டியிடம் இருப்பதில்லை

அவன் ஒரே நேரத்தில்

ஒரு பெண்ணின் தந்தையாகவும்

குழந்தையாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறான்

 

ஒரு பாய் பெஸ்டி எப்போதாவது

ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்ல விழைகிறான்

அவள் முதலில் அதிர்ச்சியடைவதுபோல

முகத்தை வைத்துக்கொள்கிறாள்

அது எதிர்பாராத ஒன்று என்பதுபோன்ற

ஒரு சித்திரத்தை உருவாக்குகிறாள்

பாய் பெஸ்டி குற்ற உணர்வால் நடுங்கத் தொடங்குகிறான்

நூறு முறை மன்னிப்புக் கோருகிறான்

அது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை காட்சியாகிவிடுகிறது

அந்த நகைச்சுவைக்கு

அவளோடு சேர்ந்து

அவனும் சிரிக்கத் தொடங்கிவிடுகிறான்

 

ஒரு பாய் பெஸ்டி

ஒரு பென்ணின் காதல் கதைகளை

அவ்வளவு பொறுமையுடன் கேட்கிறான்

கல்லாய் சமைந்த ஒரு கடவுள்கூட

அத்தனை பொறுமையாய் கேட்கமாட்டார்

 

யாரும் பிறக்கும்போதே

பாய் பெஸ்டியாக பிறப்பதில்லை

விதி எங்கோ தடம் மாற்றிவிடுகிறது

பசித்த மனிதர்களின் கையில்

ஒரு மலரைக்கொடுத்து அனுப்பி வைக்கிறது

 

8.2.2010

காலை 11.27

மனுஷ்ய புத்திரன்

https://uyirmmai.com/இலக்கியம்/பாய்-பெஸ்டிகளின்-கதை-ம/

Share this post


Link to post
Share on other sites

யோசித்துப் பார்த்தால் என்னால் எந்த ஒரு தோழியுடனும் இப்படி பாய் பெஸ்டி யாக இருக்க முடியாது என நினைக்கின்றேன். கொஞ்சம் கூட எதிர்பார்ப்பு இல்லாமல், சலனம் இல்லாமல், சபலம் இல்லாமல்....ரொம்ப கஷ்டம்.

boy bestie என்பது ஆங்கிலச் சொல். இதன் அர்த்தம்என்றால்.....

A boy bestie is not a boyfriend but always there when you need them , there there is you need a shoulder to cry on or some one to speak to , there the best !!!

Share this post


Link to post
Share on other sites

இதெல்லாம் வெளிப்பார்வைக்கு.

கோது இருக்க பழம் சாப்பிடும் ஆக்கள்தான் இந்த பாய் பெஸ்டீஸ்😂

Share this post


Link to post
Share on other sites

பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்- ஆர். அபிலாஷ்

 
aesthetic-friendship-guy-best-friend-Fav

பத்தி: அங்கே என்ன சத்தம் (3)

………………………………….

ஒரு பாய் பெஸ்டிக்கு வேண்டிய முதல் தகுதி பொறுமை. நிதானமாக நீண்ட நேரம் செவிமடுக்கும் திறன் வேண்டும். என்னால் குறுக்கிடாமல் மதிப்பிடாமல் பெண்கள் பேசுவதை கேட்டிருக்க முடியும் என்பதாலே பதின்வயதில் இருந்தே நான் ஒரு நல்ல பெஸ்டியாக பெண்களுக்கு இருந்திருக்கிறேன். என்னுடைய தனிமை நாட்டம் காரணமாய் நான் தொடர்ந்து எல்லாரிடமும் உறவைப் பேண முயன்றதில்லை என்பதால் நான் இந்த பெண்கள் பட்டியலை வளர விட்டதில்லை. இருந்தாலும் பாய் பெஸ்டிகள் சார்பில் பேசும் தகுதி எனக்கு உண்டென்றே நம்புகிறேன்.

பாய் பெஸ்டிகள் குறித்த மனுஷ்ய புத்திரனின் கவிதை “பாய் பெஸ்டிகளின் கதை” எனக்கு மிகவும் பிடித்திருந்தது (அவர் என் நண்பரால் மட்டும் அல்ல நான் இதை சொல்வது) – கவிதை சற்று அதிகம் நீண்டு விட்டிருந்தது என்றாலும் கச்சிதமாக முடித்திருந்தார். அதாவது பாய் பெஸ்டியாக இருப்பதன் அவலங்களை நகைமுரணுடன் சொல்லி வந்து விட்டு

“யாரும் பிறக்கும் போதே

பாய் பெஸ்டியாக பிறப்பதில்லை

விதி எங்கோ தடம் மாற்றி விடுகிறது

பசித்த மனிதர்களின் கையில்

ஒரு மலரைக் கொடுத்து அனுப்பி

வைக்கிறது”

என முத்தாய்ப்பாக முடிக்கும் போது பாய் பெஸ்டியின் நிலையை உலகில் உள்ள மொத்த மனிதர்களின் இருத்தலியல் அவலமாக மாற்றி விடுகிறார். இது பாய் பெஸ்டியின் கைவிடப்படலாக அல்லாமல் பசித்தவர்களுக்கு கையில் மலரைக் கொடுத்து அனுப்பின் கடவுள் மீதான ஒரு சாடலாக முடிகிறது; இந்த பசி அன்பின் பசியாக, வாய்ப்புகளுக்கான பசியாக, சமத்துவத்துக்கான பசியாக, கௌரவத்துக்கான பசியாக எப்படி வேண்டுமெனிலும் இருக்கலாம். ஒரு நல்ல கவிதையின் பண்பு என்பது அது பேசுபொருளை குறிப்பிட்ட சந்தர்பத்தில் இருந்து ஒரு பெரிய விசயத்துக்கான குறியீடாக உயர்த்தும் என்பது. தமிழின் பல உன்னத கவிதைகளில் நாம் இந்த பண்பைப் பார்க்க முடியும். பாய் பெஸ்டிகளின் அத்தனை பரிமாணங்களையும் அவர் இதில் கொண்டு வந்து விட்டாரா என்றால் இல்லை, ஆனால் அதற்கு அவசியமில்லை என்பேன் – அது கவிதையின் பணி அல்ல, கட்டுரையின் பணி.

Boy-and-Girl-in-Friendship-happy-friends

இந்த கவிதை பெண்களில் சிலரை சங்கடப்படுத்துவதை நான் புரிந்து கொள்கிறேன் – இயல்பாகவே தம்முடன் நட்புறவில் இருக்கும் ஆண்களின் பொது இடத்தை இது அசைக்கிறது; சின்ன குற்றவுணர்வை பெண்களின் பால் தூண்டுகிறது. குற்றவுணர்வு மிகும் போது அவர்கள் இக்கவிதையை சாடுகிறார்கள்.

பெண்கள் எதிர்பாலினத்தவரின் அங்கீகாரத்தை நாடுவது இயற்கை, அதே வேளையில் பாலுணர்வற்ற பரிசுத்தமான ஆண் நட்பையும் விழைகிறார்கள் – பாய் பெஸ்டிகள் இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு வெளியில் வசிக்கிறார்கள். அப்படித் தான் பாய் பெஸ்டிகளே தோன்றுகிறார்கள். அவர்களால் வெறும் நண்பனாக மட்டுமே எப்போதும் இருக்க இயலாது; அப்போது ஒரு பெண்ணை ‘ஆணாக’ நடத்தும் சங்கடம் ஒரு ஆணுக்கு நேரும். “அலை பாயுதே” படத்தில் மாதவனின் குழுவில் இருக்கும் அந்த ஒல்லியான பெண்ணைப் பற்றி சொல்லும் போது “அவ பாதி ஆம்பளை மாதிரி” என மாதவன் குறிப்பிடுவாரே அப்படி சில ஆண்கள் “பாதி பொம்பளை மாதிரி” பெண்களிடத்து இருப்பதுண்டு. இது முழுமையான ஒரு பெஸ்டியின் இயல்பு அல்ல. அந்த வகையான பெஸ்டி உறவும் இங்கு உண்டு எனிலும் பெரும்பாலான பெண்களுக்கு தம் பாய் பெஸ்டிகள் ஆண்களாக இருந்து தம்மை சற்று ‘உயர்வு நவிற்சியுடன்’ நடத்துவதையும் விரும்புகிறார்கள் என்பது உண்மை தான்.

இறுதியாக ஒரு பாய் பெஸ்டியாக வாழ்வதன் சிக்கல்களை ஒரு ஆணின் பார்வையில் இருந்தும் பேச விரும்புகிறேன் – ஒரு பாய் பெஸ்டி தன் தோழியின் காதலனோ கணவனோ பால் சற்றே பொறாமை கொள்ளலாம். அதே நேரம் அவள் தன் காதலன் / கணவனை விட்டுப் பிரியக் கூடாது என ஒரு சகோதரனைப் போல பிரார்த்திக்கவும் செய்வான். இது பாலியல் சார்ந்த சிக்கல் அல்ல – மாறாக பாலியலின் இறுக்கத்தில் இருந்து, நிர்பந்தங்கள், நிபந்தனைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இருப்பதற்கான விருப்பம் ஒரு ஆணுக்குள் உண்டு. அப்போது ஒரு பாய் பெஸ்டியாக அவன் மாறுகிறான். தன்னுடைய இந்த ‘பதவிக்கு’ ஆபத்து வருவதை அவன் சற்று அச்சத்துடனே எதிர்கொள்கிறான். அவனுடைய இந்த நெருக்கடி ஒரு சாதாரண தோழனுக்கோ சகோதரனுக்கோ நேர்வது அல்ல. இது ஒரு தனித்துவமான நெருக்கடி.

ஒரு ஆணுடல் இயல்பாகவே பெண்ணை அடையும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது – அந்த பெண்ணுடல் யார், எந்த சமூக நிலையில், குடும்ப உறவில் இருக்கிறது என்றெல்லாம் அந்த ஆணுடல் கவலைப்படாது. ஆகையால் ஒரு பாய் பெஸ்டி தன் தோழி மீது சஞ்சலம் கொள்ளும் தருணமும் ஏற்படலாம் தான். ஆனால் அதை மீறிச் செல்லவே அவன் விரும்புவான். இதை பிராயிட் சொன்னதைப் போல பாலுணர்வு அடக்கப்படுதல், அதில் இருந்து அடக்கப்பட்ட உணர்வை உன்னதமாக்கல் (repression – sublimation) என நான் பார்க்க விரும்பவில்லை. மாறாக லக்கான் சொல்வதைப் போல நவீன வாழ்வை செக்ஸ் விழைவுகளைக் கடந்து (மறுத்து அல்ல) முடிவிலி ஒன்றை நோக்கிய நாட்டமாகவே பார்க்க விரும்புகிறேன். பாய் பெஸ்டியாக வாழ்வது இந்த நாட்டங்களில் ஒன்று.

நவீன மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட பாலியல் இச்சையைக் கடந்து கட்டற்ற அனுபவங்களை உறவுகள் வழி நாடுகிறான். நவீன மனிதனின் பெரிய சாதனையே உடல் இச்சையை மொழி மீதான, பண்பாட்டு வடிவங்கள் மீதான, சந்தையில் கிடைக்கும் பண்டங்கள் மீதான, அரசியல் சமூக கருத்தியல் உரையாடல்கள் மீதான, சமூகமாக்கல் மீதான இச்சையாக உருமாற்றியதே. உடல் சுகத்தை விட இது நீடித்த மேலான அனுபவமாக இருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். பாலியல் நாட்டம் ஏற்படுத்தும் நெருக்கடிகள் தரும் பயங்களும் மூர்க்கமும் அவனுடைய உலகை மீண்டும் மீண்டும் ஒரு சின்ன சதுரத்துக்குள் அடக்கி விடுகிறது. அசல் ஜெஸ்ஸியை விட ஜெஸ்ஸி குறித்து ரஹ்மான் உருவாக்கிய இசை, கௌதம் மேனனின் காட்சிகள், த்ரிஷாவின் நளினமான தோற்றமும் தவிப்பான கண்களும் கட்டற்றவை. இதை நடைமுறையில் துல்லியமாக உணர்ந்தவர்கள் பாய்பெஸ்டிகளே.

ஆண்களுக்கு பாய் பெஸ்டி உறவில் உள்ள பயன் அவன் காதலனாக, கணவனாக இருக்க வேண்டியதில்லை, சுதந்திரமாக ஒரு பெண்ணுடன் உறவாடலாம் என்பதே. ஒரு அசலான பாய் பெஸ்டி தனக்கு ஒரு தகுந்த சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமைந்தால் கூட தன் தோழியுடன் படுக்கையை பகிர மாட்டான். ஆனால் இதில் விதிவிலக்குகளும் உண்டு என்பதே இந்த உறவை சிக்கலாக சுவாரஸ்யமாக மாற்றுகிறது.
 

https://uyirmmai.com/செய்திகள்/சமூகம்/பாய்-பெஸ்டிகளின்-தர்மசங்/

Share this post


Link to post
Share on other sites

நான் கண்ட ஆண்களில் 95% எப்ப காட்டுவாள் பார்க்கலாம் என்று அலைகின்ற ஆட்கள் தான்:LOL: 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
30 minutes ago, ரதி said:

நான் கண்ட ஆண்களில் 95% எப்ப காட்டுவாள் பார்க்கலாம் என்று அலைகின்ற ஆட்கள் தான்:LOL: 

தவறான தகவல் 

99.99% 

அந்த 00.01% அவனா நீ😆

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

நான் கண்ட ஆண்களில் 95% எப்ப காட்டுவாள் பார்க்கலாம் என்று அலைகின்ற ஆட்கள் தான்:LOL: 

வீதம் மிக குறைவு என்றாலும் ...
வெறும் 5% மாக என்றாலும்  நாங்கள் இருக்கிறோம்தானே ? 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

வீதம் மிக குறைவு என்றாலும் ...
வெறும் 5% மாக என்றாலும்  நாங்கள் இருக்கிறோம்தானே ? 

யோக்கியர் வாறார், ஹிருணிகாவை தூக்கி உள்ளவை😀

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

நான் கண்ட ஆண்களில் 95% எப்ப காட்டுவாள் பார்க்கலாம் என்று அலைகின்ற ஆட்கள் தான்:LOL: 

என்னட்டை  உந்த நாய்ப்பழக்கம் எல்லாம் இல்லை. 😎

Bildergebnis für vadivelu gif

 

Share this post


Link to post
Share on other sites
24 minutes ago, goshan_che said:

யோக்கியர் வாறார், ஹிருணிகாவை தூக்கி உள்ளவை😀

எந்த மலராக இருந்தாலும் அதை அதன் மரத்தில் வைத்தே ரசிப்பதுதான் 
உண்மையான ரசனை ....
அதி புடுங்கி இதழ்களை திறப்பது எல்லாம் வன்முறையுடன் கூடிய அடாவடித்தனம் 
அப்படியான எண்ணம் பெரிதாக வருவதில்லை.

Share this post


Link to post
Share on other sites
23 minutes ago, Maruthankerny said:

எந்த மலராக இருந்தாலும் அதை அதன் மரத்தில் வைத்தே ரசிப்பதுதான் 
உண்மையான ரசனை ....
அதி புடுங்கி இதழ்களை திறப்பது எல்லாம் வன்முறையுடன் கூடிய அடாவடித்தனம் 
அப்படியான எண்ணம் பெரிதாக வருவதில்லை.

பூக்களின் முழு சம்மதத்துடன் இதழ்களை இதமாகச் சுவைப்பதில் எந்த தவறும் இல்லை. தேன் எடுக்கும் வண்டுகளை மலர்கள் வெறுப்பதில்லை என்பதுடன் அவையும் சிலாகித்து மகிழும்.

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, நிழலி said:

பூக்களின் முழு சம்மதத்துடன் இதழ்களை இதமாகச் சுவைப்பதில் எந்த தவறும் இல்லை. தேன் எடுக்கும் வண்டுகளை மலர்கள் வெறுப்பதில்லை என்பதுடன் அவையும் சிலாகித்து மகிழும்.

தண்டோடு பூ வாழுது 
வண்டு தாகங்கள் கொண்டாடுது!

இந்த பாட்டுவரிகள்தான் எனக்கு இதை வாசிக்க நினைவுக்கு வருகிறது 

ஆனாலும் ...
இந்த பாடல் வரிகள் பற்றி எனக்கு நிறைய கேள்விகள் உண்டு.
ஆண் பெண் உறவுக்கு இந்த உவமை பொருந்துமா?
ஒரு பெண்ணின் கற்பை சூறையாடிக்கொண்டு ... தண்டோடு பூ வாழுது 
என்பது கொஞ்சம் ஏமாற்று வார்த்தைப்போல இருக்கிறது.

வண்டோடு பூ வாழும்போதுதான் 
தாகங்கள் கொண்டாடப்பட வேண்டும் 

தண்டோடு வாழும்போதும் கொண்டாடினால் 
அது களவு இல்லையா? 

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, நிழலி said:

யோசித்துப் பார்த்தால் என்னால் எந்த ஒரு தோழியுடனும் இப்படி பாய் பெஸ்டி யாக இருக்க முடியாது என நினைக்கின்றேன். கொஞ்சம் கூட எதிர்பார்ப்பு இல்லாமல், சலனம் இல்லாமல், சபலம் இல்லாமல்....ரொம்ப கஷ்டம்.

boy bestie என்பது ஆங்கிலச் சொல். இதன் அர்த்தம்என்றால்.....

A boy bestie is not a boyfriend but always there when you need them , there there is you need a shoulder to cry on or some one to speak to , there the best !!!

நான் இங்கு கல்லூரியில் படிக்கும்போது 
இந்திய மாணவர்களும்    பாகிஸ்தான் மாணவர்களும் 
இரண்டு குரூப்பாக பிரிந்துதான் இருப்பார்கள் 
நான் இலங்கை என்பதால் இரண்டு குறுப்புடனும் நெருங்கி பழகுவேன் 

நாம் அதற்கு முன்பு வெற்றி வேல் வீர வேல் என்று கரடு முரடனான 
வாழ்வை நாட்டின் சூழ்நிலையால் கொண்டதால்  பெண்களுடன் 
ஒட்டி உரசி பழகும் பாக்யம் கிடைக்கவில்லை 

கல்லூரியில் அவர்கள் மிக சாதாரணமாக நெருங்கி பழகுவார்கள் 
சில பெண்கள் வந்து மடியிலேயே இருப்பார்கள் அந்த தருணங்களில் 
நீங்கள் எழுதியதுபோலதான் எனக்கு தோன்றும் 
இந்த அளவுக்கு எல்லாம் நான் நல்லவன் இல்லையடி ... என்றுதான் உள் மனது சொல்லும். 

ஆனால் அது மிகுந்த அனுபவமிக்க காலம் 
அப்படி ஒரு காலம் எல்லா ஆண்களின் காலத்திலும் வர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுதல் 
அதன்பிறகுதான்  பெண்களை புரிய தொடங்கினேன் ... அவர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது 
அந்த மூன்று நாட்களில் எவ்வளவு காஸ்ட படுகிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் புரிய தொடங்கியது 
அதன் பின்புதான் பெண்கள் மேல் மரியாதை  கூடியது
பெண்கள் பற்றிய பார்வையில் மாற்றம் வர தொடங்கியது.

மதிப்பும் மரியாதையும் நடுவில் நின்றால் 
ஒரே கட்டிலில் கூட நண்பர்களாக படுத்துக்கொள்லாம் 
அப்படி ஒரு பக்குவம் வந்துவிடும். 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Maruthankerny said:

ஆனால் அது மிகுந்த அனுபவமிக்க காலம் 
அப்படி ஒரு காலம் எல்லா ஆண்களின் காலத்திலும் வர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுதல் 

மதிப்பும் மரியாதையும் நடுவில் நின்றால் 
ஒரே கட்டிலில் கூட நண்பர்களாக படுத்துக்கொள்லாம் 
அப்படி ஒரு பக்குவம் வந்துவிடும்

இதைதான் நான் எனது நண்பராக இருந்தவரிடம் கூற “ அழகான பெண்ணின் bestieயாக உடைய  எந்த ஒரு ஆணும் சந்தர்ப்பம் கிடைத்தால் மாறி விடுவார்கள்” என சர்வ நிச்சயமாக கூறுகிறார்.  

இதனாலேயோ என்னவோ bestieயாக வருகிறேன் என்பவரைக்கூட நம்ப பயமாக உள்ளது.. ஆனால் சில சமயங்களில் நண்பியை விட நண்பன் எவ்வளவோ மேல் என நினைப்பது உண்டு

 

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, goshan_che said:

தவறான தகவல் 

99.99% 

அந்த 00.01% அவனா நீ😆

இந்த 1% வீதமானவர்கள் உண்மையானவர்களாக இருப்பதற்கு ஆண்சமூகமே விடாது.உங்கள் பாணியில் அவனா நீ என்று எள்ளி நகையாடிவிட்டு தாம் பெரிய இவர்களாகத் தாமே தம்மை நினைத்துக்கொண்டு அல்லது மற்றவர்களுக்கு காட்டிக்கொண்டு இருக்கும் கயவர்கள் தான் பல ஆண்களும்.

Share this post


Link to post
Share on other sites

இதை பற்றி ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறோம்?

அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. பூனை முதல் சிங்கம் வரை தன் டி என் ஏ யை முடிந்தளவு அகலமாக விதைக்கவே எல்லா ஆண் உயிரிகளும் முனைகிறன.

சொல்லப்போனால் - ஒரு ஆண் விலங்கின் பிறப்பின் அர்த்தமே அதன் விந்தணுவை எங்கே எல்லாம் பரப்ப முடியுமோ அங்கே எல்லாம் பரப்பி வம்சத்தை விருத்தி செய்வதுதான்.

இது தன்னியல்பாக அமைந்த கூர்ப்பின் முனைப்பு. 

இதை அடக்கி, வன்முறையை பாவிக்காமல் இருக்க வைப்பது எம் மனித இனத்தின் மன, விழுமிய விருத்தியால் ஏற்பட்டது. இது மட்டுமே எமக்கும் சிங்கத்துக்கும் உள்ள வித்தியாசம்.

பிகு 1: அப்பாவி ஆண்கள் என்று யாரும் இல்லை. ஒன்றில் நடிக்கிறாகள் அல்லது வேறு ஈடுபாடு கொண்டிருக்கிறாகள்.

பிகு2: இந்த போய் பெஸ்டியாக போய், தருணம் பார்த்து கரணம் அடிப்பதில் எனக்கும் ஆர்வமில்லை. இது நரிகள் வேட்டையாடும் முறை. சிங்கம் வேட்டையாடும் முறை வேறு 😂

37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்த 1% வீதமானவர்கள் உண்மையானவர்களாக இருப்பதற்கு ஆண்சமூகமே விடாது.உங்கள் பாணியில் அவனா நீ என்று எள்ளி நகையாடிவிட்டு தாம் பெரிய இவர்களாகத் தாமே தம்மை நினைத்துக்கொண்டு அல்லது மற்றவர்களுக்கு காட்டிக்கொண்டு இருக்கும் கயவர்கள் தான் பல ஆண்களும்.

 

Share this post


Link to post
Share on other sites

ஆண்களை  ஆண்களும் நன்றாக சொல்வதில்லை. பெண்களும் நன்றாக   சொல்வதில்லை. ஏனிந்த கொலை வெறி??🤣

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, nunavilan said:

ஆண்களை  ஆண்களும் நன்றாக சொல்வதில்லை. பெண்களும் நன்றாக   சொல்வதில்லை. ஏனிந்த கொலை வெறி??🤣

பாம்பின்கால் பாம்பறியுமாம்...:cool:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, குமாரசாமி said:

என்னட்டை  உந்த நாய்ப்பழக்கம் எல்லாம் இல்லை. 😎

Bildergebnis für vadivelu gif

 

அதை நேரில் பாத்தால் தான் சொல்லலாம்😁

22 hours ago, Maruthankerny said:

வீதம் மிக குறைவு என்றாலும் ...
வெறும் 5% மாக என்றாலும்  நாங்கள் இருக்கிறோம்தானே ? 

நாங்கள் யோக்கியம் என்று சொல்றவர்களை தான் நம்ப கூடாது  

 

20 hours ago, நிழலி said:

பூக்களின் முழு சம்மதத்துடன் இதழ்களை இதமாகச் சுவைப்பதில் எந்த தவறும் இல்லை. தேன் எடுக்கும் வண்டுகளை மலர்கள் வெறுப்பதில்லை என்பதுடன் அவையும் சிலாகித்து மகிழும்.

உங்களை போல ஆண்கள் தான் பெண்களை பலவீனப்படுத்தி,எப்ப தங்கள் வலையில் வீழ்த்தலாம் என்று காத்திருப்பவர்கள் 😠

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, goshan_che said:

இதை பற்றி ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறோம்?

அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. பூனை முதல் சிங்கம் வரை தன் டி என் ஏ யை முடிந்தளவு அகலமாக விதைக்கவே எல்லா ஆண் உயிரிகளும் முனைகிறன.

சொல்லப்போனால் - ஒரு ஆண் விலங்கின் பிறப்பின் அர்த்தமே அதன் விந்தணுவை எங்கே எல்லாம் பரப்ப முடியுமோ அங்கே எல்லாம் பரப்பி வம்சத்தை விருத்தி செய்வதுதான்.

இது தன்னியல்பாக அமைந்த கூர்ப்பின் முனைப்பு. 

இதை அடக்கி, வன்முறையை பாவிக்காமல் இருக்க வைப்பது எம் மனித இனத்தின் மன, விழுமிய விருத்தியால் ஏற்பட்டது. இது மட்டுமே எமக்கும் சிங்கத்துக்கும் உள்ள வித்தியாசம்.

பிகு 1: அப்பாவி ஆண்கள் என்று யாரும் இல்லை. ஒன்றில் நடிக்கிறாகள் அல்லது வேறு ஈடுபாடு கொண்டிருக்கிறாகள்.

பிகு2: இந்த போய் பெஸ்டியாக போய், தருணம் பார்த்து கரணம் அடிப்பதில் எனக்கும் ஆர்வமில்லை. இது நரிகள் வேட்டையாடும் முறை. சிங்கம் வேட்டையாடும் முறை வேறு 😂

 

சிங்கம் வேட்டையாடும் விதம் பற்றி நீங்கள் இன்னும் அறியவேண்டும் 
என்று நினைக்கிறன்....... எல்லா ஆண்சிங்கத்துக்கும் பெண் சிங்கத்துடன் சேரும் உரிமை இல்லை 
போரில் வென்றால் மட்டுமே அந்த பாக்யம் உண்டு. 

சாதாரண காற்றை புரிவது என்றால் கூட 
நீங்கள் காற்றுடன் அழமாக பழகவேண்டும் 

பெண்களை புரிவது என்றால் நிறைய பழக வேண்டும் 
மிகவும் இயல்பாக பழக தொடங்கினால் .... காமம் வெறும் அசிங்கமாகவே தோன்றும் 
அதுவேறும் 10 நிமிட உணர்வுதான் .. அதுக்கு பின்னால் அடர்ந்த காடுபோல் 
பெருத்த அன்பினால் ஆன ஓர் பேர் அழகே தோன்றும்.

இப்போதைய சமூக சூழலில் காமத்தை அடக்குவது 
வெறும் வேலை ... ஆனால் வடிகால்களை சரியாக தேர்வு கொள்ள வேண்டும் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நல்ல கருத்து! இந்தியா என்ட பூதம் 1947க்கு பிறகு நிலமைகளை தலைகீழா ஆக்கி வைச்சிருக்கு. தமிழக மக்களும் யதார்த்தத்தை உணர்ந்தால் முன்னேற்றம் காணலாம். சீமான் போன்றாக்கள் முயன்றாலும் இன்னும் பூதத்தை சாடிக்குள் அடைக்கிற அளவுக்கு எழுச்சி வரேல்ல.
  • இந்த மருந்தை இந்தியர்களை விட அமெரிக்கர்கள் சிறப்பாக செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? காரணம் அமெரிக்க சட்டதிட்டம். புது மருந்துக்கு பரீட்சையமான பெயர்... அமெரிக்காவே செய்முறைகளை கொடுத்து மனிதரில் பரீட்சித்து வெற்றியானதும் திரும்பி இந்தியாவிடம் இருந்து வாங்குவதாக காட்டலாம்.
  • கிளிநொச்சியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டவேளை அதிரடி நடவடிக்கை! கையும் களவுமாக சிக்கிய வர்த்தகர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்றையதினம் (09-04-2020) விலைக் கட்டுப்பாட்டு பகுதியினர், பொலிஸ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக சில வர்த்தகர்கள் கையும் மெய்யுமாக பிடிப்பட்டுள்ளனர். இன்று காலை கிளிநொச்சி மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பகுதியினர், பொலிஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில மொத்த வியாபார நிலையங்களுக்கு தீடிரென சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதன் போது பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களான பருப்பு, ரின் மீன், அரிசி போன்ற பொருட்கள் அடையாளம் காணப்பட்டதோடு, அதிகரித்த விலையில் பொருட்கள் விற்பனை செய்தமையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர். காலாவதியான பொருட்களும் பிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த வியாபாரி நிலையங்களின் உரிமையாளர்களிடம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை நியாய விலையில் விற்பனை செய்து தங்களது விற்பனைச் சிட்டை காண்பிக்கப்பட வேண்டும் என எழுத்து மூலம் உத்தரவாத கடிதம் பெறப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற நடவடிக்கையும் உட்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ச்சியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/140871
  • கொரோனா சந்தேகம்: யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேர் அனுமதி! In இலங்கை     April 9, 2020 12:04 pm GMT     0 Comments     1140     by : Litharsan கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) மாலை தொரிவிக்கையில், “யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் இதுவரையில் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த 2 நாட்களில் 5 பேர் குறித்த காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நேற்று அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், இன்று அனுமதிக்கப்பட்ட 3 பேருடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவ ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகூடத்தின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என பணிப்பாளர் தெரிவித்தார். http://athavannews.com/கொரோனா-சந்தேகம்-யாழ்-போத/   கொரோனா தொடர்பாக யாழில் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள்- மருத்துவ நிபுணர்கள் விளக்கம் In இலங்கை     April 9, 2020 11:37 am GMT     0 Comments     1172     by : Litharsan கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ நடைமுறைகள் குறித்து யாழ். மருத்துவ நிபுணர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து கடந்த சில நாட்களாக மேற்கொள்ளும் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் மற்றும் அதன் நடைமுறைகள் பற்றிய விளக்கம் இதன்போது ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை ஊடக சந்திப்பில் , யாழ். போதனா வைத்தியசாலைச் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும் மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ்,  யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ர விரிவுரையாளர் ஏ.முருகானந்தா, யாழ் போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் ரஜந்தி இராமச்சந்திரன்,  யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட நுண்ணுயிரியல் துறை சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி கே.முருகானந்தன், யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியசாலையின் தலைமை மருத்துவ தொழில்நுட்பவியலாளர் எஸ்.சுரேஸ்குமார் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் செ.கண்ணதாசன் ஆகியோரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். http://athavannews.com/யாழ்-பல்கலைக்கழக-மருத்த-2/
×
×
 • Create New...