Sign in to follow this  
தமிழ் சிறி

கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்!

Recommended Posts

QuadenBayles.jpg

கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்!

அவுஸ்ரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனை ஆல்-ஸ்டார் ரக்பி அணியினர் மைதானத்திற்கு அழைத்து வந்து அணியை வழிநடத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வளர்ச்சியின்மை காரணமாக குறித்த சிறுவன் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்து, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் எனவும் தெரிவித்து அண்மையில் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது

இதனை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பட்டு வருகிறது குறிப்பாக சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரபலங்கள் உள்பட விளையாட்டு வீரர்களும் தமது அனுதாபத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவுஸ்ரேலியாவின் ஆல்-ஸ்டார் ரக்பி அணியில் துன்பத்துக்குள்ளான சிறுவனை வரவேற்கும் முகமாக அவரை மைதானத்திற்கு அழைத்து வந்து அணியை வழிநடத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

குயின்ஸ்லாந்தின் ராபினாவில் உள்ள சிபஸ் சூப்பர் ரக்பி மைதானத்திற்கு நடுவில் குவாடன் பெல்ஸ் உற்சாகமாக அணியின் வீரரான தோம்சனுடன் கைகோர்த்து மைதானத்தற்குள் உள்நுழைந்தார்.

இதனை பார்த்த பார்வையாளர்கள் அவரை பெரும் சந்தோஷத்துடன் வரவேற்றமை அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், குவாடன் பெல்ஸ் தனது முகத்தில் பிரகாசமான புன்னகையை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/கேலி-கிண்டலுக்குள்ளான-சி/

Share this post


Link to post
Share on other sites

நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடியை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கும் ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தனக்கு கிடைத்த 4 லட்சத்து 75 ஆயிரம் டாலர் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க போவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார்.

குள்ளத்தன்மையால் கேலி கிண்டலுக்கு  உள்ளான சிறுவன் குவாடன் பேல்ஸ், மனமுடைந்து தனது தாயிடம் தற்கொலை செய்யப்போவதாக கதறி அழும் வீடியோ உலகையே உலுக்கியது.

அவனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் கருத்து பதிவிட்ட நிலையில் அமெரிக்க நடிகர் ப்ராட் வில்லியம்ஸ் உருவாக்கிய பக்கத்தின் மூலம் இந்திய மதிப்பில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடை வசூலிக்கப்பட்டது.

குவாடனையும் அவனது தாயையும் டிஸ்னிலாண்ட் அனுப்ப திரப்பட்ட இந்த நிதியை பணத்தின் தேவை அதிகம் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அவரது தாய் யார்ராகா அறிவித்துள்ளார்.

 

https://www.polimernews.com/dnews/101865/நன்கொடையாக-கிடைத்த-ரூ.3.40கோடியை-தொண்டுநிறுவனத்துக்கு-வழங்கும்ஆஸ்திரேலிய-சிறுவன்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 2/23/2020 at 10:16 AM, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, text

தமிழ்சிறி அண்ணாநீங்கள் வேறை முதல் எங்கடை பெரிய ஆக்களைத் தான் திருத்த வேணும்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this