Sign in to follow this  
ampanai

நாம் இனி பங்­கு­தா­ர­ரில்லை": ஜெனி­வாவில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பேன் - வெளிவி­வ­கார அமைச்சர் தினேஷ்

Recommended Posts

 (ரொபட் அன்டனி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் இனி பங்குதாரர் இல்லை என்பதனை நான் எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது அரசியலமைப்புக்கு விரோதமானது. அதற்கு மக்கள் அங்கீகாரமளிக்கவுமில்லை.

பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைக்கவுமில்லை என்றும் வெ ளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் 26 ஆம் திகதி வெ ளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றவுள்ளார். அத்துடன் இலங்கையானது 30 - 1 என்ற ஜெனிவா பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாகவும் அவர் அறிவிக்கவுள்ளார். இது தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இதனை குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்
எதிர்வரும் 26 ஆம் திகதி நான் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளேன். அதாவது இலங்கையானது 30-1 என்ற பிரேரணையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெ ளியேறுகின்றது என்பதனை நான் ஜெனிவா பேரவையில் அறிவிக்கவுள்ளேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் இனி பங்குதாரர் இல்லை என்பதனை நான் ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளேன்.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது அரசியலமைப்புக்கு விரோதமானது. அப்போது பதவியில் இருந்த ஜனாதிபதி தனக்கு இது குறித்து தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த பிரேரணைக்கு மக்கள் அங்கீகாரமளிக்கவுமில்லை. அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்படவுமில்லை. எனவே இது சட்டவிரோதமானது என்றும் ஜனநாயகத்துக்கு எனவும் நான் ஜெனிவா பேரவையில் அறிவிக்கவிருக்கின்றேன்.

இந்த பிரேரணைக்கு எதிராகவே மக்கள் கடந்த தேர்தலில் ஆணை வழங்கினர். எனவே மக்களின் அங்கீகாரம் 30-1 பிரேரணைக்கு கிடைக்கவில்லை. எனவே அதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்தோம். அந்தவகையில் அரசாங்கத்தின் தீர்மானத்தை நான் 26 ஆம் திகதி அறிவிப்பேன்
என்ன பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் உள்ளக ரீதியில் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்றார்.

https://www.virakesari.lk/article/76180

Share this post


Link to post
Share on other sites

SL briefs UNHRC President on decision to withdraw from Resolution

Foreign Secretary Ravinatha Aryasinha has briefed UN Human Rights Council (HRC) President Ambassador Elisabeth Tichy-Fisslberger on the decision of the Sri Lankan Government to withdraw its co-sponsorship of UN Resolution on the country, the Foreign Relations Ministry said.

The government decided to withdraw from the Resolution 40/1 of March 2019 on ‘Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka’, which also incorporates and builds on preceding Resolutions 30/1 of October 2015 and 34/1 of March 2017. The Foreign Secretary, who is in Geneva ahead of the 43rd Session of the HRC scheduled to commence next Monday, informed the President that the Cabinet had approved this decision following a cabinet paper submitted by Foreign Relations Minister Dinesh Gunawardena. The decision had also been presented to the Parliament on Thursday.

He also informed her that Minister Gunawardena will lead the Sri Lanka delegation to the 43rd Session of the Human Rights Council, and will formally inform the Council Members on the Government’s decision when he addresses the High Level Segment of the Council, on Wednesday. Minister Gunawardena who will also respond to the Oral Update on Sri Lanka by the High Commissioner on 27 February, is scheduled to meet the High Commissioner for Human Rights Michelle Bachelet. She was also informed by the Foreign Secretary that on the eve of the decision being taken by the Cabinet, the Ambassadors of the ‘core group’ that had moved the resolution, who were resident in Colombo ( the UK, Germany and Canada), had also been briefed by Minister Gunawardena. Ambassador Tichy-Fisslberger has appreciated Sri Lanka’s initiative to keep her briefed on the matter.

 

http://www.dailymirror.lk/top_story/SL-briefs-UNHRC-President-on-decision-to-withdraw-from-Resolution/155-183611

Share this post


Link to post
Share on other sites

ஈழத் தமிழரும் இனிமேல் போர்க்குற்றவாளிகள் கைகளில் சிக்கியுள்ள சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் ஆட்சியில் பங்குதாரராக இல்லாமல் தனியாக ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • Cocoville ஐச் சேர்ந்த திரு. முடுலிங்கவின் கதைகள் சில படித்திருக்கின்றேன். ஒரு சின்னக் கதையைச் சுத்தி பல விடயங்களைப் பின்னுவார். பல நாடுகளில் வேலை நிமித்தம் இருந்த அனுபவம் அவருக்கு கைகொடுக்கின்றது.  ஷோபாசக்தி முத்துலிங்கத்தைக் கிண்டலடித்து எழுதிய கதை!  
  • பெஷாவரில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது | கோப்புப் படம்: ஏபி   பாகிஸ்தானைச் சேர்ந்த தப்லிக் கி ஜமாத் உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு ஜமாத் உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ராய்விந்த் நகரத்தையும் தனிமைப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டு, நகரத்துக்குள்ளேயும், நகரத்திலிருந்து வெளியேறும் பொதுமக்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தப்லிக் ஜமாத் போதகர்கள் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.     அதே போல, ஜமாத்தை சேர்ந்த ஐந்து நைஜீரிய பெண்கள் உட்பட 50 உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு லாகூருக்கு 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கசூரில் இருக்கும் தனிமை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிந்த் மாகாணத்தில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்த 38 பேருக்கு தொற்று பரவியிருப்பதாக செய்தி வந்துள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியதால், சிந்த் மற்றும் பஞ்சாப் காவல்துறை ராய்விந்த் மர்காஸில் (ஜமாதின் பாகிஸ்தான் பிரிவு தலைமையிடம்) இன்னும் சிலரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மார்ச் மாதம், கூட்டம் கூட்டுவது கிருமி தொற்றை பரப்பலாம் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி தப்லிக் ஜமாத் தங்களது ஆண்டு கூட்டத்தை கூட்டியதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கூட்டம் 5 நாட்கள் நடந்தது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இதை ரத்து செய்யக்கோரி முன்னரே அறிவுறுத்தியுள்ளனர். "அரசு அச்சப்பட்டது தற்போது நிஜமாகியிருக்கிறது. சில தப்லிக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தான் அதன் பரவுலுக்குக் காரணமாகியுள்ளனர்" என லாஹூர் நகரின் துணை காவல்துறை ஆணையர் தனிஷ் அஃப்ஸல் தெரிவித்துள்ளார். மேலும் ராய்விந்த் தப்லிக் ஜமாத் மார்கஸ் கட்டிடத்தில் தற்போது 600 போதகர்கள் தஞ்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். "சுகாதார குழு இதுவரை அங்கிருந்த 110 பேரை பரிசோதித்துள்ளது. அதில் 41 போதகர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. ராய்விந்த் பகுதிக்குள்ளும், வெளியே போக நினைப்பவர்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு காவல்துறை, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் காவலில் உள்ளனர்" என்று கூறியுள்ளார். இன்னும் சில ஜமாத் போதகர்கள் மசூதிகளிலும், பல்வேறு மாவட்டத்தில் இருக்கும் அவர்களது மையங்களிலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தனிஷ் கூறியுள்ளார். பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியா, மலேசியா, ப்ரூனே ஆகிய நாடுகளிலும் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களே கரோனா கிருமி தொற்றை பரப்பியவர்களாகப் சந்தேகிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஊரடங்கை மீறி கூட்டத்தை நடத்தியதற்காக ஜமாத் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் மர்காஸில் கடந்த மாதம் ஜமாத் கூட்டத்தில் பங்குபெற்ற 53 பேருக்கு இதுவரை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் காஸாவில் கரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட நோயாளிகள் இருவரும் பாகிஸ்தானில் தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள். பாகிஸ்தானில் வியாழக்கிழமை மதியம் வரை கரோனா தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 2,250 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. 32 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். பஞ்சாபில் அதிகபட்சமாக 845 பேருக்கும், சிந்த் மாகாணத்தில் 709 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-க்யூ கட்சி, தப்லிகி ஜமாத்துக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகர், பர்வேஸ் இலாஹி, ஜமாத்துக்கு எதிரான பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த ஜமாத்தின் போதகர்கள் எங்கும் குழப்பம் ஏற்படுத்தியதில்லை என்றும், அதன் உறுப்பினர்கள் அமைதியின் தூதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மசூதிகளிலிருந்து கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஜமாத் உறுப்பினர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு மற்ற மசூதிகளுக்கோ, தப்லிகி மையங்களுக்கோ மாற்றப்பட்டு, தனிமைபடுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-க்யூ கட்சியின் தலைவரும் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து, ஜமாத் உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். - பிடிஐ https://www.hindutamil.in/news/world/547593-pak-places-raiwind-under-complete-lockdown-after-tablighi-jamaat-members-tested-coronavirus-positive-2.html
  • திரு. முடுலிங்க April 30, 2006  ஷோபாசக்தி சென்ற புதன் கிழமை Le Monde பத்திரிகை இணைப்பாக ஆப்பிரிக்க இலக்கியச்சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த இலக்கியச்சிறப்பிதழின் நடுப்பக்கத்தில் வெளியாகியிருந்த ‘Monsier Mudulinka’ என்ற சிறுகதையை நைஜீரிய எழுத்தாளர் மம்முடு ஸாதி எழுதியிருந்தார் ஹெளஸ மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதையை ஹீரன் வில்பன் பிரஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தக் கதையின் தலைப்புப்பாத்திரமாக வருபவர் ஒரு இலங்கையர் என்பதைக் கதையின் போக்கில் நான் அறிந்து கொண்டதும் மிதமிஞ்சிய ஆர்வத்துடன் கதை யைப் படித்து முடித்தேன். படித்து முடித்தவுடனேயே அந்தக் கதையைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். கதை எளிய பிரஞ்சு மொழியில் இருந்ததால் தமிழில் மொழிபெயர்ப்பதில் பெரிய சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஒரேயரு பிரச்சனை இருக்கிறது. கதையின் ஒரு இடத்தில் Cocoville என்றொரு ஊர் குறிப்பிடப்படுகிறது. (கொக்கோ வில்லி என்று வாசிக்கக் கூடாது. பிரஞ்சு மொழி இலக்கணப்படி இதைக் கொக்கோ வில் என்றுதான் படிக்க வேண்டும்.) கதையின் போக்கில் அந்தஊர் இலங்கையில் உள்ளதாக ஊகிக்க முடிகிறது. ஆனால் நான் ஒருநாள் முழுவதும் இலங்கை வரை படத்தை விரித்து வைத்துத் தேடிப் பார்த்தும் கொக்கோ வில் என்ற ஊரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தமிழ் மொழிபெயர்ப்பிலும் அந்த ஊரை நான் கொக்கோ வில் என்றே எழுத வேண்டியதாகிவிட்டது. எனினும் இந்தச் சிக்கல் கதையின் மொழிபெயர்ப்பை எதுவிதத்திலும் பாதிக்கப் போவதில்லை. நாற்பத்தொரு வயதாகும் மம்முடு ஸாதி இது வரை மூன்று சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். மம்முடு ஸாதி லாகோஸில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் கிராமப்புற வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் ஒரு சிற்றூழி யராகப் பணி செய்து வருகிறார். இனி மம்முடு ஸாதியின் கதை: கொடிக் கம்பம் என் நெற்றியின் முன்னாக நிற்க லாகோஸின் அனல் காற்றில் யு.என். ஓவின் கொடி என் தலை மீது சரிந்தாடியது. இந்தக்காலை நேரத்திலேயே மனுக்களுடனும் கோரிக்கைகளுடனும் நிறைய மக்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அங்கே வந்திருந்தார்கள். தொலைதூர வட மாவட்டமான சொக்கட்டோவில் இருந்து ஒரு விவசாயிகள் குழு வந்திருந்தது. அவர்கள் மதிற்சுவரின் ஓரத்திலே களைப்புடன் குந்தியிருந்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்கள் கொண்டு வந்த மனுக்களைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். அப்போது பிரதான வாசலால் கறுப்பு நிற மெர்ஸிடஸ் பென்ஸ் கார் உள்ளே நுழைந்தது. ஊருக்குள் பிரஸிடண்ட் அன்ஸாரி பின் இருக்கையில் அமர்ந்திருந்து என்னைப் பார்த்துத் தலையசைத்தார். நான் எனது வலது கையைத்தூக்கி பிரஸிடண்டுக்கு ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சலாம் செய்தேன். கடவுளுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சாத்தானுக்கு இரண்டு விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும் என்பார்கள். நான் இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து மூன்று வருடங்கள் முடியப்போகின்றன. இந்த மூன்று வருடங்களில் ஒரு நாளாவது பிரஸிடண்ட் அன்ஸாரி என்னை மம்முடு என்று பெயர் சொல்லி அழைத்தது கிடையாது. அறிவிலி, கழுதை, முட்டாள் என்ற பெயர்களில் தான் என்னை அவர் கூப்பிடுவார். அதியசமாக அவர் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் ‘ஏய் சின்னவனே’ என்று அவர் என்னைக் கூப்பிடுவார். என் வேலைக்கு ‘அலுவலக உதவியாளன்’ என்று தான் பெயர். ஆனால் பரிசாரகன், தேனீர் தயாரிப்பவன், வாகனச்சாரதி என்று எல்லாவித வேலைகளையும் நான் செய்ய வேண்டியிருந்தது. இந்த அலுவலகத்தில் திட்டமிடல் அதிகாரிகளாக இருக்கும் இரண்டு வெள்ளையர்கள் மட்டும் தான் தங்கள் தனிப்பட்ட வேலைகளை என் தலையில் சுமத்துவது கிடையாது. இதன் மறுபுறத்தில் ஒரு நன்மையும் இருந்தது. அந்த இரண்டு வெள்ளையர்களின் அறையைத்தவிர அலுவலகத்தின் மற்றைய அலுவலர்களுடன் எனக்கு விரைவிலேயே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த அலுவலகத்து மேசைகளின் ஒவ்வொரு இழுப்பறைகளும் லஞ்சப் பணத்தால் நிரம்பிக் கிடந்தன விரைவிலேயே என சட்டைப்பையிலும் அய்ம்பது, நூறு நைறாக்கள் சாதாரணமாகப் புழங்கத் தொடங்கின. ஆகாயத்திலிருந்து ஈச்சம்பழம் விழுந்தால் நீயும் வாயைத் திற என்பது எங்கள் பக்கத்துப்பழமொழி. இந்த அலுவலகத்தின் தலைமை அலுவலகம் தலை நகர் அபுஜாவில் இருக்கிறது. எனக்கு உத்தியோக உயர்வு தந்து என்னை அங்கு அனுப்பி வைப்பதாகப் பிரஸிடண்ட் அன்ஸாரி எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவதில் என் தரப்பிலிருந்து ஒரு சிக்கல் இருந்தது. அபுஜா தலைமை அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசிப் பேர் வெள்ளையர்கள் தான். அங்கே நான் வேலை செய்வதற்கு எனது ஆங்கில அறிவு போதாமல் இருக்கிறது. என்று பிரஸிடண்ட் அன்ஸாரி அபிப்பிராயப்பட்டார். இவ்வளவுக்கும் எனது கிராமத்திலேயே அதிக ஆங்கில அறிவு உடையவன் நான் தான். அங்கே எனக்கு ‘இங்கிலிஷ் மம்முடு’ என்று ஒரு பட்டப்பெயரே வழக்கிலிருக்கிறது. ஆனால் இந்த அலுவலகத்திலிருக்கும் வெள்ளையர்கள் இருவரும் பேசும் ஆங்கிலம் தான் எனக்குப் பிடிபடாமலேயே இருக்கிறது. அவர்களில் ஒருவர் ஐரிஸ்காரர், மற்றவர் அவுஸ் ரேலியர். அவர்கள் இருவரும் பேசும் ஆங்கிலம் அவர்கள் நாவிலிருந்து புறப்படும் அதே வினாடியிலேயே மறுபடியும் ஓக்ரா குழம்பில் நனைத்து எடுத்த வ்வூவ்வூ களி மாதி அவர்களின் தொண்டைக்குள் வந்த வேகத்திலேயே வழுக்கிப் போனது. நான் பேசும் ஆங்கிலத்தை புரிந்து கொள்ளாதது போல அந்த வெள்ளையர்கள் இருவரும் எப்போதும் தமது உதடுகளை மடித்துத்தோள்களைக் குலுக்கினர்கள். நான் ஒரு வெறியோடு ஆங்கிலத்தைப் படிக்கத்தொடங்கினேன். காலை வேளைகளில் ஆங்கிலச் செய்தித் தாள்களை ஆர்வத்தோடு படித்தேன். மாலை வேலைகளில் என் பூட்டிய அறைக்குள் உள்ளிருந்து விடாமல் ஆங்கில இலக்கணப் பயிற்சி நூல்களைக் கற்று வரலானேன். சோம்பலால் வளர்வது பேனும் நகமும் தவிர வேறில்லை. மதிலோரத்தில் குந்தியிருந்த சொக்கட்டோ விவசாயிகள் குழு என்னிடம் தங்களது மனுவைத் தருவதற்கு முதலில் மறுத்தார்கள். அவர்கள் அந்த மனுவை உள்ளேயிருக்கும் வெள்ளையர்களிடம் தான் கொடுப்பார்களாம். ‘அந்த வெள்ளையர்கள் வெளியே வரவும் மாட்டார்கள். முன் அனுமதி பெற்றிராமல் நீங்கள் அலுவலகத்துக்கு உள்ளே போகவும் முடியாது’ என்று நான் விவசாயிகளுக்கு விளக்கமாகச் சொன்னேன். அவர்கள் என்னை நம்ப மறுத்தார்கள். அந்த விவசாயிகள் அலுவலகத்தின் முன்னே தொடங்கிக் கிடக்கும் யு.என்.ஓ. கொடியைக் கூட இன்னமும் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் கொடியென்றே நம்பிக் கொண்டிருப்பவர்கள் ‘அந்த வெள்ளையர்களை விட உங்கள் மனு மீது முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர் பிரஸிடண்ட் அன்ஸாரி, நீங்கள் என்னிடம் மனுவைக் கொடுத்தால் அதை நான் அவரின் பார்வைக்கு எடுத்துச் செல்வேன்’ என்று நான் விவசாயிகளிடம் சொன்னேன். நானும் அவர்களைப்போல (f)புலானி இனக் குழுவைச் சேர்ந்தவன் என்று அறிந்த பின்பு தான் அந்த விவசாயிகள் என்னை நம்பினார்கள். அவர்களின் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கோரி அவர்கள் அந்த மனுவைத் தயாரித்திருக்கிறார்களாம். அந்த விவசாயிகள் குழுவின் தலைவர் என் கையில் மனுவைக் கொடுத்து விட்டு என் சட்டைப்பைக்குள் நூறு நைறா தாளன்றைத் திணித்து விட்டார். சென்ற மாதம் வரை எவரும் அலுவலகத்துள் வரலாம் போகலாம் என்று விதிகள் இருந்தன. ஆனால் இப்போது ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் அலுவலகக் கட்டடத்தின் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. மனு கோரிக்கை எதுவானாலும் முற்றத்தில் வைத்தே முடித்து அனுப்பிவிடச் சொல்லி பிரஸிடண்ட் அன்ஸாரிக்கு காவல் துறை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். சென்ற மாதம் இந்த முற்றத்தில் இதே கொடிமரத்தின் கீழே இரண்டு இளைஞர்களைப் பொலிஸார் சுட்டு வீழ்த்தியிருந்தனர். சென்ற மாதத்தின் கடைசி நாளில் இளைஞர்களும் பெண்களுமாய் ஒரு கூட்டம் அதிரடியாய் எங்கள் அலுவலகத்தின் முற்றத்தில் நுழைந்தது. அவர்கள் கைகளில் கொடிகளும் அட்டைகளும் வைத்திருந்தார்கள் அவர்கள் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பினார்கள். அதற்கு முன் தினம் தான் ஒல்லாந்து, பிரஞ்சு எண்ணை நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய ஒன்பது நைஜீரியர்களுக்கு நைஜீரிய அரசு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிக்கம் பத்தில் ஏறி யு.என்.ஓ. கொடியை அறுத்து தீ வைத்துக்கொளுத்தினார்கள். அவர்கள் கற்களால் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்களைச் சிதறடித்தார்கள். நாங்கள் அலுவலகத் தின் கதவுகளை மூடிவிட்டு உள்ளேயே இருந் தோம். பிரஸிடன்ட் அன்ஸாரி தன் கொழுத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பதற்றத்தோடு ஓடித்திரிந்தார். உதவித்தலைவர் வில்லியம்பிரான்ஸிஸ் இபோ இனக்குழுவைச் சேர்ந்தவர். அவர் இபோ வழக்கப்படி எந்த விசயத்தைப் பேசினாலும் இழுத்து இழுத்து ரப்பராய் விரித்து உவமான உவமேயங்கள் முது மொழிகள் பொன்மொழிகள் எல்லாம் பொதித்துத்தான் எந்தவொரு வாக்கியத்தையும் முடிப்பார். இப்போது அவர் அலுவலக ஊழியர்களிடம் ‘பொலிஸார் வந்து ஆர்ப்பாட்டக் காரர்களைச்சுடப் போகிறார்கள்’ என்பதை வளைத்து வளைத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போது வெளியே துப்பாக்கிகள் வெடிக்கும்சத்தங்கள் கேட்டன. வில்லியம் பிரான்ஸிஸ் ‘புதிதாய்ப்பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்ச மாட்டா’ என்று கூறிக் கண்களை மூடிக் கொண்டார். எங்கள் அலுவலகத்துக்குப் புதிய திட்டமிடல் அதிகாரி ஒருவர் வெளிநாட்டில் இருந்து வரப்போவதாகச் செய்திகள் அடிப்பட்டன. ஏற்கனவே அலுவலகத்தில் இருக்கும் இரண்டு வெள்ளையர்களும் அவர்களது மாயஜால ஆங்கிலத்தால் என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வரப் போகும் புதிய திட்டமிடல் அதிகாரி பேசப் போகும் ஆங்கிலமாவது எனக்குப்புரிய வேண்டும் என்று நான் இறைவனை இடைவிடாமல் தொழுதேன். இறைவன் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பச்சிலையை அளித்திருக்கிறான். புதிதாக வந்திருந்த திட்டமிடல் அதிகாரி ஆங்கிலத்தைப் பத்து விதமாகப் பேசினார். அவர் பிரஸிடண்ட் அன்ஸாரியோடு ஒருவித ஆங்கிலம் பேசினார். ஐரிஸ்காரரோடு இன்னொரு விதமான ஆங்கிலத்தில் பேசினார். அவுஸ்ரேலியாக்காரரோடு மற்றொரு விதமான ஆங்கிலம் பேசினார். எங்கள் அலுவலகத்தில் தோடம்பழங்கள் விற்க வரும் கூடைக்காரி மைமூனுடன் வினைச் சொற்களே இல்லாமல் வெறும் பெயர்ச் சொற்களை உபயோகித்தே நூதனமான ஒரு ஆங்கிலத்தில் உரையாடினார். என்னோடு பேசுவதற்கு அவர் விசேடமான ஒரு ஆங்கிலத்தை வைத்திருந்தார். தனது வாயை அகலத்திறந்து சுட்ட சூயா இறைச்சித் துண்டங்களை கடித்துத் தின்பது போல அவர் தன் பற்களுக்கிடையே ஆங்கிலத்தைக் கடித்துச் சிறு சிறு துண்டுகளாக என்னிடம் அனுப்பினர். என் வாழ்க்கையில் முதற் தடவையாக நான் நைஜீரியர் அல்லாத ஒருவர் பேசும் ஆங்கிலத்தை முழுவதுமாக விளங்கிக்கொண்டேன். அல்லா கொடுக்கும் போது நீ யார் பிள்ளையென்று கேட்பதில்லை. ‘ஒரு தங்கத் திறவுகோல் எல்லாப்பூட்டுகளையும் திறக்கும் என்பார்கள். புதிய திட்டமிடல் அதிகாரி சொக்கத்தங்கமாய் இருந்தார் அவரின் பெயர் திரு. முடுலிங்க. அவரை நான் முதலில் ஒரு படேல் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் திரு. முடுலிங்க சிலோன் நாட்டுக்காரர். திரு. முடுலிங்க எல்லாவற்றிலும் மிகத் துல்லியமாக இருந்தார். குறித்த நேரத்துக்கு அலுவலகத்துக்கு வந்து குறித்த நேரத்தில் அலுவலகத்தை விட்டுப்புறப்படுவார். அவர் எப்போதும் மிகத்தூய்மையான அழகிய உடைகளையே அணிவார். அவரின் சுத்தமாகச் சவரம் செய்யப்பட்ட முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை தொற்றியிருக்கும் அவருக்கு அறுபது வயது இருக்கலாம். ஆண்டுகள் அழகுக்கு மரியாதை செலுத்துவதில்லை என்ற (f)புலானிப் பழமொழி திரு. முடுலிங்கவை பொறுத்தவரையில் செல்லுபடியாகாது. அவர் எப்போதுமே தன் கையோடு எடுத்து வரும் சிறிய கணிப்பொறியைப் போல தனது தலையுள் ஆயிரம் கணிப்பொறிகளை வைத்திருந்தார். பிரஸிடண்ட் அன்ஸாரிக்கு கொடுக்கும் அதேயளவு மரியாதையைத் தான் திரு. முடுலிங்க எனக்கும் கொடுத்தார். அதேயளவு மரியாதையைத்தான் அவர் தோடம்பழக் கூடைக்காரி மைமூனிடமும் காட்டினார். அவரின் கண்களில் அறிவும் கனிவும் சுடராய் எழுந்தன. நான் அவரின் அதீத கவனத்தைப் பெறுவதற்கு பெரு முயற்சிகள் எதுவும் செய்யவேண்டியிருக்கவில்லை. நைஜீரிய நாட்டு அரசியல் நிலைமைகள் விரைவிலேயே என்னை திரு. முடுலிங்கவின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய ஊழியக்காரனாக மாற்றி விட்டிருந்தன. அந்த ஒன்பது தூக்குத்தண்டனைகளுக்கும் எதிராக நைஜீரியா முழுவதும் கலவரங்கள் நடைபெற்றன. பயாஃப்ரா பிரிவினைப் போராட்டத்தக்குப் பிறகு நைஜீரியா கண்டிருக்கும் மிகப் பெரிய கலவரம் இதுதான் என்று ‘Nigeria Times’ எழுதியது. நைஜீரியாவின் தெற்குப்பகுதிகளில் எண்ணை வயல்களை அண்டிய பிரதேசங்களில் தொடங்கிய இந்தக் கலவரம் பின் நகரங்களுக்குப் பரவி இப்போது நைஜீரியாவின் கிராமங்களுக்கும் பரவத்தொடங்கியது. ‘எட்டு மனிதர்கள் உள்ள கிராமத்திலும் ஒரு தேசபக்தன் இருப்பான்’ என்பதே கலவரக் காரர்களின் பிரதான கோஷமாக இருந்தது. கலவரக்காரர்கள் வெளிநாட்டு நிறுவனங்களையும் அலுவலகங்களையும் குறிவைத்துத்தாக்கினார்கள். எங்கள் அலுவலகத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களையும் கலவரக்காரர்கள் தாக்கக்கூடும் எனப் பிரஸிடண்ட் அன்ஸாரி அபிப்பிராயப்பட்டார். இரண்டு வெள்ளையர்களின் வீடுகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. திரு. முடுலிங்க தங்கியிருந்த வீடு எங்கள் அலுவலகத்திலிருந்து பத்துக் கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்தது. லாகோஸின் புறநகர்ப் பகுதியில் ஓபஸான்ஸோ வீதியில் அவரின் வீடு இருந்தது. அந்த வீதியில் இருந்த பதினோராவது குறுக்குத் தெருவில் தான் நான் தங்கியிருந்த அறையும் இருந்தது. திரு. முடுலிங்க அலுவலகத்துக்கு வரும் போதும் போகும் போதும் அவருக்குத் துணையாக அவரோடு வந்து போகுமாறு பிரஸிடண்ட் அன்ஸாரி எனக்குக் கட்டளையிட்டார். என் பணி வரலாற்றிலேயே பிரஸிடண்ட் அன்ஸாரி போட்ட ஒரு உத்தரவை முதற்தடவையாக நான் முழு மகிழ்ச்சி யோடு ஏற்றுக் கொண்டேன். இந்தப்புதிய ஏற்பாட்டால் எனக்கு உடனடியாக இரண்டு நன்மைகள் கிட்டின. முதலாவதாக நான் திரு. முடுலிங்கவின் பரிவை விரைவிலேயே பெற்றுக் கொண்டேன். இரண்டாவதாக நான் அலுவலக நேரம் முடிந்த பின்பும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. சரியாக மணி அய்ந்தானதும் திரு முடுலிங்க அலுவலகத் திலிருந்து புறப்படுவார். நானும் அவருடனேயே புறப்பட்டு விடுவேன். திரு. முடுலிங்க தனது ஜீப் வண்டியைத் தானே ஓட்டினார். நைஜீரியச் சாரதிகளின் மிதமிஞ்சிய வேகமும் அவர்களது வீதிச் சாகஸங்களும் தனக்கு ஒத்துவரவில்லை என்று அவர் சொல்லுவார். ஜீப் ஓடத் தொடங்கியதும் திரு. முடுலிங்க ஜீப்பினுள் ஒரு சோம்பலான சங்கீதத்தை ஒலிக்க விடுவார். அந்தச்சங்கீதம் இந்திய இசை வகையைச் சேர்ந்ததாம். அந்தச் சங்கீதம் ‘நன்நன்நன்நா’ என்று மிக மெதுவாகவே செல்லும். திரு. முடுலிங்க ஸ்ரேறிங்கில் தாளம் போட்டவாறு அந்தச் சங்கீதத்தைக் காட்டிலும் மெதுவாகவே ஜீப் வண்டியைச் செலுத்துவார். திரு. முடுலிங்கவின் வீட்டில் சமையல்காரனாக தோட்டக்காரனாக காவலாளியாக மூன்று நைஜீரியர்கள் வேலை செய்து வந்தார்கள். அந்த மாளிகை போன்ற வீட்டிலே திரு. முடுலிங்க தனியாகவே தங்கியிருந்தார். திரு. முடுலிங்கவின் வீட்டுக்குப் போனால் அங்கிருந்து நான் உடனே கிளம்பிவிடுவதில்லை எவ்வளவு நேரத்தை அங்கு கழிக்கலாமோ அவ்வளவு நேரத்தை நான் அங்கு கழித்தேன். திரு. முடுலிங்கவோடு பேசக்கிடைக்கும் சின்னதொரு தருணத்தைக் கூட நான் நழுவ விட்டேனில்லை. அவருடன் பேசிப்பேசியே என் ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்த்துவிடுவது என்ற முடிவோடு நான் செயற்பட்டேன். திரு. முடுலிங்க எனது ஆங்கில உச்சரிப்பில் சலிக்காமல் புன்னகையோடும் அக்கறையோடும் திருத்தங்களைச் சொல்வார். எனக்கு ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதில் இருந்த வெறியையும் வேகத்தையும் பார்த்து உண்மையிலேயே திரு. முடுலிங்க மிரண்டு போனார். அவர் புன்னகையுடன் ‘அதிக அவசரம் கிழங்குக்குக் கேடு’ என்றார். இந்தக்கிழங்குப் பழமொழி கென்யா நாட்டில் மிகப்பிரபலமான பழமொழி. திரு. முடுலிங்க கென்யா, சூடான், ஸியாரோலியோன், சோமாலியா, எத்தியோப்பியா, தான்சானியா, ஸாயிர் என்று ஆபிரிக்காவை ஒரு சுற்றுச் சுற்றி விட்டுத்தான் நைஜீரியாவுக்கு வந்திருந்தார். அவருக்கு ஆபிரிக்காவின் ஒவ்வொரு கலாசாரத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது. அவருக்கு ஆபிரிக்காவின் ஒவ்வொரு குடிவகை, உணவு வகை பற்றியும் தெரிந்திருந்தது. அவருக்கு ஆபிரிக்காவின் ஒவ்வொரு இனக்குழுவைப் பற்றியும் தெரிந்திருந்தது. அவருக்கு ஒவ்வொரு ஆபிரிக்க பழங்குடிகளினதும் பாடல்களைப் பற்றித் தெரிந்தது. முக்கியமாக அவருக்கு ஒவ்வொரு ஆபிரிக்கர்களுடனும் விதம்விதமாகமான உச்சரிப்புக்களில் எப்படி ஆங்கிலம் பேசுவது என்பதைப் பற்றித் தெரிந்திருந்தது. எந்த ஊசியும் இருபுறமும் கூராயிராது என்பார்கள். ஆனால் திரு. முடுலிங்க எட்டுப் பக்கமும் கூர்மையாய் இருந்தார். அவர் நைஜீரியாவுக்கு வந்த சில நாட்களிலேயே நைஜீரியாவின் பல பழக்க வழக்கங்களைத்தெரிந்து கொண்டிருக்கிறார். ஒருநாள் அவர் தன் கையாலேயே நைஜீரியர்களின் சிற்றுண்டி வகையான ஹோஸையைத் தயாரித்தார். நான் என் பாட்டியின் கைகளில் கூட அவ்வளவு சுவையான ஒரு ஹோஸையைச் சாப்பிட்டிருக்கவில்லை. அவர் எங்கேயும் எப்போதும் தன் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தார். திரு. முடுலிங்கவுடனான எனது தீவிரவாத ஆங்கிலப்பயிற்சியில் ஒரு இடைவெளி விழுந்தது. நான் எனது நிக்ஹாஹ்வுக்காக நைஜீரியாவின் வடக்கு எல்லையில் இருக்கும் எனது ஊருக்கு ஒரு மாத விடுமுறையில் சென்றேன். பெண் எடுத்தல் பக்கத்திலும் களவாடுதல் தூரத்திலும் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் என் தாயர் என் மனைவி ஆமினாவை தூரத்தில் இருந்துதான் தேர்ந்தெடுத்தார். ஆமீனா கடுனா மாவட்டத்தைச் சேர்ந்தவள். அந்தப் பகுதியில் மந்தை வளர்ப்புத்தான் பிரதான தொழில் ஆனாலும் ஆமினா எழுத வாசிக்கக்கற்றிருந்தாள். ஆமினாவுக்கு பதினேழு வயது. அவள் உயரமாக ஆனால் மிகவும் மெலிந்து நோஞ்சானாக இருந்தாள். அவள் எவ்வளவு தான் ஓடி ஓடி வீட்டு வேலைகளைச் செய்தாலும் எனது பாட்டி ஆமினாவைக் குற்றம் சொல்லிக்கொண்டேயிருந்தார். நான் பாட்டியை திட்டி அடக்க முயன்ற போதெல்லாம் அவர் ‘குருட்டுப்பூனை செத்த எலியைத் தான் பிடிக்கும்’ என்று என்னைக் கிண்டல் செய்தார். ஆமினாவிடம் ஒரு விரும்பத்தகாத பழக்கமும் இருந்தது. அவள் எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக வெட்கப்பட்டாள். சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் ஆமினா பயந்தாள். நான் அவளைத்தொடும் போது கூட அவளின் கண்கள் வெளிறிப்போய்க் கெஞ்சின. நான் அவளை அணைத்த போதெல்லாம் அவளின் தேகம் அச்சத்தால் நடுங்கியது. நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஆமினா தன் முக் காட்டை நூறு தடவைகள் சரி செய்தாள். என்னோடு பேசக்கூட அவள் தயங்கினாள். அவளின் நாவு வார்த்தைகளைக் குழறியது. ஆனால் எனக்கு நம்பிக்கையிருந்தது. நான் ஆமினாவை லாகோஸீக்கு அழைத்துச் சென்றவுடனேயே அவளை நான் மெல்ல மெல்ல மாற்றுவேன். இந்தச் சின்ன மலைப் பூவின் இதழ்கள் காயப்படாமலேயே நான் அதை மலரவைப்பேன்.  நான் ஆமினாவுடன் லாகோஸீக்குத் திரும்பி வந்தபோது நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. கலவரக்காரர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினருமாக அடக்கியிருந்தனர். நான் லாகோஸீக்கு வந்து சேர்ந்த அடுத்த சனிக்கிழமையே திரு முடுலிங்க புதுமணத் தம்பதிகளான எங்களுக்குத் தன்வீட்டில் இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்தார். அந்த விருந்துக்கு எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த அந்த இரண்டு வெள்ளையர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தனர். மூன்று வெளிநாட்டவர்களைக் கண்டது தான் தாமதம் ஆமினாவின் உடல் வெட வெடவென நடுங்கத் தொடங்கி விட்டது. எங்கள் எல்லோருடனும் மேசையில் அமர்ந்து உணவருந்தும் போது அவள் அளவுக்கு அதிகமான வெட்கத்தால் அலைக்கழிக்கப் படுவதை நான் கவனித்தேன். திரு. முடுலிங்க மிகுந்த கனிவோடு ஆமினாவை உபசரித்தார். அவர் ஆமினாவை இயல்பாக இருக்கச் செய்வதற்கு தனக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தையும் கையாண்டு பார்த்தார். ஆமினாவின் இயல்பே வெட்கப்படுவதும் பயப்படுவதும் தான் என்பதை திரு. முடுலிங்க அறிய மாட்டார். (f)புலானி இனப்பெண்கள் மற்றைய நைஜீரியப் பெண்களைப் போல கறுப்பிகள் இல்லை. ஆமீனா ஓரளவு நிறமானவள். உரித்த யாம் கிழங்கு போல இருப்பாள். அவள் அணிந்திருந்த விருந்துக்கான ஆடையும் (f)புலானி இனப்பெண்களுக்கே உரித்தானவை. அவளின் இரு கன்னங்களிலும் இனக்குழு அடையாளங்கள் கீறப்பட்டிருந்தன. இவை குறித்தெல்லாம் திரு. முடுலிங்கவுக்கு ஆயிரம் கேள்விகளும் விசாரணைகளும் இருந்தன. அவர் இவை குறித்து ஆமினாவிடம் கேட்ட கேள்விகளை ஆமினா மிகுந்த அச்சத்துடன் எதிர்கொண்டாள். அவள் ஒரு கடுமையான பள்ளி ஆசிரியருக்கு முன் நிற்கும் படுமொக்கான பள்ளிச் சிறுமி போல திணறித் திணறி திரு. முடுலிங்கவுக்கு பதில் சொன்னாள். ஆமினா சொன்ன எல்லாப் பதில்களுமே திரு. முடுலிங்கவுக்குப் பெருத்த ஆச்சரியங்களை ஏற்படுத்தின. மலையடிவாரத்தில் சிறு வயதில் தான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட சம்பவங்களை ஆமினா சொன்ன போது திரு. முடுலிங்க பரவச நிலையின் உச்சியில் இருந்தார். சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் பயப்படுவது ஆமினாவின் சிறப்பென்றால் சின்னச் சின்ன விசயங்களுக் கெல்லாம் பரவசப்படுவது திரு. முடுலிங்கவின் சிறப்பாய் இருந்தது. ஆமினா ஹெளஸ மொழியில் பேசியதை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திரு. முடுலிங்கவுக்கும் அந்த வெள்ளையர்க்கும் கூறினேன். இப்போது கூட இந்த வெள்ளையர்களுக்கு என் ஆங்கிலம் புரியவில்லை. எனவே நான் ஆங்கிலத்தில் திரு. முடுலிங்கவுக்கு கூறியதை அவர் மறுபடியும் இன்னொரு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து அந்த வெள்ளையர்களுக்குக் கூறினார். விருந்து முடிந்து புறப்படும்போது ஆமினா மட்டுமல்லாமல் நானும் ‘திடுக்கிடும்’ படியான காரியம் ஒன்றை அந்த ஐரிஸ் வெள்ளைக்காரர் செய்ய முனைந்தார். விடைபெறும் போது கை குலுக்குவதற்காக அந்த வெள்ளைக்காரர் ஆமினாவை நோக்கித் தனது கையை நீட்டினார். அப்போது ஆமினா ஒரு மான் போல இரண்டடிகள் பின்னே துள்ளிப் பாய்ந்தாள். நத்தை தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல அவள் தனது தலை, கைகள், கால்கள் முதலிய உறுப்புக்களை தன் உடலுக்குள் அனிச்சையாக இழுத்துக் கொண்டாள். ஐரிஸ்காரரும் உடனடியாகவே சமாளித்துக் கொண்டு ஒரு தந்திரம் செய்தார். தன் நீட்டிய கையின் விரல்களை படபட வென அடித்து விடைபெறுவது போல சைகை செய்தார். அவர் தனது கையை நீட்டிய போது தான் ஓரிரு துளி சிறுநீரை ஆடையிலேயே கழித்து விட்டதாக ஆமினா பின்பு என்னிடம் தயங்கித் தயங்கிச்சொன்னாள். திரு. முடுலிங்க எங்களை தனது ஜீப் வண்டியிலேயே எங்களது வீட்டு வாசல் வரை கொண்டு வந்து விட்டார். அவருக்கு நானும் ஆமினாவும் பல தடவைகள் நன்றி தெரிவித்தோம். அப்போது திரு. முடுலிங்க எங்களுக்கு திருமணப் பரிசொன்றை அளித்தார். அந்தப் பரிசு அடுத்த நாள் மாலை நேரக் காட்சிக்கான இரண்டு பல்கனி நுழைவுச் சீட்டுக்களாக இருந்தது. பின்பு திரு. முடுலிங்க அந்த நுழைவுச் சீட்டுக்களைக் குறித்து எனக்கு ஒரு சிறியதொரு விளக்கம் அளித்தார். அப்போது லாகோஸில் ஓடிக்கொண்டிருந்த ஒரு அமெரிக்கத் திரைப்படத்துக்கான நுழைவுச் சீட்டுக்கள் அவை. அந்தத்திரைப்படத்தின் கதை போத்துக்கேயர்கள் ஆபிரிக்காவுக்குள் நுழைந்து ஆபிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றதைக் குறித்துப் பேசுகிறதாம். எனக்குத் திரைப்படம் பார்ப்பதில் எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. மாணவனாய் இருந்த காலத்தில் ஒன்றிரண்டு ஹிந்தி சினிமாக்கள் பார்த்ததோடு சரி. அதன் பின்பு நான் சினிமாவே பார்த்ததில்லை. திரு. முடுலிங்கவின் கூர்மையான கண்கள் என் முகத்தின் உற்சாகமற்ற தன்மையை உடனடியாகவே கண்டுபிடித்து விட்டன. திரு. முடுலிங்க புன்னகையுடன் இப்படிச் சொன்னார். “மம்முடு நீ அடிக்கடி ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது உன் ஆங்கில உச்சரிப்பை நேர் செய்து கொள்ள உதவும்.” அப்போது என் மூளைக்குள் பளீரென்று ஒரு வெளிச்சம் அடித்தது. திரு. முடுலிங்க சொல்வது முற்றிலும் உண்மை. ஹிந்திப்படம் பார்த்துப் பார்த்தே ஹிந்தி மொழியைச் சரளமாகப் பேசும் பல நைஜீரியர்களை நானறிவேன். அவர்கள் படேல்களின் கடைகளில் ஹிந்தியிலேயே பேரம் பேசிப்பொருட்களை வாங்குவதையும் நான் கண்டிருக்கிறேன். நான் ஊருக்குப் போய் வந்த இந்த ஒரு மாத காலத்துள் நானே எனது ஆங்கில மொழி விருத்தியைப்பற்றிக் கொஞ்சம் அசட்டையாக இருந்த போதும் திரு. முடுலிங்க அதை ஒருபோதும் மறந்தாரில்லை. திரு. முடுலிங்க புறப்படும் போது என்னைப் பார்த்துக் கண் சிமிட்டி “மம்முடு திருமணமான புதுச் சோடிகள் படம் பார்க்கப் போவது சிலோன் நாட்டுச் சம்பிரதாயம் என்று உன் மனைவியிடம் கூறு” என்றார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் நானும் ஆமினாவும் திரைப்படத்துக்குக் கிளம்பினோம். நாங்கள் திரைப்படத்துக்கு போகப்போகிறோம் என்ற செய்தியை அறிந்தவுடன் ஆமினா அதற்கும் பயப்பட்டாள். அவள் இதுவரை திரையரங்கில் படம் பார்த்ததே இல்லையாம். அவள் லாகோஸின் பெரும் சன நெருக்கடி மிகுந்த வீதிகளை ஓரக் கண்களால் மிரளமிரளப் பார்த்தவாறு குனிந்த தலை நிமிராமல் என் பின்னே நடந்து வந்தாள். அய்ந்து நிமிடங்கள் நடப்பதற்கு இடையில் அவள் அய்ம்பது தடவைகள் தன் முக்காட்டைச் சரி செய்தாள். ‘ரெக்ஸ்’ திரையரங்கம் நகரத்தின் மிக முக்கிய பகுதியான விக்ரோறியாச் சதுக்கத்தில் இருந்தது. இந்தப் பகுதியை ‘வைற் லாகோஸ்’ என்று சொல்வார்கள். வெள்ளையர்களின் குடியிருப் புப்பகுதிகள் இங்கேயே அமைந்திருந்தன. அங்கிருந்த சிறப்பு அங்காடிகளும் கடைகளும் வெள்ளையர்களுக்கு என்றே சிறப்பாக அமைக்கப்பட்டவை. நைஜீரியா சுதந்திரமடைந்த பின்பு இங்கிலாந்துக்குப் போகாமல் இங்கேயே தங்கிவிட்ட வெள்ளையர்களின் மையமாக விக்ரோறியாச் சதுக்கம் இருந்தது. நான் ஆமினாவிடம் ‘லண்டன் மாநகரம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும்’ என்றேன். ஆமினா குனிந்த தலையை நிமிர்ந்தாமலேயே ‘ம்’ கொட்டினாள். திரையரங்கம் முற்று முழுதாக ஆங்கிலேயேப் பாணியிலேயே அமைந்திருந்தது. திரையரங்கத்தில் அனைத்து அறிவித்தல்களும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருந்தன. காட்சி அரங்கத்துக்குள் நுழையும் கதவுக்கு அருகாக சுத்தமான வெள்ளை ஆடையும் தலையில் வெள்ளைத்தொப்பியும் அணிந்திருந்த ஒரு இளம் சீனாக்காரி ஒரு பெரிய இயந்திரத்தில் சோள மணிகளைப் பொரித்துக் கொண்டிருந்தாள். நாங்கள் கிராமங்களில் சோளப்பொத்தியை நெருப்பில் சுட்டுத் தான் சாப்பிடுவோம். சைனாக்காரியின் பொரிக்கும் இயந்திரத்தின் அடிப்பகுதியில் வெள்ளை முத்துக்கள் போல சோளப் பொரிகள் சொரிந்து கொண்டிருந்ததை ஆமினா ஆர்வத்தோடு பார்த்தாள். நான் சைனாக்காரியிடம் ஒரு சரை சோளப்பொரியும் ஒரு கொக்கோ கோலா போத்தலும் தருமாறு ஆங்கிலத்தில் கேட்டு பத்து நைறா தாளென்றை நீட்டினேன். நான் பேசிய அந்த ஒற்றை வரி ஆங்கிலத்தைக்கூட அந்தச் சீனாக்காரி சிரமப்பட்டே புரிந்து கொண்டாள். அவள் பதிலுக்குப் பேசிய ஆங்கிலம் எனக்கு சரிவரப்புரியவில்லை. சீனாக்காரி சிரித்த படியே என்னிடம் ‘நீ என்ன மொழி பேசுவாய் ஹெளஸவா? இபோவா? யரூபாவா?’ என்று கேட்டாள். அந்தச்சிறிய சீனப் பெண் நான்கைந்து மொழிகள் பேசக் கூடியவளாய் இருப்பாளாக்கும். முதல் பட்டத்திற்கு படிப்பது தான் கடினம் அடுத்த பட்டம் தானாகவே வரும் என்பார்கள். சோளப்பொரியையும் கொக்கோ கோலாப்போத்தலையும் சீனாக்காரியிடம்’ இருந்து வாங்கி நான் ஆமினாவிடம் கொடுக்கும் போது காட்சி அரங்கினுள்ளேயிருந்து சத்தம் வருவதைக் கேட்டு பதற்ற முற்றேன். எனது பதற்றத்தைக் கவனித்த சீனாக்காரி உள்ளே விளம்பரப்படங்கள் தான் காண்பிக்கப்படுகின்றன என்றும் பிரதான படம் தொடங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன என்றும் ஹெளஸ மொழியில் சொன்னாள். நானும் ஆமினாவும் காட்சியரங்கினுள் நுழைந்த போது உள்ளே விளக்குகள் முற்றாக அணைக்கப்படிருக்கவில்லை. அரங்கு அரையிருளில் இருந்தது. நானும் ஆமினாவும் பல்கனி வகுப்பில் நடுக்கொள்ள அமர்ந்தோம். திரையில் விளம்பரப் படங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் அவற்றை யாரும் கவனிப் பதாய்த் தெரியவில்லை. அது ஒரு மிகச்சிறிய அரங்கு. அரங்கின் பல்கனியில் ஏற்கனவே முப்பது பேர்கள் வரை ஆண்களும் பெண்களுமாகப் பார்வையாளர்கள் இருந்தார்கள். பார்வையாளர்களில் பாதிப்பேர்கள் வெள்ளைக்காரர்கள். அவர்கள் சோடி சோடியாக அமர்ந்திருந்தார்கள். நான்கைந்து இந்தியர்கள், மிகுதி பேர் கறுப்பர்கள் அந்தக் கறுப்பர்களின் உடையலங்காரங்களே அவர்களை மேசைக்கார கறுப்பர்கள் என்று காட்டின. சிலர் தங்களுக்குள் கிசு கிசுப்பான குரல்களில் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் அந்த அரை வெளிச்சத்தில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்கள். நான் விளம்பரப் படங்களைக் கவனிக்கலானேன் எல்லா விளம்பரங்களும் ஆங்கில மொழியிலேயே தயாரிக்கப்பட்டிருந்தன. ஒன்று: திரையில் ஒரு வெள்ளைக்காரி நிர்வாணமாக அருவியில் குளிக்கிறாள். அப்போது ஒருவன் அங்கே வருகிறான். இருவரும் முத்தமிடுகிறார்கள். நான் இது சவர்க்காரத்துக்கான விளம்பரம் என்றுதான் நினைத்திருந்தேன். அவர்கள் இருவரும் ஒரு காரில் ஏறிப் போகும் போது தான் அது ‘ரெனோல்ட்’காருக்கான விளம்பரம் என்று தெரிந்து கொண்டேன். நான் ஆமினாவை ஓரக்கண்ணால் கவனித்தேன். சோளப் பொரியும் கொக்கோகோலப் போத்தலும் அவள் மடியில் கிடந்தன. அவள் மார்புக்கு குறுக்காகத் தனது கைகளைக் கட்டியவாறே குறுகிப்போய் உட்கார்ந்திருந்தாள். இரண்டு: திரையில் இப்போது ஒரு கறுப்பு இளம்பெண் நிர்வாணமாக கண்களை மூடிக் கிடக்கிறாள். ஒரு வெள்ளையன் அவளின் கரிய தேகத்தில் கால்களில் இருந்து முத்தமிட ஆரம்பிக்கிறான். அவன் படிப்படியா அவளின் முகம் வரை முத்தமிட்டுக்கொண்டே முன்னேறுவதை அங்கங்கே வெட்டி வெட்டிக் காட்டினார்கள். நான் இது நிச்சயமாகவே வாசச் சவர்க்காரத்துக் கான விளம்பரமாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். விளம்பரத்தின் முடிவில்தான் அது கறுப்புக் கோப்பிக்கான விளம்பரம் என்று எழுத்துக்கள் மூலம் தெரியவந்தது. இவ்வளவுக்கும் விளம்பரத்தில் ஒரு துளி கோப்பித்தூளைக்கூடக் கண்ணிற் காட்டினார்களில்லை. மூன்று: இப்போது திரையில் நீண்ட தலைமுடி வைத்திருந்த ஒரு வெள்ளைக்காரன் குதிரையில் வந்து குதித்தான். வழியால் வந்த ஒரு இளம்பெண் ஓடிப்போய் அவனின் மார்பிலும் கழுத்திலும் முத்தமிட்டாள். பின் அவனின் கன்னத்தில் முத்தமிடும் போது அங்கே ஒரு சிறுவன் வருகிறான். உடனே இளம்பெண் ஓடிப்போய் அந்தச் சிறுவனை முத்தமிடுகிறாள். குதிரையில் வந்தவன் குதிரையின் அடிவயிற்றைத் தடவடிக் கொண்டே அந்தச்சிறுவனை முறைக்கிறான். நான் இது குதிரைக் கான விளம்பரமா? அல்லது அந்தச் சிறுவனுக்கான விளம்பரமா? என்று என் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்த போது “தவறாமல் எப்போதும் கிலெட்டின் பிளேடுகளையே உபயோகியுங்கள்” என்று திரையில் எழுத்துக்கள் மின்னின. எழுத்துக்களின் பின்னணியில் அந்தப் பெண்ணின் இராட்சத உதடுகள் அசைந்தன. அப்போது திரையில் ‘முத்தங்களை இழந்து விடாதீர்கள்’ என்று எழுத்துக்கள் வந்தன. நான்கு: திரையில் கடும் மழையின் நடுவே ஒருவன் சட்டையில்லாமல் வெற்றுடம்புடன் நிற்கிறான். அவன் உடல் குளிரில் வெடவெடக்கிறது. ஒரு இளம் பெண் அவனை நெருங்கி முத்தமிடத் தொடங்குகிறாள். அவள் முத்தமிட முத்தமிட அவன் மெல்ல மெல்ல ஒரு நெருப்புச்சிலையாக மாறிக்கொண்டிருக்கிறான். அவள் விடாமல் நெருப்புச் சொரூபத்தையும் முத்தமிட நெருப்புச்சொரூபம் கடும் மழையோடு கலந்து உருகித் தீக்குழம்பாய் ஓட ஆரம்பிக்கிறது. அது ‘ஜக் டானியல்’ விஸ்க்கிக்கான விளம்பரம். நான் ஆமினாவைக் கவனித்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். நான் அவளின் விரல்களைப் பற்றினேன். அவளின் விரல்கள் தீக்கங்குகளாய் சுட்டுக் கொண்டிருந்தன. அய்ந்து: ஒருத்தி தன் உதடுகளின் கீழே கையை விரித்து ஊதிப் பறக்கும் முத்தம் கொடுக்க அவளின் உதடுகள் அவளின் முகத்திலிருந்து கழன்று தோடம்பழச் சுளைகளாக மாறிக் காற்றில் பறந்து நைஜீரியாவில் இருந்து கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து இரட்டைக் கோபுரங்களின் அருகே இறங்கி அங்கே கோட் சூட் போட்டு அலுவலகத்தில் இருக்கும் ஒரு ஆடவனின் உதடுகளில் போய் ஒட்டிக்கொள்கின்றன. உடனே அவனது உதடுகள் இரத்தச் சிவப்பு நிறமாகின்றன. நான் அது லிப்ஸ்டிக்குக்கான விளம்பரம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நோக்கியா கைத் தொலைபேசிக்கான விளம்பரம். விளம்பரம் முடியும் போது அந்த ஆடவன் செல்லமாகத் தன் நாவால் திரை முழுவதையும் வருடினான். நான் அப்போது ஆமினாவை முத்தமிடத்தொடங்கினேன். ஆமீனா பதறிப்போனாள். நான் விடாமல் ஆமினாவின் முகத்தைக்கைகளால் ஆடாமல் அசையாமல் பிடித்து வைத்து அவளது கண்கள் மூக்கு நெற்றி கன்னங்கள் உதடுகள் என்று என் உதடுகளால் உறிஞ்சினேன். திரையங்குக்குள் இருந்தவர்கள் ஒருவர் இருவராகச் சாடை மாடையாக ஓரக்கண்களால் எங்களை கவனிக்கத் தொடங்கினார்கள். நான் நிறுத்தாமல் ஆவேசத்தோடு ஆமினாவைப் பெரும் சத்தத்துடன் முத்தமிட்டேன். என் ஒவ்வொரு முத்தமும் ஒரு ஊசிப்பட்டாசு போல பெரும் சத்தத்துடன் வெடித்தது. இப்போது பல்கனி வகுப்பில் இருந்த எல்லோருமே எங்களைக் கவனிக்கத் தொடங்கினார்கள். நான் உன்மத்தம் தலைக்கேறியவன் போல ஆமினாவை முத்தமிட்டுக்கொண்டேயிருந்தேன். ஆமினா சேவலிடம் அகப்பட்ட பெட்டைக்கோழி மாதிரித்தனது கைகளைப்படபடவென அடித்துக் கொண்டாள். நான் ஆமினாவை விடாமல் முத்தமிட்டுக் கொண்டே திரையரங்கைக் கவனித்தேன். அங்கிருந்த முப்பது சோடிக்கண்களும் அரையிருட்டில் எங்களையே கவனித்துக் கொண்டிருந்தன. அப்போது எனது இடதுகையால் ஆமினாவை அணைத்து முத்தமிட்டவாறே வலது கையால் ஆமினாவின் மடியிலிருந்த கொக்கோ கோலாப் போத்தலை எடுத்து எனதும் ஆமினாவினதும் தலைகளுக்கு மேலாக கொக்கோ கோலாவை உயர்த்திப் பிடித்தவாறே நான் அடித்தொண்டையால் “Enjoy Coca Cola” என்று கூவினேன். மறுநாள் காலையில் அலுவலகத்தில் என்னைப் பார்த்தபோது திரு. முடுலிங்க முதற்கேள்வியாக ‘நேற்று மாலை திரைப்படம் எப்படியிருந்தது?’ என்று கேட்டார் நான் திரைப்படத்தைப் பற்றிப் பேசாமல் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முதல் நடந்த விளம்பரக்கூத்துக்களைப் பற்றியும் நான் ஆமினாவை முத்தமிட்டதையும் கொக்கோ கோலாப் போத்தலைத் தூக்கிக்காட்டியதையும் ஒன்று விடாமல் திரு. முடுலிங்கவுக்குச் சொன்னேன். அந்தக் கதையைக் கேட்டதும் திரு. முடுங்லிங்க விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டார். விடாமல் வெடித்துச் சிரித்ததில் அவர் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. பிற்பகல் இரண்டு மணியளவில் திரு. முடுலிங்க என்னைத் தனது அறைக்கு அழைத்தார். என்னை நாற்காலியில் உட்காரச் சொன்னார். பின் திரு. முடுலிங்க நானும் ஆமினாவும் திரைப்படம் பார்க்கப் போனதைப் பற்றித் தான் ஒரு சிறுகதை எழுதியிருப்பதாக என்னிடம் சொன்னார். நான் மிகுந்த ஆச்சரியத்துடன் ‘மாஸ்ர நீங்கள் கதைகளும் எழுதுவீர்களா?’ என்று திரு. முடுலிங்கவிடம் கேட்டேன். அவர் தனது கணிப்பொறியில் தாளம் போட்டவாறே புன்னகைத்தார். அவர் இதுவரை அறுபத்தொரு சிறுகதைகளை எழுதியிருக்கிறாராம். பிரஸிடண்ட் அன்ஸாரியைப் பற்றி அவர் கதை எழுதியிருக்கிறாராம். அந்த ஐரிஸ் வெள்ளையரைப் பற்றியும் ஒரு கதை எழுதியிருக்கிறாராம். அவர் வீட்டுத் தோட்டக்காரன் கமறா குறித்து ஒரு கதை எழுதியிருக்கிறாராம். எங்கள் அலுவலகத்துக்கு அவ்வப்போது தோடம் பழம் விற்க வந்து போகும் கூடைக்காரி மைமூன் பற்றிக் கூட திரு. முடுலிங்க ஒரு கதை எழுதியிருக்கிறாராம். இப்போது என்னைப் பற்றியும் அவர் ஒரு கதை எழுதியிருக்கிறார். அவர் அந்தக் கதையை சிலோன் மொழியில் எழுதியிருந்தார். என்னை அவர் தன் எதிரே உட்கார வைத்து என்னைப் பற்றி எழுதிய கதையை எனக்கு வரிக்கு வரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி முடித்தார். நானும் ஆமினாவும் அவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனது, அவர் எங்களுக்கு சினிமா நுழைவுச் சீட்டுக்களைப் பரிசளித்தது, ஆமினா லாகோஸ் வீதிகளில் மிரண்டது, சோளப்பொரி விற்ற சீனாக்காரியின் ஆங்கிலம் புரியாமல் நான் முழித்தது, திரையில் காண்பிக்கப்பட்ட விளம்பரப் படங்கள், ரெனோல்ட் கார், கறுப்புக் கோப்பித் தூள், கிலெட்டின் ப்ளேட், ஜக் டானியல் விஸ்கி, நோக்கியா கைத் தொலைபேசி என நான் சொன்னதைச் சொன்னபடியே எழுதியிருந்த திரு. முடுலிங்க கதையின் முடிவில் மாத்திரம்ஒரு நுட்பமான மாற்றத்தைச் செய்திருந்தார். திரு. முடுலிங்கவின் கதைப்படி நான் ஆமினாவை முத்தமிடவில்லை. ஆனால் திரு. முடுலிங்க கதைக்கு ‘முத்தம்’ என்று தலைப்பிட்டிருந்தார். அங்கேதான் அவரின் படைப்புச் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது. திரு. முடுலிங்க என்னையும் ஆமினாவையும் குறித்து எழுதிய கதையின் முடிவு பின்வருமாறு: “மம்முடு திரையில் ஓடும் விளம்பரங்களையே பார்த்தவாறு இருந்தான். அந்த விளம்பரப் படங்களில் வசனங்களே இல்லாமல் இருந்தது அவனுக்குச் சற்று ஏமாற்றமாய் இருந்தது. அவன் சற்று சலிப்போடு ஆமினாவைப் பார்த்த போது அவளின் கண்கள் திரையைப் பார்ப்பதும் தரையைப் பார்ப்பதுமாய் சாகசங்கள் செய்தன. மம்முடு ஆமினாவின் கையைத் தொட்டபோது அவளின் கை விரல்கள் தீக் கங்குகளாய்த் தகித்தன. விளம்பரப் படங்கள் முடிந்த போது அரங்கு முழுவதும் இருளானது. அந்த இருளுக்குள் ஆமினா ஒரு காரியம் செய்தாள். அவளது சவூதிப் பூசணிக்காய் போன்ற பிருஷ்டங்களைச் சற்றேஅசைத்து வைத்துத் தலையை சரியாகத் தொண்ணூறு பாகையில் சடாரென வெட்டித் திருப்பி கனிந்த நாகதாளிப் பழங்களைச் சரிபாதியாகப் பிளந்து வைத்திருந்தது போல இருந்த தனது அதரங்களால் காய்ந்த கடலட்டை போலக் கிடந்த மம்முடுவின் தடித்த கீழ் உதட்டை மெதுவாகக் கௌவினாள். அந்த முத்தம் கல்யாணம் ஆன இந்த ஒரு மாதமாய் மம்முடு ஏங்கிக் கிடந்த முத்தம். அவளாக வலிய வந்து கொடுக்கும் முதல் முத்தம். ஆனால் மம்முடு இப்போது அவளோடு சரசமாடும் நிலையில் இல்லை. அவன் திரையில் ஓடத் தொடங்கியிருந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் காதுகள் வேட்டை நாயின் காதுகளைப் போல கவனமாக விறைத்து நின்றன. திரையில் வெள்ளையர்களின் கப்பல் ஆபிரிக்க கரையை நோக்கி வருகிறது. வெள்ளையர்கள் தங்களுக்குள் உரையாடுகிறார்கள். அவர்களின் உரையாடலில் ஒரு சொல் கூட மம்முடுவுக்குப் புரியவில்லை. இப்போது ஆமினா தனது ஈரமான உதடுகளால் மம்முடுவின் கன்னத்தை வருடிக் கொண்டிருந்தாள். மம்முடுவோ திரையில் பேசப்படும் வசனங்களையே உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தான். மார்க்கோனி முதன் முதலாகக் கண்டுபிடித்த வானொலி போல மம்முடுவால் ஒரு நேரத்தில் ஒரு அலைவரிசையில் மட்டும் தான் இயக்க முடியும். இப்போது ஆமினா மம்முடுவின் கை விரல்களை நோகாமல் முத்தமிட்டிக்கொண்டிருந்தாள். படம் தொடங்கி அப்போது நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டன. ஆகக் குறைந்தது நூறு சொற்களாவது திரையில் பேசப்பட்டிருக்கும். மம்முடுவால் ஒரு சொல்லையாவது புரிந்துகொள்ள முடியவில்லை. மம்முடு சோர்வடைந்து விட்டான். தன்னைப் போன்று ஆப்பிரிக்க கிராமப்புறத்திலிருந்து வந்தவனுக்கு வெள்ளையர்கள் பேசும் ஆங்கிலம் ஒரு போதும் விளங்கப் போவதில்லை என்று அவன் தன்னைத் தானே சபித்துக்கொண்டான். பின் மெதுவாக ‘ஆதாமின் காலத்திலிருந்தே கழுதை சாம்பல் நிறமாய்த் தான் இருக்கிறது. எனத் தன் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். சரியாகப் படம் தொடங்கிய அய்ந்தாவது நிமிடத்தில் மம்முடு தன் இருக்கையில் இருந்து எழுந்து திரையரங்கை விட்டு வெளியே வந்தான். அந்த நிமிடத்தில் தான் மம்முடு ஒரு மகா தவறைச் செய்தான். அந்த அமெரிக்கத் திரைப்படத்தில் முதல் அய்ந்து நிமிடங்கள் வரை கதாபாத்திரங்கள் போர்த்துகேயே மொழியில் மட்டும் தான் உரையாடுவார்கள். ”என் கதைக்கு திரு. முடுலிங்க எழுதிய முடிவுதான் சரியாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. ஏனெனில் திரு. முடுலிங்க எனது கதையை இப்படி ஆரம்பித்திருந்தார். “மம்முடு பேசும் ஆங்கிலம் கொக்கோ வில் கல்லொழுங்கையால் மாட்டுவண்டி ஓடுவது போலிருக்கும்.” ஷோபா சக்தி நன்றி அநிச்ச http://www.shobasakthi.com/shobasakthi/2006/04/30/திரு-முடுலிங்க-ஷோபா-சக்த/
  • வாசித்துக்கொண்டிருக்கும்போது எனக்கும் இந்த logic இடித்தது. ஆனால் மாய யதார்த்தக் (magical realism) கதையில் ஜெயமோகன் வித்தை காட்டியிருக்கின்றார் என்று புரிந்தது😀
  • என்னதான் நடக்கும் நடக்கடுமே இருட்டினில் நீதி மறையட்டுமே........ யாரை நம்பி நான் பிறேந்தேன் போங்கடா போங்க..... இந்த இருபாடல்களை கேட்கும் பொழுது என் அப்பாவின் நினைவுகள் தான் வரும், நானும் இப்படால்களை அடிக்கடி வாயில் முணுமுணுப்பதுட்டு. அப்பா தோட்ட வேலைகள் முடித்தபின் கள்ளடித்துவிட்டுதான் வருவார், அம்மா என்னைதான் அப்பாவுடன் வயல் கிணத்திற்கு அனுப்புவா குளிக்க, நான் கிணத்தில் அள்ளி கொடுக்க அப்பா வாங்கி குளிப்பார், அப்ப இந்த இருப்பாடல்களும் தான் அவர் அதிகம் பாடுவதுண்டு.. அப்பா இல்லாவிட்டலும் இப்பவும் அந்த நினைவுகள் கண்ணைவிட்டு இன்னும் அகலவில்லை