Jump to content

மன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்

Recommended Posts

மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகம் பிரதேச செயலக ரீதியாக திரட்டிய தரவுகளின்படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 868 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களில் 34 ஆயிரத்து 494 பேர் ஆண்கள். 37 ஆயிரத்து 374 பேர் பெண்கள்.

71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள்.

2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர் என்று அந்தத் தரவுகள் கூறுகின்றன.

மன்னார் மாவட்டத்தில் சைவ சமயத்தவர்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்றது. இந்தநிலையில் இஸ்லாமியர்களைத் திருமணம் செய்வதன் ஊடாக இனம் ஒன்றே மாற்றப்படுகின்றது என்று பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

https://www.tamilwin.com/community/01/239302?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.
 
மன்னார் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகம் பிரதேச செயலக ரீதியாக திரட்டிய தரவுகளின்படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
 
மன்னார் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 868 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களில் 34 ஆயிரத்து 494 பேர் ஆண்கள். 37 ஆயிரத்து 374 பேர் பெண்கள்.
 
71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள்.
 
2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர் என்று அந்தத் தரவுகள் கூறுகின்றன.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:
2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர் என்று அந்தத் தரவுகள் கூறுகின்றன.

அதாவது....  2026 + 12 = 2038 தமிழர்கள்,  முஸ்லீம்களாக மாறி விட்டார்கள். 😮

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள்.

ஒரு முசுலீம் 7 பெண்களைத் திருமணம் செய்ய அவர்கள் சட்டத்தில் இடமுண்டு என்று சொல்கிறார்கள், அது உண்மையானால் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய பெண்டுகள் தேவை. அவர்கள் எங்கே போவார்கள்? புரிந்துகொள்ள வேண்டும்.... 🤔😋

2 hours ago, colomban said:

மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர்.

இந்தப் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்துவைத்தவர்கள், சீதணம் என்ற கொடுமையிலிருந்து தங்கள் பெற்றோரைக் காப்பாற்றிய புண்ணியவதிகள். 💃💃

Link to comment
Share on other sites

இந்த தரவுகள் நம்பத் தகுந்தவை அல்ல, எந்த ஆதாரமும் இல்லாமக் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி, இத்தரவுகள் முதலில் அதிர்வு இணையத்தளத்தில் தான் வெளியாயின..!!

3 minutes ago, Paanch said:

ஒரு முசுலீம் 7 பெண்களைத் திருமணம் செய்ய அவர்கள் சட்டத்தில் இடமுண்டு என்று சொல்கிறார்கள், அது உண்மையானால் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய பெண்டுகள் தேவை. அவர்கள் எங்கே போவார்கள்? புரிந்துகொள்ள வேண்டும்.... 🤔😋

இந்தப் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்துவைத்தவர்கள், சீதணம் என்ற கொடுமையிலிருந்து தங்கள் பெற்றோரைக் காப்பாற்றிய புண்ணியவதிகள். 💃💃

இப்பொழுது இதான் டிரெண்ட் போல் உள்ளது ஒன்றில் முஸ்லிமைப்திருமணம் செய்வது அல்லது 13-15 வயது வித்தியாசத்தில் புலம்பெயர் நாட்டு மாப்பிள்ளையை திருமணம்ப்செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

இந்தப் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்துவைத்தவர்கள், சீதணம் என்ற கொடுமையிலிருந்து தங்கள் பெற்றோரைக் காப்பாற்றிய புண்ணியவதிகள். 💃💃

பாஞ்ச்  அண்ணை... மற்றப் பக்கம். 12 தமிழ் ஆண்கள், 
முஸ்லீம் பெண்களிடம்... கொழுத்த சீதனம் வாங்கி விட்டார்களே... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும்  வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்.....

30 வருடங்களுக்கு முன்பு பிரசுரமான வீரகேசரி பத்திரிகையை பாருங்கள்  அதில பெயர் மாற்றம் என்ற பகுதியில் பார்த்தால் இது போன்ற உணர்வு வரும் ....அனுபவ த்தில் சொல்லுகின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

அனைவருக்கும்  வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்.....

30 வருடங்களுக்கு முன்பு பிரசுரமான வீரகேசரி பத்திரிகையை பாருங்கள்  அதில பெயர் மாற்றம் என்ற பகுதியில் பார்த்தால் இது போன்ற உணர்வு வரும் ....அனுபவ த்தில் சொல்லுகின்றேன்...

முப்பது ஆண்டுகளுக்கு முந்தையது இணையத்தில் இருக்கா ?? அதன் லிங்க்கை நீங்களே இங்கு இணைத்திருக்கலாமே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முப்பது ஆண்டுகளுக்கு முந்தையது இணையத்தில் இருக்கா ?? அதன் லிங்க்கை நீங்களே இங்கு இணைத்திருக்கலாமே???

தலைவியே நாங்கள் பழைய பஞ்சாங்கம்...  30 வருடங்களுக்கு முன்பு .வீரகேசரி பத்திரிகை வாசித்த பொழுது மனதில் கிரகித்த  தகவலை சொன்னேன்....30 வருடங்களுக்கு முன்பு இணையமும் இல்லை லிங்கும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

தலைவியே நாங்கள் பழைய பஞ்சாங்கம்...  30 வருடங்களுக்கு முன்பு .வீரகேசரி பத்திரிகை வாசித்த பொழுது மனதில் கிரகித்த  தகவலை சொன்னேன்....30 வருடங்களுக்கு முன்பு இணையமும் இல்லை லிங்கும் இல்லை

அடடா எதோ கண்டுபிடிதது பழையனவற்றைத் தரவேற்றம் செய்துள்ளனர் என்று எண்ணினேன். பழைய பஞ்சாங்கம் இன்னும் கிழி யவில்லையா???😃😂

Link to comment
Share on other sites

25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முப்பது ஆண்டுகளுக்கு முந்தையது இணையத்தில் இருக்கா ?? அதன் லிங்க்கை நீங்களே இங்கு இணைத்திருக்கலாமே???

நீங்கள் வேண்டுமானால் 2017க்கு பிறகு வந்தவற்றை பார்க்கலாம் வீரகேசரியில்.

சென்ற வாரம் கூட கத்தோலிக்க பெண் ஒருவர் இஸ்லாமிய மதம் மாறியிருந்தார்

அதேபோல்  தினகரனில் 2013ல் இருந்து  பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

நீங்கள் வேண்டுமானால் 2017க்கு பிறகு வந்தவற்றை பார்க்கலாம் வீரகேசரியில்.

சென்ற வாரம் கூட கத்தோலிக்க பெண் ஒருவர் இஸ்லாமிய மதம் மாறியிருந்தார்

அதேபோல்  தினகரனில் 2013ல் இருந்து  பார்க்கலாம்.

 முஸ்லிம்கள் தம்மை வேறு ஒரு இனமாக இப்போதெல்லாம் முன்னிலைப்படுத்தினாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் தானே. ஒரே நாட்டில் இருந்துகொண்டு மதம் என்ற காரணத்தினால் அவர்களை நாம் விரோதிகளாகப் பார்க்கிறோம். ஆனால் அதை தீர்ப்பதற்கான வழிமுறை எம்மிடம் இல்லை. புலம் பெயர் நாடுகளில் கூடப் பல இளந்தலைமுறை மாற்று இனத்தவரைத் திருமணம் செய்கின்றனர். இத்தனைக்கும் பெற்றோர் தமிழ் தமிழ் என்று பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்பித்தவர்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எம் இனத்தில் உள்ள சீதன, சாதி அடிப்படைகளும் எப்போ மாறுகிறதோ அதுவரை நாம் சும்மா கத் திக்கொண்டிருக்கவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனித சமுகம் இன்னும் உன்னதம் அடையவில்லை .....என்பது உண்மை

39 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா எதோ கண்டுபிடிதது பழையனவற்றைத் தரவேற்றம் செய்துள்ளனர் என்று எண்ணினேன். பழைய பஞ்சாங்கம் இன்னும் கிழி யவில்லையா???😃😂

நிதர்சனங்கள் இலகுவில் கிழிய வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 முஸ்லிம்கள் தம்மை வேறு ஒரு இனமாக இப்போதெல்லாம் முன்னிலைப்படுத்தினாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் தானே. ஒரே நாட்டில் இருந்துகொண்டு மதம் என்ற காரணத்தினால் அவர்களை நாம் விரோதிகளாகப் பார்க்கிறோம். ஆனால் அதை தீர்ப்பதற்கான வழிமுறை எம்மிடம் இல்லை. புலம் பெயர் நாடுகளில் கூடப் பல இளந்தலைமுறை மாற்று இனத்தவரைத் திருமணம் செய்கின்றனர். இத்தனைக்கும் பெற்றோர் தமிழ் தமிழ் என்று பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்பித்தவர்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எம் இனத்தில் உள்ள சீதன, சாதி அடிப்படைகளும் எப்போ மாறுகிறதோ அதுவரை நாம் சும்மா கத் திக்கொண்டிருக்கவேண்டியதுதான்

முஸ்லிம்கள் தமிழ் இனத்தின் அங்கம் இல்லை அவர்கள் அப்படி பார்ப்பதுமில்லை.

அதே போல் இதுக்கு சீதனத்துக்கும் சாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, தமது இனத்தை பெருக்க ஒரு வழியாக பார்க்கிறார்கள். பெண்க்ளை திருமணம் செய்வதன் மூலம் அவர்களை மதம் மாற்றுவதன் மூலம் தமிழர் எண்ணிக்கை குறையும்,முஸ்லிம் எண்ணிக்கை கூடும் அதே போல் அப்பெண் பிரச்வைக்கும் பிள்ளைகளும் முஸ்லிமாகவே வளர்வார்கள்.

அதைவிட இன்னுமொரு விடயம் தமிழ் மக்கள் காணி வீடுகளை பெண் பிள்ளைகளுக்கு வழங்குவார்கள், இதன் மூலம் தமிழரின் காணி பூமிகளை இலகுவில் அடையலாம்.

ஆனால் 2,000. பெண்கள் மதம் மாறினர் என்பது நம்ப தகுந்த் மாதிரி இல்லை.

Link to comment
Share on other sites

24 minutes ago, Dash said:

முஸ்லிம்கள் தமிழ் இனத்தின் அங்கம் இல்லை அவர்கள் அப்படி பார்ப்பதுமில்லை.

அதே போல் இதுக்கு சீதனத்துக்கும் சாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, தமது இனத்தை பெருக்க ஒரு வழியாக பார்க்கிறார்கள். பெண்க்ளை திருமணம் செய்வதன் மூலம் அவர்களை மதம் மாற்றுவதன் மூலம் தமிழர் எண்ணிக்கை குறையும்,முஸ்லிம் எண்ணிக்கை கூடும் அதே போல் அப்பெண் பிரச்வைக்கும் பிள்ளைகளும் முஸ்லிமாகவே வளர்வார்கள்.

அதைவிட இன்னுமொரு விடயம் தமிழ் மக்கள் காணி வீடுகளை பெண் பிள்ளைகளுக்கு வழங்குவார்கள், இதன் மூலம் தமிழரின் காணி பூமிகளை இலகுவில் அடையலாம்..

உங்கள் தீர்வு என்ன?

  1. ஒரே மதத்தவரே திருமணம் செய்யலாம் என்று சட்டம் உருவாக்கல்.
  2. மதம் மாறுவதை தடை செய்யும் சட்டம் கொண்டுவரல்.
  3. மனித உரிமை அது இது என்று இப்படி சட்டங்கள் கொண்டுவர முடியாது என்றால் மதம் மாறுபவர்கள், மாற்று மதத்தில் திருமணம் செய்பவர்கள், அவர்களின் குடும்பங்களுக்கு வாள்வெட்டு போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளால் அச்சுறுத்தல் ஏற்படுத்தல்.
  4. உங்களின் அபார அறிவுத்திறனால் உருவான வேறு தீர்வு.
Link to comment
Share on other sites

13 minutes ago, கற்பகதரு said:

இது உங்களது விதண்டாவாதம். இதற்கு விழிப்புணர்வு தான் முக்கியம். தமிழ் பெண்களிடம் முஸ்லிம் இளைஞ்ர்களுடன் நெருங்கி பழகவோ அல்லது காதல் தொடர்புகள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினால் போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ தமிழ் சிங்கங்களே,

மாற்றுக்குறையா தங்கங்களே,

கத்தோலிக்கனா சைவனா,

சச்சியா, பாதிரியா,

கோவில் வளைவா,தேவாலய  முடுக்கா,

என்று நீங்கள் வெள்ளி பார்த்துக் கொண்டிருக்க,

2000 ஆயிரம் லட்டை லம்பா கிளப்பீடாரே ஐயா சோனகர் 😂

பிகு: இதில் அவர்களை குறை சொல்லி என்ன பயன். சமூகத்தின் மீது அக்கறை யாருக்கு இருக்கிறது? பெரியாஸ்பத்திரில கக்கூஸ் கழுவிறவன் கூட வீடும் நகையும் கேட்கும் போது, தமிழ் வாலிபர்கள் தமக்குதாமே நிர்ணயித்த திருமண விலை கட்டுபடியாகாது என்ற போது, பெண்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே கேள்வி வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே வாழ்வதா, அல்லது விரும்பி வரும் முஸ்லிம் மனிதனை மணம் செய்வதா என்பது மட்டுமே. 

கலியாணம் கட்டிக் கொடுத்து பருவ உணர்வுகளுக்கு ஒரு அங்கீகாரம்மிக்க வடிகாலை இந்த சமூகம் அவர்களுக்கு வழங்காதபோது, தமிழாவது மண்ணாவது என்று இனமும், மதமும் மாறி அவர்கள் தமக்கென ஒரு வாழ்வை அமைக்கிறார்கள். இரெண்டாம், மூன்றாம், நான்காம் தாரமாகவேனும். 

அவர்களும் பொதுவாக நம்பி வரும் பெண்களை வைத்து வாழவே செய்கிறார்கள்.

2000 தமிழ் பெண்களை வாழவைக்க வக்கில்லாத ஆண்மையற்ற ஒரு இனம் - விடயம் நடந்த பின் இணைய வெளியில் வியாக்கியானம் நடத்த மட்டும் தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

வீடும் நகையும் கேட்கும் போது, தமிழ் வாலிபர்கள் தமக்குதாமே நிர்ணயித்த திருமண விலை கட்டுபடியாகாது என்ற போது, பெண்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே கேள்வி வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே வாழ்வதா, அல்லது விரும்பி வரும் முஸ்லிம் மனிதனை மணம் செய்வதா என்பது மட்டுமே. 

எங்கட கலாச்சாரத்தின் படி சீதனம் சாதி பார்க்க வேண்டும் எங்களுக்கு எண்டு ஒரு பெருமை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புலம் பெயர் நாடுகளில் கூடப் பல இளந்தலைமுறை மாற்று இனத்தவரைத் திருமணம் செய்கின்றனர். இத்தனைக்கும் பெற்றோர் தமிழ் தமிழ் என்று பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்பித்தவர்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எம் இனத்தில் உள்ள சீதன, சாதி அடிப்படைகளும் எப்போ மாறுகிறதோ அதுவரை நாம் சும்மா கத் திக்கொண்டிருக்கவேண்டியதுதான்

💯   எனக்கு தெரிந்த ஒருவர் முன்பு நெருப்பு பறக்க தமிழ் தேசியம் கதைப்பவர் சிங்களவன் காட்டுமிராண்டி என்பார் தனது மகள் சிங்களவரை காதலித்ததும் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார் இப்போது நேர்மாறு.

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முஸ்லிம்கள் தம்மை வேறு ஒரு இனமாக இப்போதெல்லாம் முன்னிலைப்படுத்தினாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் தானே. ஒரே நாட்டில் இருந்துகொண்டு மதம் என்ற காரணத்தினால் அவர்களை நாம் விரோதிகளாகப் பார்க்கிறோம்.

முஸ்லிம்கள் தங்கள் மதத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரையும் எதிரிகளாக பார்க்கிறார்கள்.இணங்கி செல்வதானால் தமிழர்களும் முஸ்லிமாக மாறவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 முஸ்லிம்கள் தம்மை வேறு ஒரு இனமாக இப்போதெல்லாம் முன்னிலைப்படுத்தினாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் தானே. ஒரே நாட்டில் இருந்துகொண்டு மதம் என்ற காரணத்தினால் அவர்களை நாம் விரோதிகளாகப் பார்க்கிறோம். ஆனால் அதை தீர்ப்பதற்கான வழிமுறை எம்மிடம் இல்லை. புலம் பெயர் நாடுகளில் கூடப் பல இளந்தலைமுறை மாற்று இனத்தவரைத் திருமணம் செய்கின்றனர். இத்தனைக்கும் பெற்றோர் தமிழ் தமிழ் என்று பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்பித்தவர்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எம் இனத்தில் உள்ள சீதன, சாதி அடிப்படைகளும் எப்போ மாறுகிறதோ அதுவரை நாம் சும்மா கத் திக்கொண்டிருக்கவேண்டியதுதான்

உங்கள் கதையின் படி ,சைவர்கள் ,இந்துக்கள் ,கிறிஸ்தவர்கள் இலங்கையில் இல்லாமல் போனாலும் பரவாயில்லை ....முஸ்லீம் மதம் மட்டும் தழைத்தோங்கட்டும் ஏன் என்றால் அவர்களும் தமிழ் கதைக்கிறார்கள் ....அப்படித்தானே 

Link to comment
Share on other sites

9 hours ago, Dash said:

இது உங்களது விதண்டாவாதம். இதற்கு விழிப்புணர்வு தான் முக்கியம். தமிழ் பெண்களிடம் முஸ்லிம் இளைஞ்ர்களுடன் நெருங்கி பழகவோ அல்லது காதல் தொடர்புகள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினால் போதுமானது.

அட, இது வரை அறிவுறுத்தவில்லையா? இனியாவது செய்து பாருங்கள்.

இந்த சைவ பெண்கள் கத்தோலிக்கருடன் நெருங்கி பழகி மதம் மாறி விட்டாலும் சைவ மக்கள் தொகை குறைந்து விடுமே? அதை தடுக்க என்ன செய்யலாம்? இன்னும் ஒரு அறிவுறுத்தல் கொடுத்து பார்க்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உங்கள் கதையின் படி ,சைவர்கள் ,இந்துக்கள் ,கிறிஸ்தவர்கள் இலங்கையில் இல்லாமல் போனாலும் பரவாயில்லை ....முஸ்லீம் மதம் மட்டும் தழைத்தோங்கட்டும் ஏன் என்றால் அவர்களும் தமிழ் கதைக்கிறார்கள் ....அப்படித்தானே 

இவ்வளவு கதைக்கும் உங்களால் ஒரு முஸ்லீம் - தமிழர் திருமணத்தை நிறுத்த முடியுமா ?? அல்லது மதம் மாறாது ஒருவரையாவது தடுக்க முடியுமா ?? நான் யதார்த்தத்தை மட்டும்தான் எழுதியுள்ளேன் தவிர என் நிலைப்பாட்டை அல்ல றதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்பி, மதம் மாறி திருணம் செய்தாலும் மதம் மாற்றி விட்டார்கள். வறியோர்க்கு உதவி செய்தாலும் மதம் மாற்றி விட்டார்கள் என்று சண்டை பிடிப்போமே தவிர; உருப்படியாய் ஒன்றும் செய்யோமே. எங்கள் பெண்கள், ஆண்களை பெற்றவர்கள் குலம், கோத்திரம், அழகு, அறிவு, கொழுத்த பணம் என்று அடுக்கிக்கொண்டே போவார்கள் பிள்ளைகள் யாராவது ஒன்றை இழுத்துக்கொண்டு வந்தால் வாயை மூடிக்கொண்டு ஆசீர்வதிக்கிறார்கள். அதனால் பிள்ளைகள் பெற்றோருக்கு சிரமமில்லாமல் இலகுவான வழியை தேடுகிறார்கள் போலுள்ளது. இது சரியென்று நான் சொல்லவில்லை. நடப்பதை விதி என்று பழி போடவேண்டிய நிலை. காலம் மாறிவிட்ட.து நாமும் மாற்றத்தை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம்.

Link to comment
Share on other sites

4 hours ago, கற்பகதரு said:

இந்த சைவ பெண்கள் கத்தோலிக்கருடன் நெருங்கி பழகி மதம் மாறி விட்டாலும் சைவ மக்கள் தொகை குறைந்து விடுமே? அதை தடுக்க என்ன செய்யலாம்? இன்னும் ஒரு அறிவுறுத்தல் கொடுத்து பார்க்கலாமா?

ஒரு சைவ பெண் கத்தொலிக்கராக மதம் மாறினாலும் அவர் தமிழர் தான்;ஆனால் அவர் இஸ்லாமியராக மதம் மாறினால் தமிழரில் ஒருவர் குறைந்து முஸ்லிமின் எண்ணிக்கை கூடும்.

வித்தியாசம் விளங்குதா;அதே போல் பெரும்பாலான தமிழர்கள் மன்னாரில் கத்தோலிக்கர் என்றபடியால் அப்படி இஸ்லாமியராக மதம் மாறியவர்கலில் பெரும்பாலானோர் கத்தொலிக்க பெண்களாகவே இருப்பர்.

உண்மையில் 2014-2017 வரையான காலப்பகுதியில் இந்த மத மாற்றங்களுக்கு இலக்காக இருந்தது வவுனியா தான்,ஆனால் அங்கு இருந்த மக்களின் உதவியுடன் இது அடக்கபட்டு விட்டது ஆனால் மன்னாரில் கட்டுக்கடங்காமல் நடக்கிறது....ஏன் தமிழனும் தமிழனும் அடிபடுவதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Paanch said:

இந்தப் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்துவைத்தவர்கள், சீதணம் என்ற கொடுமையிலிருந்து தங்கள் பெற்றோரைக் காப்பாற்றிய புண்ணியவதிகள்.

யார் சொன்னது ...முஸ்லிம்களின் சீதனம் வாங்கும் திருகுதாளம் உங்களுக்கு தெரிந்திருந்தால் இப்படி சொல்லமாட்டீர்கள் . 
சீதனம் இரண்டுவகைப்படும் ஒன்று திருமணத்தின் முதலே அடித்துப்பேசி கறாராக டீலை முடிப்பது நமது தமிழர்கள் செய்வது ,
அடுத்தது தான் மஹா கேவலமான திருட்டுத்தனமான சீதனம் இதைத்தான் அநேக முஸ்லிம்கள் செய்வது 
கலியாணத்தின் போது ஒன்றும் வேணாம் என்று செய்வது ,வெளியாட்களுக்கு காலரை தூக்கி படம் காட்டிவிட்டு 
குடித்தனம் செய்ய ஆரம்பித்ததும் சிறுக சிறுக வேலையை  ஆரம்பிப்பது முதலில் நீ என்ன கொண்டுவந்தனீ என்று கேள்வி ஆரம்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பெண் மூக்கை சிந்திக்கொண்டு பிறந்த வீட்டிற்கு வர ஆரம்பிப்பார் , ஒண்டும் வேண்டாம் எண்டு சொன்னவர் கையில் பெண் வீட்டாருக்கு எங்கே என்னென்ன இருக்கு என்ற முழு பட்டியலும் இருக்கும், கொஞ்சம் கொஞ்சமாக அட்டை உறிஞ்சுவது போல பெண்ணை வச்சு எல்லாத்தையும் ஆட்டைய போடுவார், எல்லாவற்றையும் உறிஞ்சியதற்கு பின் அடுத்தது அதுதான் நான்கை ஒரேநேரத்தில் வச்சு ஓட்ட மார்க்கத்தில் இடமிருக்கே , வெளியில் சீதனம் வாங்காமல் கலியாணம் முடிச்சவன் என்ற கெத்து உள்ள உறிஞ்சவேண்டியதை உறிஞ்சும் முடிச்சாச்சு. இதுதான் மகா மொள்ளமாரி சீதனம் 
இதில் நானா மார்கள் எக்ஸ்பர்ட்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.