Sign in to follow this  
ampanai

நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான சதியா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முஜிபுர்

Recommended Posts

 (செ.தேன்மொழி)

நல்லாட்சி அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்காகவா உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்திலே நல்லாட்சி அரசாங்கத்திக் எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பிரதாமானது உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலை குண்டுத்தாக்குதலாகும்.

எதிர்தரப்பினர் ஐக்கிய தேசியக் முன்னணி மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எடுத்துக் காட்டினர்.இது எமது கட்சிக்கு மாத்திரமன்றி , எமது ஜனாதிபதி வேட்பாளருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது வெளிவரும் தகவல்களை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் நல்லாட்சி அரசாங்கத்தை இலக்கு வைத்துத்தானா இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது ,நாட்டில் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்ததாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இவ்வாறு தாக்குதல் தொடர்பில் முன்னரே தகவல் கிடைக்கப் பெற்றபோதிலும் அது தொடர்பில் கவனம் செலுத்தாது இருந்தமைக்கு காரணம் என்ன? ஜனாதிபதியே முப்படைகளின் தளபதியாக செயற்பட்டார்.

பாதுகாப்பு அமைச்சும் அவரிடமே இருந்தது. இதேவேளை பாதுகாப்பு சபையின் கூட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த எவருக்கும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பையும்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்திருக்கவில்லை.

அடிப்படைவாதிகள் எனக்கூறப்படும் சஹ்ரான் தலைமையிலான குழுவினர் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளிலே வளர்ந்து வந்துள்ளனர் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. இதனை அரசதரப்பு அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , சஹ்ரானை கைது செய்ய முற்படும் போது அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவையும் கொலை செய்யதிட்டமிட்டுள்ளதாகக் கூறி அவரை கைது செய்தனர்.

இந்த நாலக்க சில்வா தொடர்பில் முறைப்பாடளித்த நாமல்குமார என்ற நபர் ஜனாதிபதி செயலகத்திலே ஊதியம் பெற்றுவந்துள்ளார். இவருக்கும் ஜனாதிபதி செயலகத்திற்குமான தொடர்பு என்ன? ஏன் அவருக்கு இவ்வாறு ஊதியம் அளிக்கப்பட்டது என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அதுமாத்திரமன்றி தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவிற்கு இந்த நாட்டில் முஹ்லீம் மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை. இதனால் இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவான விசாரணைகள் வேண்டும். இவற்றை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் சஹ்ரானை நல்லாட்சியை தோல்வியடைய செய்வதற்காக பயன்படுத்தியுள்ளார்களா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான 5 மாத இடவெளியிலே தாக்குதல்களும் இடம்பெற்றன. எனவே இது ஒரு சூழ்ச்சிகர செயலாக இருக்கலாம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

https://www.virakesari.lk/article/76283

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, ampanai said:

இது ஒரு சூழ்ச்சிகர செயலாக இருக்கலாம் என்றே நாங்கள் கருதுகின்றோம்

கருதுவதற்கு இடமில்லை. ஆட்சியை   சூழ்ச்சியால் கவிழ்க்க முடியாமற் போகவே, ராஜபக்ஷக்களும், மைத்திரியும் ஆடிய கூத்து. பாவம் அறியா உயிர்கள் பலி. 

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, ampanai said:

 

 

அதுமாத்திரமன்றி தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவிற்கு இந்த நாட்டில் முஹ்லீம்  மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை. 

ஜனாதிபதி தேர்தலுக்கான 5 மாத இடவெளியிலே தாக்குதல்களும் இடம்பெற்றன. எனவே இது ஒரு சூழ்ச்சிகர செயலாக இருக்கலாம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

https://www.virakesari.lk/article/76283

முஸ்லிம்கள் தாட்கொலை செய்யுமளவுக்கு பிரச்சினை இருந்ததோ இல்லையோ எங்களுக்கு தெரியாது। இருந்தாலும் நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள்। அப்போது ஏன் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை। இப்போது சத்தமிட்டு என்ன பிரயோசனம்। அப்படிதான் அவர்கள் செய்திருந்தாலும் இப்போது அவர்களின் ஆட்சி நடக்கிறது । எனவே நீங்கள் எவ்வளவுதான் சத்தமிடடாலும் உங்கள் ஆட்சிதான் இதுக்கு பொறுப்பு கூற வேண்டும்।

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி, ராஜன்விஷ்வா🎉🎉🎉
  • உண்மையில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பிரான்சில் இறந்தார்களா ? பிரான்சில் கடந்த இரு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி பல்வேறு இணையதளங்களிலும், சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. உண்மையில் அது பிழையான புள்ளிவிபரம் என தெரியவருகின்றது. கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பிரான்சின் சுகாதாரத்துறையின் அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 471பேர்களை மருத்துமனைகளில் உயிரிழந்தனர் எனத் தெரிவித்திருந்தது. மேலும் அச்சுகாதாரஅறிக்கையில், கொரோனா வைரஸ் நெருக்கடிகாலத்தில் மூதாளர் இல்லங்களில் இதுவரை 884 முதியவர்கள் உயிரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வெள்ளிக்கிழமை சுகாதாரஅறிக்கையில் மொத்தமாக இதுவரை மூதாளர் இல்லங்களில் 1416 மூதாளர்கள் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை மூதாளர் இல்லங்களில் இறந்த எண்ணிக்கையினையும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வெளிவந்த நாளாந்த மருத்துவமனை இறப்புக்களை கூட்டி, பிழையான புள்ளிவிபரத்துடன் செய்திகளை பல ஊடகங்கள் பகிர்ந்துள்ளன. வியாழக்கிழமை மருத்துமனைகளில் 471பேரும், வெள்ளிக்கிழமை 588பேரும் உயரிழந்துள்ளனர் என்பதே சுகாதார அறிக்கையின் புள்ளிவிபரம். (காணொளி வெள்ளிக்கிழமை ஐ.பி.சி தமிழின் சிறப்பு நிகழ்சிக்கான வியாழன் நிலைவரம்.).           http://www.francetamils.com/?p=2853
  • யாயினி, மெசொப்பொத்தேமியா சுமேரியர், ராஜன்விஷ்வா மற்றும் சமீபத்தில் பிறந்தநாள் கண்ட அணைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!  
  • இரணைமடுவில் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைப்பு கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனனர்.குறித்த அனுப்பிவைக்கும் நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் இரணைமடு விமானப்படை முகாமில் இடம்பெற்றதுடன் குறித்த அனைவரும் இந்தியாவில் கௌதம புத்தர் பிறந்த இடத்தினைப் பார்வையிட்டு வழிபடுவதற்காக சுற்றுலாப் பயணிகளாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 21ஆம் திகதி இந்தியாவிற்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.அவர்கள் குறித்த முகாமிற்கு அழைத்து வரப்பட்டு 14 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்று பரிசோதனைகள் இடம்பெற்றதையடுத்து விசேட பாதுகாப்பு மற்றும் வாகன வசதிகளுடன் அவ்வந்த பிரதேசங்களுக்கு இன்று சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர்.குறித்த 172 பேரில் ஒரு மதகுரு அடங்கலாக 45 ஆண்களும், 147 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/இரணைமடுவில்-தனிமைப்படுத/
  • கொரோனா குறித்து பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர் April 4, 2020 பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் தாக்கத்தை  கட்டுப்படுத்துவதற்கு மக்கள் சுகாதார துறையினர் ,அதிகாரிகள் பாடுபட்டு வருகின்றனர் என கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். நாட்டில  தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றமை தொடர்பாக சனிக்கிழமை(4) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் இந்த நாட்டிலே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அனைவரும் பொறுப்புள்ள பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த அசாதாரண சூழ்நிலை பயன்படுத்தி தொற்று நோய் குறித்து  பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர் தயவுசெய்து நான் மதத் தலைவர் என்ற வகையில் கூறிக்கொள்வதில் இவ்வாறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் நாட்டின் பாதுகாப்பு படையினர் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு மக்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஒவ்வொருவரும் பொறுப்புவாய்ந்தவர்கள் என்ற ரீதியில் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் தயவுசெய்து பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் இவ்வாறான பொய்யான செய்திகளை பரப்புவது நான் அசாதாரண சூழ்நிலை கொண்டு எடுத்துக் கொண்டு வரும். மேலும் அனைவரும் ஜனாதிபதியின் ஊடக துறை வழங்கும் செய்தியை மாத்திரம் ஏன் நம்ப வேண்டும்.பலர் இன்று மக்களை குழப்புவதற்காக பல்வேறு விடயங்களை பரப்பி வருகின்றனர் நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை  மாத்திரம்  நம்பவேண்டும் இதன் மூலம் அரசாங்கம் சுகாதாரத்துறையினர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்.வைத்தியர்கள் ஊழியர்கள் பொது சுகாதார உத்தியோகததர்கள் அவர்கள் தங்கள் உயிரை பார்க்காமல் துச்சமாக நினைத்து பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  ஊடகங்கள்   மக்களுக்கு நன்மை பயக்கும் உண்மையான விடயங்களை உடனுக்குடன் 24 மணித்தியாலமும் தெளிவுபடுத்தி  வருகின்றனர். விசேடமாக ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் இளைஞர்கள் வெளியில் வந்து குழப்பமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் தயவுசெய்து நாம் அனைவரும் அமைதியாக இருந்து உயிரை பாதுகாக்க வேண்டும் இதற்கு பாதுகாப்பு படையினருக்கு நீங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.வலிகள் தரும்  குழப்பமான செயல்களை செய்து வந்தால் உயிரை காப்பாற்ற முடியாது காரணம் உயிர்கள் செயல்களால் பெறுமதிமிக்க உங்கள் உயிர்கள் பலியாகும். தற்போது பாடசாலை கூட மூடப்பட்டு கல்வியியல் வீழ்ச்சியடைந்துள்ளது.நமது கட்டுப்பாட்டுடன் வீட்டில் இருந்தால் இந்த நோயை கட்டுப்படுத்தி நாம் மீண்டு வர முடியும் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் பொய் வதந்திகளை பரப்ப வேண்டாம் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரை துச்சமாக நினைத்து உண்மையான செய்திகளை அரசை ஊடகங்களிலும் தனியாருடன் கவலை தெரிவித்துவருகின்றனர்.இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனா  எனும் கொடிய அரக்கனை எமது நாட்டிலிருந்து இல்லாமல் செய்வோம்.கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் இருக்கின்றது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் உடனே நம் மக்களுக்கு சலுகைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றார். நீங்கள் பிராந்தியத்தில் எடுத்த முடிவு ஜனாதிபதியின் ஊடகத்தின் ஊடாக வெளியிடப்பட்டதாக என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.எமது கல்முனை பிரதேசத்தில் மக்களுக்கு எந்தவித அசௌகரியங்களை ஏற்படாத வகையில் அரச படை வீரர்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சுகாதாரத்துறையினர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.ஊரடங்கு சட்ட காலத்தில் வீட்டில் இருக்கும் போதும் மக்களுக்கு தேவையான பொருட்களை வைத்துக் கொண்டு செல்ல ஏதுவான வழிமுறைகளை செய்து கொடுக்க அந்த கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள மாணவர் சபையினர் மற்றும் ஏனைய துறையினர் முன்வர வேண்டும். கடந்த காலங்களில் கல்முனைப் பிராந்தியத்தில் பாரியதொரு பிரச்சினையாக இருந்த கல்முனை வடக்கு பிரதேச முதலமைச்சர் சம்பந்தமாக உன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தோம் ஒரு வருட காலம் ஒரே நிலையில் இதுவரை தீர்வு இல்லாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.உண்ணாவிரதம் நிறைவடைந்து நான் விகாரைக்கு வரும்போதும் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் பல உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் வந்து  வாக்குறுதிகளை தந்துவிட்டுப் போன அந்த வாக்குறுதிகள்  பொய்யாகவே இருக்கின்றது. இன்றுவரை அந்த வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமல் இருப்பது எம்மை ஏமாற்றும் செயலாக இருக்கின்றது. அதேபோன்றுதான் சாய்ந்தமருது நகர சபை பிரச்சனை வழங்கப்பட்டு மூன்றும் தடுத்து நிறுத்தப்பட்டது மக்களுக்கு அனைத்தும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து.இந்த உண்ணாவிரதத்தில் சாகர் எனது உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதம் இருந்தவன். அந்த வகையில் நிச்சயம் அந்த  எனது உயிருள்ள வரை அதற்காக போராடுவேன்.இன மத கட்சி பேதமின்றி கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து போராட வேண்டும் ஒரு மதத்திற்கு மட்டுமான நோய் அல்ல என்பதை உணரவேண்டும். இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர கால சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அவசியமில்லை ஜனாதிபதியிடம் அதிகாரம் உள்ளது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு நன்மை தரக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதனால்  யாராவது ஒருவருக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டு மீண்டும் பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் நோய் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டார். #கொரோனா #வதந்தி #ஊரடங்கு   http://globaltamilnews.net/2020/139984/