Sign in to follow this  
பிழம்பு

அமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை

Recommended Posts

அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும்.

எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது.

தமது கணவர் அல்லது மனைவிக்கு தெரியாமல், வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது தொடர்ந்து பெரும் குற்றமாக நீடிக்கும்.

அந்த மாகாணத்தின் பிரதிநிதிகள் சபை இந்த சட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த சபையின் ஒப்புதலுக்கு பின்னரே இச்சட்டம் அமலுக்கு வரும்.

https://www.bbc.com/tamil/global-51568465

Share this post


Link to post
Share on other sites

ஒன்றுக்கே இங்க வழியில்லை ...
இவங்கள் வேற வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுறாங்கங்கள் 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

ஒன்றுக்கே இங்க வழியில்லை ...
இவங்கள் வேற வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுறாங்கங்கள் 

இதுக்கெல்லாம் மனம் தளரப்படாது. சனி மாற்றம் சரிவந்தாலும் சரிவரும்.

Share this post


Link to post
Share on other sites

முதல் வேலையா இமிகிறேசன் லோயற பார்க்கப் போறன். எனி றெபறல் ?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • என்னப்பா, மீண்டும் முதல்ல இருந்தா ?🙏 
  • பிரித்தானியாவில் தற்போது அமுலில் இருக்கும் தீவிர முடக்கத்திற்கு உட்படுத்தும் சட்டத்தை மே மாதம் இறுதியில் நீக்குவது சிரமம் என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவது குறைந்தால் மாத்திரமே சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக ஆராய என தெரிவித்துள்ள அதிகாரிகள், கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பிரித்தானிய அரசாங்கம் நாட்டை பரவலாக மூடியுள்ளது. மதுபான நிலையங்கள், உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. அவசியமாக இருந்தால் மாத்திரமே வெளியில் செல்ல வேண்டும் எனவும் மக்களை வீடுகளில் இருக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவில் 41 ஆயிரத்து 903 கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 4 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 708 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் மேலும் நாட்டில் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தவே மக்களை வீடுகளில் இருக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கடும் சட்டத்திட்டங்களுக்கு மத்தியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என சில நிபுணர்கள் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது நாட்டை முடக்குவது தொடர்பில் பிரித்தானியா ஆரம்பத்தில் தளர்வான கொள்கையை கையாண்டது. எனினும் கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை இறக்கக் கூடும் என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் கணித மற்றும் உயிரியல் விஞ்ஞானம் சம்பந்தமான பிரதான பேராசிரியர் நீல் பேர்கியூசன் அறிக்கை ஒன்றை வெளியிட்ட பின்னர், பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடும் சமூக இடைவெளியை பேணுமாறு உத்தரவிட்டார். எது எப்படி இருந்த போதிலும் பிரித்தானிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பின்னடைவு சம்பந்தமாகவும், மாணவர்களின் கல்விக்கு ஏற்படும் நஷ்டம் தொடர்பாகவும் நாடு முழுவதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் பிரித்தானிய பிரதமர், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார். “தேசிய ரீதியிலான அவசர நேரத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது கட்சிகளின் தலைவர்களான நமது கடமை” பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை கொரோனா வைரஸ் சிறைச்சாலைகளில் பரவுவதை கட்டுப்படுத்த சிறிய தவறுகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை அடுத்த சில வாரங்களில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். https://www.tamilwin.com/uk/01/242693?ref=home-latest
  • நிச்சயம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். 
  • மேலை நாடுகளிலும் இதே சிக்கல் தான், இந்தியாவில் மட்டுமல்ல. அண்டர் 🙂 
  • Report us Steephen 1 hour ago நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவை - மோருக்குளிய பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இன்று மதியம் ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்களை தங்கொட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். தங்கொட்டுவை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் மற்றும் தங்கொட்டுவை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகாதார துறையினர் மற்றும் பொலிஸார் வழங்கியுள்ள ஆலோசனைகளை மீறி இவர்கள் ஜெபக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்ததாக தங்கொட்டுவை சுகாதார அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மோருக்குளிய பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். https://www.tamilwin.com/politics/01/242673?ref=home-imp-parsely