• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்!

Recommended Posts

germany_1.jpg

ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்!

ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இதன்போது குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அம்புலன்ஸ்களையும் பொலிஸ் ஹெலிக்கொப்டர் ஒன்றையும் காணமுடிவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலாவது துப்பாக்கி பிரயோகம் மதுபானசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பொலிஸார் இனந்தெரியாத எண்ணிக்கையானவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/ஜேர்மனியில்-துப்பாக்கி-2/

Share this post


Link to post
Share on other sites

புதன்கிழமை இரவு, யேர்மனி Hanau நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக யேர்மனிய போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டிருக்கிறது.

Hanau நகர மையத்தில் அமைந்திருந்த Shisha-Barஇலேயே துப்பாக்கிதாரர் ஒருவர் தனது தாக்குதலை ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து 2,5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த  மற்றுமொரு Shisha-Barக்கு தனது காரிலேயே பயணித்து  இரண்டாவது தாக்குதலை அவர் மேற்கொண்டார். இந்த இரண்டு Shisha-Barகளும் ஒருவருக்கே சொந்தமானது.

பொலிஸாரின் தேடுதலில் தாக்குதல்தாரி அவரது வீட்டிலேயே இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தாக்குதலுக்கான் காரணம் இன்னும் அறிவிக்கப் படவில்லை

Share this post


Link to post
Share on other sites

இங்கே வாழும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியர்களுக்கு மரியாதை கொடுக்க பழக வேண்டும்.
எதற்கெடுத்தாலும் அவர்களை நாஷி என திட்டுவதும்,அவர்களை முட்டாள்களாக சித்தரிப்பதும்,ஜேர்மன் பெண்களை விபச்சாரிகளாக பார்ப்பதையும் ,பன்றிகள் என விளிப்பதையும் நிறுத்த வேண்டும்.உழைக்காமல் உண்டு மகிழ்வதை தவிர்க்க வேண்டும்.

நான் இங்கே வெளிநாட்டவர்கள் என கூறியது குறிப்பாக துருக்கி, சேர்பியன்,அல்பேனியன்,கொசொவோ,ஈராக்,ஈரான்,ஆப்கானிஸ்தான்  என இன்னும் கொஞ்ச நாட்டுக்காரர்..
எனக்குத்தெரிய இங்குவாழும் எம்மினத்தவர்கள் ஜேர்மனியர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள்.அவர்களுக்கும் எம்மவர்மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என நினைக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

இந்தியர்கள் பாக்கிஸ்தானியர்கள் உட்பட ஜேர்மனியில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை கொலைசெய்யவேண்டும்-  கொலையாளியின்  அதிர்ச்சி இணையத்தள பதிவு

 ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு ஒன்பது பேரை கொலை செய்த நபர் தனது தனிப்பட்ட இணையத்தளத்தில் ஜேர்மனியில் உள்ள இந்தியா பாக்கிஸ்தான் பிரஜைகள் உட்பட பல ஆசிய ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என தெரிவித்துள்ளமை விசாரணையாளர்களிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரொபியாஸ் ரத்ஜென் எனும் அந்த நபர் தனது இணையத்தளத்தில் எங்கள் மத்தியில் அழிவை ஏற்படுத்தக்கூடிய இனக்குழுக்களும், இனங்களும் கலாச்சாரங்களும் உள்ளன  என தெரிவித்துள்ளார்.

இவர்களை சுத்தம் செய்யவேண்டும் இது; உலக சனத்தொகையை அரைவாசியாக குறைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

german_shooter.jpg

பின்வரும் இனத்தவர்கள் நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என அவர் தனது

இணையத்தளத்தில்குறிப்பிட்டுள்ளார்-மொராக்கோ அல்ஜீரியா லிபியா துனிசியா எகிப்து இஸ்ரேல் சிரியா ஜோர்தான் லெபனான்,துருக்கி ஈரான்ஈராக் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் வியட்நாம் கம்போடியா பிலிப்பைன்ஸ்.


இவர்களை முற்றாக அழிப்பதை சாத்தியமாக்கும் பட்டன் ஒன்று இருந்தால் நான் ஒரு நொடியில் அதனை அழுத்துவேன் என ரத்ஜென் தெரிவித்துள்ளார்.

பாடசாலையிலும் அலுவலகத்திலும்  கிடைத்த அனுபவஙகள் மூலமாகவும் ஜேர்மனிய பிரஜைகளிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் இடையிலான மோதல்கள் குறித்த பத்திரிகை செய்திகளை படித்த பின்னரும் இந்த முடிவிற்கு வந்ததாக அவர் குறி;பிட்டுள்ளார்.

இந்த இணையத்தளத்தினை அதிகாரிகள் தற்போது அகற்றியுள்ளனர்

german_shooting6.jpg

இதேவேளை இவர் இன்று மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரத்ஜென் அவரது வீட்டில் தாயாருடன் இறந்து கிடக்க காணப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/76120

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, ampanai said:

பின்வரும் இனத்தவர்கள் நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என அவர் தனது

இணையத்தளத்தில்குறிப்பிட்டுள்ளார்-மொராக்கோ அல்ஜீரியா லிபியா துனிசியா எகிப்து இஸ்ரேல் சிரியா ஜோர்தான் லெபனான்,துருக்கி ஈரான்ஈராக் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் வியட்நாம் கம்போடியா பிலிப்பைன்ஸ்.

இதில் இஸ்ரேலையும் சேர்த்துள்ளமை இன்னும் நாசி போக்குள்ளவர்கள் ஜெர்மனியில் உள்ளார்களா? என்ற சந்தேகத்தை உருவாக்குகின்றது.

Share this post


Link to post
Share on other sites
On 2/20/2020 at 11:14 AM, குமாரசாமி said:

இங்கே வாழும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியர்களுக்கு மரியாதை கொடுக்க பழக வேண்டும்.
எதற்கெடுத்தாலும் அவர்களை நாஷி என திட்டுவதும்,அவர்களை முட்டாள்களாக சித்தரிப்பதும்,ஜேர்மன் பெண்களை விபச்சாரிகளாக பார்ப்பதையும் ,பன்றிகள் என விளிப்பதையும் நிறுத்த வேண்டும்.உழைக்காமல் உண்டு மகிழ்வதை தவிர்க்க வேண்டும்.

நான் இங்கே வெளிநாட்டவர்கள் என கூறியது குறிப்பாக துருக்கி, சேர்பியன்,அல்பேனியன்,கொசொவோ,ஈராக்,ஈரான்,ஆப்கானிஸ்தான்  என இன்னும் கொஞ்ச நாட்டுக்காரர்..

On 2/20/2020 at 8:03 PM, ampanai said:

பாடசாலையிலும் அலுவலகத்திலும்  கிடைத்த அனுபவஙகள் மூலமாகவும் ஜேர்மனிய பிரஜைகளிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் இடையிலான மோதல்கள் குறித்த பத்திரிகை செய்திகளை படித்த பின்னரும் இந்த முடிவிற்கு வந்ததாக அவர் குறி;பிட்டுள்ளார்.

நான் சொல்லல.....🙄

 

On 2/20/2020 at 7:10 AM, Kavi arunasalam said:

புதன்கிழமை இரவு, யேர்மனி Hanau நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக யேர்மனிய போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டிருக்கிறது.

On 2/20/2020 at 6:00 AM, தமிழ் சிறி said:

ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் துருக்கி நாட்டவர்கள். ஆனால் குர்திஷ் இனத்தவர்கள்.இது உண்மையா?

 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

இறந்தவர்கள் துருக்கி நாட்டவர்கள். ஆனால் குர்திஷ் இனத்தவர்கள்.இது உண்மையா?

இறந்தவர்கள்.... குர்திஷ் இனத்தவர்கள் என்று பத்திரிக்கை செய்தியில் படித்தேன்.
அத்துடன் அந்த கொலையாளி,  இரு இடங்களில் தாக்குதலை நடத்திவிட்டு..
வீட்டிற்கு சென்று... தனது 72 வயது தாயாரையும் சுட்டுக் கொன்று விட்டு,
தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்து கிடந்த நிலையில்..
பொலிஸாரால் கண்டு பிடிக்கப் பட்டார்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, தமிழ் சிறி said:

இறந்தவர்கள்.... குர்திஷ் இனத்தவர்கள் என்று பத்திரிக்கை செய்தியில் படித்தேன்.
அத்துடன் அந்த கொலையாளி,  இரு இடங்களில் தாக்குதலை நடத்திவிட்டு..
வீட்டிற்கு சென்று... தனது 72 வயது தாயாரையும் சுட்டுக் கொன்று விட்டு,
தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்து கிடந்த நிலையில்..
பொலிஸாரால் கண்டு பிடிக்கப் பட்டார்.

குர்திஷ் இனத்தவர் என்றபடியால் தானோ துருக்கி இனத்தவர்கள் கண்டன அறிக்கைகளோ அல்லது வருத்தங்களையோ தெரிவிக்கவில்லை.
அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் எனது கணிப்பில் துருக்கியர்கள் சிங்கள/கிந்தியர்களை விட மோசமானவர்கள்.
சித்தரல்லா....

Share this post


Link to post
Share on other sites
On 2/23/2020 at 11:17 PM, குமாரசாமி said:

இறந்தவர்கள் துருக்கி நாட்டவர்கள். ஆனால் குர்திஷ் இனத்தவர்கள்.இது உண்மையா?

100919germanyshooting_960x540-720x450.jpg

ஜேர்மனியில் குர்துகளை இலக்கு வைத்த துப்பாக்கி சூடு சம்பவம்: பாதுகாப்பு தீவிரம்!

ஜேர்மனியில் குர்து இன மக்களை இலக்கு வைத்த நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து, அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸார் அதிகம் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் குர்திஷ் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இத்தாக்குதலை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் மேற்கு நகரமான ஹனாவ் நகரில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) நடந்த தாக்குதல் ஜேர்மனியில் சிறுபான்மை சமூகங்கள் பாசிச மற்றும் இஸ்லாமிய வன்முறைக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தை ஆழப்படுத்தியுள்ளதுடன், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போராட மாநில அதிகாரிகள் எவ்வளவு செய்கிறார்கள் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இனவாதக் கொள்கையுடைய 43 வயதான தொபியாஸ் ராதேன் என்பர், ஹனாவ் நகரில், குர்துகள் அதிகம் கூடும் இரு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10பேர் உயிரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலை மேற்கொண்ட பின்னர், துப்பாக்கிதாரி தனது 72 வயதான தாயை சுட்டுக்கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த தாக்குதல் சம்பவம், பெரும்பாலும் புலம்பெயர்ந்த பின்னணியுடன், தீவிர வலதுசாரி மாற்று ஜேர்மனி (ஆஃப்டி) கட்சிக்கு எதிராக பின்னடைவைத் தூண்டியுள்ளது.

தொபியாஸ் ராதேன், பல தீவிர வலதுசாரி சதி வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டார், அதே போல் சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார், அதில் அவர் இனவெறி மற்றும் யூஜெனிச கருத்துக்களை ஆதரித்துள்ளார்.

http://athavannews.com/ஜேர்மனியில்-குர்துகளை-இல/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • 11--- சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே....! 12 ---- காதல் பிசாசே காதல் பிசாசே ....! 13--- நட்ச்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது......!
    • கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்   கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படித்தான் நாம் மீளப்போகிறோம், உயிர் வாழப்போகிறோம் என்று ஒரு வழி தெரியாமல் உலகமே கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. ஆளுக்கு ஒரு கணக்கு, ஆளுக்கு ஒரு விஞ்ஞானம், ஆளுக்கு ஒரு மருத்துவம் என்று ஊடகங்களில் அள்ளித்தெளிக்கிறார்கள். எதைப்படிப்பது, எதை விடுவது, எதை நம்புவது என தெரியாமல் மக்கள்கூட்டம் திணறித்தான் போகிறது.   இந்த கட்டுரையை எழுதுகிறபோது, உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 69 ஆயிரத்து 312... இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 982... இதில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 100... என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல் மையம் கணக்கு சொல்கிறது.ஆனால் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.இதை கூறி இருப்பவர், தொற்றுநோய் பரவல் கணித பகுப்பாய் வில் வல்லுனராக திகழக்கூடிய ஆடம் குச்சார்ஸ்கி. இவர், இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மண்டல மருத்துவ கல்லூரியின் இணை பேராசிரியரும் ஆவார்.கொரோனா வைரஸ் பற்றிய அவரது பார்வையும், கருத்துகளும் கவனத்தை ஈர்ப்பதாக அமைகின்றன. அதில் இருந்து...19-ம் நூற்றாண்டின் இறுதியில் மலேரியா காய்ச்சல், கொசுக்கள் மூலம்தான் பரவுகின்றன என்று கண்டுபிடித்தவர், நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானி ரொனால்டு ரோஸ் ஆவார்.அவர் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவது பற்றிய ஒரு பார்வையைத் தந்துள்ளார்.கடைசி கொசு இருக்கிற வரையில் மலேரியா காய்ச்சலை ஒழித்துக்கட்ட முடியாது என்பதுதான் மனிதர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு கொசுவையும் ஒழிக்கத்தேவையில்லை என்பதுதான் ரொனால்டு ரோஸ் பார்வையாக இருந்தது.கொசுக்களின் அடர்த்தியை ஓரளவுக்கு குறைத்து விட்டாலே, மலேரியா காய்ச்சலால் பாதித்த ஒருவர், அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு முன்பாகவே குணம் அடைந்து விட வாய்ப்பு உண்டு.கொரோனா வைரஸ் பிரச்சினையிலும் கூட இதே போன்றதொரு யோசனையை நாம் சிந்திக்க முடியும். உடல் அளவில் தனித்திருத்தல் அல்லது சமூக அளவில் விலகியிருத்தல் என்ற யோசனை வந்திருக்கிறது.கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் இந்த நடைமுறைகள் அமலில் இருப்பதால், அவர்கள் அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு விட முடியும். அதைத்தான் நாம் உகான் போன்ற இடங்களில் பார்த்தோம்.தொற்றுநோய் பரவல் கணிதத்தை பொறுத்தமட்டில், ஸ்பானிஷ் புளூ, சார்ஸ் அல்லது எபோலா போன்ற வைரசில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி மாறுப்பட்டிருக்கிறது என்றால்-இந்த நோய் தொற்றுகளைப்பற்றி புரிந்துகொள்வதற்கென்றே பல பரந்த கொள்கைகள் இருக்கின்றன. இவை பல நோய் கிருமிகளுக்கு பொருந்தக்கூடும். குறிப்பாக சொல்தென்றால் பரவலின் அளவை புரிந்துகொள்வதில்.ஆக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், சராசரியாக இந்த வைரசை எத்தனை பேருக்கு கொடுக்கிறார்கள் என்ற கேள்வி எழும். 2 அல்லது 3 நபர்களுக்கு அவர்களால் கொடுக்க முடியும். நேர அளவீடுகளைப்பற்றியும் இங்கே நாம் சிந்திக்க வேண்டியதிருக்கிறது.ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறபோது, அதற்கான அறிகுறிகளை அவர் காண்பிக்க சராசரியாக எத்தனை நாட்கள் ஆகி இருக்கும் என்றால் 5 நாட்களாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்கலாம்.மற்ற வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், அது தொற்றின் ஆரம்பத்திலேயே, அதாவது அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே அல்லது லேசான அறிகுறிகள் தென்படுகிறபோதே நிறைய பேருக்கு பரவி விடுகிறது என்பதுதான்.எபோலா, சார்ஸ் வைரஸ்களை பொறுத்தமட்டில், அவற்றை எளிதில் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும், ஏனென்றால் அதிக தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டபோது, அவற்றுக்கென்று தனித்துவமான அறிகுறிகள் இருக்கின்றன. அவர்களை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்கள் யாருடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை பார்க்க இயலும். அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்து விடவும் முடியும்.ஆனால் இந்த கொரோனா வைரசை பொறுத்தமட்டில், ஒருவர் பாதிப்புக்கு ஆளானாலும், அவர் நன்றாக இருக்கிறபோதே கூட அல்லது லேசாக இருமுகிற போதேகூட நிறைய பேருக்கு பரவி விடுகிறது.இதனால் யார், யாருக்கு இந்த வைரஸ் பரவி இருக்கிறது என்பதை அடையாளம் காண்பது மிகக் கடினமானதாகி விடுகிறது. வெளிநாடுகளில் எல்லாம் இதைத்தான் பார்த்தோம். ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு முன்பாகவே பலருக்கு பரவினாலும் அவர்கள் கண்டறியப்படாமல் போகிறார்கள்.இந்தியாவில் குறைவான பேருக்குத்தான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒப்பிட்டால் மரண விகிதாச்சாரமும் குறைவாகவே இருக்கிறது.ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் நகரங்களில் மக்கள் அடர்த்தியை பார்க்கிறபோது, இந்த எண்ணிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறதா என்றால், ஆரம்ப நிலையில் இரண்டு அம்சங்களை கண்டறிவது கடினம்.குறைவான எண்ணிக்கையில் பாதிப்புக்கு ஆளானவர்களை கொண்டிருக்கிறபோது, தற்செயலாகவோ அல்லது மக்கள் தொகை அமைப்பினாலோ அல்லது பிற அம்சங்களாலோ, இன்னும் பரவுவது சூடுபிடிக்கவில்லை.இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படுகிறபோது, குறிப்பாக உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரிக்கிறபோது, எந்தளவுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றிய தெளிவான நிலையை காண முடியும்.சமீபத்தில் நாங்கள் சில தோராய மதிப்பீடுகளை செய்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதித்துள்ள பல நாடுகளில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே வெளி உலகுக்கு சொல்லப்படுகிறது என்று நினைக்கிறோம்.கொரோனா வைரஸ் பரவலில் தவறான தகவல்களும் பரவுகின்றன.கொரோனா வைரசை பொறுத்தமட்டில் ஆரம்ப கட்டத்தில், பாதிப்புக்கு ஆளாகிற ஒவ்வொருவரும், ஒரு சிலருக்கு அதைப் பரப்புகிறார்கள்.கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய் பரவுவதற்கும், இது பற்றிய போலியான தகவல்கள் பரவுவதற்கும் ஒற்றுமை இருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.இதையொட்டி, பேஸ்புக் உள்ளடக்கம் பற்றிய ஒரு ஆய்வில், கொரோனா வைரஸ் பற்றிய ஒரு பதிவை ஒருவர் வெளியிடுகிறபோது, மேலும் 2 பேர் அதை பகிர வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிய வந்தது. ஆனால் பெரிய வித்தியாசம், நேர அளவுதான்.கொரோனா வைரஸ் பரவுவதற்கு சில நாட்கள் ஆகும். அதே சமயம், வலைத்தளங்ளில் 30 வினாடிகளில் பேசத்தொடங்கி விடலாம். அது கொத்து கொத்தாக பரவத்தொடங்கி விடுகிறது.... இப்படி சொல்கிறார் அந்த வல்லுனர்.கொரோனா வைரஸ் என்ற ஆக்டோபஸ்சின் கரங்கள் இன்னும் முழுமையாக நீளாமலேயே ஒடுங்கிப்போய் விட வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.உலகமெங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் வெளியே வருகிறது என்றால் ஐந்தில் ஒருவர் பற்றிய தகவல்களே வெளிவருகின்றன என்று அர்த்தம். இது உண்மையானால் இன்னும் இந்த கொரோனா வைரசின் வலிமை அதிகம் என்பது தெளிவாகிறது.ஒவ்வொருவரும் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை, கட்டுப்பாடுகளை மதித்தும், தங்களுக்குத் தாங்களே சுய கட்டுப்பாடுகளை விதித்தும் வீடுகளுக்குள்ளும், இருக்கும் இடங்களிலும் முடங்கி இருப்பதுதான் ஒவ்வொருவரையும் காக்கும். உயிரையும் காக்கும்! https://www.maalaimalar.com/news/topnews/2020/03/30084951/1373313/Coronavirus-effect-reduced-count-said-countries.vpf      
    • யாழ் இணையத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    • முள்ளியவளை சுதர்சன் (31 years old) யாயினி (152 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி & முள்ளியவளை சுதர்சன்......!  💐
    • இது தான் உண்மையான கள நிலவரம். வடமாகாண ஆளுநரும், அரச அதிபரும் அவ்வப்போது விடும் நிவாரணம் பற்றிய அறிவிப்புக்களில் 10% கூட நிறைவேற்றப்படவில்லை. அதிலும் 5% ஆனவர்களுக்கு கூட முறையான நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. பெரும்பாலான மக்கள் தங்கள் சுய முயற்சியிலேயே பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். கைகளில் பணமில்லாதவர்கள் நகை, உந்துருளி புத்தகம் போன்றவற்றை அடகுவைத்து பொருட்களை கூடிய விலைகளில் வாங்குகின்றனர். சதோச போன்ற அரச நிறுவனங்கள் தமிழர் பகுதிக்கு போதியளவு உணவுப் பொருட்களை விநியோகிக்கவில்லை. கட்டுப்பாட்டு விலையிலுள்ள பொருட்கள் வடபகுதியில் கிடைப்பதில்லை. அவை அனைத்தும் தென்பகுதிகளிலேயே தாராளமாக விநியோகிக்கப்படுகின்றன.   சில கடை உரிமையாளர்கள், சில செல்வந்தர்கள் மட்டுமே தன்னார்வ இளைஞர்கள் சிலரின் உதவியுடன் கிராமப் பகுதிகளுக்கு முடிந்தளவு சிறுசிறு உதவிகளை செய்துவருகின்றனர். சிங்கள-பௌத்த கொலைகார அரச நிர்வாகம் வட பகுதிகளில் ஓரிரு அரிசியாலைகளுக்கு மட்டுமே விநியோகிக்கும் அனுமதியை வழங்கியுள்ளது. நூற்றுக் கணக்கான அரிசியாலைகளுக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண காலத்தில் (1 மாதத்துக்கு முன்னர்) கடைகளில் ரூ100/- க்கு கிடைத்த அரிசியின் விலையை தற்போது குறித்த ஓரிரு அரிசியாலை முதலைகள் ரூ130/- க்கு விற்று கொள்ளை இலாபம் ஈட்டுவதாக தெரிகிறது. இதற்கு சிங்கள-பௌத்த கொலைகார அரசின் முகவர்களாக இருக்கும் வடமாகாண ஆளுநரும், அரச அதிபரும் உடந்தையா என்பது தெரியவில்லை. போர்க்காலத்தில் தமிழர்களிடம் கொள்ளையடித்த ராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் இப்போதும் தமிழர்களிடம் அப்படியொரு கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறதாகவே தெரிகிறது. அரசுடன் ஒட்டி உறவாடிய, இனியும் உறவாடத்துடிக்கும் கூத்தமைப்போ, தம்மை மாற்றுத் தலைமை எனக் கனவு காணும் விக்கினேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ நடக்கும் அக்கிரமங்களை கண்டும் காணாமல் உள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன், விநோதரலிங்கம் போன்ற ஓரிருவரே இதுவரை குரல் கொடுத்துள்ளனர்.