Jump to content

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு இதர நாடுகளைப் போன்றது அல்ல – மோடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

modi-trump-720x450.jpg

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு இதர நாடுகளைப் போன்றது அல்ல – மோடி

இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதன்போது இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ட்ரம்பினை வரவேற்று உரையாற்றினார்.

இதன்போது கருத்து தெரிவித்த மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உங்களை மனதார வரவேற்பதாக தெரிவித்தார்.  அத்துடன் இந்தியாவின் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அகமதாபாத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு இதர நாடுகளைப் போன்றது அல்ல எனவும், நெருங்கிய நட்புறவு கொண்டது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

(UPDATE) சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு வருகை தந்தார் ட்ரம்ப்!

சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்ட ட்ரம்ப் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.

இங்கு நடைபெறவுள்ள நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தார் ட்ரம்ப்

அகமதாபாத் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது மகாத்மா காந்தியின் ஒளிப்படத்திற்கு ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மெலனியா ட்ரம்பிற்கு கதர் ஆடை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விஜயமாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மனைவி மெலனியா ட்ரம்ப் உள்ளிட்ட 12 பிரதிநிதிகள் இந்தியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) வருகை தந்துள்ளனர்.

இவர்களை பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார். இதன்போது டொனால்ட் ட்ரம்புக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சபர்மதி-ஆசிரமத்திற்கு-வர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.