Sign in to follow this  
ampanai

“தோல் தானம்” - அறிந்தவை அறிய வேண்டியவை

Recommended Posts

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தோல் வங்கி மூலம் இதுவரை 51 பேருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர். உடலின் மற்ற உறுப்புகளை தானம் செய்வது போலவே தோலையும் தானம் செய்வதன் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.....

 

மனித உடலில் ரத்த நாளங்கள், இதயம், இதயத்தின் வால்வு பகுதிகள், நுரையீரல், சிறுகுடல், சிறுநீரகம், கண், தோல், எலும்பு, முதுகெலும்பு, கல்லீரல், கை என உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தானமாக அளிக்கலாம். இவற்றில், அதிக விழிப்புணர்வின்றி இருப்பது, தோல் தானம்தான்.

ரத்த வங்கி, கண் வங்கி, எலும்பு வங்கி வரிசையில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழகியல் துறையில் 70 லட்சம் ரூபாய் செலவில் ‘தோல் வங்கி’ கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மூளைச்சாவு மற்றும் இயற்கை மரணம் அடைந் தவர்களிடம் இருந்து முதுகு, பின்னங்கால் மற்றும் பின்னந் தொடையில் இருந்து தோல் பெறப்பட்டு உரிய முறையில் பராமரித்து பாதுகாக்கப்படுகிறது. தீ, அமிலம், மின்சாரம், மருந்து மற்றும் ரசாயன அலர்ஜி, ஆறாத புண் போன்றவற்றால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த வங்கியிலிருந்து தோல் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இயற்கை மரணம் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக் கப்பட்டவர்கள் தோல் தானம் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 53 பேரிடமிருந்து தோல் தானமாகப் பெறப்பட்டு, இதுவரை 51 பேருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தானமாக பெறப்படும் தோலானது மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, 3 கட்டங்களாக சுத்திகரிக்கப்பட்டு பதப்படுத்தப்படும். 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 5 ஆண்டுகள் வரை தோல் பராமரிக்கப்படும். தீ போன்ற விபத்துகளால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தானமாக பெறப்பட்ட தோல் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். 15 நாட்களில் புதிய தோல் வளர்ந்த பிறகு, மேலே பொருத்தப்பட்ட தோல் தானாகவே உதிர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

எனவே அண்மைக்காலமாக அதிகரித்து வரும் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வில் தோல் தானமும் இணையும் பட்சத்தில் பலரது வாழ்க்கையில் ஒளியேற்றப்படும் என்பதில் ஐயமில்லை.....

https://www.polimernews.com/dnews/101574/“தோல்-தானம்”---அறிந்தவை-அறியவேண்டியவை

 

Share this post


Link to post
Share on other sites

உடலுறுப்பு தானம்: 'ஒருவர் ஏழு பேருக்கு வாழ்வு கொடுக்கலாம்'

 

https://www.sbs.com.au/language/tamil/audio/world-kidney-day-special-importance-of-transplanting-organs?cid=lang%3Asocialshare%3Afacebook

உறுப்பு செயலிழப்புகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் Transplant எனப்படும் 'உடலுறுப்பு மாற்று சத்திரசிகிச்சை' உதவுகிறது. உறுப்புகளை தானம் செய்வதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார் South Dakota பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், துணைத் தலைவரும், அறுவைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் தவம் தம்பிப்பிள்ளை (Professor and Vice Chair of Surgery at University of South Dakota). நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அந்தத் தலைப்பில் நான் இணைத்த வீடியோ நாலு நாட்களுக்கு முன்னர்தான் விகடனால் யூரியூப்பில் வெளியிடப்பட்டது. அதில் முன்னர் சொன்ன ஆமைக்கறி, உடும்புக்கறியோடு புதிதாக கறி இட்லியையும் அண்ணன் சீமான் உண்டு களித்ததைச் செப்பியிருந்தார்.😄 அதைக்கூடச் சரியாகச் பார்க்காமல் இந்தத் தலைப்புக்குள் இழுத்து வந்தது சரியா? தகுமா? நியாயமா? சொல்லுங்கள் உடையவரே!
  • உடையார் கூல் டவுன்😎 இந்திய ஆக்கிரமிப்புப் படைக் காலத்தில் தாயகத்தில்தான் இருந்தேன். அவர்களுடன் கிளித்தட்டு விளையாடித்தான் பாடசாலைக்கும் ரியூசனுக்கும் போய்வந்துகொண்டிருந்தோம். எனவே யதார்த்தம் தெரியும்😀 நீங்களும் தாயகத்தில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.😂  நட்வர்சிங் 15, 000 படைகளை இழந்தோம் என்று சொல்லியது நம்பும்படியாக புலிகள் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை பெரிய ஒபேரசன் எதிலும் கொல்லவில்லை. நட்வர்சிங் சோனியாவுடன் முரண்பட்டு தனது அரசியலுக்காக சொல்லுவைதையெல்லாம் உண்மையாக்க time tunnel இல் போய் ஒரு பத்தாயிரம் இந்திய இராணுவத்தை முடிச்சால்தான் உண்டு!🤪 கடஞ்சா சொல்வதுமாதிரி, கொல்லப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் எல்லோரையும் கூட்டினாலும் 1987 ஒக்டோபரில் இருந்து 1989 நவம்பர்/டிசம்பர் வரை 15,000 பேரை இழந்திருக்கமாட்டார்கள். நான் கிந்தியாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல் நம்பி கிளுகிளுப்பு அடைவது, அதுவும் இந்தப் பேட்டி வந்து ஒரு வருடத்திற்கு மேலாக இருந்தும், நல்லதுக்கில்லை. முடிந்தால் கேணல் ஹரிகரனையோ அல்லது  வேறு இந்திய ஆய்வாளர்களையோ அல்லது புலிகளின் குறிப்புக்களையோ ஆதாரமாகக் காட்டுங்கள். மதுவந்தியின் நம்பர்களை அவர் திடமாக நம்புவதுபோல நட்வர்சிங் நம்புகின்றார் என்பதற்காக சொன்னேன். 😄 அதற்காக நான் நெடுக்ஸ் மாதிரி பெண் வெறுப்பாளராகவும், நீங்கள் பெண்ணியவாதியாகவும் ஆகிவிடமுடியாது!😆 நான் சும்மாவே இரக்கமானவன். பொண்ணுங்கள் என்றால் அழுதிடுவேன். ஆமா..
  • இந்த ஆளு..... மிளகாய் பஜ்ஜி மாதிரி இருந்தாரு.... இப்ப போண்டா மாதிரி ஆகிட்டாரு
  • மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை: இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில்   லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயார் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார். இதுபற்றி வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கருத்து கேட்ட பாது, அவர் நேரடியாக பதில் அளிக்காமல், "பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்" என்று மட்டும் கூறினார். இதன்மூலம் டிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில்,  சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா- சீனா எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் முறையாக தீர்க்கும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது. மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை. எல்லைப் பகுதியில் தற்போதைய நிலைமை சீனா மற்றும் இந்தியா பொதுவாக இயல்பானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது. சீனா மற்றும் இந்தியா சரியான எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு சேனல்களைக் கொண்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில் அளித்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29165337/No-thirdparty-intervention-is-requir-chinese-Foreign.vpf
  • அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா?  இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?   சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????