Jump to content

கிளிநொச்சியில் 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்..! கிளிநொச்சியில் சம்பவம்..

IMG_20200220_170339.jpg

கிளிநொச்சி- அக்கராயனில் கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வந்த ஆலயம் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆலய உரிமையாளர் ஆலயத்தை இடித்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது அக்கராயனில் கடந்த நான்கு ஆண் டுகளுக்கு மேலாக குறித்த ஆலயம் அமைக்கும் பணிகள் இடம் பெற்று வந்தன. ஆலயத்தின் உரிமையாளர் கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற கட்டட ஒப்பந்தக்காரரிடம் 55 இலட்சம் ரூபா நிதியை வழங்கி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆலயத்தின் உரிமையாளர் கனடாவிலிருந்து அக்கராயனுக்கு வந்து ஆலயத்தின் கட் டுமானங்களைப் பார்வையிட்ட போது வழங்கப்பட்ட பணத்திற்கேற்ப ஆலயக் கட்டடம் அமைக்கப்படவில்லையெனவும் ஆலயத்தின் கட்டுமானத்தில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டதன் காரணமாகவும் எதிர்காலத்தில் ஆலயம் முழுமை பெற்றாலும் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வகையில் உள்ளதால் ஆலயத்தினை இடித்துள்ளார்.

இது குறித்து ஆலயத்தின் உரிமையாளரான நாகேந்திரம் தனபாலசிங்கம் தெரிவிக்கையில் ; கனடாவில் தான் ஐந்தாண்டுகளாக உழைத்து அனுப்பிய பணத்திற்கு உரிய முறையில் ஆலயம் அமைக்கப்படவில்லை.

எதிர்காலத்தில் ஆலயம் உடைந்து விழக்கூடிய நிலைமை காணப்பட்டதன் காரணமாகவே ஆல யத்தை இடித்ததாகவும், தன்னிடம் பணம் பெற்றவர் ஏமாற்றி விட்டதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.இதேவேளை ஆலயம் அமைப்பதற்கு பணத்தினைப் பெற்றவர் துணுக்காயின் கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெரு மாள்குளம், கிளிநொச்சி மாவட்டத்தின் பல இடங்களிலும் ஆலயம் அமைப் பதில் மோசடி மேற்கொண்டுள்ளதாக பலராலும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது.

https://jaffnazone.com/news/15979

டிஸ்கி

கோவில் கட்டுவது அவரின்ட தனிப்பட்ட விடயம் என்டாலும் ஏழை பாழைகளுக்கு கொடுத்து இருந்தால் சனம் வாழ்த்தி இருக்கும்..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில சீமேந்தும் மணலும் சல்லியும் விக்கிற விலைக்கு இவைக்கு விளையாட்டு.

எத்தனையோ சனம் இருக்க ஒரு இருப்பிடம் இல்லாமல் கொட்டில் கட்டி வாழுது. அதுகளுக்கு ஒரு அறையில் ஒரு சின்ன வீடாவது கட்டிக்கொடுத்திருந்தால்.. நாலைஞ்சு குடும்பம் வீடு பெற்றிருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனையையும் படைத்து காக்கும் கடவுளுக்கு அவர் விரும்பும் இடத்தி்ல் இருக்க இடமில்லை என்பது அவரது கவலை.   அங்கே வெறுப்பு, பாெறாமை, பாேட்டி நிறைந்திருப்பதால். மனிதனாே பணத்தைகாெட்டி, காேயிலைக் கட்டி அங்கே அவரை சிறைவைக்கலாம் என நினைக்கிறான்.  அவராே தனக்கு பிடித்த இடத்தில், பிடித்தவர்களாேடு வாழசென்றுவிடுவதால் வெறும் கட்டிடங்களையும், சிலைகளையும் ஸ்தாபித்து நம்மை நாமே ஏமாற்றி மகிழ்கிறாேம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஊரில சீமேந்தும் மணலும் சல்லியும் விக்கிற விலைக்கு இவைக்கு விளையாட்டு.

எத்தனையோ சனம் இருக்க ஒரு இருப்பிடம் இல்லாமல் கொட்டில் கட்டி வாழுது. அதுகளுக்கு ஒரு அறையில் ஒரு சின்ன வீடாவது கட்டிக்கொடுத்திருந்தால்.. நாலைஞ்சு குடும்பம் வீடு பெற்றிருக்கும். 

இவருக்கும் மக்களின் ஆசீர் கிடைத்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக்குடுத்திருந்தால் உன்னையே கடவுளாய் கும்பிடுங்கள். 
காசு கொழுப்பு புடிச்ச மனிதர்கள்.. 

Link to comment
Share on other sites

காரை அப்கிரேட் பண்ணுறதா அல்லது..
கியுபாவுக்கு ரிப் போறதா அல்லது..
ஊரில கடையை கட்டி வாடகைக்கு விடுறதா..
என்பது காசு வைச்சிருக்கிறவனுடைய விருப்பம்..!

ஆனா இதுல இருக்கிற செய்தி என்ன என்டா..
இப்ப ஊரில இருக்கிற பலருக்கு வேலை தொியாது..
தொிந்து கொள்ள ஆர்வமும் இல்லை..
அவையின்ட ஈகாேவும் அதிகம்..
என்னுடைய அனுபவத்தில் சொல்லுறன்.. !

ஆபத்தான கட்டிடம் எனத் தொிந்ததும் மக்களுக்கு பாதிப்பில்லாம இடித்ததற்கு உரிமையாளரை பாராட்டலாம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சாணக்கியன் said:

காரை அப்கிரேட் பண்ணுறதா அல்லது..
கியுபாவுக்கு ரிப் போறதா அல்லது..
ஊரில கடையை கட்டி வாடகைக்கு விடுறதா..
என்பது காசு வைச்சிருக்கிறவனுடைய விருப்பம்..!

ஆனா இதுல இருக்கிற செய்தி என்ன என்டா..
இப்ப ஊரில இருக்கிற பலருக்கு வேலை தொியாது..
தொிந்து கொள்ள ஆர்வமும் இல்லை..
அவையின்ட ஈகாேவும் அதிகம்..
என்னுடைய அனுபவத்தில் சொல்லுறன்.. !

ஆபத்தான கட்டிடம் எனத் தொிந்ததும் மக்களுக்கு பாதிப்பில்லாம இடித்ததற்கு உரிமையாளரை பாராட்டலாம்..!

உண்மை சாணக்கியன். 
அவருடைய... அந்த மனம் தான், மிகப் பெரியது.

தானே... பணம் செலவழித்து கட்டிய கோவிலை,
அவரே.. பணம் கொடுத்து இடித்தது...  சாதாரண விடயம் அல்ல.
எல்லோராலும்... இலகுவாக, இதனை செய்து விட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

எல்லாவற்றையும் ஆண்டவன் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்

"இருக்கிறான்"

எப்ப ஒழும்பி கைய காலை ஆட்டுவார்?
அப்போதுதான் விமோசனம் 
2000-4000 வருசமா இருக்கிறவரை பற்றி நாங்கள் 
பெரிதாக இனி அல்டட்டாமல் விட்டாலே ....
இப்படி வீணாகும் பணம் ஏழைகளை சென்றடையும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பகுதி நபர் ஒருவரிடம் விசாரித்தேன் அப்படி ஒன்டு நடந்ததாக தான் கேள்விப்பவிலலையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, சுவைப்பிரியன் said:

அந்தப் பகுதி நபர் ஒருவரிடம் விசாரித்தேன் அப்படி ஒன்டு நடந்ததாக தான் கேள்விப்பவிலலையாம்.

சரி / தவறுக்கு அப்பால் ..இவயல் விட ஐ.பி.சியும் புளுகினமா..

https://www.ibctamil.com/srilanka/80/137482

https://www.todayjaffna.com/177977

செய்திகளை எங்கு காவுகிறார்கள் என்று தெரியவில்லை தோழர் ..😢

Link to comment
Share on other sites

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் வாழும் பல கிராமங்களை கொண்ட ஒரு நாட்டில் இருக்கும்  கோவில்கள் போதாதென்று கோவில் கட்டியதில்  அவருக்குள்  இருந்த மூடத்தனம்  தெரிந்தது. தவறாக கட்டப்பட்ட கோவில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டால்  மக்களுக்கு ஆபத்து வரலாம் என்று அதை இடித்து தள்ளிய போது அவருக்குள் இருந்த மனிதம் தெரிந்தது.  அவருக்குள் இருந்த மனிதத்தை பாராட்டலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சாணக்கியன் said:

ஆபத்தான கட்டிடம் எனத் தொிந்ததும் மக்களுக்கு பாதிப்பில்லாம இடித்ததற்கு உரிமையாளரை பாராட்டலாம்..!

ஆக உரிமையாளரும் ஒரு தெய்வம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சரி / தவறுக்கு அப்பால் ..இவயல் விட ஐ.பி.சியும் புளுகினமா..

https://www.ibctamil.com/srilanka/80/137482

https://www.todayjaffna.com/177977

செய்திகளை எங்கு காவுகிறார்கள் என்று தெரியவில்லை தோழர் ..😢

தவறுக்கு மன்னிக்கவும்.சம்பவம் உண்மைதான.நான் கேட்ட நபருக்கே இப்தான் தெரியுமாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.