Sign in to follow this  
nunavilan

சிரியாவில் கிளர்ச்சியார்கள் மீது உக்கிர தாக்குதல்: மூன்று பகுதிகளை கைப்பற்றியது அரசுப்படை!

Recommended Posts

சிரியாவில் கிளர்ச்சியார்கள் மீது உக்கிர தாக்குதல்: மூன்று பகுதிகளை கைப்பற்றியது அரசுப்படை!

 

 

by : Anojkiyan

syria-war-720x450.jpg

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று முக்கிய பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று முக்கியப் பகுதிகளான அல் நக்யார், அர நபியா, அல் டையிர் ஆகிய பகுதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, சிரிய அரசுப் படைகளால் தங்கள் வசம் உள்ள பகுதிகள் கைப்பற்றப்படுவதைத் தவிர்ப்பதற்காக, மீதமுள்ள ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் மேற்கு நோக்கி பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதனால் சிரிய படைகள் வலுவடைந்துள்ளன.

முன்னதாக, சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இதில், கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

http://athavannews.com/சிரியாவில்-கிளர்ச்சியார/

Share this post


Link to post
Share on other sites

சரகேப்பை சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றவில்லை – ரஷ்ய இராணுவம்!

Russian-military-source-denies.jpg

சிரியாவின் முக்கிய நகரமான சரகேப்பை சிரிய கிளர்ச்சியாளர்கள் அரசாங்கப் படைகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றியதாக வெளியான செய்திகளை ரஷ்ய ராணுவம் மறுத்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தை மேற்கோளிட்டு ரஷ்ய ஊடகம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆதரவு தாக்குதலில் சிரிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சரகேப்பை அவர்கள் மீண்டும் கைப்பற்றினர் என துருக்கிய இராணுவத்தால் ஆதரிக்கப்படும் சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், ரஷ்ய இராணுவ தகவல்கள், அந்த நிகழ்வுகளை நிராகரித்ததுடன், சராகேப் மீதான கிளர்ச்சி தாக்குதலை சிரியாவின் அரசப் படைகள் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் கூறினார்.

http://athavannews.com/russian-military-source-denies-syrian-rebels-took-town-of-saraqeb-news-agencies/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • Poverty will kill them before the virus Developing countries face economic collapse in Coronavirus fight, therefore the international financial organizations and rich nations must Protect Developing Nations from Coronavirus Pandemic.india’s Coronavirus lockdown means there are billions of people living with hunger .SriLanka , Pakistan ,Bangladesh facing the same problems. சுமக்க முடியாத  சுமைகளை சுமந்தபடியே  பெரியவர் குழந்தைகள் என  தாண்ட முடியாத ஒரு தூரத்தை  தாண்ட  முயற்சிக்கின்றனர்  நிலவின் துணையோடு  நீண்டதூரம் போகிறார்கள்  அன்று ஒரு நாள் போர்  தின்று முடித்த பூமியில்  இருந்து போனவர் போலவே  ஏதோ விதி என்றும் சிலர்  தமக்குள் பேசிக்கொள்கின்றனர்  யாரும் யாரையும் பற்றி  சிந்திக்கும் நிலையில்  அவர்கள் இல்லை  அன்றன்றாடு கூலி வேலை  செய்து உழைப்பவனை  அந்த நகரங்கள்  அவர்களை பசியொடு  விரட்டியிருக்கிறது  எதை எடுப்பது  எதை விடுவது  என்றும் தெரியாமல்  விதிப் பொட்டலங்களை  தலையில் காவியபடி  மனிதம் அலைந்துகொண்டிருக்கிறது  சத்தம் இல்லாமல்  ஒரு யுத்தம் நடக்கிறது  கோவில் குளம்  நகரம் கிராமம்  எல்லாமே அமைதியாகிவிட்டன  குழந்தைக்கு பால் இல்லை குடிப்பதற்கு தண்ணி இல்லை  பசியும் பட்டினியும் துயரமுமாக  ஏழை நாடுகளை இன்னும்  துயரப்படுத்துகிறது  கோரோனா  ஏதோ ஒரு பாதை  திறக்கும் என்ற  நம்பிக்கையை மட்டும்  கையில் பிடித்தபடி  நாளை எப்டியோ  ஊர் போய் சேரும்  கனவோடு  தாய் பிள்ளை  நடக்க முடியாதவன் ஊனமுற்றவன் என்று  ஊர்வலம் போகிறது  போர் தின்று முடித்த  பூமியில் கிடந்த  அகதி முகாமைப் போல்  அது இருக்கிறது.            
  • சுட்டுக் கொல்பவர்களுக்குப் பதவி உயர்வும், பாராட்டும் அரசு அளிப்பதைக் கண்டு இந்தப் பெலிசுக்காரரும் அதனை எண்ணிச் சுட்டிருக்கலாம். 😮 
  • நாம் வாழும் பூமியானது தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதும், இதனால் தான் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த பூமி திடீரென சுற்றுவதை நிறுத்தினால் என்னவாகும் என்பது பற்றி என்றாவது கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? ஒருவேளை அப்படி நடந்தல் என்னவாகும் என்பது பற்றி த்தான் பார்க்கப்போகின்றோம். பூமி சுற்றுவது சடுதியாக நிற்குமானால் நாம் உடனடியாக தூக்கி எறியப்படுவோம் பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது இவ்வாறு சுற்றும் பூமியானது திடீரென்று தனது சுழற்சியை நிறுத்தினால், பூமியில் நிலையாக பிணைக்கப்படாத அத்தனை உயிரனங்கள் மற்றும் பிற பொருட்கள் அத்தனையும் மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் தூக்கி எறியப்படும்.     எப்படி இருக்கும்? அதாவது ஒரு நிமிடத்திற்கு 28 கிலோ மீட்டர் வேகத்திலும், ஒரு வினாடிக்கு சுமார் அரை கிலோ மீட்டர் வேகத்திலும் நம்மை ஒரு பொருளின் மீது வீசி எறிந்தால் அதன் விளைவு எவ்வளவு மோசமானதாக இருக்கும் என சற்று யோசித்துப் பாருங்களேன்..! பெரிய சுனாமி..! கடல் நீரும் பூமியுடன் முழுமையாக பிணைக்கப்பட்டிருக்கவில்லை...! எனவே பூமி திடிரென தனது சுழற்சியை நிறுத்துவதால் உண்டாகும் விளைவானது ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தும். இது சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் 28 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு மிகப்பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில் கடலுக்குள் மூழ்க செய்துவிடும் அளவிற்கு வேகமாகவும், மிக பெரியதாகவும் இருக்கும். இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட மிஞ்ச முடியாது...! மிக பெரிய நாள்..! பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்திய போதிலும் சூரியனை சுற்றுவது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். எனவே வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் முற்றிலுமாக இருளிலும், அடுத்த ஆறு மாதங்கள் முற்றிலுமாக பகலாகவும் தான் இருக்கும். இதனால் ஒரு வருடத்தில் உள்ள 367 நாட்களும் ஒன்று சேர்ந்து, 8760 மணி நேரம் கொண்ட ஒரே ஒரு நாளாக தான் இருக்கும். மிகப்பெரிய அழிவு தொடந்து ஆறு மாதங்களாக சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில், வெப்பநிலை நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை இருக்கும். இதனால் தொடந்து ஆறு மாதங்கள் வெயிலில் இருக்கும் பகுதிகள் வெப்பநிலை அதிகரித்து வறண்ட பாலை வனமாகவும், தொடந்து ஆறு மாதங்கள் இருளில் இருக்கும் பகுதிகள் பனிப்பொழிவு அதிகரித்து பனிப் பிரசேதங்களாகவும் தான் இருக்கும். வினோதமான நிகழ்வு இந்த சூழ்நிலை மாற்றங்களை தாங்க முடியாமல் நுண்ணுயிரிகள் கூட முற்றிலுமாக அழிந்துவிடும். சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்கு பதிலாக, மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும். அதுமட்டுமின்றி இந்த வினோதமான நிகழ்வானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.மைய நீக்கவிசை இல்லாத காரணத்தினால் சூரியனை நோக்கிய பகுதியை நோக்கி சூரியனின் ஈர்ப்புவிசை காரணமாக கடல் நீர் சூரியனின் பக்கம் செல்லும் ஆனால் பாறைகளே உருகுமளவிற்கு காணப்படும் மிகப்பெரும் வெப்பம் காரணமாக கடல் நீர் முழுவதும் ஆவியாகி பூமி வறண்ட ஒரு பாறையாக மாற்றமடையும்.கடல் நீர் ஆவியாகியதும் மிக வறண்ட மிகப்பெரிய மலைகள் தோன்றும் இவையெல்லாம் கடலின் அடியில் மூழ்கியிருந்த பள்ளத்தாக்குகள்தான் மலைகளாக மாற்றமடையும்.வெப்பமான பகுதியில் அதிக காற்றுவீசும்  திடிரென சுழற்சியை நிறுத்துவதினால் வழிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தினால் வீசும் காற்றின் வேகமானது ஒரு மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பினை விட பல மடங்கு வலிமையானதாக இருக்கும். இதனால் மிகப்பெரிய கட்டிடங்கள் கூட இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போகும். முற்றிலும் புவியின் மத்தியபகுதி வட தென் பகுதிகளை சற்று பருமனாக காணப்படும் புவி மிகவேகமாக சுற்றுவதன் காரணமாக ஏற்படும் மைய நீக்கவிசையினாலேயே கடல் நீர் பூமியின் மத்திய ரேகைப்பகுதில் அதிகமாக சேர்ந்திருக்கின்றது.பூமி சுழல்வது நின்றுவிட்டால் மத்தியரேகையில் அதிக அளவில் காணப்படும் கடல் நீர் பூமியின் துருவப்பகுதியை நோக்கி கிலோமீட்டர் உயரமான சுனாமியலைகளாக சென்றடையும்.எதிரில் இருக்கும் அனைத்தும் துடைத்தெறியப்படும்   அழிந்துவிடும் பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்திய அடுத்த நொடியே, புவியின் காந்தப்புலம் பாதிப்படையும் இது இல்லாமலேயே போகலாம் ,புவிக்காந்தப்புலம் உருவாக்கம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படவில்லை பூமியின் வெளியோடு ஒரு வேகத்திலும் பூமியின் மையப்பகுதி வேறு வேகத்துடனும் சுழல்வதாலேயே  காந்தப்புலம் உருவாவதாக நம்பப்படுகின்றது எனவே பூமி சுற்றுவது நின்றுவிட்டால் காந்தப்புலம் இல்லாமலேயே போய்விடலாம் . இதனால் சூரியனிடம் இருந்து வரும் புற ஊத கதிர்களினால் பூமியில் இருக்கும் மீத உயிர்களும் முற்றிலுமாக அழிந்துவிடும்...! தாவரங்கள் அனைத்தும் அழிந்துவிடும் ஒளித்தொகுப்பு நடைபெறாது உயிர்களுக்கு உணவே இருக்காது,புவியின் காற்றுமண்டலம் பாதிப்படையும் எமக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜனின் அளவு மாற்றமடையும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.  எனவே இந்த பூமியானது நமக்கு தெரிந்த இந்த நீர், நிலம், காற்று மட்டும் அல்லாமல், ஈர்ப்பு விசை, காந்த மண்டலம், பூமியின் சுழற்சி ஆகிவற்றை கொண்டு இயற்கையாகவே நம்மை பாதுகாத்து வருகிறது என்பதே உண்மை...!! புவியின் சுழற்சி சடுதியாக நிறுத்தப்பட எந்த சாத்தியமும் இல்லை ஆனால் சுழற்சி வேண்டுமானால் படிப்படியாக நிகழலாம் ஆனால் இதற்கும் மில்லியன் கணக்கான வருடங்கள் எடுக்கும் எனவே யாரும் பயப்படத்தேவையில்லை.tamil info facts
  • அந்த இரண்டு முதியவர்களின் வாழ்ககைப்  பின்னணி தொடர்பாக எதுவும்  தெரியாமல்  இந்தியாவல் நடக்கும் கள்ள காதலுடன் இவர்களின் காதலை ஒப்பிட்டிருகின்றீர்கள் ராசவன்னியன். இருவருக்கிடையே ஏற்பட்ட உண்மையான அன்பை  புரிந்து கொள்ளாமல் இந்திய பாரம்பரிய  பார்வையில்  பார்த்ததால் வந்த வினை 
  • உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் ஒருவர், அவை சமூக இடைவெளியை கடைபிடித்ததை பார்த்து நெகிழ்ந்து போனாராம். சிக்பள்ளாப்பூர் அருகே நந்திமலை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு நந்திமலைக்கு சுற்றுலா வருபவர்கள், அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவுகள் கிடைக்காமல் பரிதவித்து வந்தன.  இதுபற்றி அறிந்ததும் கன்னட நடிகர் சந்தன்குமார், நந்திமலைக்கு சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு பழங்கள் வழங்கினார். அந்த குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டன. குரங்குகளுக்கு பழம் வழங்கியதை சந்தன்குமார் படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘சமூக விலகல் குறித்து நான் கற்றுக்கொண்ட பாடம்.  நாம் எப்போது இந்த சமூக விலகலை கற்றுக்கொள்ள போகிறோம்?. மக்கள் கூட்டமாக வருவதை சமாளிப்பதை விட 500 குரங்குகளுக்கு உணவளிப்பது எளிதானது’ என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/03093016/1383935/Actor-chandan-kumar-feed-food-for-monkeys.vpf