Jump to content

’ரஷ்யா கசியவிட்டதை மறுத்தால் அசாஞ்சேக்கு பொதுமன்னிப்பென்ற ட்ரம்ப்’


ampanai

Recommended Posts

image_4af285dfed.jpg

ஐக்கிய அமெரிக்க 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது போட்டியாளாரான ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனின் பிரசார முகாமின் மின்னஞ்சல்களை ரஷ்யா கசிய விடவில்லை என விக்கிலீக்ஸின் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்சே மறுத்தால் அவருக்கு பொதுமன்னிப்பளிப்பதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார் என பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள நீதிமன்றமொன்றில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரான டனா றொஹ்ரபச்சர் மூலம் இவ்விடயத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியதாக ஜூலியன் அசாஞ்சேயின் வழக்கறிஞர் ஜெனிஃபர் றொபின்ஸன் ஆவணமொன்றில் தெரிவித்ததாக பிரித்தானியாவின் உள்ளூர் ஊடகச் சங்க செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யச் சர்சையில் உதவிக்காக பொதுமன்னிப்பொன்றை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கவிருந்ததை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

அந்தவகையில், டனா றொஹ்ரபச்சரை முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரொருவராகத் தவிர ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு தெரியாதெனவும், குறித்த விடயம் அல்லது வேறெந்த விடயத்தைப் பற்றியும் அவருடன் ஜனாதிபதி ட்ரம்ப் ஒருபோதும் பேசவில்லை எனவும் மேற்படி விடயம் முழுதான உருவகமென்றும், முழுமையான பொய்யொன்று என ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஊடகச் செயலாளர் ஸ்டீபன் கிறிஷம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சேக்கு ஒப்பந்தமொன்றை வழங்கியதை டனா றொஹ்ரபச்சர் மறுத்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் தேசிய செயற்குழுவின் மின்னஞ்சல்களை யார் வழங்கினார்கள் என்ற தகவல், ஆதாரத்தை வழங்கினால் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அழைத்து பொதுமன்னிப்பளிக்குமாறு கோருவேன் என ஜூலியன் அசாஞ்சேயிடம் கூறியதாக டனா றொஹ்ரபச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ரஷய-கசயவடடத-மறததல-அசஞசகக-பதமனனபபனற-டரமப/50-245853

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.