• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

குக்கிராமங்களுக்கும் Internet சேவை வழங்க வருகிறது "பறக்கும் செல்போன் டவர்கள்"...

Recommended Posts

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இடையூறு இல்லா இணையத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

கென்யாவில் லூன்..

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் 'லூன் தொழில்நுட்பம்' பல நாடுகளின் கிராமப்புற பகுதிகளில் இணையத்தை எளிதாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிலான பலூன்கள் 12 மைல் உயரத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டு, அதன் மூலம் 25 மைல் சுற்றளவில் இணைய இணைப்பு வழங்கப்படும். இரு ஆண்டுகளுக்கு முன் கென்யாவின் சில பகுதிகளில் இணையத்தை அடைய இது பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

imageதெ.ஆப்பிரிக்காவில் Telelift..

தென்னாப்பிரிக்காவின் கிராமப்புற மற்றும் அணுக முடியாத பகுதிகளில், பறக்கும் மொபைல் கோபுரங்களைப் பயன்படுத்தி இணைய சேவையை வழங்க 2017 முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, Telelift என்ற பெயரில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

imageபறக்கும் செல்போன் டவர்:

Telelift என்பது பறக்கும் செல்போன் டவரை உருவாக்கும் முயற்சி ஆகும். இதற்காக டைனிங் டேபிள் அளவிலான ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை நீண்ட கம்பி மூலம் தரையில் இணைக்கப்படும். குறைந்தது ஒரு மாதமாவது Telelift காற்றில் பறக்க முடியும் என அதனை தயாரித்து வரும் நிறுவனம் கூறியுள்ளது.

ட்ரோன் கான்சப்ட்..

கடந்த 2017-ம் ஆண்டில் இண்டியானாவில் உள்ள பர்டியூ(Purdue) பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த ராகுல் திவாரி என்பவர் இந்த கான்செப்டை முதலில் தெரிவித்துள்ளார். மைக்ரோவேவ் போன்ற அளவிலான சக்தியைப் பயன்படுத்தி, சோலார் பேனல்கள் அல்லது வேறு மின்சார சக்தியுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது அவரது ட்ரோன்கள் 200 அடியில் பறக்கின்றன. திவாரி துவக்கத்தில் தனது ட்ரோன்களை ஆப்பிரிக்காவில் பறக்கும் காவல் கோபுரங்களாக பயன்படுத்த விரும்பினார்.

பின்னர் தொழித்துறையினருடன் பேசிய பிறகு அந்த எண்ணத்தை மாற்றி கொண்டுள்ளார். தற்போது திவாரி கண்டறிந்த தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும் ட்ரோன்கள் நீண்ட காலத்திற்கு பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அவற்றுடன் 4ஜி ரவுட்டர்களை இணைத்தால், எங்கு வேண்டுமானாலும் இணைய வசதியை அளிக்க முடியும்.

image20 மைல் முதல் 30 மைல்...

மொபைல் கவரேஜ் கணிசமாக குறையும் பகுதிகளில் நிறுவப்படும் ஒரு ட்ரோன் மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு இனைய சேவையை தங்கு தடையின்றி வழங்க முடியும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ட்ரோனும் 20 மைல் முதல் 30 மைல் வரையிலான சுற்றளவில் பல நூறு பேருக்கு உயர்தர இணையத்தை வழங்க முடியும். இதன்படி எனவே தொலைதூர பகுதிகளுக்கு ஒரு ட்ரோன் மட்டுமே தேவைப்படலாம். அதே நேரத்தில் புறநகர்ப் பகுதிகளுக்கு பல ட்ரோன்கள் தேவைப்படலாம்.

image

கம்பி அறுந்தாலும்..

இந்த Telelift ட்ரோன்களின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. முழுவதும் ஆட்டோமேட் செய்யப்பட்டிருக்கும் இந்த வகை ட்ரோன்களை புறப்பட செய்யவும், தரையிறக்கவும் ஒரு பைலட்தேவை. Telelift பேக்-அப் பேட்டரி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே தரையுடன் இணைக்கப்படும் கம்பி அறுபட்டாலும், அது உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும். பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அவசர கால தேடல் மற்றும் மீட்புக்கு Telelift ஒரு சிறந்த தயாரிப்பகை இருக்கும். ஆனால் ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் வெப்பத்தை தானாக Telelift ட்ரோன்களுக்கு மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் தேவை என்ற கருத்து நிலவுகிறது. இணைய தேவை குறைவாக இருக்கும் நேரங்களில் Telelift ட்ரோன்கள் தரையிறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/101353/குக்கிராமங்களுக்கும்-Internetசேவை-வழங்க-வருகிறது"பறக்கும்-செல்போன்டவர்கள்"...

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஆட்சி ஏற்றதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது விசாரணை   “அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில், ஆட்சி ஏற்றதும் விசேட விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த அரசில் அரசியல் பழிவாங்களுக்காகவே எப்.சி.ஐ.டி. அமைக்கப்பட்டது. அரசியல் பழிவாங்களுக்கான திட்டமிடல்களை மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னின்று முன்னெடுத்தார்கள். இதன் பலனை தற்போது அனுபவிக்கின்றார்கள். பெரும்பாலான அரசசார்பற்ற அமைப்புக்கள் கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளில் நிதி பெற்று அரசுக்கு எதிரான தவறான பிரசாரங்களை மேற்கொண்டமை குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச நாடுகளில் இருந்து எக்காரணிகளுக்காக பெரும்பாலான நிதி கிடைக்கப் பெறுகின்றன என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும்” – என்றார். https://newuthayan.com/ஆட்சி-ஏற்றதும்-அரச-சார்ப/  
    • டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே    
    • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர் உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்…… தீதும் நன்றும் பிறர் தர வாராயெனும் நன் மொழியே நம் பொன் மொழியாம் போரைப்புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே… அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் செம்மொழியான தமிழ் மொழியாம் செம்மொழியான தமிழ் மொழியாம் செம்மொழியான தமிழ் மொழியாம் செம்மொழியான தமிழ் மொழியாம் ஆ…..ஆ….ஆ…..ஆ…. ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும் ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்….. ஆ…..ஆ….ஆ….. செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..) செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..) செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..) செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..தமிழ் மொழியாம்) கம்பன் நாட்டாழ்வாரும் கவி அரசி ஔவை நல்லாளும் எம்மதமும் ஏற்று புகழ்கின்ற எம்மதமும் ஏற்று புகழ்கின்ற எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும் புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி செம்மொழியான தமிழ் மொழியாம் செம்மொழியான தமிழ் மொழியாம் செம்மொழியான தமிழ் மொழியாம் செம்மொழியான தமிழ் மொழியாம் ஆ…ஆ….ஆ..ஆ… அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனியமொழி ஓதி வளரும் உயிரான உலக மொழி ஓதி வளரும் உயிரான உலக மொழி நம்மொழி நம் மொழி…அதுவே…… செம்மொழியான தமிழ் மொழியாம் தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்…. செம்மொழியான தமிழ் மொழியாம் (ஆ…ஆ…ஆ…) செம்மொழியான தமிழ் மொழியாம் (ஆ…ஆ..ஆ…..) செம்மொழியான தமிழ் மொழியாம் (தமிழ்மொழியாம்…தமிழ்மொழியாம்..) செம்மொழியான தமிழ் மொழியாம் (தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழியாம்…) செம்மொழியான நம் தமிழ் மொழியாம் (ஆ…ஆ….ஆ…) வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே..