Sign in to follow this  
ampanai

பாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு

Recommended Posts

எழுவைதீவில் இருந்து வந்த சுமார் 30 பேர் அடங்கிய குழுவொன்று நேற்று வலம்புரி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டது.

20613.jpg

கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலம்புரி - சங்குநாதத்தில் வெளிவந்த ஆலடி மாநாட்டில்; எழுவைதீவு முருகமூர்த்தி வித்தி யாலய மாணவர்களை எழுவைதீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்கு மாற்றுகின்ற முயற்சியில் தீவகத்தில் உள்ள கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டிருந்தமைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகக் கூறி, வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்த மேற்படி கத்தோலிக்க மதம் சார்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழு வலம்புரி அலு வலகத்தையும் வலம்புரி அலு வலக உத்தியோகத்தர்களையும் சாடும் நோக்குடன் உள் நுழைந்ததுடன்,

கத்தோலிக்க மதத்திற்கு எதிராக வலம்புரி நடந்து கொள்வதாகவும் கத்திக் குளறிகலகம் செய்தனர். கூடவே ஆலடிமாநாட்டுச் செய் தியை எழுதியவரை தமக்கு இனங் காட்டவேண்டும் என்றும் அவரைத் தாக்கப்போவதாகவும் அட்டகாசம் செய்தனர்.

மன்னார் திருக்கேதீச்சர நுழை வாயில் வளைவை தள்ளி வீழ்த்தி நந்திக்கொடியை காலால் உழக்கிய அதேபாணியில், பிரஸ்தாப குழு வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந் தது.

பிரஸ்தாப குழுவின் அடாவடித் தனம் எல்லை மீறிய நிலையில், பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ்ப் பாணப் பொலிஸ் உத்தியோகத்தர் கள் வலம்புரி அலுவலகத்துக்கு வந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட குழுவினரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதேவேளை சம்பவத்தை அறிந்த வடக்கு மாகாண ஆளுநரின் ஊட கச் செயலாளரும் வலம்புரிக்கு வருகை தந்திருந்தார்.

இதேவேளை பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டிருக்கையில்,

குறித்த குழுவில் வந்திருந்த பெண்கள்; ஒரு பாதிரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரே தங் களை இங்கு அனுப்பி வைத்ததாக வும் ஆலடிமாநாட்டில் வந்த செய்தி மற்றும் ஊர்காவற்றுறையில் சைவப் பெயர்களில் உள்ள வீதிகளுக்கு கத்தோலிக்கப் பெயர்களைச் சூட்டு கின்ற செய்தியை வலம்புரி பிரசுரித் தமையாலும் தாங்கள் இங்கு அனுப் பப்பட்ட தாகவும் மற்றும்படி ஆலடி மாநாட் டில் வந்த  தகவல்கள் என்ன என்பதே தங்களுக்குத் தெரியா தென்றும் வலம்புரி உத்தியோகத்தர்களிடம் தெரிவித்தனர்.

எழுவைதீவிலிருந்து ஊர்காவற் றுறைக்கு வந்த பிரஸ்தாப குழு அங்கிருந்து ஹிபு-1810 என்ற  இலக்க தனியார் பேருந்தில் வலம்புரி அலுவலகத்துக்கு வந்திருந்தது.

கத்தோலிக்கத்துக்கு எதிராக எழுதினால், வலம்புரியை தாக்கு வோம் என்றும் இவர்கள் எச்சரித் திருந்தனர். இவை தொடர்பில் எடுக் கப்படவேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து வலம்புரி, சட்ட ஆலோசகர்களுடன் ஆராய்ந்து வருகிறது.

http://valampurii.lk/valampurii/content.php?id=20613&ctype=news

அடாவடிக்குழுவை நடத்தும்

தீவகத்திலுள்ள பாதிரியார் ஒருவர் சைவசமயத்துக்கு எதிராக செயற்பட்டு சமய நல்லிணக்கத் துக்கு குந்தகம் செய்வது பற்றியும் அடாவடிக்குழுக்களை இயக்கி ஊட கத்துக்கு அச்சுறுத்தல் விடுகின்ற  அவரின் பயங்கரவாதப் போக்கை விளக்கி வத்திக்கானில் உள்ள திருச்சபைக்கு தெரியப்படுத்த வலம்புரி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ் மறை மாவட்ட ஆயரின் கவனத்துக்கும் இவ்விடயம் கொண்டுவரப்படவுள்ளது.   

http://valampurii.lk/valampurii/content.php?id=20614&ctype=news

புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன

வலம்புரி அலுவலகத்திற்குள் நுழைந்து பெரும் அட்டகாசம் செய்த குழுவில் அறியாத்தனமாக சிலர் இடம்பெற்றிருந்த காரணத் தினாலும் தங்கள் புகைப்படங்களை பிரசுரிக்க வேண்டாம் என அவர்களில் சிலர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் அவர்களின் சுய கௌரவத்தை பாதுகாக்கும் பொருட்டு புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.  

http://valampurii.lk/valampurii/content.php?id=20615&ctype=news

Share this post

Link to post
Share on other sites

மிக விரைவில் மதக் கலவரம் ஒன்றை தமிழர்கள் எதிர்பார்க்கலாம். 

தமிழர்களின் தோல்விக்கு சிங்களத்தையும் இந்தியாவையும் குற்றம் சாட்டுவதை இன்றோடு நிறுத்தலாம். 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Kapithan said:

மிக விரைவில் மதக் கலவரம் ஒன்றை தமிழர்கள் எதிர்பார்க்கலாம். 

தமிழர்களின் தோல்விக்கு சிங்களத்தையும் இந்தியாவையும் குற்றம் சாட்டுவதை இன்றோடு நிறுத்தலாம். 

இப்ப தெரியுதா நான் ஏன் அந்த திரியில் அப்படி எழுதினேன் என்று ...வலம்புரி பத்திரிகை தாக்கப்பட்டது இரண்டு நாளைக்கு முன்பு ...இப்ப தான் இங்கே செய்தியாய் போடுகிறார்கள் 

சச்சி நல்லவர் இல்லை...அவரை பின்னாலிருந்து றோதான் இயக்குது அநேகமாய் எல்லாருக்கும் தெரிந்த விடயம் ...தெரியாதா விடயம் ஒரு,சில பாதிரிமாரை பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது தான் .

சச்சி செய்கிறது பிழை என்று தெரிகின்ற உங்கள் கண்களுக்கு பாதிரிமார் செய்வது மட்டும் தெரிவதில்லை 

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ampanai said:

இதனைத் தொடர்ந்து யாழ்ப் பாணப் பொலிஸ் உத்தியோகத்தர் கள் வலம்புரி அலுவலகத்துக்கு வந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட குழுவினரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஏன் சம்பந்தப்பட்டவர்களை  கைது செய்து, படங்களை பிரசுரிக்கவில்லை? அவர்கள் வாள்வெட்டுக்குழு என்கிற அடையாளம் சமூகத்துக்கு தெரிந்து விடும்  என்பதாலா? மாதா, பிள்ளையாரை நம்பி பலனில்லை  என்றெண்ணி, தாங்களே களத்தில் இறங்கியவர்களுக்கு அடையாளம் காட்டத் தயக்கம் ஏன்?  இவனையெல்லாம் படைத்து, நானே அசிங்கப்படுகிறேனே என்று படைத்தவனே கலங்குவான்.  

இவ்வளவும் தெரிவித்தவர்கள் குறிப்பிட்ட பாதிரியாரின் பெயரை மட்டும் தெரிவிக்காதது ஏனோ?

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, ரதி said:

இப்ப தெரியுதா நான் ஏன் அந்த திரியில் அப்படி எழுதினேன் என்று ...வலம்புரி பத்திரிகை தாக்கப்பட்டது இரண்டு நாளைக்கு முன்பு ...இப்ப தான் இங்கே செய்தியாய் போடுகிறார்கள் 

சச்சி நல்லவர் இல்லை...அவரை பின்னாலிருந்து றோதான் இயக்குது அநேகமாய் எல்லாருக்கும் தெரிந்த விடயம் ...தெரியாதா விடயம் ஒரு,சில பாதிரிமாரை பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது தான் .

சச்சி செய்கிறது பிழை என்று தெரிகின்ற உங்கள் கண்களுக்கு பாதிரிமார் செய்வது மட்டும் தெரிவதில்லை 

உண்மையில் இப்படியொரு சம்பவம் வலம்புரி பத்திரிகையில் கூறியபடி (Discribed) நடைபெற்றிருந்தால் கண்டிக்கப்படவேண்டும். இதில் யாருக்கும் இரண்டாம் கருத்திருக்கும் என நான் எண்ணவில்லை.

(அதுசரி நான் கண்டிக்கவில்லை என எப்படிக்கூறலாம். முதலில் கருத்தெழுதியதே நான்தான். அதிலும் பிறரைக் குற்றம் சாட்ட வேண்டாம் என தெளிவாகவே கூரியுள்ளேன். சமயத்தை வைத்து பிழைப்பு நடாத்தும் கேவலமான செயலை என்பிள்ளைகளுக்கு நிச்சயம் கற்பிக்கப் போவதில்லை ஏனென்றால் நா Kapithan ஆக்கும் 😜)

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, satan said:

ஏன் சம்பந்தப்பட்டவர்களை  கைது செய்து, படங்களை பிரசுரிக்கவில்லை? அவர்கள் வாள்வெட்டுக்குழு என்கிற அடையாளம் சமூகத்துக்கு தெரிந்து விடும்  என்பதாலா? மாதா, பிள்ளையாரை நம்பி பலனில்லை  என்றெண்ணி, தாங்களே களத்தில் இறங்கியவர்களுக்கு அடையாளம் காட்டத் தயக்கம் ஏன்?  இவனையெல்லாம் படைத்து, நானே அசிங்கப்படுகிறேனே என்று படைத்தவனே கலங்குவான்.  

இவ்வளவும் தெரிவித்தவர்கள் குறிப்பிட்ட பாதிரியாரின் பெயரை மட்டும் தெரிவிக்காதது ஏனோ?

மத சகிப்புத்தன்மைக்கு தான்  ஏற்படுத்திய பாதிப்பு போதும் என வலம்புரி எண்ணுகிறது போல 😀

Share this post

Link to post
Share on other sites

வலம்புரியை அச்சுறுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் யாழ்.ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி வலம்புரிக்கு நேரில் வந்து கண்டனம் தெரிவிப்பு

வலம்புரிப் பத்திரிகையை மதச் சார்பு ரீதியாக அச்சுறுத்துவதை நான் மிகவும் வன்மையாகக் கண் டிக்கிறேன் என யாழ்.ஸ்ரீ நாகவி காரை விகாராதிபதி மீகஹஜந் துரே சிறிவிமல தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கை யில், மூவின மக்களும் ஒற்று மையாக வாழும் இந்நாட்டில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்த முனை வது தவிர்க்கப்பட வேண்டும்.
 
ஊடகங்கள் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்தும் பொறுப்பினை கொண்டுள்ளன.
அவ்வாறு ஊடகங்களில் வெளி வந்த செய்தி பிழையாகவோ? அல்லது ஓர் மதத்தை இழிவுபடுத் துவதாகவோ அமைந்தால் அதனை உரியமுறையில் அணுகி நியாயம் பெற வேண்டும்.
 
அவ்வாறு இல்லாமல் குறித்த ஊடக நிறுவனத்தை தாக்கும் முய ற்சியிலோ அல்லது சட்டத்துக்கு முரணான வகையிலோ யாரும் செய ற்பட முடியாது. அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=20616&ctype=news

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, ampanai said:

ஆடு நனைந்த கதைதான்....

Share this post

Link to post
Share on other sites

வலம்புரிக்குள் நுழைந்து அட்டகாசம் கண்டனத்துக்குரிய செயல்

பாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு வலம்புரி  அலுவலகத்தில் உள்நுழைந்து அட்டகாசம் செய்தமையை மிக வன்மையாகக் கண்டிப்பதுடன்,   இயேசுபிரான் உயிர்த்தெழுவா ரானால்  இச் செயலைக்  கண்டு  இரத்தக்  கண்ணீர்  வடித்தே ஆவார் என யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவைத் தலைவர் ஈசான சக்திகிரீவன் தெரிவித்தார்.

மதச் சுதந்திரம் என்பது    இன்னோர் மதத்தைச் சீண்டுவது   என்று பொருள்படாது. கிறிஸ்தவர்கள் காலம் காலமாக இந்துக்களுக் கும் பௌத்தர்களுக்கும் அநீதி   விளைவித்து    வருவதை   வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  இந்துக்களின் பொறுமையை பலவீ னம் என்று எண்ணிவிடக் கூடாது. 

வலம்புரி பத்திரிகை எம்மை யும்  பலமுறை ஆலடி மாநாட்டில் விமர்சித்துள்ளது.  அந்நேரத்தில் அதிலுள்ள  உண்மைகளை கண்டறியச் செயற்பட்டோமே தவிர   அட்டகாசம் செய்ய சிந்திக்கவில்லை,  ஒருபோதும் சிந்திக்கவும் மாட் டோம்.

விமர்சனங்களை ஏற்க  மறுப் பவர்கள்  தானுண்டு  தமது  வீடுண்டு என்று வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இயேசுபிரான் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் கொடு என்றார். 

இதை விளங்காத பாதிரியார் முப்பது பேரை  அனுப்பி அறுபது கரங்களினாலும் அடிக்குமாறு சொல்லியிருக்கிறாரோ? இவர்கள் பொறுமையான மனோபாவத் தைப் பெற்று மற்ற மதத்தவர்க ளுக்கு இடையூறு  இல்லாது வாழ் வதற்கு எல்லாம் வல்ல ஸ்ரீசிவ காமசுந்தரி சமேத ஸ்ரீமத் நட ராஜப் பெருமானை திரிகரண சுத்தியோடு பிரார்த்திக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20617&ctype=news

http://valampurii.lk/valampurii/content.php?id=20617&ctype=news

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

பிரச்சனை அனலைதீவு கிறீஸ்தவர்களுக்கும் வலம்புரி பத்திரிகைக்கும். ஆனால் கண்டனம் தெரிவிப்பதோ பவுத்த மதகுருவும் சைவ சமயக் குருக்களும்.

என்னதான் நடக்கிறது இங்கே ?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டால் பாவமடா 😪 பொறுங்கள் எல்லாவீதிகளும் வத்திக்கானை நோக்கியே

Share this post

Link to post
Share on other sites
33 minutes ago, Kapithan said:

பிரச்சனை அனலைதீவு கிறீஸ்தவர்களுக்கும் வலம்புரி பத்திரிகைக்கும். ஆனால் கண்டனம் தெரிவிப்பதோ பவுத்த மதகுருவும் சைவ சமயக் குருக்களும்.

என்னதான் நடக்கிறது இங்கே ?

இதில் மதம் புகுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இது ஒரு பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய பிரச்சனை. 

அண்ணனும் தம்பியும் பேசித்தீர்க்க வேண்டிய சின்ன சிக்கலுக்குள் பக்கத்துவீட்டு மாமா புகுந்துவிட்டால் .... 

Share this post

Link to post
Share on other sites

அப்போ அந்த இந்து மாணவரகள் ??சைவவீதிகள் ??ஏன்டா சாமி என்னை படைத்தாய் அவரகளை என்ன செய்யலாம் ?? சொன்னால் திசை திருப்பும் ஆன்மாக்கள் எனக்கும் ......

Share this post

Link to post
Share on other sites
39 minutes ago, ampanai said:

இதில் மதம் புகுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இது ஒரு பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய பிரச்சனை. 

அண்ணனும் தம்பியும் பேசித்தீர்க்க வேண்டிய சின்ன சிக்கலுக்குள் பக்கத்துவீட்டு மாமா புகுந்துவிட்டால் .... 

சமூக அக்கறை உள்ளவர்கள் பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதற்கே முனைவார்கள்.

ஆனால் இங்கே பிரச்சனையை பெரிதாக்கும் போக்கே தென்படுகிறது. 

14 minutes ago, மார்த்தாண்டன் said:

அப்போ அந்த இந்து மாணவரகள் ??சைவவீதிகள் ??ஏன்டா சாமி என்னை படைத்தாய் அவரகளை என்ன செய்யலாம் ?? சொன்னால் திசை திருப்பும் ஆன்மாக்கள் எனக்கும் ......

ஐயா உங்களுக்குள் பிரசிசனை இருந்தால் பேசித்தீருங்கள். அதுதான் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்தவர்கள் கடைப்பிடிக்கும் முறை. 

புரிந்தால் சரி.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

மூவின மக்களும் ஒற்று மையாக வாழும் இந்நாட்டில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்த முனை வது தவிர்க்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள், ஆலயங்களில் அப்பாவிமக்கள் கொல்லப்பட்டதும் இதே ஒற்றுமையான நாட்டில்தான். வடக்கு, கிழக்கில் வாழும் பிக்குகளுக்கு பாதுகாப்பில்லை என முழுப்பொய் உரைத்த பிக்குகளும் இதே ஒற்றுமையிற்தான். அப்பாவி மக்கள் வழிபாட்டில் இருந்தபோது கொல்லப்பபட்ட போது, ஒரு பாதிரியாரை பிக்கு கன்னத்தில் அறைந்தபோது கண்டிக்காத ஸ்ரீ விமல தேரர், நேரில் சென்று வலம்புரிக்கு அனுதாபம் தெரிவிக்கிறார் என்றால்  அம்பு எங்கிருக்கிறது என்பது புரிகிறது.  அது சரி.... சம்பந்தப்பட்ட பாதிரியாருக்கு பெயரே பாதிரியாரா? அல்லது ஒரு பெயரை, அப்பாவியை தேடுகின்றனரா? இல்லை.... அண்மையில் வழக்கு சோடித்த ஒரு காவல் அதிகாரி நட்ட  ஈடு வழங்கியதால் கேக்கிறேன். 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, மார்த்தாண்டன் said:

அப்போ அந்த இந்து மாணவரகள் ??சைவவீதிகள் ??ஏன்டா சாமி என்னை படைத்தாய் அவரகளை என்ன செய்யலாம் ?? சொன்னால் திசை திருப்பும் ஆன்மாக்கள் எனக்கும் ......

இந்து மதமும் சமஸ்கிரதமும் எங்கிருந்து வந்ததோ அங்கே அனுப்பிவிடலாமே?  கைலாயமே சிவனொளிபாத மலையில் தான் என்று சொன்னால் முஸ்லிம்களும் பௌத்தர்களும் கோபித்து கொள்வார்கள்.

Edited by கற்பகதரு

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, கற்பகதரு said:

இந்து மதமும் சமஸ்கிரதமும் எங்கிருந்து வந்ததோ அங்கே அனுப்பிவிடலாமே?  கைலாயமே சிவனொளிபாத மலையில் தான் என்று சொன்னால் முஸ்லிம்களும் பௌத்தர்களும் கோபித்து கொள்வார்கள்.

நிறைய கேட்க மனது துடிக்கிறது அப்போ இதுக்கு காரணமான பிராணிகளை எங்கே தள்ளுவது சம்பந்தபட்டவன் கூட என்ன பேச இதில் பிக்கு அல்ல 

Share this post

Link to post
Share on other sites

சும்மா எடுத்ததுக்கெல்லாம் படம் போட்டு காட்டும் வலம்புரி, நாட்டை பாடாய்படுத்தும் விடயத்தை வெளிப்படுத்தும் ஒரு படம்கூட போட மறுப்பதன் காரணம் என்ன? பிரபல்யம் தேவைப்படுகிறதா?? கோத்தாவின் பாராட்டு வேண்டிக்கிடக்குதா??? குட்டு வெளிப்பட்டு விடுமே என்று பயப்படுகிறதா????

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, satan said:

இதில கோத்தா எங்கே வந்தார சாமி அவரா முப்பது பேரை அனுப்பினார் ??? ஏனுங்க மொட்டதலைக்கு முழங்காலுக்கு முடிச்சு ?? 

நிறைபேர கிழம்பியாச்சு வட்டுக்கோட்டை வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு கதை சொல்ல

Share this post

Link to post
Share on other sites

தமிழருக்குள் திட்டமிட்டு நடக்கும் பல அடாவடிகளுக்கு, சமூக விரோத செயல்களுக்கு  பின்னால் யார் இருப்பது என்று தேடினால்;  கடந்த காலங்களில் கிடைத்த விடையின் அனுபவம். அவரும் அவரின் முகவர்களும்.

Share this post

Link to post
Share on other sites
On 2/21/2020 at 9:01 PM, ampanai said:

குறித்த குழுவில் வந்திருந்த பெண்கள்; ஒரு பாதிரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரே தங் களை இங்கு அனுப்பி வைத்ததாக வும்

கிறீஸ்தவ பாதிரியார்கள் போர்வையில் நடமாடும் தமிழின விரோத பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு திருகேதீஸ்வரத்திலும் இந்தவருடம் எழுவைதீவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Share this post

Link to post
Share on other sites

ஓ! இப்ப அடாவடியில் பெண்களையும் இறக்கி விட்டார்களோ? சந்தோசம், இருக்கட்டும். பெண்கள் குறிப்பிட்ட பாதிரியாரின் பெயர் என்ன? அவர் ஏன் கைது செய்யப்படவில்லை? உங்களுக்கு ஒண்டு தெரியுமோ? வழக்கு பதிந்து போட்டுத்தான் காரணத்தையும், குற்றவாளிகளையும் தீர்மானிப்பார்கள்,  தேடுவார்கள் நம்ம காவற்காரர். அல்லது இரண்டு பக்கத்தையும் அடிபடவிட்டு தங்கள் வருவாயை பெருக்குவதோடு பெரிய கலவரத்தையும் உருவாக்கிவிடுவார்கள். இதற்கு தரகர் யார்? என்று பார்த்தால் தமிழ் மக்கள் சொந்த மொழியில்தங்கள் முறைப்பாடுகளை  செய்ய உதவியாக நியமிக்கபட்ட தமிழ், இஸ்லாமிய காவற்காரர். நியாயமானவர்களும் உண்டு. அவர்களை, விசாரணை செய்யவோ, மொழி பெயர்க்கவோ அனுமதிப்பதில்லை. அதனால் அவர்கள் மௌனமாக இருப்பார்கள். அல்லது இவர்களைப்போல் மாறிவிடுகிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites
On 2/21/2020 at 9:01 PM, ampanai said:

பாதிரியார் ஒருவர்

அண்மைக் காலமாக பாதிரியார்கள் சிலர் மக்கள் மத்தியில் பாதிரியார்களுக்குள்ள மதிப்பை குலைக்கும் வகையில் வன்முறைகளை தூண்டுவதில், மக்களை வன்முறையாளர்களாக மாற்றுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கயவர்கள் சிலர் பாதிரியார்களாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டதும் இது போன்ற சமூக விரோதிகளை ஆதரிப்பதும் நல்ல விளைவுகளை தரப்போவதில்லை. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, satan said:

ஓ! இப்ப அடாவடியில் பெண்களையும் இறக்கி விட்டார்களோ? சந்தோசம், இருக்கட்டும். பெண்கள் குறிப்பிட்ட பாதிரியாரின் பெயர் என்ன? அவர் ஏன் கைது செய்யப்படவில்லை? உங்களுக்கு ஒண்டு தெரியுமோ? வழக்கு பதிந்து போட்டுத்தான் காரணத்தையும், குற்றவாளிகளையும் தீர்மானிப்பார்கள்,  தேடுவார்கள் நம்ம காவற்காரர். அல்லது இரண்டு பக்கத்தையும் அடிபடவிட்டு தங்கள் வருவாயை பெருக்குவதோடு பெரிய கலவரத்தையும் உருவாக்கிவிடுவார்கள். இதற்கு தரகர் யார்? என்று பார்த்தால் தமிழ் மக்கள் சொந்த மொழியில்தங்கள் முறைப்பாடுகளை  செய்ய உதவியாக நியமிக்கபட்ட தமிழ், இஸ்லாமிய காவற்காரர். நியாயமானவர்களும் உண்டு. அவர்களை, விசாரணை செய்யவோ, மொழி பெயர்க்கவோ அனுமதிப்பதில்லை. அதனால் அவர்கள் மௌனமாக இருப்பார்கள். அல்லது இவர்களைப்போல் மாறிவிடுகிறார்கள்.

பாதிரியாரா/ வீணை மற்றும் மொட்டு கட்சியால் உருவாக்கப்பட்டுள்ள கற்பனை பாதிரியாரா.....???

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, போல் said:

அண்மைக் காலமாக பாதிரியார்கள் சிலர் மக்கள் மத்தியில் பாதிரியார்களுக்குள்ள மதிப்பை குலைக்கும் வகையில் வன்முறைகளை தூண்டுவதில், மக்களை வன்முறையாளர்களாக மாற்றுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கயவர்கள் சிலர் பாதிரியார்களாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டதும் இது போன்ற சமூக விரோதிகளை ஆதரிப்பதும் நல்ல விளைவுகளை தரப்போவதில்லை. 

மானிட சமுகம் இன்னும் உன்னதம்  பெறவில்லை ......இதை  நான் சொல்லவில்லை பல உன்னத மனிதர்கள் சொல்லிசென்றுவிட்டார்கள்

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this