Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

A7-BC6-E83-3174-4-DEA-87-C2-D2589-E141-E

Azali (Netflix)
மேற்கு ஆபிரிக்க நாடான Ghana விலிருந்து முதன்முதலாக 92வது Academy Awardsற்கு அனுப்பபட்ட திரைப்படம். 

14 வயது சிறுமியான Aminaவினது கதை. 

காட்டுப்பாதை ஒன்றில் நகரத்தை நோக்கி ஒரு வான் விரைவாக புழுதியை கிளப்பியபடி செல்கிறது, நீண்ட தூரபயணம், இரவின் அமைதியை குழப்பியபடி சென்று கொண்டிருக்கும் போது, பொலீஸாரால் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுகிறது. வானின் பின்பகுதியை மறைத்திருந்த திரையை அகற்றிய போது, அங்கு மறைத்து வைக்கப்பட்ட சிறுமி, சிறுவர்களை கண்டுபிடிக்கிறார்கள். அந்த சிறுவர்களை, இவர்களை போன்றவர்களை வைத்து பாராமரிக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார்கள். அந்த சிறுவர்களை, ஒரு பெண் அதிகாரி பெயர் ஊர் விபரங்களை ஒவ்வொருவராக விசாரித்து வருகையில், ஒரு சிறுமியிடம் வந்து “ உனது பெயர் என்ன?” என இரு முறை கேட்கிறார், அவளும் ஒரு தரம் அதிகாரியை பார்த்துவிட்டு “ Amina “ என்கிறாள். அடுத்த கேள்வி “ உனது ஊர் எது “ என கேட்கும் போது, Aminaவின்  கண்களூடாக அவளது வாழ்க்கையின் கதை தொடங்குகிறது.

தந்தையின் முகம் தெரியாத  14 வயதான  பட்டாம்பூச்சியான அவள் Amina ,அவளது தாய் Rukayah, பாட்டி மற்றும் சோம்பேறியான மாமன் Akatokஉடன் வாழ்ந்து  வருகிறாள். அந்த குக்கிராமத்தில் சாதாரன, சுவாரசயமில்லாத வாழ்க்கையை தனது மகள் வாழ்ந்து வருகிறாள் என தாய் Rukayah மனம் வாடுகையில், Aminaவினது பாட்டி, குடும்பத்தின் வறுமை காரணமாக அந்த ஊரின் வயதான பெரியமனிதனிற்கு Aminaவை திருமணம் செய்து வைக்க முயல்கிறாள். 
தாய் Rukayah அதனை எதிர்க்கிறார், இதே சமயத்தில், அந்த பின் தங்கிய கிராமத்தில் வாழ்ந்து வரும் சிறுவர்களுக்கு நகரத்தில் வேலை வாயப்புகளை வாங்கி தரும் Auntie ஒருவர், Aminaவை தன்னோடு விடும்படியும் அவளிற்கு நல்லதொரு வேலை தருவதாகவும் ஆசை ஊட்டுகிறாள், தனது மகளை வயதானவருக்கு திருமணம் செய்து கொடுப்பதைவிட இது மிகவும் நல்லது என நினைத்து அந்த Auntieயுடன் Aminaவை அனுப்ப சம்மதிக்கிறாள். 

Aminaவை அழைத்துப் போக வண்டியும் வந்துவிட்டது. அவள் ஒவ்வொருவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு அந்த வானை நோக்கி நடக்கிறாள். அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது தனது மரணத்தை நோக்கி நகர்கிறாளே என என் மனம் நடுங்கியது.

Aminaவையும் இன்னொரு சிறுவனையும் அழைத்து கொண்டு வான் இன்னொரு இடத்திற்கு வருகிறது, அங்கே இவர்களைப்போலவே இன்னும் பல சிறுவர்கள் இருப்பதை Amina காண்கிறாள் அத்துடன் அவளது ஊரை சேர்ந்தவனையும் கண்டு மிக மகிழ்ச்சியுடன் அவனை நோக்கி ஓடுகிறாள். அவனோ அவளைப்பார்த்து அதிர்ச்சியும் கவலையும் கொண்டு அவளிடம் “ உன்னை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா” என கேட்கிறான். அத்துடன் அவளை தப்பிபோக வழிசெய்வதாகவும் கூறுகிறான். அவன்தான்  இரகசியமாக பொலீஸிற்கு தகவலை கூறினான் என நான் நினைக்கிறேன். 

Amina இந்த கொடூரத்தில் இருந்து தப்பி ஊர் போய் சேர்ந்தாளா? உதவாக்கரை மாமன்  Akatok திருந்தினானா?  என்பதை படத்தினை பார்த்தால் தெரிந்துவிடும்.

படத்தின் முடிவில் Akatokவின் குரலில், அவர்களது மொழியில் பின்வருமாறு ஒலிக்கிறது “ This child will never be accepted by traditions, so in our hearts we buried a secret that only heaven knows “

இந்தப்படத்தின் தொடக்கத்தில் ஆபிரிக்காவிற்குரிய அழகை, செம்பாட்டு புழுதி படர்ந்த கிராமிய அழகை, அவர்களது நாட்டுப்புற இசையையும் ரசிக்கலாம். 
பின்பு தலைநகரான Accraஅவன் நெரிசல் மிகுந்த, இயந்திரமான வாழ்க்கை, சேரிப்புற வாழ்க்கை, சுயநலமிக்க, ஈவுஇரக்கமற்ற மனிதர்கள் என பலரை காணலாம். இந்த  மனிதர்கள் தம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்காக  எவ்வளவு தூரம் கீழ்த்தரமாக, கொடூரமாக மாறிவிடுவார்கள் என்பதை பார்க்கும் போது இவர்களுக்காக  இன்னமும் எத்தனை பட்டாம்பூச்சியாக வாழ வேண்டிய சிறுவர்களை  இழக்கவேண்டி வருமோ என நினைத்து மனம் வலிப்பது உண்மை. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.