Sign in to follow this  
தமிழ் சிறி

நிர்பயா குற்றவாளி... தற்கொலை முயற்சி?

Recommended Posts

Nirbaya.jpg

நிர்பயா குற்றவாளி.... தற்கொலை முயற்சி?

நிர்பயா குற்றவாளிகளின் சந்தேகநபர்களில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சுவற்றில் தலையை மோதிக்கொண்டதால் காயம் ஏற்பட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனையை இரத்து செய்யவும் தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பலமுறை முயற்சித்தும் அவை அனைத்தும் தோல்வியடைந்தன.

இந்நிலையில் திகார் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்போது வினய் சர்மா, சுவரில் தனது தலையை மோதியதால், காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதற்கு முன்னர் சிறையில் உள்ள கிரிலில் தனது கையை கொடுத்து, எலும்பு முறிவு ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் பெப்ரவரி 16ஆம் திகதி நடந்ததாகவும் இது குறித்து வினய்யின் தாய் கேட்டபோதும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை எனவும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டது முதல் அவரது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்தார்.

ஆனால் சிறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், “சமீபத்தில் நடத்தப்பட்ட மனநிலை சோதனையில் 4 பேரும் நலமாக உள்ளனர். ஆனால் புதிய திகதி அறிவிக்கப்பட்டது முதல் குற்றவாளிகள் 4 பேரும் சிறை காவலர்களிடம் கடுமையாக நடந்து வருகின்றனர்.

அவர்களின் செயற்பாடுகளில் மாற்றம் வந்துள்ளது. மற்றவர்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டுள்ளனர். உணவு சாப்பிட மறுத்து வருவதால், அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து வருகிறோம். குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அவர்களின் அறையில் சி.சி.ரி.வி கமரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்களை மட்டும் சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும் சில சமயங்களில் அவர்களை சந்திக்கவும் குற்றவாளிகள் மறுத்து விடுவதாகவும் சிறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மூர்க்கதனமாக நடந்துகொள்வதும் தங்களை காயப்படுத்திகொள்வதும் வழமையானதே என கூறப்படுகிறது.

ஒருவேளை குற்றவாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ, எடை குறைந்தாலோ அவர்கள் உடல்நலம் தேறும் வரை தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போகும் என சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வினய் சர்மா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா, முரட்டுத்தனமாக தன்னை தானே காயப்படுத்திக்கொண்டாரா அல்லது தண்டனையை தள்ளிப்போடுவதற்காக இவ்வாறு செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/நிர்பயா-குற்றவாளி-தற்கொல/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எல்லோரும் மின் இணைப்பு சரியாக இருக்குதா என்டு செக் பண்ணுங்கப்பா..👌  
    • Hi im interested to read author maruthan's books.please send me pdf
    • எங்க படத்தைக் காணவில்லை. படத்தைப் போட்டாத் தான் நம்புவம். இல்லாவிட்டால் பொய்ச் செய்தி.
    • கொரோனா எதிரொலி: ஆஸ்திரேலிய கூட்டாட்சி முறையில் மாநிலங்கள் எல்லைகளை மூட முடியுமா? ஆஸ்திரேலியாவில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை வெறும் சிறு அடையாளம் மூலமே கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருக்கும். தூசி நிறைந்த எல்லைப்புற சாலையில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநில எல்லைக்குள் நுழைகிறோம் என்பதை கூட அறிந்திருக்க முடியாத அளவிலேயே சூழல் இருந்திருக்கின்றது. ஆனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல், இதை அத்தனையையும் மாற்றி இருக்கிறது. இந்த சூழல், மாநிலங்கள் இடையே எல்லைகள் அமைத்து வேலி அமைக்கும் நிலைக்கு மாநில அரசுகளை தள்ளியிருக்கிறது. இவ்வாறு தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா,  குயின்ஸ்லாந்த் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் எல்லைகளை மூடியிருக்கின்றன. இது முன்னெப்போதும் யோசித்துக்கூட பார்க்க இயலாத முடிவாகும். இந்த நிலையில், மாநில எல்லையை கடக்க எண்ணும் பயணிகள், 14 நாட்கள் சுய-தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். தீவு மாநிலமான தாஸ்மானியாவும் இவ்வாறான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. குயின்லாந்த் எல்லையை மூடுவதாக அறிவித்திருந்த அம் மாநில முதல்வர் அன்னஸ்டாசியா பாலாஸ்குக், சரக்கு மற்றும் அத்தியாவசிய பயணத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இச்சூழலில் தனிமைப்படுத்தலை மீறுபவர்கள் மீது 13,345 ஆஸ்திரேலிய டாலர்களை வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 1919ல்பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் இதுபோன்றதொரு எல்லைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதில்லை. ஒரு பக்கம் கொரோனாவுக்கான கட்டுப்பாடு என்றாலும் எல்லை மூடல் பல சிக்கல்களையும் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. உதாரணத்திற்கு, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கும் ஒருவர் குயின்ஸ்லாந்த் மாநிலத்தில் பணியாற்றுகிறார் என்றால் அவர் பணியாற்றும் மாநிலத்தில் நுழைய சிறப்பு அனுமதியை பெற்றிட வேண்டும். இச்சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற பல வெளிநாட்டினர்கள் உள்புற பகுதிகளில் சிக்கயுள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற 75,000 பேர் பூங்காக்கள் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதே சமயம் தற்போதைய நிலை, இதுபோன்று மாநிலங்கள் இடையேயான எல்லைகளை கட்டுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசியலமைப்பு சட்டத்தில்  மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரசியலமைப்பு சட்ட வல்லுநரான பேராசிரியர் ஏனி டவோமி, வர்த்தகம் தடைப்பட்டாலும் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்கிறார். “மக்கள் எல்லைகளை கடப்பதற்கு மாநிலங்கள் தடை விதிக்கவில்லை, மாறாக மருத்துவ பரிசோதனைகளும், தனிமைப்படுத்து கொள்ளுதலும் கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ளன,” எனக் கூறுகிறார் பேராசிரியர் டவோமி. ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், அடிப்படை சேவைகளான மருத்துவம், பள்ளிகள், பொது போக்குவரத்து, காவல்துறை மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ஆனால்,  வர்த்தகம், பாதுகாப்புத்துறை, குடிவரவுத்துறை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான அதிகாரங்கள் மத்தியிலேயே குவிந்திருக்கிறது. ஆஸ்திரேலிய மாநிலங்களிடையே தனித்துவமான உச்சரிப்புகளோ அடையாளங்களோ பெரிதும் இல்லாமையால் மாநில உரிமைகளை பாதுகாப்பது பற்றி பெரிய அக்கறை காட்டுப்படுவதில்லை. மாநில முறைகளை ஒழிக்கலாமா என்று கூட நீண்ட விவாதம் நடந்திருக்கின்றது. ஆனால், தற்போதைய அச்சுறுத்தல் மாநிலங்களின் தேவையை வலிமையாக்கியிருக்கிறது எனலாம். கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக, எட்டு மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஆட்சிப்பகுதிகளின் தலைவர்களைக் கொண்டு போர்க்கால பாணியிலான தேசிய அமைச்சரவையை பிரதமர் ஸ்காட் மாரிசன் அமைத்திருப்பது வழக்கத்திற்கான மாறான நகர்வாக பார்க்கப்படுகின்றது. சிறந்த பொருளாதார மற்றும் சமூக கொள்கை உருவாக்கத்திற்கு ‘ஆஸ்திரேலியாவின் கூட்டாட்சி முறை’ தடையாக இருப்பதாகக் கூறுபவர்களுக்கு இந்த அமைச்சரவை ஓர் அசாதாரண உருவாக்கம் எனக் கூறியிருக்கிறார அரசியல் விமர்சகர் டாம் புர்டன். http://www.vanakkamlondon.com/கொரோனா-எதிரொலி-ஆஸ்திரேல/
    • கொரோனவும் உலக பொருளாதாரச்சரிவும்!v