Jump to content

2020: உலகை மிரட்டும் பலம்கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியல் வெளியானது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

The-5-most-powerful-armies-in-the-world.jpg

2020: உலகை மிரட்டும் பலம்கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியல் வெளியானது

உலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலரை தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்கின்றன.

இவ்வாறு, ஆயுதப் படைகளுக்கு மிக உயர்வான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆயுத வளத்தை அதிகரிப்பதற்காக பெருமளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இராணுவ வலிமையைக் கண்காணிக்கும் வலைத்தளமான குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) பின்வரும் ஐந்து நாடுகளின் படைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று கூறுகின்றது.

அவை இராணுவ வலிமை, நிதி முதல், தளவாட திறன் என்பவற்றுடன் ஒப்பிடப்பட்டு குறித்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

5) ஜப்பான்

The-5-most-powerfu-armies-in-the-world-Japan-5th.jpg

ஆசியாவில் வட கொரியாவின் கொந்தளிப்பான மண்டலத்துக்கு அண்மித்துள்ள பகுதியாக ஜப்பான் உள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட அதிநவீன ஆயுத பலத்துடன் கூடிய படையை அந்நாடு வைத்துள்ளது. குறித்த இராணுவ படையில் 247,160 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா தவிர வேறு எந்த நாட்டையும் விட ஜப்பானில் 152 சிறப்பு நடவடிக்கை விமானங்கள் உள்ளன. மேலும் 40 Destroyers கொண்ட கடற்படை உள்ளது. அத்துடன், 3,130 கவச வாகனங்கள், 1,004 டாங்கிகள் மற்றும் 119 தாக்குதல் ஹெலிகொப்டர்கள் ஜப்பானிடம் உள்ளன.

2020 ஆம் ஆண்டில் ஜப்பான் தனது இராணுவத்திற்காக 49 பில்லியன் டொலரை செலவழிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

4) இந்தியா

The-5-most-powerfu-armies-in-the-world-india-4th.jpg

காஷ்மீர் பிராந்தியத்தில் அருகிலுள்ள பாகிஸ்தானுடன் நீண்டகால பிராந்திய மோதலில் ஈடுபட்டுள்ள இந்தியா, 1,444,000 பேரை தனது ஆயுதப் படைகளில் இணைத்துள்ளது.

இந்தியாவிடம் 4,292 டாங்கிகள், 4,060 பீரங்கிகள் மற்றும் 538 போர் விமானங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன் உலகில் வளர்ந்துவரும் நாடாக உள்ளது.

இந்த ஆண்டு இந்தியா தனது இராணுவத்திற்காக 61 பில்லியன் டொலர் செலவழிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

3) சீனா

The-5-most-powerfu-armies-in-the-world-China-3rd.jpg

ஆசியாவின் மிக சக்தி வாய்ந்த நாடாகவும், வளர்ந்துவரும் நாடுகளில் அமெரிக்காவுக்கு கடும் போட்டியாக இருக்கும் சீனா இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

சீனாவின் இராணுவப் படையில் 2,183,000 பேர் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன் உலகில் அதிக வீரர்களைக் கொண்ட படையாக சீனா உள்ளது.

தென் சீனக் கடல் முழுவதும் பிராந்திய மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் சீனா சமீபத்திய ஆண்டுகளில் தனது கடற்படையை மேலும் தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது. சீனாவிடம் 74 நீர்மூழ்கிக் கப்பல்கள், 52 போர் கப்பல்கள் மற்றும் 36 Destroyers உள்ளது.

தரைப்படையில், சீனாவில் 33,000 கவச வாகனங்கள் மற்றும் 3,500 டாங்கிகள் உள்ளன. அவர்களது விமானப்படை 1,232 போர் விமானங்களையும் 281 தாக்குதல் ஹெலிகொப்டர்களையும் கொண்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் சீனா தனது ஆயுதப்படைகளுக்காக 237 பில்லியன் டொலர் செலவழிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2) ரஷ்யா

The-5-most-powerfu-armies-in-the-world-Russia-2nd.jpg

சமீபத்திய ஆண்டுகளில் சிரியா மற்றும் உக்ரைன் போர்க் களத்தில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, உலகின் பல்வேறு நாடுகளில் தனது டாங்கிகளை நிறுத்தியுள்ளது.

இதன்படி பல்வேறு நாடுகளிலும் 12,950 டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது அமெரிக்க இராணுவம் வைத்திருப்பதை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 27,038 கவச வாகனங்கள், 6,083 யுனிட் தானியங்கி பீரங்கிகள் மற்றும் 3,860 ரொக்கெட் புரொஜெக்டர்கள் (rocket projectors) உள்ளதுடன் 1,013,628 பேர் இராணுவப் படையில் உள்ளனர்.

ரஷ்யாவின் விமானப்படையில் 873 போர் விமானங்களும் 531 தாக்குதல் ஹெலிகொப்டர்களும் உள்ளன. கடற்படையில் 62 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 48 போர் கப்பல்கள் உள்ளன.

இந்த ஆண்டு ரஷ்யா தனது இராணுவத்திற்காக 48 பில்லியன் டொலர் செலவழிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1) அமெரிக்கா

The-5-most-powerfu-armies-in-the-world-America-1st.jpg

உலகில் மறுக்கமுடியாத இராணுவ சக்தியாக அமெரிக்கா முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

2,085 Fighters, 967 தாக்குதல் ஹெலிகொப்டர்கள், 945 போக்குவரத்து மற்றும் 742 சிறப்பு நடவடிக்கை விமானங்களைக் கொண்ட அமெரிக்காவில் பூமியின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான விமான அலகுகள் உள்ளன.

மேலும், 39,253 கவச வாகனங்கள், 91 கடற்படை Destroyers மற்றும் 20 விமானம் தாங்கிகள் ஆகியவற்றை அமெரிக்கா கொண்டுள்ளது. அமெரிக்கப் படையில் 1,400,000 வீரர்கள் பணியாற்றுகிறார்கள்.

2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவ வரவு செலவுத் திட்டத்திற்கு வொஷிங்டன் 750 பில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளது.

http://athavannews.com/2020-உலகை-மிரட்டும்-பலம்கொண்/

 

Link to comment
Share on other sites

2020 Military Strength Ranking

 

 

Global powers ranked by potential military strength.



The finalized Global Firepower ranking below utilizes over 50 individual factors to determine a given nation's PowerIndex ('PwrIndx') score with categories ranging from military might and financials to logistical capability and geography.

Our unique, in-house formula allows for smaller, more technologically-advanced, nations to compete with larger, lesser-developed ones and special modifiers, in the form of bonuses and penalties, are applied to further refine the annual list. Color arrows indicate year-over-year trend comparison (
Rise, Neutral, Fall).


Note: A perfect PwrIndx score is 0.0000 which is realistically unattainable in the scope of the current GFP formula; the smaller the PwrIndx value, the more powerful a nation's theoretical fighting capability is (by conventional means as nuclear capability is not taken into account).

Photographic image of the planet earth

https://www.globalfirepower.com/countries-listing.asp

 

Link to comment
Share on other sites

82 ஆவது இடத்தில் சிறிலங்கா ....

 

At a Glance
  • GDP 87B (USD)
  • GDP Growth: 3.3%
  • GDP per Capita: $4,100
  • Trade Balance/GDP: -2.6%
  • Population: 22.6M
  • Public Debt/GDP: 79%
  • Unemployment: 4.4%
  • Inflation: 6.5%
Link to comment
Share on other sites

New and Latest Global Super  Power-  Covid 2019

Power Index (PwrIndx):0.00023

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

82 ஆவது இடத்தில் சிறிலங்கா ....

 

At a Glance
  • GDP 87B (USD)
  • GDP Growth: 3.3%
  • GDP per Capita: $4,100
  • Trade Balance/GDP: -2.6%
  • Population: 22.6M
  • Public Debt/GDP: 79%
  • Unemployment: 4.4%
  • Inflation: 6.5%

இவ்வளவு பிரச்சனை நடந்தும் இலங்கை 82 ம் இடத்திற்கு வந்தது ஆச்சரியம் அளிக்கிறது...வாழ்த்துக்கள் மெம் மேலும் முன்னேறி வர வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இவ்வளவு பிரச்சனை நடந்தும் இலங்கை 82 ம் இடத்திற்கு வந்தது ஆச்சரியம் அளிக்கிறது...வாழ்த்துக்கள் மெம் மேலும் முன்னேறி வர வேண்டும் 

இந்த பட்டியல் நாடுகளின் ராணுவச் சூட்டுவலு (இயலுமை) பற்றியது.

இந்த பட்டியலில் இருக்கும் நாடுகள் இருவகை.

1. சுயமாக ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் ஆயுதவியாபார நாடுகள் - இவற்றின் சூட்டுவலு பெரும்பாலும் தன்னிறைவானது. இவற்றில் ஆயுத வியாபாரம் அந்நிய செலாவணியை ஈட்டும் துறைகளில் ஒன்று.

2. ஆயுதங்களை கடனுக்கு/ விலைக்கு வாங்கி சூட்டுவலுவை கூட்டும் நாடுகள். இந்த நாடுகளில் கொக்கு சுடும் துவக்கு கூட தயாராவதில்லை. ஆயுத கொள்வனவிலேயே நாட்டின் வழங்கள் முழுவதையும் செலவழித்து விட்டு, உலக வங்கி முதல் ஊரெல்லாம் கடன் பட்டு சுண்டைகாய் நாடாக இருந்தாலும் சுரைகாய் ரேஞ்சுக்கு படையை மட்டும் ஊதி பெருத்து வைத்திருக்கும். இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இப்படி.

இதில் பெருமைப் பட என்ன இருக்கிறது. இந்த பணத்தை மக்கள் பயன்படுத்தும் கல்வி, மருத்துவ துறைகளில் முதலிட்டால். அது பெருமை.

இப்படி விழலுக்கு ஊதி பெருத்த இலங்கை அரச படைகள் மோதி வென்ற ஒரு வெளிநாட்டுப்படை ஏதும் உண்டா? பிறகு ஏன் வெத்து பெருமை?

Link to comment
Share on other sites

10 minutes ago, goshan_che said:

இப்படி விழலுக்கு ஊதி பெருத்த இலங்கை அரச படைகள் மோதி வென்ற ஒரு வெளிநாட்டுப்படை ஏதும் உண்டா? பிறகு ஏன் வெத்து பெருமை?

ஐ.நா. அமைதிப்படையில் இருந்து அந்நிய செலவாணியை பெற்றுத்தருகிறார்களே ? அதுவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிதான் 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இந்த பட்டியல் நாடுகளின் ராணுவச் சூட்டுவலு (இயலுமை) பற்றியது.

இந்த பட்டியலில் இருக்கும் நாடுகள் இருவகை.

1. சுயமாக ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் ஆயுதவியாபார நாடுகள் - இவற்றின் சூட்டுவலு பெரும்பாலும் தன்னிறைவானது. இவற்றில் ஆயுத வியாபாரம் அந்நிய செலாவணியை ஈட்டும் துறைகளில் ஒன்று.

2. ஆயுதங்களை கடனுக்கு/ விலைக்கு வாங்கி சூட்டுவலுவை கூட்டும் நாடுகள். இந்த நாடுகளில் கொக்கு சுடும் துவக்கு கூட தயாராவதில்லை. ஆயுத கொள்வனவிலேயே நாட்டின் வழங்கள் முழுவதையும் செலவழித்து விட்டு, உலக வங்கி முதல் ஊரெல்லாம் கடன் பட்டு சுண்டைகாய் நாடாக இருந்தாலும் சுரைகாய் ரேஞ்சுக்கு படையை மட்டும் ஊதி பெருத்து வைத்திருக்கும். இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இப்படி.

இதில் பெருமைப் பட என்ன இருக்கிறது. இந்த பணத்தை மக்கள் பயன்படுத்தும் கல்வி, மருத்துவ துறைகளில் முதலிட்டால். அது பெருமை.

இப்படி விழலுக்கு ஊதி பெருத்த இலங்கை அரச படைகள் மோதி வென்ற ஒரு வெளிநாட்டுப்படை ஏதும் உண்டா? பிறகு ஏன் வெத்து பெருமை?

ஏன் போய் வெளிநாட்டோடு தேவையில்லாமல் சண்டை பிடிக்க வேண்டும்?....இலங்கை அரசு இலவச  கல்வி ,மருத்துவம் எல்லாம் கொடுத்து கொண்டு தான் இருக்கு ...நீங்கள் அங்கத்தைய அரசின் ,மக்களது வரிப் பணத்தில் படிச்சுப் போட்டு இங்க ஓடி வந்து இங்க சேவை செய்து கொண்டு இருக்கிறீர்கள்[இங்கத்தைய அரசு உங்கள் படிப்பிற்கு என்ன செலவு செய்தது?] ...எனக்கு உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் எனது நாடு 82ம் இடத்தில் இருப்பது சந்தோசம்...உங்களுக்கு பிடிக்காட்டில் மூலையில் போய் இருந்து கொண்டு அழுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

ஏன் போய் வெளிநாட்டோடு தேவையில்லாமல் சண்டை பிடிக்க வேண்டும்?....இலங்கை அரசு இலவச  கல்வி ,மருத்துவம் எல்லாம் கொடுத்து கொண்டு தான் இருக்கு ...நீங்கள் அங்கத்தைய அரசின் ,மக்களது வரிப் பணத்தில் படிச்சுப் போட்டு இங்க ஓடி வந்து இங்க சேவை செய்து கொண்டு இருக்கிறீர்கள்[இங்கத்தைய அரசு உங்கள் படிப்பிற்கு என்ன செலவு செய்தது?] ...எனக்கு உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் எனது நாடு 82ம் இடத்தில் இருப்பது சந்தோசம்...உங்களுக்கு பிடிக்காட்டில் மூலையில் போய் இருந்து கொண்டு அழுங்கோ 

இலங்கையில் நான் இலவசக் கல்வியை கற்கவில்லை. எனக்கும் என் கூடப் படித்த குறைந்தது நாலு பேருக்குமாவது சேர்த்து என் பெற்றார் வரி கட்டினார்கள் 😂

ஆனால் நான் இலங்கையினை குறைவாக சொல்லவில்லை. 

இந்த பட்டியலில் வருவது ஒன்றும் நல்ல விடயமே இல்லை. இந்த பட்டியலில் இருக்கும் வளர்ந்த நாடுகளை தவிர்த்து, ஏனையவற்றை பாருங்கள் - எல்லாமே ராணுவ தலையீடு அதிகம் உள்ள நாடுகள். 

இந்த போக்கு இலங்கைக்கு உகந்ததல்ல என்பதே நான் சொல்ல வந்தது. குறிப்பாக 2009 ற்கு பின், ஒரு நல்ல தலைவர் ஜனாதிபதியாகி இருந்தால் - ராணுவ செலவீனத்தை அரைவாசியாக்கி அதை நாட்டின் வளர்சிக்கு திருப்பி இருப்பார்.

ஆனால் என்ன செய்வது - இலங்கையில் உள்ள பல வாக்காளரும் -உங்களை போல இருப்பதால் - எந்த தலைவரும் இப்படி செய்யவில்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.