Sign in to follow this  
தமிழ் சிறி

சீனாவை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவு

Recommended Posts

Coronavirus-China-expels-Wall-Street-Journal-journalists-for-article-it-deemed-racist.jpg

சீனாவை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவு

சீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீற் (Wall Street) என்ற பத்திரிகையின் செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பாக அந்தப் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவரை சீனாவை விட்டு வெளியேறுமாறு சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

“China is the Real Sick Man of Asia” என்ற அந்தத் தலையங்கத்தை சீனாவின் வெளியுறவு அமைச்சகம், ‘நிறவெறி’ தன்மை கொண்டதாகவும் ஒரு குறிப்பிட்ட நாட்டை பாகுபடுத்திப் பிரிப்பதாகவும் குற்றஞ்சாட்டியது.

அத்துடன், அமெரிக்காவில் சீன அரச ஊடகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் சுட்டிக் காட்டி அமெரிக்காவை சீனா விமர்சித்துள்ளது.

இதேவேளை, வோல் ஸ்ட்ரீற் ஜேர்னல் பத்திரிகை குறித்த தலையங்கம் தொடர்பாக இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை என்று சாடியுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், குறித்த மூன்று ஊடகவியலாளர்களின் ஊடகவியலாளர் அனுமதி அட்டை இனி செல்லாது என்றும் அறிவித்துள்ளதுடன் அவர்கள் சீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மூவரில், ஜோஷ் சின், சாவோ டெங் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் என்பதுடன் மற்றையவர் அவுஸ்ரேலியரான பிலிப் வென் என்பவராவார்.

இவர்கள் மூவரும் 5 நாட்களில் சீனாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துவிட்ட சூழ்நிலையில், சீன அரசாங்கத்தின் செயற்பாடுகளை அமெரிக்கப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்து வருவதும் இந்த நடவடிக்கையின் பின்புலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/சீனாவை-விமர்சித்த-அமெரிக/

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

சீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீற் (Wall Street) என்ற பத்திரிகையின் செய்தி வெளியிட்டுள்ளமை

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ' சைனா டவுன் ' இருக்குதே.

அதன் மூலம் நாங்கள் வைப்போம் ஆப்பை ... தேவை வரும்பொழுது

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நான் பிரித்தானியாவுக்கு வந்த சில நாட்களில் ஒரு பேக்கரியில் வேலை செய்ய ஆரம்பித்தேன். French sticks 🥖 உம் baguettes 🥖 🥖 தயாரிக்கும் பகுதியில்தான் வேலை. இது மெயின் பேக்க்கரி இருந்த கட்டடத்தில் இருந்து தள்ளி வீதிக்கப்பால் இருந்தது.  Production பகுதியில் நான் மட்டும்தான் தமிழன். ஒரு நைஜீரிய இளைஞனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஐரிஷ்காரர்கள். ஒன்று இரண்டு ஐரிஷ்காரர்களுக் சாதுவாக நட்டு லூஸாகவும் இருந்தது.   நான் ஊரில் படித்த ஆங்கிலம், spoken English என்று private ஆக ஐயரிடம் படிக்கப்போயிருந்தாலும் அது என்னவே grammar உம் vocabulary உம் மட்டும்தான்! என்னுடைய முதலாவது translation சேவை இந்திய இராணுவத்திற்கும், அவர்களால் பனையோலை வெட்டுவதற்காகப் பிடித்து வைக்கப்பட்டு தன்னைச் சுடப்போறாங்களாக்கும் என்று பயந்து உதறிக்கொண்டிருந்த மரமேறி ஒருவருக்கும் இடையில் நடந்தது. அவருடைய பயத்தைத் தெளிவித்து campஐச் சுத்தி வேலி அடைக்க பனையோலை வெட்டிக்கொடுக்கவேண்டும் என்று இந்திய இராணுவம் சொன்னதை தமிழில் சொல்லி விளங்கப்படுத்தினேன். நாலா பக்கமும் துவக்குகளுக்கு மத்தியில் செய்த அந்த translation இல் வந்த துணிவுதான் உலகமெல்லாம் செல்லும்போது பயப்படாமல் ஆங்கிலத்தில் கதைக்க எப்போதும் உதவுகின்றது! பேக்கரியில் வாரத்தில் ஆறு நாட்களில் , சனிக்கிழமை தவிர, பன்னிரண்டு மணிநேர ஷிப்ட் வேலை காலை ஏழு மணி தொடங்கி மாலை ஏழு மணிக்கு முடியும்! நான் ஐரிஷ்காரர்களுடனும், நைஜீரியனுடனும்தான் அதிக நேரத்தைப் பகல்பொழுதுககளில் செலவழித்தேன். ஐரிஷ்காரர்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்த சொல்லாக F word ஐப் பாவிப்பார்கள். நல்லதுக்கும் கூடாததுக்கும், கோபத்திற்கும் அன்புக்கும் எப்படி ஒரு சொல்லையே பாவிக்கின்றார்கள் என்று வியந்ததுண்டு. ஐரிஷ் மனேஜர், மற்றைய ஐரிஷ்காரர்கள் சொல்லுவது எனக்குப் புரியாதபோதெல்லாம் மனேஜர் நைஜீரியனை கூப்பிட்டு ஐரிஷ் ஆங்கிலத்தை நைஜீரியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லுவான். நைஜீரியன் சொல்லுவதை விளங்குவதில் எனக்குப் பிரச்சினை இருக்காது. இப்படியாக அந்த நைஜீரியன், ஐரிஷ் ஆங்கிலத்தையும், தமிழ் ஆங்கிலத்தையும் தனது நைஜீரியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கதைப்பதற்கு ஒரு பாலமாக இருந்தான். இவர்களுடன் பேசித்தான் ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொண்டேன். கற்றல் இன்னமும் முடியவில்லை!    
    • அப்படி காட்டத்தக்கதாக ஏதாவது இருந்தால் ஏன் இப்படி எள்ளிநகையாடுவதில் கவனம் செலுத்துகிறார்? ஒன்றும் இல்லாத ஆற்றாமையில் தனக்கு முடிந்ததை செய்கிறார் - பாவம், விட்டுவிடுங்கள், ஏதோ ஒரு சந்தோசமாவது கிடைக்கட்டும்.
    • தெரியாமல்தான் கேட்கிறேன், பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறீங்கள்.....!  இங்க பிரச்சினை இல்லையென்றால் தூக்கமும் வருகுதில்லை....!  😁