Jump to content

வவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு! – வாகனங்களுக்கு தீ வைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Vavuniya-omantai-Accident-4-People-Dead.jpg

வவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு! – வாகனங்களுக்கு தீ வைப்பு!

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன்  பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பேருந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வான் சாரதியும் தீ வித்தில் அகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வானும் தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தார்கள் அம்பியூலன்ஸ்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டுவரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://athavannews.com/வவுனியாவில்-கோர-விபத்து-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

UPDATE: வவுனியா கோர விபத்து: வாகனங்களுக்கு தீ வைத்ததில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழப்பு!

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த நிலையில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்றதன் பின்னர் பேருந்த மற்றும் வானுக்கு தீ அங்கிருந்த சிலரால் தீ வைக்கப்பட்ட நிலையில் அந்த தீயில் அகப்பட்டு வான் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

http://athavannews.com/வவுனியாவில்-கோர-விபத்து-2/

Link to comment
Share on other sites

ஒரு விபத்து நடக்கும் போது உடனடியாக அவசர உதவிக்கு பலர் வரலாம்  அல்லது அவசர உதவிப பிரிவுக்கு  தகவல் கூறலாம். அல்லது நேரம் இல்லாமல்  இருந்தால் தன் வேலையை பார்ததுக்கொண்டு அதை கடந்து செல்லலாம்.   விடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

ஒரு விபத்து நடக்கும் போது உடனடியாக அவசர உதவிக்கு பலர் வரலாம்  அல்லது அவசர உதவிப பிரிவுக்கு  தகவல் கூறலாம். அல்லது நேரம் இல்லாமல்  இருந்தால் தன் வேலையை பார்ததுக்கொண்டு அதை கடந்து செல்லலாம்.   விடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  

எந்த வகையில் நியாயம் ? 

இலங்கை மாத்தி நாடுகளில் வாகனம் வைத்திருப்பவர்கள் பொதுவாக பொருளாதார பலம் மாடும் வேறு செல்வாக்குகள்  உள்ளவர்கள்.அதனால், சட்டம் தனது கடமையை சரியாக செய்ய அவர்கள் விடுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தீர்வும் கிடைப்பதில்லை. 

அதனால், மக்கள் தங்கள் கையில் சட்டத்தை எடுக்கிறார்கள். அது சரி என்று வாதாடவில்லை. யதார்த்தம் இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

ஒரு விபத்து நடக்கும் போது உடனடியாக அவசர உதவிக்கு பலர் வரலாம்  அல்லது அவசர உதவிப பிரிவுக்கு  தகவல் கூறலாம். அல்லது நேரம் இல்லாமல்  இருந்தால் தன் வேலையை பார்ததுக்கொண்டு அதை கடந்து செல்லலாம்.   விடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  

சரியான தீர்ப்பும் நீதியும் கிடைக்கும் நாடுகளில் இப்படியான செயல்கள் நடப்பதில்லை என தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

ஒரு விபத்து நடக்கும் போது உடனடியாக அவசர உதவிக்கு பலர் வரலாம்  அல்லது அவசர உதவிப பிரிவுக்கு  தகவல் கூறலாம். அல்லது நேரம் இல்லாமல்  இருந்தால் தன் வேலையை பார்ததுக்கொண்டு அதை கடந்து செல்லலாம்.   விடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  

👍 

நியாயமான கருத்து. தீவைத்து கொழுத்துவது உடைத்து நொருக்குவது  அவர்களுக்கு ஒரு இன்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பின், உழைப்பின்  வலி  தெரியாமல் அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்துகொண்டு வம்பளப்பவர் வேலை. 

Link to comment
Share on other sites

வான் சாரதியைக் காப்பாற்றாம தீ வைச்ச ஆட்கள் மிக மோசமான மனநிலை உடையவங்கள். தீ வைச்ச ஆட்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையா தண்டிக்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நான்கு மரணங்கள்... விபத்து என்று கடந்து சென்று விட்டாலும்,
ஐந்தாவது சாரதியின் மரணம்.... கொலை. என்றே கூற  வேண்டும்.
அவரின் குடும்பத்தை.... வீணாக, நடுத்தெருவில் தள்ளி விட்டார்கள்.🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: night and fire

வவுனியா கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் வெளியானது

வவுனியா- பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஐவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த பஜிரோ ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில்  நேற்று இரவு, விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் அவர்கள் பயணித்த வாகனத்தை செலுத்திச் சென்ற நபரும் உயிரிழந்துள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது 83), ஆறுமுகம் தேவராஜா (வயது 62), தேவராஜா சுகந்தினி (வயது 51), தேவராஜா சுதர்சன் (வயது 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது 24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சோமசுந்தரம் லக்சனா (வயது 29) காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/வவுனியா-கோர-விபத்தில்-உய/

Link to comment
Share on other sites

இங்கு நடக்கும் விபத்துக்களை பார்க்கும்போது வருங்காலத்தில் ஒரு அதிவேக பாதை அமைத்தால் என்ன நடக்குமென்றே சொல்ல முடியாது।

இந்த பாதையில் பொதுவாக அதி கூடிய வேகம் , மற்றும் பாதைகள் வளைவுகளை சரியாக அறியாதவர்களால்தான் விபத்துக்கள் கூடுதலாக நடக்கின்றது। மேலும் களைப்பு தூக்கமும் ஒரு கரணம்। இருந்தாலும் இது இரவு எட்டு மணியளவில் நடந்திருக்கிறது।

எனவே வாகனம் செலுத்துவோர் வேக கட்டுப்படடை ஓரளவு கடைப்பிடித்தால் இப்படியான விபத்தை தடுக்கலாம்। இருந்தாலும் தீ வைத்ததினால் அந்த வாகனத்தின் சாரதி உயிரிழக்க நேர்ந்துள்ளது। இவர்களுக்கு எதிராக அரசு சடட நடவடிக்கை எடுக்கவேண்டும்।

Link to comment
Share on other sites

8 hours ago, ampanai said:

எந்த வகையில் நியாயம் ? 

இலங்கை மாத்தி நாடுகளில் வாகனம் வைத்திருப்பவர்கள் பொதுவாக பொருளாதார பலம் மாடும் வேறு செல்வாக்குகள்  உள்ளவர்கள்.அதனால், சட்டம் தனது கடமையை சரியாக செய்ய அவர்கள் விடுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தீர்வும் கிடைப்பதில்லை. 

அதனால், மக்கள் தங்கள் கையில் சட்டத்தை எடுக்கிறார்கள். அது சரி என்று வாதாடவில்லை. யதார்த்தம் இது. 

இப்படியான சம்பவங்கள் யதார்தமாக நடப்பதாக இவ்வாறான வன்முறைகளுக்கு  மறைமுக ஆதரவு நீங்கள் கொடுத்தாலும் இவை உண்மையில் யதார்த்தமாக நடப்பதில்லை என்பதே உண்மை. வன்முறை செய்வதில் இன்பம் காணும் கலாச்சாரம் பரவிவருகிறது என்பதே யதார்ததம். ஒரு விபத்து நடந்தால் அந்த இடத்தில் எவ்வாறு அவர்களுக்கு உதவி சநயலாம் என்பதே சாதாரண மனித கலாச்சாரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாகனம் வைத்திருப்பவரகள் வசதியானவர்கள் இல்லை பெரும்பாலும் லீசிங்கில் வாங்கியவைதான்.தீ வைப்புக்கு காரனம் வன்மமும் வக்கிர புத்தியும்தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

வாகனம் வைத்திருப்பவரகள் வசதியானவர்கள் இல்லை பெரும்பாலும் லீசிங்கில் வாங்கியவைதான்.தீ வைப்புக்கு காரனம் வன்மமும் வக்கிர புத்தியும்தான்.

 

19 hours ago, tulpen said:

விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  

விபத்தில இறந்த ஆக்கள் காரைநகரை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் குடும்பமாம்.

அங்கு கூடிய மக்கள் வான் டிரைவரை காப்பாற்ற முயற்சித்த போது கசிந்த எரிபொருள் சூடான எஞ்சினில் வழிந்து எதிர்பாராம வான் தீப்பிடித்ததாகவும்  அதிலிருந்து தீ பஸ்ஸுக்கு பரவியதாகவும் சொல்றார்கள்.

ஜீப் வலப்பக்கம் திரும்பும் சிக்னலுடன் பாதையின் மத்திக்கு நகர்ந்தததால் குழம்பிய பஸ் டிரைவர் மோதுவதை தவிர்க்க முடியாம போனதா சொல்றார்கள்.

எனவே தமிழ் மக்கள் விபத்துக்குள்ளான வாகனத்துக்கு தீ வைக்குமளவு நாகரிகமற்றவர்கள் இல்லை.

எனவே தமிழ் மக்கள் விபத்துக்குள்ளான வாகனத்துக்கு தீ வைக்குமளவு நாகரிகமற்றவர்கள் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.