Jump to content

புதிய தொழில்நுட்பத்தில் 28 ஆயிரம் கொங்கிரீட் வீடுகள் அமைக்கும் திட்டம்- யாழில் ஆரம்பம்!


Recommended Posts

புதிய தொழில்நுட்பத்தில் 28 ஆயிரம் கொங்கிரீட் வீடுகள் அமைக்கும் திட்டம்- யாழில் ஆரம்பம்!

 

by : Litharsan

Housing-Plan-Event-in-Jaffna.jpg

புதிய தொழில்நுட்பத்தில் 28 ஆயிரம் கொங்கிரீட்டிலான நிரந்தர வீடுகள் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அமைக்கப்படும் குறித்த வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் அங்கஜன் இராமநாதனின் பங்கேற்பில் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம்-மயிலிட்டிப் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் விசேட விருந்தினராக பங்கேற்றார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி மற்றும் அரச உத்தயோதர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய தொழில்நுட்பத்திலான குறித்த வீட்டுத் திட்டத்தில் கொன்கிறீட் தகடுகளைக்கொண்டு நவீன முறையில் 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Housing-Plan-Event-in-Jaffna-2.jpg

Housing-Plan-Event-in-Jaffna-3.jpg

Housing-Plan-Event-in-Jaffna-1.jpg

Housing-Plan-Event-in-Jaffna-4.jpg

Housing-Plan-Event-in-Jaffna-7.jpg

Housing-Plan-Event-in-Jaffna-5.jpg

Housing-Plan-Event-in-Jaffna-6.jpg

http://athavannews.com/புதிய-தொழில்நுட்பத்தில்/

 

Link to comment
Share on other sites

நல்ல விடயம்!

வடமாகாணசபையின் முயற்சியால் கிடைத்த உதவி. தற்போது நடைபெறுகிறது. இதற்கும் ராஜபக்ச கும்பலுக்கு 10 வருடங்களாக முட்டாள் தொழில் செய்யும் அங்கஜனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  

வடமாகாணத்திலிருந்து தென்பகுதிக்கு வருபவர்களை கடந்த ஒரு மாதமாக 2, 3 இடங்களில் இறக்கி சித்திரவதை செய்கிறது போர்க்குற்றவாளிகள் கைகளில் சிக்கியுள்ள சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம். இதை தட்டிக்கேட்கும் வக்கில்லாத ராஜபக்ச கும்பலுக்கு 10 வருடங்களாக முட்டாள் தொழில் செய்யும் அங்கஜனுக்கும் டக்ளசுக்கும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கும்  தாங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் உரிமை இல்லை.

Link to comment
Share on other sites

வடக்கு, கிழக்கில் பொருத்து வீடுகள்: சீனாவில் இருந்து வரும் கொங்கிரீட்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள கொங்கிரீட் பொருத்து வீடுகளுக்கான, கொங்கிரீட்கள் சீனாவிலிருந்து கொண்டு வரப்படவுள்ளன. அவற்றை பொருத்தும் பணியில் இந்தியப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சால் கொங்கிரீட் பொருத்து வீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் கொங்கிரீட் வீடுகளே அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கொங்கிரீட் பொருத்து வீடுகள் அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.

கொங்கிரீட் பொருத்து வீடுகளுக்கான கொங்கிரீட் சுவர்கள் சீனாவிலிருந்து கொள்கலனில் கொண்டுவரப்படவுள்ளது. இப்போது இவை ஏற்றப்பட்டு வருவதாகவும் விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சீனப் பணியாளர்களைப் பயன்படுத்தியே கட்டுமானத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அதனை விரும்பியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனப் பணியாளர்கள் பணியாற்றுவதை இந்திய அரசு விரும்பவில்லை.

இதனையடுத்து, இந்தியப் பணியாளர்களைப் பயன்படுத்தியே கொங்கிரீட் பொருத்து வீடுகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/community/01/239319?ref=home-feed

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

கொங்கிரீட் பொருத்து வீடுகளுக்கான கொங்கிரீட் சுவர்கள் சீனாவிலிருந்து கொள்கலனில் கொண்டுவரப்படவுள்ளது. இப்போது இவை ஏற்றப்பட்டு வருவதாகவும் விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கொங்கிரீட் சுவர்கள், சில நாட்கள் வைத்தியர்களின் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே பாவனைக்கு அனுமதிக்கப்படும் என்ற செய்தி, இதுவரை எந்த இணையத்திலோ, ஊடகங்களிலோ வெளிவராதது கவலையளிக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனப் பணியாளர்கள் பணியாற்றுவதை இந்திய அரசு விரும்பவில்லை.

இது என்ன கோதாரி......சிறிலங்கா ஒரு இறமையுள்ள நாடு ...ஐ.நா சபைக்கே சவால் விடும் நாடு ....இந்தியா அரசின் விருப்புக்கு ஏன் அடி பணிய வேண்டும்... கோத்தா வா கொக்கா ....கிளர்த்தெழு கொத்தா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.