• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம்?

Recommended Posts

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம்?

February 24, 2020

corona-1-800x300.jpg

கொரோனா வைரஸ் இலங்கையில்  பரவக்கூடிய அபாயம் நிலவுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்கும்   பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வரை, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டனர்.

கொரோனா பரவும் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து தென்கொரியாவின் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைமை அதிகாரி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.

 

http://globaltamilnews.net/2020/137379/

Share this post


Link to post
Share on other sites
Quote

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம்?

ஏதாவது வருத்தம் துன்பங்கள் அழிவுகள் வந்தால் தான் சிங்கள அரசுக்கு வருமானம் வரும்.....ஐ மீன் சர்வதேசத்திட்டை உதவி எண்ட பெயரிலை வறுகலாம்.😎

Share this post


Link to post
Share on other sites

கொரோனாவோ கோதாரியோ தென்னிலங்கை பக்கமா வந்து தொலைக்கட்டும்.வடகிழக்கு மாகாணங்கள் வரட்சியான பூமி.வைரஸ் வாழ தோதுப்படாது.தென்னிலங்கை குளிர்ச்சியான பிரதேசம். வைரஸ் வைரலாக வசதியாய் இருக்கும். நாங்கள் ஏற்கனவே அழிஞ்சொலிஞ்சு கையறு நிலையி நிக்கிறோம். இதுக்குள்ள இது வேற......!  🤔

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, suvy said:

கொரோனாவோ கோதாரியோ தென்னிலங்கை பக்கமா வந்து தொலைக்கட்டும்.வடகிழக்கு மாகாணங்கள் வரட்சியான பூமி.வைரஸ் வாழ தோதுப்படாது.தென்னிலங்கை குளிர்ச்சியான பிரதேசம். வைரஸ் வைரலாக வசதியாய் இருக்கும். நாங்கள் ஏற்கனவே அழிஞ்சொலிஞ்சு கையறு நிலையி நிக்கிறோம். இதுக்குள்ள இது வேற......!  🤔

அண்ணே இப்படியெல்லாம் சாபம் போடாதேயுங்கோ அண்ணே। நாங்கள் எல்லாம் இந்தப்பக்கம்தான் இருக்கிறோம் அண்ணே। இந்த கொள்ளை நோய் இலங்கைக்கு வந்தால் தாக்குபிடிக்காது நமது நாடு। 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this