Sign in to follow this  
ampanai

வடக்கில் பொன் அணிகள் போர்

Recommended Posts

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் கடந்த 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்த வேளை கடந்த  2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி மாத்திரம் நடைபெற்றது.

இவ்வருடம் 2020 இல் 103 ஆவது வருட இரு நாள் போட்டியும் 28 ஆவது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 திகதி மாரச் மாதம் இடம்பெறவுள்ளது.
87313320_597083507800842_766585975965168

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி

 

அத்துடன் யாழ் மாவட்டத்திலே முதல் முறையாக இருபதுக்கு -20 கிரிக்கெட்போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி மார்ச் மாதம் சென். பற்றிக்ஸ் கல்லாரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி திருமகன், யாழ்ப்பாணக்  கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும் முயற்சியினால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 32 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஒரு போட்டி இரத்துச் செய்யப்பட்டது. மிகுதிப் போட்டிகளின்  விபரம் கிடைக்கப்பெறவில்லை.ஒரு நாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 20 தடவைகள் சென் .பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு செல்வன் பிலிப் ஐவன் றொசாந்தனும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு செல்வன் ஆ. சிந்துஜனும் தலைமை தாங்குகின்றனர். ஆறு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறவுள்ள இரு நாள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இரு கல்லூரி அணி கிரிக்கெட் வீரர்களும் தத்தமது திறமைகளை வெளிக்கொணர்வார்கள் என்பது நிச்சயம்.

 

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


87146181_2515260855415606_78294515334932

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி

 

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் கடந்த 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்த வேளை கடந்த  2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி மாத்திரம் நடைபெற்றது.

இவ்வருடம் 2020 இல் 103 ஆவது வருட இரு நாள் போட்டியும் 28 ஆவது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 திகதி மாரச் மாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் யாழ் மாவட்டத்திலே முதல் முறையாக இருபதுக்கு -20 கிரிக்கெட்போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி மார்ச்  மாதம் சென். பற்றிக்ஸ் கல்லாரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி திருமகன், யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும் முயற்சியினால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 32 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஒரு போட்டி இரத்துச் செய்யப்பட்டது. மிகுதிப் போட்டிகளின்  விபரம் கிடைக்கப்பெறவில்லை.ஒரு நாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 20 தடவைகள் சென் .பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு செல்வன் பிலிப் ஐவன் றொசாந்தனும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு செல்வன் ஆ. சிந்துஜனும் தலைமை தாங்குகின்றனர். ஆறு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறவுள்ள இரு நாள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இரு கல்லூரி அணி கிரிக்கெட் வீரர்களும் தத்தமது திறமைகளை வெளிக்கொணர்வார்கள் என்பது நிச்சயம்.

https://www.virakesari.lk/article/76343

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்..💐

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் சின்னப்ப பெடியளா இருக்கு வட்டுக்கோட்டை யாப்பாணக் கல்லூரி மாணவர்களை பார்க்க

Share this post


Link to post
Share on other sites

விளையாட்டு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.....!  🌹

Share this post


Link to post
Share on other sites
On ‎2‎/‎24‎/‎2020 at 12:29 PM, ampanai said:

அத்துடன் யாழ் மாவட்டத்திலே முதல் முறையாக இருபதுக்கு -20 கிரிக்கெட்போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி மார்ச் மாதம் சென். பற்றிக்ஸ் கல்லாரி மைதானத்தில் நடைபெறவுள்ளது

இதன் மூலம் துடுப்பெடுத்தாட்டம் மேலும் வளரும்.

Share this post


Link to post
Share on other sites

வடக்கின் பொன் அணிகள் போரில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் அமோக வெற்றி

வடக்கில் பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் , சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 103 ஆவது வருட கிரிக்கெட் போட்டி கடந்த 28,29 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

spc1.jpg

 

 

spc2.jpg

 

spc4.jpg

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 81 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 223 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

தனது இரண்டாவது இன்னிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

05 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய சென் பற்றிக்ஸ் கல்லூரி விக்கெட் இழப்பின்றி வெற்றியை பெற்றுக்கொண்டது.

இப் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி வீரர்களான ஏ.கௌசிகன் 22 ஓட்டங்களையும் எம். சிந்துஜன் 15,ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். சென்.பற்றிக்ஸ் கல்லூரி சார்பாக ஈ.டிலக்ஷன் 60 ஓட்டங்களையும் எஸ்.பி. கஸ்ரோ ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் எஸ்..கீர்த்தன் 42 ஓட்டங்களையும் ஏ.பி.டெஸ்வின் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி வீரர் எஸ்.பிரியங்கன் 67 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 05 விக்கெட்டுக்களையும் சென் பற்றிக்ஸ் கல்லூரி சார்பாக சுழல் பந்து வீச்சாளர் டி. டனிஷியஸ் முதல் இன்னிங்ஸில் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களையும் , இரண்டாவது இன்னிங்ஸில் 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 06 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/76798

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இணைப்புக்கு நன்றி ரதியாக்க இதை பற்றி ஏற்கனவே எங்கோ வாசித்தேன்  இங்கு யாழில் என்றுதான் ஞாபகம் பின்பு மறந்துவிட்டேன். வீட்டில் அடைபட்டு இருப்பதால் கொஞ்ச படங்கள் பார்க்க நேரம் கிடைக்கிறது  நல்ல படங்கள் பார்க்க வேண்டும் ......நான் பொதுவாக சினிமா படங்கள் பார்ப்பதில்லை  இப்படி யாராவது இணைத்ததால் நல்ல படம் என்றால் பார்ப்பேன்.  மலையாள படம் வைரஸ் நல்ல படம் பாருங்கள்  நிப்பா வைரஸ் பரவலை பற்றிய உண்மை கதை  "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" நண்பர் ஒருவர் சொல்லி நேற்று பார்த்தேன் வித்தியாசமான திரைக்கதை  நெட் பிலீக்ஸ் இல் உண்டு  நண்பர்களே நீங்களும் ஏதும் நல்ல படம் டாக்குமெண்டரி பார்த்திருந்தால் அறிய தாருங்கள்.  
    • இனிமேல் பெருமாள் இந்தப் பக்கமே(Trance) பக்கமே தலைவைத்து படுக்கமாட்டார். 😂
    • படம் பார்க்க நேர்ந்தாலும் பொருள் விளங்க கூடிய அறிவும் இருந்தால்தான்  அல்லேலூயா பக்கம் போக மாட்டார்கள் என்று சொல்ல முடியும்  "ட்ரான்ஸ்" இந்த நிலையிலும் இல்லாத ஒரு விசர் நிலையில்தான் சாய்பாபா  நித்தியானந்தா  சுத்தியானந்தா என்று ஒரு கூட்டம் அலைமோதுகிறது என்றால்  இனொரு கூட்டம்  திருப்பதியில் இருப்பவருக்குத்தான் சக்தி உண்டு  சபரிமலை போனால்தான் எல்லாம் சரிவரும் என்று உழைத்த காசையும் அழித்து கொண்டு  இன்னொரு கூட்டம் திரிகிறது. "ட்ரான்ஸ்" இது வேறு வேறு வடிவில் எல்லா  மனிதரையும் ஆட்க்கொள்கிறது  மதுவுக்கு அடிமையாதல்   மாதுவுக்கு அடிமையாதல் பணத்துக்கு அடிமையாதல்  போதைவஸ்துக்கு அடிமையாதல் எல்லாம் ஒரு ட்ரான்ஸ் நிலையில்தான் சாத்தியமாகிறது  மதத்துக்கு அடிமையாலும்  அவ்வாறுதான் இதை சைக்கோலஜி படித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம். உண்மையிலேயே கடவுள் என்று ஒருவன் இருந்தால் கூட  இப்போதிருக்கும் எந்த மதமும் உங்களை கடவுளிடம் சேர்க்காது மாறாக உங்கள் உழைப்பை  மத போதகர் அட்ச்சகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவ்வளவுதான் ... கடவுள் ஒருவன் இருந்தால்  நீங்கள் கடவுளின் படைப்பு என்றால் ....... நீங்கள் கடவுளின் ஒரு பாதிதான். உங்களை விட புனிதமான ஒன்று  உங்களை கடவுளிடம் சேர்க்க கூடிய வேறு எதுவும் இந்த உலகில் இல்லை. இதை தமிழர்கள் 3000 4000 வருடம் முன்பு சொல்லி இருக்கிறார்கள்.  அல்லேலூயா பக்கம் போகாத எல்லோரும் அறிவாளிகள் இல்லை  உண்மையை பார்க்கப்போனால் அல்லேலூயா போய் மகிழ்ச்சியாக ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள்  முன்பு ரவுடியாக  போதைவஸ்து மது அடிமையாக இருந்த பலர் அல்லேலூயா சென்று  திருந்தி அடிமைநிலையில் இருந்து மீண்டு வாழ்கிறார்கள். அவர்கள் இன்னொரு ட்ரான்ஸ் நிலைக்கு ட்ரான்ஸ்பெர்  ஆகுகிறார்கள் என்றும் கொள்ளலாம்.  அல்லேலூயா போகாதவனும் இன்னொரு அலுக்கோசு மதத்துக்குத்தான் போக போகிறான்  அல்லது ஏற்கனவே அங்கேயே இருந்து கொள்கிறான். ட்ரான்ஸ் நிலையில் இருந்து மனிதனை மீட்பது என்பது மிகவும் கடினமான ஒன்று  புத்தர் நிலைக்கு நான் நீங்கள் கூட போக போவதில்லை ....... வாசிக்க நன்றாக இருக்கிறது  நல்ல புத்தகம் என்றுவிட்டு கடந்துபோகிறோம் அவ்வளவுதான்.  இறுதி மரணம் என்பது உறுதியாக இருப்பதால் இந்த ட்ரான்ஸ் நிலைக்கு மனிதரை தள்ளுவது மிகவும் எளிது. என்னுடைய உங்களுடைய பாட்டன் பூட்டிக்கு இருந்த சுதந்திர வாழ்க்கை  எனக்கும் உங்களுக்கும் அமையப்போவதில்லை ......நாங்கள் முதலாளிகளின் அடிமையாக கிடக்கிறோம்  அனால் வசதி பணம் என்று ஒரு மாய ட்ரான்ஸ் நிலைக்கு சென்று முதலாளித்துவ கடனாளியாகி உழைத்து கட்டிக்கொண்டு  இருக்கிறோம். 
    • தற்போது NRFC ஐ PFCA Personal Foreign Currency Account  ஆக மாற்றி உள்ளார்கள். USD க்கு கூடிய வட்டி கொடுக்கிறார்கள்.
    • பெருமாள்,  ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு என்பதன் அர்த்தம் அவன் அவசரப்பட்டு எதையும் புரிந்து கொள்ளாமல், அவசரத்தில்  எடுக்கும் முடிவுகள் குறைபாடாகவும் தெளிவில்லாமலும்  இருக்கும் என்பதனாலாகும். தயவுசெய்து எனது எழுத்தை ஆறுதலாக வாசியுங்கள். எழுதியதன் அர்த்தம் புரியும். அதன் பின் பதிலெழுதுங்கள். 🙂 ஆறுதலாக.