Sign in to follow this  
தமிழ் சிறி

தமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Recommended Posts

godappaya-rajapakesha-720x450.jpg

தமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

உலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி தின கொண்டாட்டத்தில் இலங்கை வாழ் இந்துக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “இந்து சமய பஞ்சாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமயக் கிரியைகள் மூலம் துர்க்குணங்கள் இருந்து விலகி உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

பல்வேறு சிக்கல்கள் முரண்பாடுகளுக்கு மத்தியில் முன்னோக்கி செல்லும் இன்றைய உலகில் மனிதனுக்கு உலக அமைதி தருவது சமயமாகும்.

நமது சகோதர தமிழ் சமூகத்தினர் உட்பட அனைத்து இலங்கையர்களும் புத்துணர்ச்சியுடன் புதியதோர் எதிர்காலம் பற்றி எதிர்பார்ப்புடன் இருக்கின்ற இச்சூழ்நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமய நல்லிணக்கத்தையும் நாட்டின் அனைத்து இனங்களும் தமது தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதே நாட்டின் தலைவர் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

புனித மகாசிவராத்திரி தினத்தில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தமிழ்-மக்களின்-மகா-சிவரா/

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, தமிழ் சிறி said:

godappaya-rajapakesha-720x450.jpg

தமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எங்கே கலந்துகொள்ளப்போகிறார்। நகுலேஸ்வரத்திலா , திருக்கேதீஸ்வரத்திலா? 

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Vankalayan said:

எங்கே கலந்துகொள்ளப்போகிறார்। நகுலேஸ்வரத்திலா , திருக்கேதீஸ்வரத்திலா? 

gallerye_132401605_2485801.jpg

அவர் அங்கே வந்தால் மட்டுமே இவரும் வருவார் !

Share this post

Link to post
Share on other sites

என்ன இது  அண்ணனும் தம்பியும் இப்ப கொஞ்சநாளாய் திருநீற்று பூச்சிலை அக்கறை காட்டீனம்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப் 

Bildergebnis für mahinda rajapaksa  temple visit

Share this post

Link to post
Share on other sites

உண்மையில் இவங்களுக்கும் எமக்கும் பேசும் மொழியைத் தவிர வேறு பிரச்சனைகள் இல்லை.எல்லாம் வாக்கு அறுவடைக்காக உருவாக்கிய இனவாதம்தான் இப்ப இப்படி வளர்ந்திருக்கு.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, Kavi arunasalam said:

67-EC1205-6-F8-A-4-B0-C-BC85-5278016-EAD

பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின், விழித்திருப்பது மிகவும் முக்கியமானது.

ஆம்; எம்மை, எம் இனத்தை, எம் சமயத்தை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதாயின் விழித் திருக்கும் நோன்பு தேவை என்பதே சிவராத்திரி விரதத்தின் உட்பொருள்.
 
சிவபூமி என்று போற்றப்பட்ட எங்கள் சைவ மண்ணில் - இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் ஆண்ட சிவபூமியில் சைவம் அழிக்கப்படுவதை அறியாமல் விழித்திருந்து விரதம் இருக்கின்றோம். இந்த விரதத்தால் ஏது நன்மை?

அதோ சிவன் விம்மி அழுகின்றார். நாமோ அதைப் புரியாமல் சிவராத்திரி விரதம் இருந்து மறு நாள் தூங்கி விடுகிறோம். அறியாமை எங்களிடம் இருக்கும்வரை சிவனுக்கும் நிம்மதி இல்லை. சைவத்துக்கும் பாதுகாப்பில்லை என்ற உண்மையை இன்றேனும் உணர்ந்து விரதம் செய்க.

http://valampurii.lk/valampurii/content.php?id=20612&ctype=news

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

புனித மகாசிவராத்திரி தினத்தில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்

நீங்கள் ஏத்திவையுங்கோ, நான் குளிர் காய்கிறேன். என்று சொல்லுது கிளட்டுப்புலி. தன்னை சர்வதேசத்துக்கு புனிதனாக காட்ட போடும் வேஷங்களும், உதிர்க்கும் வசனங்களும் தாங்க முடியேல்லையடா சாமி. ஒட்டுக்குழுக்கள் ரசிக்க உதவும் இவை.

Share this post

Link to post
Share on other sites

அவரின் குடும்பத்தில் சைவர்கள் கிறீத்தவர்கள் உள்ளனர். அத்துடன் அவர் ஒரு அரசியல்வாதி வேறு. இதனை நாம் எதிர்பார்க்காவிட்டால் எங்களில்தான் பிழை.

Share this post

Link to post
Share on other sites
On 2/22/2020 at 2:20 AM, குமாரசாமி said:

என்ன இது  அண்ணனும் தம்பியும் இப்ப கொஞ்சநாளாய் திருநீற்று பூச்சிலை அக்கறை காட்டீனம்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப் 

Bildergebnis für mahinda rajapaksa  temple visit

தமிழனுக்கு பெப்பே காட்டி முடிந்து இப்ப இந்தியாவுக்கு (வல்லரசு கனவில்)பெப்பே காட்ட வெளிக்கிட்டினம்....

முக்கியமாக மொடிக்கு ...நான் உன்ட நண்பேன்டா என்று சொல்லினம்.....

Share this post

Link to post
Share on other sites
On 2/22/2020 at 2:20 AM, குமாரசாமி said:

என்ன இது  அண்ணனும் தம்பியும் இப்ப கொஞ்சநாளாய் திருநீற்று பூச்சிலை அக்கறை காட்டீனம்?

சவேந்திர சில்வாவின் பயணத் தடையுடன், ஆப்பு இறுகுவதை உணர்ந்து நெருங்குகினம் .....சீ   நெருக்குகினம்.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, putthan said:

தமிழனுக்கு பெப்பே காட்டி முடிந்து இப்ப இந்தியாவுக்கு (வல்லரசு கனவில்)பெப்பே காட்ட வெளிக்கிட்டினம்....

முக்கியமாக மொடிக்கு ...நான் உன்ட நண்பேன்டா என்று சொல்லினம்.....

சொரணையற்ற மோடிக்கும் இந்தியாக்கும் நீண்டகாலமாகவே பெரிசா நாமம் போட்டுக்கொண்டிருக்கீனம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, Rajesh said:

சொரணையற்ற மோடிக்கும் இந்தியாக்கும் நீண்டகாலமாகவே பெரிசா நாமம் போட்டுக்கொண்டிருக்கீனம்.

கொரனா வைரஸ் ராஜபக்ச கோஸ்டியையும் ஆட்டம் காணவைக்குது போல கிடக்கு

இன்றைய நாகரிக.போர் (இஸ்லாமிய ,இந்து ,கிறிஸ்தவ,பெளத்த)போட்டியில் மோடி ஒரு இந்து பயங்கரவாதி( ஜனநாயகவாதிகளின்  பாஷையில்)....ராஜாபக்ச பெளத்த பயங்கரவாதி...

Share this post

Link to post
Share on other sites

தமிழரின் பலவீனத்தை நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். திருநீற்று பூச்சையும் சந்தனப்பொட்டையும் கண்டால் தனது மகனை கொன்ற கொலைகாரனைக் கூட மறந்து  அவனுடன் சேர்ந்து   பஜனை பாட தொடங்கி விடுவார்கள் தமிழர்கள்  என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளனர். மற்றய இனத்தவர்கள் தாம் கடைப்பிடிக்கும் மதத்தை பயன்படுத்தி தமது இனத்தை  பொருளாதார, அரசியல், அறிவியல் ரீதியாக வளர்ததுக் கொள்வார்கள். ஆனால் தமிழர்கள் தாம் கடைப்பிடிக்கும் மதத்தை வைத்து அந்நியர் தம்மை அடிமையாக்க பேதைகள் போல் ஒத்துழைப்பர். 

Share this post

Link to post
Share on other sites
59 minutes ago, tulpen said:

தமிழர்கள் என்று சொல்லும் பொழுது எந்த மதத்தை பின்பற்றுவோரின் தமிழர்களை சுற்றி காட்டுகின்றீர்கள்
இந்துகள்
சைவர்கள்
கிறிஸ்தவர்கள்
இஸ்லாமியர்கள
பெளத்தர்கள்
சாய் பக்தர்கள்
வைஸ்ணவ்ர்கள

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, tulpen said:

திருநீற்று பூச்சையும் சந்தனப்பொட்டையும் கண்டால் தனது மகனை கொன்ற கொலைகாரனைக் கூட மறந்து  அவனுடன் சேர்ந்து   பஜனை பாட தொடங்கி விடுவார்கள்

 சிங்களத்தில் எழுதிவைத்து தமிழை வாசித்தவுடன் விசிலடித்து கையும் தட்டுகிறோம், பாட்டுபாடியவுடன் மறந்து தாளம் போட்டு சேர்ந்து பாடுகிறோம். வீடு எரியுது விறகு பிடுங்க வாறாராம். கணக்காய் தக்க நேரத்தில் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கு. 

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, putthan said:

தமிழர்கள் என்று சொல்லும் பொழுது எந்த மதத்தை பின்பற்றுவோரின் தமிழர்களை சுற்றி காட்டுகின்றீர்கள்
இந்துகள்
சைவர்கள்
கிறிஸ்தவர்கள்
இஸ்லாமியர்கள
பெளத்தர்கள்
சாய் பக்தர்கள்
வைஸ்ணவ்ர்கள

முஸ்லிம்களையும் தமிழர்கள் என்கிறீர்களே அவர்கள் அனுமதிப்பார்களா?
இந்துகளை சைவர்கள், சாய் பக்தர்கள், வைஸ்ணவ்ர்கள் என்கின்ற போது
கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கம், புரட்டஸ்ரென், யேகோவா, பெந்தகோஸ்துவாகவும்
முஸ்லிம்களும் சன்னி, சியா, சுபிசமாகவும் இருக்கிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this