Jump to content

அடுத்த தேர்தலில் தமிழர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் தமிழர்கள்

என்.கே. அஷோக்பரன்   / 2020 பெப்ரவரி 24

இன்னொரு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், நிறைவுக்கு வருகின்றது என்று எதிர்பார்க்கலாம். 

ஆளும் அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைத் தனது விருப்பின்படி கலைக்கக்கூடிய அதிகாரம், நாடாளுமன்றத்தின் பதவிகாலத்தில், நான்கரை வருடங்கள் பூர்த்தியானதன் பின்னரே வரும் என்ற அடிப்படையில், மார்ச் மாதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். 

அதன் மூலம், பொதுத் தேர்தலைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை, முடிந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதே, ராஜபக்‌ஷக்களின் நிச்சயமான திட்டம் என்பதில் ஐயமேதும் இருக்க முடியாது. 

ராஜபக்‌ஷக்கள் மீண்டும் ஆட்சிப்படியேறிய, ஏறத்தாழ நான்கேகால் மாதங்களில், ஆக்கபூர்வமாக எதுவும் நடந்திராத நிலையில், இலங்கையானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை இணை-அனுசரணை வழங்கியிருந்த இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து விலகியிருக்கிறது. 

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான, யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் நிமித்தமாக அவரும், அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்வதற்கு, அமெரிக்க அரசு விதித்த தடையின் எதிரொலியாகவே, குறித்த தீர்மானத்திலிருந்து விலகுவதாக, ராஜபக்‌ஷக்கள் தலைமையிலான இலங்கை அறிவித்திருந்தது. 

ராஜபக்‌ஷக்கள் தலைமையிலான இலங்கையின், இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள், சர்வதேச அளவில் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. குறிப்பாக, மேற்கு நாடுகளுடனான அவர்களது பரஸ்பர அதிருப்தி, நம்பிக்கையீனம் தொடர்ந்து கொண்டிருப்பதை, நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

ஆனால், உள்ளூர் வாக்குவங்கியைப் பொறுத்தவரையில், தம்மை நோக்கி வீசப்படும் எல்லாப் பந்துகளையும் அவர்கள் இதுவரை, எல்லைக் கோட்டுக்கப்பால் உந்தியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். 

மிக முக்கிய தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில், சவேந்திர சில்வா மீதான பிரயாணத் தடையை அமெரிக்கா அறிவித்தது, ராஜபக்‌ஷக்களுக்கு உள்ளூர் வாக்குவங்கி மட்டத்தில் மிகச் சாதகமானதே. 

இது, ராஜபக்‌ஷக்களின் தேர்தல் நலனுக்காக, அமெரிக்கா வேலை செய்கிறதா என்ற ஐயத்தையும், ஏனைய எதிர்க்கட்சியினரிடையே, ஏற்படுத்தாமல் இல்லை. 

எதிர்வரும் தேர்தலில், யுத்த வெற்றி வீரர்களாக மட்டுமல்ல, வல்லரசான அமெரிக்காவையே எதிர்க்கும் மாவீரர்களாக, ராஜபக்‌ஷக்கள் முன்னிறுத்தப்பட்டாலும், நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதுபோலவே, இம்முறை ராஜபக்‌ஷக்கள், தமது வாக்குவங்கி எது என்பதில் மிகத் தௌிவாக இருக்கிறார்கள். 

‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைத் திருப்தி செய்தாலே போதும்; தாம் தொடர்ந்தும் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதே அவர்களது அரசியல் தந்திரோபாயமாக மாறியிருக்கிறது. 

சிறுபான்மையினரை மகிழ்வூட்டும் (minority pleasing) நடவடிக்கைகளைக் கூட அவர்கள் செய்யத் தயாராக இல்லை. கிடைக்கும் திருப்பங்களிலெல்லாம், தமது வாக்குவங்கியைப் பலப்படுத்தம் முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். 

தமிழில் தேசிய கீதம் பாடாததிலிருந்து, வடக்கில்கூட பெயர்ப்பலகையில் முதலில் சிங்களம் இடம்பெறுமாறு மாற்றியமைத்ததிலிருந்து, ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்திலிருந்து விலகியது என, தமது சிங்கள-பௌத்த வாக்குவங்கியைத் திருப்திசெய்வதில், அவர்கள் தௌிவாக இருக்கிறார்கள்.  

மறுபுறத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. 

தலைமைத்துவச் சண்டை என்பது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. 

இன்று, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்ற நிலையில், எதிர்வரும் தேர்தலை ஐ.தே.க, தனது ஆதரவுக் கட்சிகளுடன் கூட்டணியாகச் சந்திக்க இருக்கிறது. 

இந்தத் தேர்தலுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியின் பெயர், சின்னம், செயலாளர்கள் என்று எதுவுமே திட்டவட்டமாக இல்லாத குழப்பகர நிலை உருவாகியிருக்கிறது.   

மறுபுறத்தில், இதுவரைகால ரணிலின் அணுகுமுறையிலிருந்து, மாறியதோர் அணுகுமுறையாக, சஜித்தின் அணுகுமுறை அமையும் என்பதற்கான சமிக்ஞைகள் மிகத் தௌிவாகத் தெரிகின்றன. 

சவேந்திர சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் பிரயாணத்தடையைக் கண்டித்து, சஜித் பிரேமதாஸ விடுத்திருந்த அறிக்கையானது, கடந்த தேர்தலில் அவரை ஆதரித்திருந்த தமிழர்களையும் தாராளவாதிகளையும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருந்தமையை நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 

இதுபற்றி, ஐ.தே.கவின் ஏனைய பிரதான தலைவர்கள், மௌனமாக இருந்த நிலையில், சஜித் மட்டும் கண்டித்தமை, ஏற்கெனவே பலமிழந்துள்ள ஐ.தே.கவின் வாக்குவங்கி, இன்னும் பலமிழந்துவிடுமோ என்ற அச்சத்தை, சிலரிடையே ஏற்படுத்தி இருக்கிறது. 

இருந்தபோதிலும், பெரும்பான்மை, சிங்கள-பௌத்த வாக்குவங்கியைத் திருப்தி செய்தால் மட்டுமே, ஒரு பிரதான கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். ஆகவே, சஜித்தின் அணுகுமுறையானது மிகச் சரியானது என்ற கருத்துகளையும் சிலர் முன்வைப்பதையும்  அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

ஆகவே, சஜித் பிரேமதாஸவும் பெரும்பான்மையினரை மகிழ்வூட்டும், அதாவது சிங்கள-பௌத்த வாக்குவங்கியை மகிழ்வூட்டும் அணுகுமுறையையே கையாள்கிறார் என்பது, அவர் திரைவிலகி, தலைமைத்துவ முன்னரங்குக்கு வரவர, இன்னமும் தௌிவாகிக் கொண்டேயிருக்கும். 

தமிழ் மக்களும் பொதுத் தேர்தலும்  

இந்தச் சூழலில்தான், தமிழ் மக்களும் இன்னொரு பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார்கள். 
ஆனால், இம்முறை தமிழ் மக்களின் ‘ஏக’ பிரதிநிதிகள் யார் என்ற போட்டி, பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது. இந்த இடத்தில்தான், தமிழ் மக்கள் நின்று நிதானமாக யோசித்து, முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது எனலாம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்படும், தமிழரசுக் கட்சியுடனான, டெலோ, புெளாட்டின் தேர்தல் கூட்டானது, இன்று தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மை முன்னிறுத்தி நிற்கிறது. 

தமிழரசுக் கட்சிக்கு இதுவரை காலமும் இருந்த பெருந்துணை, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகும். தமிழரசுக் கட்சித் தலைமைகளுக்கு ரணிலுடன் இருந்த நெருக்கமும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்த, இயைந்து இயங்கிச் செல்லத்தக்க உறவும், சிற்சில காரியங்களை, அவர்களால் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆனால், ரணிலிடமிருந்து அவர்கள் தமிழ் மக்களுக்காகப் பெற்றுக்கொண்ட விடயத்தைவிட, ரணிலுக்காக அவர்கள் செய்த விடயங்கள் நிறைய இருக்கின்றன. 

2018ஆம் ஆண்டு, 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின் போது, நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் தமிழரசுக் கட்சி, ரணிலுக்கும் இந்த நாட்டுக்கும் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. 

ஆனால், அதற்கான நன்றிக்கடனின் பலாபலன், தமிழ் மக்களுக்குக் கிடைத்ததா என்றால், “இல்லை” என்பதே உண்மையாகும். 

அன்று, சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, டட்லி சேனநாயக்கவின் ஆட்சியைக் காப்பாற்றியது போலவே, இன்று இராஜவரோதயம் சம்பந்தன், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, ரணிலின் ஆட்சியைக் காப்பாற்றினார். 

 ஆனால், அதனால் தமிழரசுக் கட்சிக்கோ, தமிழ் மக்களுக்கோ அன்றும் எந்த நன்மையும் நடக்கவில்லை; இன்றும் நடக்கவில்லை. இதைக் குறிப்பிடுவது, அவர்களது முயற்சிகளைக் கொச்கைப்படுத்த அல்ல; மாறாக, வரலாறு மீண்டுகொண்டிருக்கிறது என்பதை உணர்த்தவே ஆகும்.

ஒரே அணுகுமுறையை, மீண்டும் மீண்டும் கையாண்டுகொண்டு, வேறுபட்ட முடிவை எதிர்பார்ப்பது, எங்ஙனம் என்ற கேள்வியும், இங்கு எழாமல் இல்லை. 

அன்று, செல்வநாயகம் எதிர்க்கட்சியில் இருந்து, டட்லிக்கு ஆதரவு வழங்கிய பின், அடுத்த தேர்தலில் சிறிமாவோவும் அவரது தோழர்களும் ஆட்சிக்கு வந்து, அரசமைப்பை மாற்றி, தனிச்சிங்களச் சட்டத்தின் தாற்பரியத்தைப் புதிய அரசமைப்புக்குள்  ஏற்றினார்கள். 

தனிச்சிங்களத்துக்கு,  அரசமைப்பு அந்தஸ்தை வழங்கி, பௌத்தத்துக்கு அரசமைப்பு ரீதியாக முன்னுரிமை வழங்கி, பல்கலைக்கழக அனுமதிகளில் தரப்படுத்தலைக் கொண்டுவந்து முற்றிலும் தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகள், நசுக்காக அரங்கேற்றப்பட்டன. 

இது தொடர்பில், எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில்தான், அன்றைய தமிழ்த் தலைமைகள் இருந்தார்கள். அன்று, டட்லிக்குப் பின், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடமேறிய ஜே.ஆரின் அணுகுமுறை, டட்லியிலிருந்து வேறுபட்டதாகவும் பெருந்திரள்வாதப் போக்குடையதாகவும், மேற்குலகு சார்புடையதாகவும், திறந்த பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவும், அபிவிருத்தி தொடர்பான பகட்டாரவாரப் பேச்சைக் கொண்டதாகவும் பெரும்பான்மை வாக்கு வங்கியைக் கவர்ந்திழுப்பதாகவும் அமைந்திருந்தது. 
ஏறத்தாழ, இதுபோன்ற ஒரு நிலையைத்தான் இன்றும் நாம் எதிர்கொள்கிறோம்.   

ஆனால், அன்று ஒருவருக்கொருவர் ஆழந்த வைரிகளாக இருந்த தமிழ்த் தலைமைகள், அந்தக் கையறு நிலையை எதிர்கொள்ள, தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து, ஒன்று பட்டன என்பது, நாம் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியதொன்று. 

மீண்டும், ஜீ.ஜீ. பொன்னம்பலமும் சா.ஜே.வே. செல்வநாயகமும் ஒன்றிணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணியாக (பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி) ஒரு தளத்தில், தமிழ்த் தேசியக் கொள்கையை மய்யமாக நிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியலை ஒன்றிணைத்தமையானது தன்னலமற்ற, தமது மக்கள் நலன்சார்ந்த பெரும் நடவடிக்கை ஆகும். 

ஆனால், இன்று தமிழ்த் தலைமைகளும் அவர்களது கட்சிகளும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? 

இருக்கின்ற ஒற்றுமையைச் சிதைத்து, புதிய உதிரிக் கட்சிகளையும் கூட்டணிகளையும் தமது சுயநலத்துக்காகவும் சுயலாபத்துக்காகவும் உருவாக்கிக் கொண்டும், மறுபுறத்தில், விட்டுக்கொடுப்புகள் மூலம் ஒற்றுமையை உருவாக்காமல், கொள்கையிலிருந்து விலகித் தமது தனிப்பட்ட நலன்களுக்காகத் தமிழ் மக்களைத் திக்குத்தெரியாத அரசியல் சூனியத்துக்குள் தள்ளும் கைங்கரியத்தையே தமிழ்த் தலைமைகள் எனப்படுவோர் செய்துகொண்டிருக்கிறார்கள். 

‘கூட்டணி’ என்பது கட்சிகள் ஒன்றிணைவதைக் குறிப்பதாக இருந்தது. இன்று, தனிநபர்கள் ஒன்றிணைவது ‘கூட்டணி’ என்பதாக மாறியுள்ளது. 

தனிநபர் கம்பனிகள் போல, ஆளுக்கொரு கட்சியைத் தொடங்கிக் கொண்டு, கூட்டணி அமைக்கிறார்கள். ஏன், எதற்கு, தமிழ் மக்களுக்கு இதனால் என்ன நன்மை, தமிழ்த் தேசியத்துக்கு என்ன நன்மை என்று சிந்திப்பார்கள் இல்லை. 

இவற்றைச் சுட்டிக்காட்டுவதால், ஒற்றுமை என்பதை அடைந்து கொள்வதற்காக, கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதாய் பொருள்கொண்டு விடக்கூடாது. ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை நேசிப்பவர்கள், அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒரே அணியில் திரள முடியாது இருப்பதற்கு, நிச்சயமாகத் தனிப்பட்டதும் சுயநல காரணங்களுமே தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 

இவர்கள் எவருமே, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை எதிர்க்கவில்லை; ஆதரிக்கிறார்கள் என்றால், எந்த அடிப்படைகளில் தாங்கள் பிரிந்து நிற்கிறோம் என்பதை, தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்ல வேண்டுமல்லவா? 

அது, இவர்களின் சுயநலம், பதவி ஆசை என்பவற்றைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?  
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-தேர்தலில்-தமிழர்கள்/91-245936

Link to comment
Share on other sites

‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைத் திருப்தி செய்தாலே போதும்; தாம் தொடர்ந்தும் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதே அவர்களது அரசியல் தந்திரோபாயமாக மாறியிருக்கிறது.

சிறுபான்மையினரை மகிழ்வூட்டும் (minority pleasing) நடவடிக்கைகளைக் கூட அவர்கள் செய்யத் தயாராக இல்லை. கிடைக்கும் திருப்பங்களிலெல்லாம், தமது வாக்குவங்கியைப் பலப்படுத்தம் முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

தமிழில் தேசிய கீதம் பாடாததிலிருந்து, வடக்கில்கூட பெயர்ப்பலகையில் முதலில் சிங்களம் இடம்பெறுமாறு மாற்றியமைத்ததிலிருந்து, ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்திலிருந்து விலகியது என, தமது சிங்கள-பௌத்த வாக்குவங்கியைத் திருப்திசெய்வதில், அவர்கள் தௌிவாக இருக்கிறார்கள்

இது தமிழர் தரப்பு பிரிவினை வாதத்திற்கு வலுச்சேர்க்கும் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதை ஒன்று; பயணங்கள் வேறுவேறு

என்.கே. அஷோக்பரன்   / 2020 மார்ச் 02 

தமிழர்களும் அடுத்த தேர்தலும் [பகுதி-02]

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியலில், வியத்தகு விடயம் ஒன்றிருக்கிறது. இங்கு ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்ட அரசியல் கட்சிகள் எதுவுமே, சித்தாந்த ரீதியில் தமிழர்களது அடிப்படை அபிலாசைகள் விடயத்தில், திம்புக் கோட்பாடுகளை மறுப்பதில்லை.   

திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலான ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்ற கொள்கைகள், தமிழ்த் தேசியத்தின் அடிநாதமாக மாறியிருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும், ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்று உச்சரித்தாலும், உச்சரிப்பைத்தாண்டி, ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்பதை, அவர்கள் அணுகும் முறையும் சுவீகரித்துக்கொள்ளும் விதமும் அதற்கு வழங்கும் முக்கியத்துவமும் கட்சிகளிடையே வேறுபாட்டை ஏற்படுத்தி இருக்கின்றன.   

ஒவ்வொரு மதத்துக்கும், அதற்குரிய அடிப்படை வேதமுண்டு. ஆனால், தம்மை அந்த மதத்துக்கு உரியவர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும் அனைவரும், அதன் வேதத்தை அணுகும் முறை வேறுபட்டது.   

சிலர், வேத நூலைத் தொட்டு வணங்குவதுடன் நிறுத்திக்கொள்வர்; சிலர், வேத நூலிலுள்ள ஒரு சில வரிகளைப் படிப்பதுடன் நிறுத்திக்கொள்வர்; சிலர், வேதங்களை முழுமையாகப் பாராயணம் செய்வர்.   

இதுபோலவே, இன்றைய தமிழ்த் தேசிய கட்சிகளின் ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ தொடர்பிலான அணுகுமுறையும் ஆளுக்காள் வேறுபட்டிருக்கிறது.   

தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்துமே, ‘தாயகம், தேசியம், சுயநிர்யணம்’ என்ற அடிப்படை மந்திரத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அந்த மந்திரம் பற்றி அவர்களது அணுகுமுறையும் புரிதலும் அதற்கு வழங்கும் முக்கியத்துவமும் வேறுபட்டன.   

இதுவும், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைவதில் உள்ள பெருஞ்சவால்மிகு தடையாக மாறியிருக்கிறது.  

2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்னர், ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் எழுதியிருந்த பத்தியொன்றில், ‘தமிழ் மக்கள் ஒரு தனித் தேசம் என்றும் அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உள்ளது என்றும் அவர்களுக்கெனத் தாயக பூமி உள்ளது என்றும் அங்கிகரிக்கப்படத்தக்கதான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே, தமது கொள்கை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாதிடுகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றுக்கே வழிசமைப்பதாகக் குற்றமும் சாட்டுகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அவர்கள் சித்தாந்த ரீதியாக இதைப் பெரிதளவில் மறுப்பதில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, வேட்பாளர்களின் அறிக்கைகள், பேச்சுகள் பலதும் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் என்பவனவற்றைத் தாங்கியே வருகிறது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஏனையவர்களினதும் குற்றச்சாட்டானது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கொள்கையாக இதைப் பிரகடனப்படுத்தினாலும் இதை அடையப் பெறுவதற்கு, எவ்விதமான காத்திரமான எத்தனிப்பையும் செய்யவில்லை என்பதுடன், தென்னிலங்கை அரசியல் சக்திகளினதும் இந்தியா உட்பட்ட சர்வதேச நாடுகளினதும் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப, தமது அரசியலைச் செய்கிறார்கள் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தமை நினைவுக்கு வருகிறது.   

இன்று, ஏறத்தாழ ஐந்து வருடங்கள் கழித்தும் இந்த நிலையில் மாற்றமில்லை. ஆனால், 2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்னிருந்த அரசியல் களத்திலிருந்து, சமகால அரசியல் களம் மாறியிருக்கிறது.  

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் என்பது, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவின் தோல்வியின் பின்னர், இடம்பெற்ற பொதுத் தேர்தலாகும்.   

அன்று, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவோடு ஏற்பட்ட அந்த மாற்றம், சாத்தியமான தீர்வு ஒன்றை அடையப் பெற முடியும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களிடம் விதைத்திருந்தது.   

அத்தகைய தீர்வு ஒன்று பெறப்பட வேண்டுமானால், அது தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்படியேறிய நல்லாட்சி அரசாங்கத்துடனான இணக்கத்துடனேயே சாத்தியம் என்ற அடிப்படையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறை அமைந்திருந்தது என்பதுடன், தமிழ் மக்களின் ஆதரவும் அதே அடிப்படையில் அமைந்திருந்தது.   

ஆனால், ‘நல்லாட்சி’ மூலம், தமிழ் மக்கள் எதிர்பார்த்த நன்மைகளைத் தமிழ் மக்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அத்துடன், எவ்வளவு ஆதரவாக நடந்துகொண்டாலும், அரசாங்கத்தின் பதவியைக் காப்பாற்றிக் கொடுத்த போதிலும், தமக்கு வேண்டிய காரியத்தைத் தாம் வலுச்சேர்த்த, தாம் காப்பாற்றிய அரசாங்கத்தின் மூலம் சாதித்துக்கொள்ளத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் முடியவில்லை என்பது துரதிர்ஷ்டமாகவே எண்ண வேண்டியுள்ளது.    

வரலாறு மீளும் என்பது, பொதுவாகக் கூறப்படுகின்ற ஒன்று. இது பற்றிய தன்னுடைய நூலொன்றில் கருத்துரைக்கும் ஜீ.டபிள்யூ. ட்ரொப்ப், ‘எதிர்கால நடவடிக்கைகளுக்கான பாடத்தைக் கடந்தகாலம் கற்றுத்தருகிறது. முன்னர் நடந்த வகையிலான நிகழ்வுகள், மீள நடக்கும்’ என்றும் குறிப்பிடுகிறார்.   

தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது போனாலும், வௌியிலிருந்து அரசாங்கத்தை இரண்டு முறை தமிழர் தரப்புக் காப்பாற்றி இருக்கிறது.   

முதலாவது, 1965 - 1970 டட்லி ஆட்சியில், அதையே மீண்டும் 2015-2019 வரை ரணில் ஆட்சியில், தமிழரசுக் கட்சி செய்திருக்கிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், தமிழ் மக்கள் ‘ஏமாற்றப்பட்டார்கள்’ என்று சொன்னால் அது மிகையல்ல.  

டட்லியின் ஆட்சிக்குப் பின்னர், அரசியல் களம் எப்படி மாறியதோ, அதுபோலவே தற்போது, அரசியல் களம் மாறியிருக்கிறது. மாறிய அரசியல் களத்துக்கு ஏற்ப, தமிழ் மக்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் வருவது, தவிர்க்க முடியாததாகிறது.   

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழ், இலங்கை இணை-அனுசரணை வழங்கிய, இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து விலகுவதாக, ராஜபக்‌ஷக்களின் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.   

‘நல்லாட்சி’ அரசாங்கம், குறித்த தீர்மானத்தின் கீழான தனது கடப்பாடுகளை நிறைவேற்றாது, ஒவ்வொரு முறையும் காலநீட்டிப்புக் கேட்டு நின்ற போது, அதற்கு ஆதரவு கொடுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனப்படும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் தற்போது மாறியிருக்கிறது.   

இது பற்றி, அண்மையில் சுரேஷ் பிரேமசந்திரன் வௌியிட்ட விமர்சனத்தில், “கடந்த நான்கரை வருட‍ங்களாக, சுமந்திரன் அரசாங்கத்துக்குக் கால அவகாசத்தை வேண்டிக் கொடுத்துக்கொண்டு இருந்தவர், இப்போது திடீரெனப் போய், விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்கிறார். இவ்வளவு காலமும் அவ்வாறான ஒரு தொனியில் அவர் பேசவில்லை. தேர்தல் வருகின்றது என்பதால்தான், இந்தத் தொனி மாறுகின்றது. அதேவேளையில், ஐ.தே.க ஆட்சியிலிருந்தால் ஒரு விதமாகவும் பொதுஜன பெரமுன ஆட்சி என்றால் இன்னொரு விதமாகவும் இந்தப் பிரச்சினையை அவர் கையாள முற்படுகின்றாரா என்ற கேள்வியும் எழுகின்றது. இப்போது சுமந்திரன், ஜெனீவா சென்றிருப்பதும் பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் அறிக்கைகளும் தேர்தலை நோக்கமாகக் கொண்டதாகவே தெரிகின்றது’ என்று குறிப்பிட்டிருந்தார்.  

தேர்தல் நெருங்கும் வேளைகளில், தமிழரசுக் கட்சியினரின் தமிழ்த் தேசிய ‘ஹோர்மோன்’கள் அதிகமாகச் சுரப்பது, வரலாற்றுக்குப் புதியதொன்றல்ல. செல்வநாயகம் காலம், பின்னர் அமிர்தலிங்கம் காலம் எனப் பகட்டாரவாரப் பேச்சுகளால் மட்டுமே கட்டியெழுப்பப்பட்ட பாசறை அது.   

ஆனால், சுமந்திரனின் கருத்து, மாற்றத்தை வெறும் தேர்தலுக்கான உத்தியாக மட்டும் கருதிவிட முடியாது. அது, மாறியுள்ள அரசியல் களத்தின் விளைவும்தான்.   

“டட்லி சேனநாயக்க நல்ல மனிதன்; அவரோடு இணங்கி, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொண்டுவிட முடியும்” என்று, எப்படிச் செல்வநாயகமும் திருச்செல்வமும் நம்பினார்களோ, அப்படித்தான், “ரணில் விக்கிரமசிங்க நல்ல மனிதன்; அவரோடு இணங்கி, நாம் சில அடைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று சம்பந்தனும் சுமந்திரனும் நம்பினார்கள்.   

ஆனால், இரண்டு நம்பிக்கைளும் பொய்த்துப்போய் விட்டன. டட்லி சேனநாயக்கவுடனான அணுகுமுறையையே, சிறிமாவுடன் கையாள முடியவில்லை. ஏனென்றால், தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்துதல் என்ற எண்ணமே, சிறிமாவிடம் இருக்கவில்லை.   

கிட்டத்தட்ட, இதுபோன்ற சூழல்தான் இன்றும் காணப்படுகின்றது. தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம், இன்றைய சூழலில் ராஜபக்‌ஷக்களிடம் இல்லை. ஆகவே, மாறியுள்ள களச் சூழலை, வேறுவகையாகவே எதிர்கொள்ள வேண்டிய தேவை, தமிழரசுக் கட்சிக்கு இருக்கிறது.  

2015இல், தான் முன்னெடுத்த கைங்கரியத்தில், தமிழரசுக் கட்சி தோல்வி கண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். ஆங்காங்கே, ஒரு சில நன்மைகள் விளைந்திருக்கலாம். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் காப்பாற்றி, தமிழரசுக் கட்சி தனது, நல்லெண்ணத்தைக் காட்டியிருக்கலாம்; மேற்கையும் இந்தியாவையும் திருப்தி செய்திருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2015இல் தமிழ் மக்களுக்கு என்ன வாக்குறுதிகள் வழங்கப்பட்டனவோ, தமிழ் மக்கள் எந்த எதிர்பார்ப்பில் வாக்களித்திருந்தார்களோ, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் தேர்தல், தமிழரசுக் கட்சிக்கு இலகுவானதொன்றாக இருக்காது.  

2015இல் தமிழரசுக் கட்சியின் பிரதான வைரிகளாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இருந்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ‘பூகோள அரசியல்’ அணுகுமுறையை, இலங்கை மீது சர்வதேசக் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து, இணக்கமான ‘மென்வலு’ அரசியலை முன்னிறுத்திய தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்கள் அமோகமான ஆதரவை வழங்கியிருந்தனர்.   

ஆனால், இந்த நிலை இம்முறை தேர்தலில் தொடரும் என்று சொல்ல முடியாது. 2018ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை அவதானித்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாக்குகள், கணிசமானளவில் அதிகரித்திருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  

இன்றைய அரசியல் களத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சொல்வதற்கு மாறான கருத்தைக் கூட, சொல்ல முடியாத சூழல்தான், தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏறத்தாழ ஒரு தசாப்த காலமாகக் கூறிவந்த சர்வதேசக் குற்றவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குள்த்தான் தமிழரசுக் கட்சியும் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.  

ஆகவே, இந்த இரண்டில் தமிழ் மக்கள் எதைத் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. ஆனால், அதைவிட முக்கியமான கேள்வி, அணுகுமுறை ரீதியிலும் நிலைப்பாட்டு ரீதியிலும் தற்போது மிக நெருக்கமான ஒருமைத் தன்மையை வௌிப்படுத்தும் இந்த இரண்டு தரப்பும் ஏன் கைகோர்க்கக் கூடாது என்பதுதான்.   

கொள்கை அதற்குத் தடையாக வராவிட்டாலும், அரசியல் யதார்த்தம் எனப்படும் தனிநபர் விருப்பு வெறுப்புகள் அந்தக் கைகோர்ப்பைத் தடுக்கும்.   

1972ஆம் ஆண்டு, பொன்னம்பலமும் செல்வநாயகமும் மீண்டும் தமிழ் மக்களின் நன்மையை மட்டும் கருதிக் கைகோர்த்தபோது, அவர்கள் தமது வாழ்க்கையின் அந்திமக் காலத்தை எட்டியிருந்தார்கள். ஆகவே, காலத்தின் பண்படுத்தல், தமது தனிமனித விருப்பு வெறுப்புகளைத்தாண்டி செயற்படும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கலாம்.  

தமிழரசுக் கட்சிக்கு இன்று, முக்கிய வைரி ஒன்றல்ல; முக்கிய வைரிகள் இரண்டு உருவாகி இருக்கிறார்கள். இரண்டாவதாக, இன்று முளைத்திருக்கும் வைரி, நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி.   

விக்னேஸ்வரனின் கூட்டணியினர், தமிழரசுக் கட்சிக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சிக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களுக்கும் இந்த இரண்டு தரப்பினரின் கொள்கை நிலைப்பாடுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.   

ஆனால், இவை தமிழரசுக் கட்சியோடு ஒன்றுபடுவது ஒரு புறமிருக்க, இந்த இரண்டு தரப்பாலும் ஒருவரோடு ஒருவர் கைகோர்க்க முடியாத நிலை ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஏன், விக்னேஸ்வரனாலும் கஜேந்திர குமாராலும் கூட கைகோர்க்க முடியவில்லை? அதற்குத் தடையாக இருப்பது எது?  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பாதை-ஒன்று-பயணங்கள்-வேறுவேறு/91-246238

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒளித்து ஓடும் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் தேவை

என்.கே. அஷோக்பரன்   / 2020 மார்ச் 09 

தமிழர்களும் அடுத்த தேர்தலும் [பகுதி - 03]

எதிர்பார்த்தது போலவே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர் தெரிவு, வேட்புமனுத் தாக்கல் என்பவற்றுக்குக் கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், பிரசார நடவடிக்கைகளும் ஆரம்பமாகத் தொடங்கி இருக்கின்றன.   

தமிழர்களைப் பொறுத்தவரையில், வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் கூட்டணியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்வரும் தேர்தல் முக்கியமானதொன்றாக அமையவிருக்கிறது. 

தமிழ் மக்களின் வாக்குவங்கி, தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு, எதிர்ப்பு என்ற அடிப்படையிலேயே பெரும்பாலும் வரையறுக்கப்படப் போகிறது. தமிழரசுக் கட்சி மீதான, கடுமையான விமர்சனங்கள் நீண்டகாலமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளேயும் வௌியேயும் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், தமிழர் வாக்குகளின் பெரும்பங்கை தமிழரசுக் கட்சி பெற்றிருக்கிறது.  

இதுவே, தமிழரசுக் கட்சியினர் தமக்கெதிரான அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கப் பயன்படுத்தும் ஆயுதமாகும். தமிழரசுக் கட்சிக்கு எதிரான கொள்கை, சித்தாந்த ரீதியிலான விமர்சனங்கள் எவ்வாறு அமைந்தாலும், இறுதியில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு, அவர்களுக்குக் கிடைக்கும் போது, அந்த விமர்சனங்கள், அவை எவ்வளவு உண்மையாக இருந்தாலும், யதார்த்தத்தில் வலுவற்றதாகி விடுகின்றன.   

“எம்மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் எமக்கே வாக்களித்து இருக்கிறார்கள்; எமது நடவடிக்கைகளுக்குத் தமிழ் மக்களின் அங்கிகாரம் உண்டு” என்று, தமிழரசுக் கட்சி, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தும்.   

ஆகவே, தமிழ் மக்களின் வாக்குகளில் பெருமளவைத் தமிழரசுக் கட்சி பெறும்வரை, தமிழ் மக்கள் என்ன காரணத்துக்காகத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து இருந்தாலும், தமிழரசுக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்கள் அங்கிகாரம் அளித்ததாகவே யதார்த்தத்தில் அர்த்தப்படும்.  

ஆகவே, தாம் தமிழ் மக்களின் வாக்குகளில் பெரும்பான்மையளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் வரை, எதுவித விமர்சனங்களையும் மாற்றுக் கட்சிகளின் சாடல்களையும் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை என்பது, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட பின், தாம் தமிழ் மக்களின் பெயரால் எதையும் செய்யலாம், அதைத் தாம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் நியாயப்படுத்தலாம் என்பதையும் தமிழரசுக் கட்சியும் அதன் தலைமைகளும் நன்கே உணர்ந்துள்ளன.   

ஆகவேதான், இம்முறை வாக்கு வேட்டையை மய்யப்படுத்திய வேட்பாளர்களை, அவர்களது அரசியல் அனுபவம், தமிழ்த் தேசிய பற்று, உணர்வு, விசுவாசம் என்பவற்றைத் தாண்டி, அவர்கள் வாக்குகளைக் கட்சிக்குக் கொண்டுவருவார்களா என்ற நோக்கில் களமிறக்க இருக்கிறார்கள்.  

மறுபுறத்தில், தமிழரசுக் கட்சி மீதும், அதன் தேர்தல்க் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும், கடுமையான விமர்சனங்களையும் சாடல்களையும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் முன்வைக்கும் தரப்புகளுக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் மிக்கதொன்றாகும்.   

இதுவரை, அவர்கள் முன்வைத்த விமர்சனங்களின் நியாயத் தன்மை எவ்வாறு இருந்தாலும், அதை மக்கள் ஆதரவால் வலுப்படுத்த அவர்களால் முடியவில்லை. சுருங்கக் கூறின், அவர்களுக்கான மக்கள் ஆதரவு, தேர்தல் முடிவுகளின் படி மிகக் குறைவானதாகவே இருந்திருக்கிறது.   

ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கான ஆதரவு கணிசமாக அதிகரித்து இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குவீதாசாரத்தைவிட, 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில், அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குவீதாசாரம் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிமுகம், இந்தத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.   

ஆனால், தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக வரவிளையும் இந்தத் தமிழ்த் தேசிய மாற்றுச் சக்திகளிடத்தில் காணப்படும் பெருங்குறைபாடு, அவர்களிடத்தில் ஒற்றுமை இன்மையாகும்.  

இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் கூட்டணிக்கு எதிராக, தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட அமைப்புகளாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அமைகிறது.   

இந்த இருதரப்புகளும் தமிழரசுக் கட்சி மீது முன்வைக்கும் விமர்சனங்கள், ஒரே மாதிரியானவையே; இந்த இருதரப்பும் முன்வைக்கும் கொள்கையும், தமிழ்த் தேசியவாதமும் ஒரேமாதிரியானவை ஆகும்.   

ஆகவே, இந்த இரண்டு தரப்பும் ஒன்றிணைவதில் கொள்கை ரீதியிலான தடைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், இந்த இரண்டு தரப்பும் ஒன்றிணையும் போது, அவர்களது வாக்குகள் பிளவடையாது. அதன் மூலம், தமிழரசுக் கட்சிக்கு எதிரான, வலுவான மாற்றாக உருவாகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.   

ஆனால், இந்த இரண்டு தரப்பும் கூட, ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக்கொண்டு நிற்பதுதான், தமிழ்த் தேசியத்தின் பெரும் துரதிர்ஷ்டம். தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கஜேந்திகுமார் பொன்னம்பலத்தாலும் நீதியரசர் விக்னேஸ்வரனாலும் ஏன் கைகோர்க்க முடியவில்லை என்ற கேள்வி, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அனைவர் மனதிலும் எழுகின்ற நியாயமான கேள்வியாகும்.  

இதற்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்லும் பதில், “தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில், தமது கட்சி இணைவதை, இந்தியா விரும்பவில்லை... கூட்டு என்ற பெயரில், இந்திய பாதுகாப்புப் படை, இலங்கையில் இருந்தபோது, அதற்கு ஓர் ஒட்டுக்குழுவாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அணியின் ஓர் உறுப்பினராகத் தான் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார். இந்த முயற்சிகள் அனைத்துமே, வேறு தரப்பின் நலன்களைக் கருத்திற்கொண்டு இடம்பெறுகின்றன. இது மக்களின் நலன்களுக்கானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிடைக்கக்கூடிய வாக்கு வங்கியை உடைக்க, மக்களைக் குழப்பும் நோக்கத்துடன், அவர்கள் செயற்படுகின்றார்கள்” என்பதாக அமைகிறது.  

ஈ.பி.ஆர்.எல்.எப் வரலாற்றில், படுகொலைகளையும் கொடுமைகளையும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்தது என்ற குற்றச்சாட்டு தற்போதும் காணப்படுகிறது. ‘மண்டையன் குழு’ கொலை செய்த தமிழ் இளைஞர்கள், எத்தனை என்றெல்லாம் யோசித்திருந்தால், தமிழ்த் தேசிய அரசியலில் எந்தவொரு ஜனநாயக வழி நின்ற கட்சியும் எந்தவொரு முன்னாள் ஆயுதக் குழுவுடனும் கூட்டணி அமைக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.   

டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் என இன்று தமிழ்த் தேசிய அரசியலில் ஜனநாயக வழி நிற்கும் முன்னாள் ஆயுதக் குழுக்களெல்லாம், ஆயுத வன்முறையில் ஈடுபட்டவைகள்தான். அதன் நியாய- அநியாயங்கள் ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சிகளில் ஒன்றாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் சேர, இன்று கஜேந்திரகுமார் மறுப்பதன் தாற்பரியம் புரிந்துகொள்ளச் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.   

ஆனால், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் தாம் இணைவதை, இந்தியா விரும்பவில்லை என்ற கஜேந்திரகுமாரின் கருத்து, இங்கு ஊன்றிக் கவனிக்கத்தக்கது.  

இந்தியாவுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையிலான உறவு, இந்தியாவுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையிலான உறவைப் போன்றது எனலாம்.   இந்தியாவின் முக்கியத்துவத்தை மற்றையவரும், மற்றையவரின் முக்கியத்துவத்தை இந்தியாவும் அறிந்திருந்தாலும் இருதரப்புகளிடையே நம்பிக்கையீனமும் சந்தேகப் பார்வையும் தொடர்ந்து இருந்துகொண்டு வந்தது.   

இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத தமிழ் இளைஞர் விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் இருந்ததைப் போலவே, இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத அரசியல் தலைவராக கஜேந்திரகுமார் இருக்கிறார்.   

இலங்கையின் ஏனைய தமிழ்க் கட்சிகள், தலைமைகள் எல்லாம் ‘அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று இந்தியாவின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டு, ஒத்திசைந்து செல்லும் போது, இந்தியாவின் சொல்கேட்கும் பிள்ளையாக கஜேந்திரகுமார் இருக்காதுபோனதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர் விலகுவதற்கும் வழிசமைத்தது.   

பத்மினி சிதம்பரநாதனுக்கும் செல்வராசா கஜேந்திரனுக்கும் ஆசனம் தரவில்லை என்பதால்த்தான் கஜேந்திரகுமார் வௌியேறினார் என்று கஜேந்திரகுமாரின் வௌியேற்றத்தை ஓர் ஆசனப் பங்கீட்டுப் பிரச்சினையாக மட்டும் காட்டுபவர்கள், பத்மினியும் கஜேந்திரனும் ஏற்கெனவே பதவியிலிருந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (sitting MPs). அவர்களுக்குத் தமிழரசுக் கட்சி ஆசனம் வழங்க மறுத்தது ஏன் என்று சொல்வதில்லை.  

அதன் பின்னாலுள்ள சூழ்ச்சி, இந்தியாவினுடையதே என்பது, கடந்த ஒரு தசாப்த காலமாகக் கஜேந்திரகுமார் கூறி வருகின்ற கருத்து.  

மறுபுறத்தில், நீதியரசர் விக்னேஸ்வரன் இந்தியாவுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டவர் என்பது, அவரது இந்திய விஜயங்கள், இந்தியா பற்றிய அணுகுமுறை என்பவற்றினூடாகத் தௌிவாக உணரக்கூடியதாக உள்ளது. அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படுவதற்கான நியாயங்கள், நிறையவே இருந்தாலும் அதை அவர் தவிர்த்தமை, தமிழ் மக்கள் மனதில் பல கேள்விகளை நிச்சயம் எழுப்புவதாகவே இருக்கிறது.   

ஈ.பி.ஆர்.எல்.எப் மீதான கஜேந்திரகுமாரின் வெறுப்பு மட்டுமே, இந்த இருதரப்பும் இணைவதைத் தடுக்கிறது என்றால், அதைக் கஜேந்திரகுமார் விட்டுக்கொடுக்கலாம்; ஆனால், அதையும் தாண்டி, இந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்த, நீதியரசர் விக்னேஸ்வரன் தரப்பும் கஜேந்திரகுமார் தரப்பும் விரும்பவில்லை என்றால், அதற்கான காரணங்களை அவர்கள் தமிழ் மக்களுக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.  

மேலும், தமிழ்த் தலைமைகள் இனியும் தமிழ் மக்கள் முன் ஒளித்து ஓடும் அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்காது, தமது நிலைப்பாட்டைத் தௌிவாக எடுத்துரைக்கவும் மேலைத்தேய பாணியில் மாற்றுக் கருத்துடைய தலைமைகளுடன் நேரடியான விவாதத்தில் ஈடுபடவும் முன்வரவேண்டும்.   

அத்தகைய விவாதங்கள் இடம்பெறும்போதுதான், இன்று தமிழ் மக்கள் முன் நிற்கும் ஒவ்வொரு தரப்பின் கொள்கை நிலைப்பாடுகள் பற்றி, தமிழ் மக்களுக்குத் தௌிவானதொரு பார்வையும் விளக்கமும் கிடைக்கும்.   

அதை விடுத்துத் தமது மேடைகளில் மட்டும் ஏறி, மாற்றுத்தரப்பைத் தாக்குவதும் தமது அறிக்கைகளில் மட்டும், தமது அரசியலை முன்னெடுப்பதும் ஏற்புடையதொன்றல்ல. நேரடியான விவாதமொன்றுக்குத் தமிழ்த் தலைமைகள் வருமானால், அது இந்த நாட்டுக்குப் புதியதொரு பண்பட்ட அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்திய பெருமையையும் தமிழர்களுக்குப் பெற்றுத்தருவதாக அமையும்.   

அத்துடன், வெற்றுப் பகட்டாரவாரப் பேச்சுகளைத் தாண்டி, ஆரோக்கியமானதொரு கொள்கை நிலைப்பாடு சார்ந்த அரசியல் விவாதத்தையும் தமிழ் மக்கள் கேட்டுணர்ந்து, அதன்படி தமக்கான பொருத்தமான தெரிவை மேற்கொள்ள வழிசமைக்கும். ஆகவே, இம்முறை இத்தகையதொரு பொது விவாத மேடைக்கு தமிழ்த் தலைமைகள் வரவேண்டும்.  

தமிழ்த் தேசிய அரசியல் மிக முக்கியமானதொரு திருப்பு முனையைச் சந்தித்திருக்கிறது. 2015இல் இருந்த நிலைக்கு முற்றிலும் தலைகீழான நிலை இது. ஜனநாயக ரீதியில் புதியதோர் அணுகுமுறையைக் கையிலெடுக்க வேண்டிய அரசியல் தேவை, தமிழ்த் தலைமைகளுக்கு இருக்கிறது.

அந்தவகையில், தமிழ்த் தேசியத்துக்கு வாக்களிக்க எண்ணும் தமிழ் மக்கள், வெறும் வார்த்தைப் பகட்டாரவாரத்துக்குள், தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை இழுத்தெடுக்கும் கருவியாகத் தமிழ் தேசியத்தைப் பயன்படுத்துபவர்களை அடையாளங்கண்டு நிராகரிக்கவும் வேண்டும். 

அதேவேளை, வெறுமனே அறிக்கை அரசியல் மட்டுமே செய்கின்ற, விளைபலம் ஏதுமற்ற அரசியல் செய்பவர்களையும் நிராகரிக்கவும் வேண்டிய தேவை இருக்கிறது. 

(முற்றும்)   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒளித்து-ஓடும்-அரசியல்-கலாசாரத்தில்-மாற்றம்-தேவை/91-246571

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.