Jump to content

மதுப்பழக்கம் அறவே இல்லை! டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான சில தகவல்கள்


nunavilan

Recommended Posts

மதுப்பழக்கம் அறவே இல்லை! டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான சில தகவல்கள்

 

 

 
 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிற்கு புகைப்பிடித்தல், போதை வஸ்துகளை பயன்படுக்காது என்றும் இதுவரை காலமும் அவரை போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த ஜனவரியில் டொனால்ட் ட்ரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உயரம் 6 அடி 3 அடியாகவும் உடல் எடை 239 பவுன்ட்டாகவும் இருந்தது. இந்த உயரத்திற்கு ஏற்ற உடல் எடை என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்திருந்தார்.

பொதுவாக காலை உணவை உண்ணும் பழக்கத்தை கொண்டிருக்காதவர் ட்ரம்ப். அவர் டீ, கோபி உள்ளிட்ட பானங்களையும் காலையில் அருந்த மாட்டாராம். சில நேரங்கள் மெக் டொனால்டின் மப்பின்களை உண்பது வழக்கம். பின்னர் முட்டைகளையும் உண்வாராம். வெண் பன்றி இறைச்சியில் செய்யப்பட்ட அமெரிக்க உணவில் குறைந்த அளவு கொழுப்பே இருக்கும்.

இந்த உணவு புற்றுநோயை எதிர்த்து போராடும் என கூறப்படுகிறது. இவரால் 14 முதல் 16 மணி நேரம் வரை உண்ணாமல் இருக்க முடியும். மதிய உணவில் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுவார்.

இதை பிரவுன் பிரட்டில் வைத்து சாப்பிடுவார். அதோடு அவருக்கு துரித உணவு கடைகளான மெக் டொனால்ட், பர்கர் கிங், கேஎஃப்சியில் கிடைக்கும் உணவுகளும் மிகவும் பிடிக்கும்.

இரவு நேரத்தில் இரு பெரிய மாக்ஸ், மீன் சான்ட்விச், சிறிய சாக்லேட் ஷேக் ஆகியவற்றை உண்வார். அதன் மொத்த கலோரி 2,430 ஆகும். தனது வெள்ளை மாளிகையில் மெக் டொனால்டை உருவாக்கியுள்ளார். டிரம்ப் பீட்சா பிரியர். அவருக்கு சிக்கன் உணவு பிடிக்காது. குளிர்பானங்களை பொருத்தமட்டில் டயட் கோக்கை தினமும் 12 கேன்கள் குடிப்பாராம்.

மொறு மொறு ஸ்னாக்ஸ்தள் மிகவும் பிடிக்கும். உருளைகிழங்கு சிப்ஸை விரும்புவார். மது அருந்தும் பழக்கமில்லாதவர் டிரம்ப். வாழ்நாளில் ஒரு முறை கூட மது அருந்தியதே இல்லை.

அதேபோல் புகைப்பிடித்தல், போதை வஸ்துகளையும் பயன்படுத்தாதவர். ஒரு முறை அவரது சகோதரருக்கு குடியால் பிரச்சினை ஏற்பட்ட போது குடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியது கூறப்படுகிறது.

https://www.ibctamil.com/world/80/137708

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

ஆனால், மாதுபழக்கம் அதிகமாக உள்ளது.

நீண்ட ஆயுளுக்கும் தளராத வீரியத்துக்கும் காரணமான நல்ல விடயம் மாதுபழக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ampanai said:

ஆனால், மாதுபழக்கம் அதிகமாக உள்ளது.

மதுவால் தள்ளத்தான் முடியும்,அணைக்க முடியாது. மாதுவால் எல்லாம் முடியும், கதிரையை கவிழ்ப்பதுவரை.....!  😂

Link to comment
Share on other sites

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிடம் உள்ள இத்தனை நல்ல பழக்கங்களைக் கண்டறிந்து அறியத்தரும் ஐபிசிதமிழுக்கு அவர் மக்களை எப்படிப் பாதுகாக்கிறார் என்பதுபற்றி ஒரு வரி....🤑🤑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கற்பகதரு said:

நீண்ட ஆயுளுக்கும் தளராத வீரியத்துக்கும் காரணமான நல்ல விடயம் மாதுபழக்கம்.

நீங்கள் மாதுபழக்கம் என்று குறிப்பிட்டது திருமணம் செய்து குடும்பம் நடத்துவதை தானே? தமிழர்கள் ஆண்களுக்கு பிரச்சனையே இல்லை கொழுத்த  சீதனமும் பெற்று கலியாணம் செய்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் மாதுபழக்கம் என்று குறிப்பிட்டது திருமணம் செய்து குடும்பம் நடத்துவதை தானே? தமிழர்கள் ஆண்களுக்கு பிரச்சனையே இல்லை கொழுத்த  சீதனமும் பெற்று கலியாணம் செய்து கொள்வார்கள்.

அது குடும்ப பாரம் - ஒன்றோடு முடிவது பழக்கம் அல்லவே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.