Jump to content

அழிவின் விளிம்பில் சீனா- அனைத்தும் கையை மீறிவிட்டன! ஒப்புக் கொள்கிறேன்- துன்பத்தில் சீன ஜனாதிபதி

nunavilan

Recommended Posts

அழிவின் விளிம்பில் சீனா- அனைத்தும் கையை மீறிவிட்டன! ஒப்புக் கொள்கிறேன்- துன்பத்தில் சீன ஜனாதிபதி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவில் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் இது சீனாவின் "மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை" என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.

COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் என இரட்டை முயற்சிகளுக்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெய்ஜிங்கில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சீனப் பிரதமர் லி கெக்கியாங் தலைமை தாங்கினார்.. இதில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் பங்கேற்றார்கள்.

இந்த கூட்டத்தில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மிக வேகமாக பரவுகிறது, இதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் கடினமாக உள்ளது. இது எங்களுக்கு ஒரு நெருக்கடி, இது ஒரு மிகப்பெரிய சோதனை. இந்த கொரோனா வைரஸ் தொற்று என்பதை சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையாக அறிவிக்கிறேன்" என்றார்.

தொற்றுநோய் "தவிர்க்க முடியாமல் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று சீன அதிபர் ஜின்பிங் ஒப்புக் கொண்டார், ஆனால் அதன் விளைவுகள் "குறுகிய கால" மற்றும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மேலும் 97 பேர் இறந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

https://www.ibctamil.com/world/80/137670?ref=ibctamil-recommendation

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொய்யான தகவல்.சீனாவில் இப்போது எவ்வளவோ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தென் கொரியாவில் தான் ஒரு கிறித்தவ மதமாற்றுக்  குழுவினரால் திட்டமிட்டு பல பகுதிகளில் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. பலரை கைததுசெய்தாலும் கூட இன்னும்பலரைக் கைது செய்ய முடியவில்லை என்பது உண்மையான செய்தி.

Link to comment
Share on other sites

சிங்கப்பூர், தென் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு பரவி உள்ளது.
இதில், தென் கொரியா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ஈரானில் 50 பேர் கொரானாவுக்கு பலி

ஈரானில், ஷியாக்களின் முக்கிய மதக் கல்வி நகரமாக விளங்கும் குவோம் (Qom) நகரில், இந்த மாதம் மட்டும் ,50 பேர் கொரானா தொற்றுக்கு உயிரிழந்து விட்டதாக, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ILNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://www.polimernews.com/dnews/101537/ஈரானில்-50-பேர்-கொரானாவுக்குபலி

கொரானா அச்சுறுத்தல்: முகமூடிகளை வாங்குவதற்காக பல மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்ற பொதுமக்கள்

தென்கொரியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முகமூடிகளை வாங்குவதற்காக பல மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் காட்சி வைரலாகியுள்ளது.

அந்நாட்டின் டேகு நகரம், கொரானா வைரஸ் தீவிரத்தை கருத்தில் கொண்டு சிறப்பு பராமரிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/101545/கொரானா-அச்சுறுத்தல்:முகமூடிகளை-வாங்குவதற்காகபல-மீட்டர்-தூரத்துக்குவரிசையில்-நின்ற-பொதுமக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது பொய்யான தகவல்.சீனாவில் இப்போது எவ்வளவோ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தென் கொரியாவில் தான் ஒரு கிறித்தவ மதமாற்றுக்  குழுவினரால் திட்டமிட்டு பல பகுதிகளில் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. பலரை கைததுசெய்தாலும் கூட இன்னும்பலரைக் கைது செய்ய முடியவில்லை என்பது உண்மையான செய்தி.

எப்படி திட்டமிட்டு பரப்புகிறார்கள் ? அதுவும் ஒரு மதக் குழுவினரால் .

தெளிவாக கூற முடியுமா ?

சீனர்களுடைய வாழ்க்கை முறையைக் கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும் அவர்களது கடின உழைப்பும் ஒழுங்குமுறையான வாழ்க்கை முறையையும். இந்த சூழலிருந்து அவர்கள் வெகு வேகமாக வளியேறி அடுத்த கட்டத்திற்கு இலகுவாகப் போய்விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தென் கொரியாவில் அல்லேலூயா போன்ற குழுக்கள் சில உள்ளன. அவறறை cult என்று அழைப்பார்கள் அங்கு. அவர்கள் மோட்சம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் பல வெறித்தனமான வேலைகளை செய்வர். அவர்கள் குழுவில் ஒருவருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு பின்னர் அக்குழுவில் உள்ள பலருக்கும் பரவியுள்ளது. அவர்கள் எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாது ஆண்டவன் தம்மைக் காப்பாற்றுவார் என்றபடி பல மக்கள் கூடும் இடங்களுக்கு திட்டமிட்டுச் செல்வதாகவும், விடயம் வெளியில் கசிந்து போலீஸ் சிலரைக் கைது செய்யவாரம்பிக்க மற்றவர்கள் போலீசில் அகப்படாது கடைகள் பாடசாலைகள் போன்றவற்றில் பரப்புவதாகவும் தாற்காலிகமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் நம்பகத்தகுந்த இடத்திலிருந்து கிடைத்த தொலைபேசித் தகவல்.
என் மகள்  நாளை கொரியா செல்லவிருந்த நிலையில் அவரை அங்கு வரவேண்டாம் என்ற செய்தியோடு அவருக்கு விமானச் சீட்டை அனுப்பியிருந்த நிறுவனம் கூறியிருந்த தகவல்கள் இவை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

திட்டமிட்டுப் பரப்பப்படுவதாக கூறப்படுவது நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

ஆனாலும் உலகம் முழுவதும் மன நோயாளிகளின் எண்ணிக்கைக்கு குறைவில்லை என்பது மட்டும் உண்மை.😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.