Jump to content

வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா?

Recommended Posts

சரி..நேரடியாக கேள்விக்கே வருகின்றேன்.

வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா?

அண்மையில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கதைத்துக் கொண்டு இருக்கும் போது பிள்ளைகளுக்கு  தமிழ் படிப்பித்தல் பற்றி எம் உரையாடல் திரும்பியது. அப்போது அங்கு இருந்த தமிழறிவுள்ள தாத்தா "தம்பி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா" எனக் கேட்டார்.

நான் இவர் ஏன் இப்படிக் கேட்கின்றார் என நினைத்து விட்டு, ஊரில் வீட்டு கிணற்றடியில் இருந்து பின் வளவில் உள்ள சிறு வீட்டுத் தோட்டத்துக்கு வெட்டப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடிய காட்சியை மனத்திரையில் கொண்டு வந்து பார்த்தேன். தண்ணீர் சலசலவென ஓடின மாதிரி நினைவு வர "ஓம் அப்படித்தானே ஓடும்" என கேள்விக் குறியுடன் அவரை பார்த்தேன்.

"இப்படித்தான் இங்குள்ள சிறுவருக்கான தமிழ் சொல்லிக் கொடுக்கும் புத்தகத்தில் எழுதி இருக்கு... அது பிழை. ஆற்றில் தான் தண்ணீர் சலசலவென ஓடும். வாய்க்காலில் மெதுவாகத்தான் போகும். இப்படி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது தவறான வர்ணணை" என்றார்.

பின் அவரே "இங்குள்ள  இங்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது ...ஆனால் கொஞ்சம் இலக்கண சுத்தமாகவும் படிப்பித்தால் தான் இங்கும் தமிழ் செழுமை அடையும் என்றார்.

இவ்வளவு நாளும் எனக்கு தமிழ் மட்டும் தான் ஓரளவுக்கேனும் தெரியும் என நான் எண்ணிக் கொண்டு இருந்தன்.. இப்ப பார்த்தால் அதுவும் தகராறு போல் இருக்கு என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் அவர் சொன்னது சரியா? வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது என சொல்வது தவறா? வேறு எப்படி அதைச் சொல்ல முடியும்?

ஆராவது என் சந்தேகத்தை கிளியர் பண்ணுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தவறு என்று விளங்கவில்லை.  எனக்குத் தெரிந்து, வாய்க்காலில் தண்ணீர் சல சல என ஓடியது என்று தான் சொல்வது. 

இதுக்கும் இலக்கணத்திற்கும் என்ன தொடர்பாம்? 

ஆனால், என்னுடைய கேள்வி, இங்குள்ள பிள்ளைகளுக்கு வாய்க்கால் தெரியுமா? 

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சலசல என்பது தமிழ் இலக்கணத்தில் இரட்டைக்கிளவி என்று அழைக்கப்படும். இரு சொற்கள் சேர்ந்தே வரும். தனித்து நின்றால் அச்சொல் பொருள் தராது. வினைச்சொல்லுக்கு அடைமொழியாய் முன்னால் அச் சொல்லியதை அழகுபடுத்தும். தமிழில் இப்படிப்பல சொற்கள் உள்ளன. ஆற்று நீர் அல்லது வாய்க்கால் நீரை இப்படிக்கு கூறுவர். அதன் வேகத்துக்குக் கூறுவதல்ல. நீரை நாம்கால்களால் லல்லது கைகளால் அளைந்தால்  ஏற்படும் ஒலிதான் அது.

தண்ணீர் ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும் போதும் இதை உணரலாம்

ஆற்றின் கரையில் நின்று பாருங்கள் சலசல என்றுதான் கேட்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Sabesh said:

இதில் என்ன தவறு என்று விளங்கவில்லை.  எனக்குத் தெரிந்து, வாய்க்காலில் தண்ணீர் சல சல என ஓடியது என்று தான் சொல்வது. 

இதுக்கும் இலக்கணத்திற்கும் என்ன தொடர்பாம்? 

ஆனால், என்னுடைய கேள்வி, இங்குள்ள பிள்ளைகளுக்கு வாய்க்கால் தெரியுமா? 

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

இங்கு கற்பிக்கும் போது மாணவர்களுக்கு உதாரணங்கள் கூறி, விளக்கம் கூறிப் படம் காட்டித்தான் கற்பிப்பது. 

Link to comment
Share on other sites

25 minutes ago, Sabesh said:

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

நாங்களும் அறிவகத்திலிருந்து நிப்பாட்டியதற்கான காரணமும் இது போல..... வாய்க்குள் நுழையாத, பாவனையில் இல்லாத, கருத்து தெரியாத சொற்களைத் தமிழ் வளர்க்கிறோம் என்ற பெயரில் வியாபாரபடுத்தியதே. 

இப்போது இங்குள்ள local school board இல், உலக மொழிகள் கற்பிக்கும் பகுதியினூடாக கற்பிக்கும் தமிழ் வகுப்புக்கு அவர்களும் விரும்பிப் போடுறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இணையவன் said:

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

உங்கள் மகளுக்குக் கற்பித்த ஆசிரியர் அரைகுறையானவராக இருக்கலாம். அல்லது பட்டம் பெற்றும் கற்பித்தல் அணுகுமுறை தெரியாதவராக இருக்கலாம். அல்லது புதிய ஆசிரியராகக் கூட உங்கள் மகளின் இடர் அறியாது இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் அவசரப்பட்டு பள்ளியை விட்டு நிறுத்தாது ஆசிரியருடனோ அல்லது தலைமையாசிரியரிடமோ கதைத்திருக்கலாம். கோபித்துக்கொண்டு உடனே பள்ளியை விட்டு நிறுத்திவிதிட்டீர்கள் எனில் தவறு உங்கள் பேரிலும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sabesh said:

நாங்களும் அறிவகத்திலிருந்து நிப்பாட்டியதற்கான காரணமும் இது போல..... வாய்க்குள் நுழையாத, பாவனையில் இல்லாத, கருத்து தெரியாத சொற்களைத் தமிழ் வளர்க்கிறோம் என்ற பெயரில் வியாபாரபடுத்தியதே. 

இப்போது இங்குள்ள local school board இல், உலக மொழிகள் கற்பிக்கும் பகுதியினூடாக கற்பிக்கும் தமிழ் வகுப்புக்கு அவர்களும் விரும்பிப் போடுறார்கள். 

பயன்பாட்டில் இல்லாத பழைய தமிழ்ச் சொற்களை மீண்டும் பாடநூல்களில் சேர்த்து தமிழ் நூல்களை தனித்த தமிழாக்க கொண்டுவரும் முயற்சி பல இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாம் வடசொற்களை தமிழ்ச் சொல் என்று நினைத்துக் கற்றவர்கள். எமக்கு மனதில் பதிந்துள்ள சொற்களின் தமிழ் சொல்லை பார்க்கும்போது இது என்ன கடினமான புதிய சொல் என்று எமக்குத்தான் தோன்றுமேயன்றி புதிதாகத் தமிழைக் கற்கும் ஒரு மாணவருக்கு அல்ல. இந்தத் தெளிவு பல பெற்றோரிடம் இல்லாதகாரணத்தால் எதோ தங்கள் பிள்ளைகள் கொடுமைப்படுத்தப்படுவதான கற்பிதத்துடன் பிள்ளைகளை உடனே பள்ளியை விட்டு நிறுத்திவிடுவார்.

இதுவே அவர்களின் ஆரம்பப் பள்ளியில் எந்தக் கடினமான சொல்லை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தாலும் அத்திப்பற்றிக் கவலை கொள்வதுமில்லை. பள்ளியை விட்டு நிப்பாட்டுவதுமில்லை.  😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sabesh said:

இதில் என்ன தவறு என்று விளங்கவில்லை.  எனக்குத் தெரிந்து, வாய்க்காலில் தண்ணீர் சல சல என ஓடியது என்று தான் சொல்வது. 

இதுக்கும் இலக்கணத்திற்கும் என்ன தொடர்பாம்? 

ஆனால், என்னுடைய கேள்வி, இங்குள்ள பிள்ளைகளுக்கு வாய்க்கால் தெரியுமா? 

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

சல சல என ஓடுவதற்கு நிலம் மேடு பள்ளத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக வாய்க்கால் அவ்வாறு இருப்பதில்லை.

ஆனால் கடைசிப் பந்தியில் நீங்கள் கூறியது 100% சரியானது. தொலைக் காட்சி வருவதற்கு முன்னர் பருவகாலங்கள் நான்கில் (Winter and Fall) என்னவென்றே விளங்கவில்லை.  ஊசியிலைக் காடு என்பதும் மற்றொன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

நம்மட கதையும் அதுவே இப்படித்தான் இரட்டை கிழவிகள் பற்றி அறியாத ஒன்று பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க அன்றே நிப்பாட்டி பிரைவேட்டா சோதனை எழுதவைக்க அதிவிசேட சித்தியுடன் பாஸ் பண்ணியுள்ளார்கள் என்னை பொறுத்தவரை தமிழ் பள்ளிகள் என்பது பலரின் தன்மான பிரச்சனைகளின் வடிகால் அங்கு செல்லும் பிள்ளைகளை கேட்டு பாருங்கள் தமிழை விட கஷ்ட்டமான மொழி ஸ்பெயினும் பிரான்சும் படிக்க விருப்ப படுங்கள் தமிழ் வேண்டாம் என்று அழுது கொள்ளுங்கள் காரணம் எப்படி இலகுவாக தமிழ் படிப்பிப்பது என்பது தெரியாமல் போனது துரதிர்ஷ்டவசமாக அமைந்த ஒன்று .

தமிழ் சொல்லிகொடுப்பதும் ஒரு கலை 

ஊரில் ஒவ்வொரு பாட வாத்தியும் மாணவர்களின் மனதில் தங்களின் பாடம் நிக்கணும் என்பதுக்காக விதம் விதமாய் யோசித்து பாடம் நடத்துவார்கள் .

இங்கு தமிழ் படிக்க விரும்பாத பிள்ளையை ஏன் என காரணம் கேட்டபோது அது சொல்கிறது தமிழில் மாத்திரம் தண்டனைகள் கடுமையாக உள்ளது அதனால் விளங்கி கொள்வது கஷ்ட்டமாக உள்ளது . தமிழ் பாடம் எடுக்கும் முன் மாணவர்களை விளங்கி கொள்ளனும் ஆசிரியர்கள் .

Link to comment
Share on other sites

7 hours ago, நிழலி said:

சரி..நேரடியாக கேள்விக்கே வருகின்றேன்.

வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா?

அண்மையில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கதைத்துக் கொண்டு இருக்கும் போது பிள்ளைகளுக்கு  தமிழ் படிப்பித்தல் பற்றி எம் உரையாடல் திரும்பியது. அப்போது அங்கு இருந்த தமிழறிவுள்ள தாத்தா "தம்பி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா" எனக் கேட்டார்.

நான் இவர் ஏன் இப்படிக் கேட்கின்றார் என நினைத்து விட்டு, ஊரில் வீட்டு கிணற்றடியில் இருந்து பின் வளவில் உள்ள சிறு வீட்டுத் தோட்டத்துக்கு வெட்டப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடிய காட்சியை மனத்திரையில் கொண்டு வந்து பார்த்தேன். தண்ணீர் சலசலவென ஓடின மாதிரி நினைவு வர "ஓம் அப்படித்தானே ஓடும்" என கேள்விக் குறியுடன் அவரை பார்த்தேன்.

"இப்படித்தான் இங்குள்ள சிறுவருக்கான தமிழ் சொல்லிக் கொடுக்கும் புத்தகத்தில் எழுதி இருக்கு... அது பிழை. ஆற்றில் தான் தண்ணீர் சலசலவென ஓடும். வாய்க்காலில் மெதுவாகத்தான் போகும். இப்படி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது தவறான வர்ணணை" என்றார்.

பின் அவரே "இங்குள்ள  இங்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது ...ஆனால் கொஞ்சம் இலக்கண சுத்தமாகவும் படிப்பித்தால் தான் இங்கும் தமிழ் செழுமை அடையும் என்றார்.

இவ்வளவு நாளும் எனக்கு தமிழ் மட்டும் தான் ஓரளவுக்கேனும் தெரியும் என நான் எண்ணிக் கொண்டு இருந்தன்.. இப்ப பார்த்தால் அதுவும் தகராறு போல் இருக்கு என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் அவர் சொன்னது சரியா? வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது என சொல்வது தவறா? வேறு எப்படி அதைச் சொல்ல முடியும்?

ஆராவது என் சந்தேகத்தை கிளியர் பண்ணுங்கள்..

வாய்க்கால் ஆறுகளில் நீர் சலசலவென்று ஓடுவது பொருத்தமற்ற வர்ணணை தான். கிழை ஆறுகளில் தான் இவ்வாறான சத்தம் வரும். ஒரு ஆற்றில் இருந்து பிரிந்து சொல்லும் சிறிய நீரோடை  அல்லது ஆற்றுக்கு வந்நு சேரும் சிறிய நீரோடை களுக்கு பொருத்தமான வர்ணணை. பெரும் நீர்பாசன வய்க்கால்களில் நீர் அமைதியாக ஓடும் அதிலிருந்து வயலுக்கு செல்லும் சிறிய கால்வாயில் அதிக சத்தம் வரும். நீரோடைக்கு பொருத்தமான வர்ணணை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பார்கள்......தமிழில் "ல" வில் பல, "ன"  வில் பல ,என பல ஒலிகளுடன் கூடிய எழுத்துக்கள் உள்ளன.திருக்குறள்,தேவாரங்கள் போன்றவற்றில் அவை சந்தத்துடன்,எதுகை மோனையுடன்  சேர்ந்து வரும்.அவைகளை சத்தமாய் படிக்கும் போதுதான் பிள்ளைகளுக்கு நாக்கு அதற்கேற்றவாறு புரளும். இதில வடமொழி இருக்கு அதில மதம் இருக்கு என்று எல்லாவற்றிலும் நுனுக்கம் பார்த்தால் நட்டம் குறளுக்கோ தேவாரத்துக்கோ அல்ல .........!

நான் பிரான்ஸ் வந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்றுவரை பிரெஞ்சில்  "R ",  "U", "O" "é", " è" "ç" "à" போன்ற எழுத்துக்கள் என்னால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. இங்கேயும் பாடசாலைகளில் இப்படி சரியாக உச்சரிக்காத பிள்ளைகளை விசேஷமாக பயிற்சி பெற்ற ஆசிரியரிடம் ( orthophonique) அனுப்பி வைக்கிறார்கள்.பெரிய வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகள் கூட அங்கு வருகிறார்கள்.இதில் சிறப்பாம்சம் என்னவென்றால் அந்த ஆசிரியர் ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு மாணவனுக்கு மட்டுமே வகுப்பு எடுக்கிறார்.அதுவும் பாடசாலை நேரத்திலேயே.இணையவனுக்கும் இவை தெரிஞ்சிருக்கும்.

பாடசாலைகளில் பாடநூல்களை வைத்து அதன் பிரகாரம்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள்.சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களுடன் கதைத்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.அதுதான் நல்லது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை உங்கள் நண்பர் சொன்னது சரியும் பிழையும்.

என்ன குழப்பமாக இருக்கிறதா?

சலசலப்பு என்றால் என்ன? சத்தம். ஆங்கிலத்தில் சொல்வதானால் commotion.

சலசலப்பு என்ற சொல்லிற்கு அண்ணித்த, ஒலியை குறிக்கும் இரெட்டை கிளவியே சலசல.

வீட்டில் கிணற்றடியில் இருந்து தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு ஓடும் சின்ன வாய்க்காலில் நீர் சலசலத்து ஓடாது.

ஆனால் யாழில் வழுக்கை ஆறு பாயும் வாய்கால்களில், வன்னியில் குளங்களில் இருந்து வெளியேறும் வாய்கால்களில், மாரி காலத்தில் வெள்ளம் சலசலத்து மட்டும் இல்லை, கரைபுரண்டும் ஓடும்.

ஆகவே வாய்காலில் ஓடும் நீர் சல, சல என்று ஓடுகிறது, நிசப்தமாக ஓடுகிறதா என்பது, வாய்காலின் அளவு, நீரின் பெருக்கை வைத்து வாய்க்காலுக்கு, வாய்க்கால் வேறுபடும். 

சில வாய்காலில் நீர் சலசல என ஓடாது, ஆனால் சிலதில் ஓடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சல சல  என்பது காரணப்பொருள்  அல்ல

சல  சல என்ற  சத்தத்தை காரணமாகக்கொண்டதல்ல

அதன் அழகை  அல்லது நெளிவு சுளிவின் தன்மையை  விளக்குவதாக  இருக்கலாம்

எனது தகப்பனார் பாத்தி கட்டி வழி  மறித்து  விடும் போது தண்ணீர் சல சலவென்று  ஓடுவதைக்கண்டிருக்கின்றேன்.

அப்புறம் தமிழ் இலக்கியவாதிகள்  சொல்லட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

சல சல  என்பது காரணப்பொருள்  அல்ல

சல  சல என்ற  சத்தத்தை காரணமாகக்கொண்டதல்ல

அதன் அழகை  அல்லது நெளிவு சுளிவின் தன்மையை  விளக்குவதாக  இருக்கலாம்

எனது தகப்பனார் பாத்தி கட்டி வழி  மறித்து  விடும் போது தண்ணீர் சல சலவென்று  ஓடுவதைக்கண்டிருக்கின்றேன்.

அப்புறம் தமிழ் இலக்கியவாதிகள்  சொல்லட்டும் 

சத்தத்தைக் காரணமாகக் கொண்டதல்ல என்று சொல்லிவிட்டு உடனேயே பாத்திகட்டிய தண்ணீர் சலசலத்து ஓடுவதைக் கண்டிருக்கின்றேன் என்று முரண்படுகின்றீர்கள் விசுகு ஐயா😂🤣

நீங்கள் சலசலத்து ஓடுவதைக் காதால்தான் கண்டிருக்கின்றீர்கள்!!😬

இரட்டைக்கிளவியை விளங்க அழகுராணி ஐஸ்வர்யா ராய் சொல்வதைக் கேளுங்கள்😀

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக
இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

சல சல  என்பது காரணப்பொருள்  அல்ல

சல  சல என்ற  சத்தத்தை காரணமாகக்கொண்டதல்ல

அதன் அழகை  அல்லது நெளிவு சுளிவின் தன்மையை  விளக்குவதாக  இருக்கலாம்

எனது தகப்பனார் பாத்தி கட்டி வழி  மறித்து  விடும் போது தண்ணீர் சல சலவென்று  ஓடுவதைக்கண்டிருக்கின்றேன்.

அப்புறம் தமிழ் இலக்கியவாதிகள்  சொல்லட்டும் 

சலசல என்பது பெயர்ச்சொல் இல்லை. எனவே காரணப்பெயரா, இடுகுறி பெயரா என்ற கோணத்தில் இதை அணுக முடியும் என நான் நினைக்கவில்லை.

“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என்ற பழமொழியில் சலசலப்பு என்பது யாது? பனங்காட்டில், பற்றைகளுக்கு இடையா எழும் சலசல எனும் இனம்புரியா ஒலியை கேட்டு அந்த காட்டிலேயே தினமும் வாழும் நரி அஞ்சாது என்பதே.

ஆகவே சலசல என்பது எழும்பும் ஒலியின் அடிப்படையில் அமைந்த ரெட்டைகிளவியே. 

ஆனால் இரெட்டைகிளைவிகள் எப்போது ஒலியின் அடிப்படையில் மட்டுமே அமைவனவும் அல்ல.

பாம்பு சரசர என ஓடியது, என்பதில் சரசர வின் அடிப்படை ஒலி.

பிரியாணி கமகம என மணந்தது என்பதில் கமகம வின் அடிப்படை மணம்.

அவளின் தொடுகை எனக்கு கிளுகிளுப்பாக இருந்தது என்பதில் அடிப்படை தொடுகை உணர்ச்சி,

மக்கள் திபுதிபு என உள்வந்தனர் என்பதில் எந்த உணர்சியும், உணர்வையும் அடிப்படையாக கொள்ளாமல் - கண்களால் காணும் விபரணம் திபுதிபுவின் அடிப்படையாகிறது.

நிழலியின் நண்பர் கால்வாயில் நீர் சலசலத்து ஓடாது என கூறியமைக்கு காரணம் -அவர் மனதில் தோன்றியது தோட்டத்தின் சின்ன கால்வாய்.

ஆறைவிட, ஓடையைவிட, நதியை விட ஆக்ரோசமாக நீர் ஓடும் கால்வாய்களும் உள்ளனவே? ஓடையில் ஓடும் நீர் சலசலக்கும் ஆனால் அதை விட பெரிய கால்வாயில் ஓடும் நீர் சலசலக்காது என்பது சரியாகப்படவில்லலை.

Link to comment
Share on other sites

ஆகவே வாய்க்காலில் நீர் சலசலவென ஓடுவது சரியான வர்ணனை என புலப்படுகின்றது. அத்துடன் இது ஒலியின் அடிப்படையில் அமைந்த இரட்டைக் கிளவி என்பதும் தெளிவாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்துப்பார்த்தால், ரெட்டைகிளவிகள் எல்லாம் ஏதோ ஒரு புலனுணர்வின் அடிப்படையில் அமைவதாகவே படுகிறது.

குசுகுசு/ சலசல/சரசர/ நறநற ....ஒலி

கசகச (வேர்வை), சிலுசிலு (காற்று), கிளுகிளு..... -தொடுகை

திபுதிபு (கூட்டம்) /புஸுபுஸு (என அழகான நாய்குட்டி)/ செவசெவ (நிறம்) , மொழுமொழு......பார்வை

சுவைக்கும், மணத்துக்கும்தான் அதிகம் இரெட்டைகிளவிகள் இல்லை? 

கமகம ஒன்றை மட்டுமே யோசிக்க முடிகிறது.

சிச்சுவேசன் சாங் கீழே👇

Link to comment
Share on other sites

21 minutes ago, goshan_che said:

பிரித்துப் பார்த்தால் பொருள் இல்லாமல் இருப்பது தான் இரட்டைக் கிளவி என்றால் குசுகுசு இரட்டைக்கிளவியிற்குள் அடங்காது தானே 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலகல என்டு சிரித்தாள்😄

Quote
Quote

Link to comment
Share on other sites

அவள் – இரட்டைக்கிளவி

சலசல எனவரும் சலங்கைகள்
கலகல கவரும் பேச்சுகள்
துறுதுறு செல்லும் விழிகள்
படபட படக்கும் இமைகள்
கமகம மணக்கும் மல்லிகைகள்
மினுமினு மின்னும் கன்னம்
பளபள இருக்கும் கண்ணும்
கிளுகிளு கிளம்பும் உருவம்
சிலுசிலு அடிக்கும் காத்தும்
குடுகுடு வரும் கிழவனுக்கும்
தடதட அடிக்கும் இதயம்
தைதை தாளத்தில் மனசும்
சுடசுட நெஞ்சம் கொதிக்கும்
திபுதிபு இளையர் கூட்டம்
சரசர எண்ணிக்கை கூடும்
மசமச அவள்பின்னே நிற்கும்
வழவழ பலவும் பேசும்
திருதிரு சிலவிழிகள் பிதுங்கும்
கிறுகிறு தலையும் சுற்றும்
முணுமுணுக்கும் அவள் பெயரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

சத்தத்தைக் காரணமாகக் கொண்டதல்ல என்று சொல்லிவிட்டு உடனேயே பாத்திகட்டிய தண்ணீர் சலசலத்து ஓடுவதைக் கண்டிருக்கின்றேன் என்று முரண்படுகின்றீர்கள் விசுகு ஐயா😂🤣

நீங்கள் சலசலத்து ஓடுவதைக் காதால்தான் கண்டிருக்கின்றீர்கள்!!😬

இரட்டைக்கிளவியை விளங்க அழகுராணி ஐஸ்வர்யா ராய் சொல்வதைக் கேளுங்கள்😀

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக
இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”

முதலில் எழுதியிருப்பதை  வாசியுங்களப்பா

கண்டிருக்கின்றேன்  என்று  தானே எழுதியிருக்கின்றேன்

கீழே  கோசாண் விரிவாக  தந்துள்ளார்

ஆறைவிட, ஓடையைவிட, நதியை விட ஆக்ரோசமாக நீர் ஓடும் கால்வாய்களும் உள்ளனவே? ஓடையில் ஓடும் நீர் சலசலக்கும் ஆனால் அதை விட பெரிய கால்வாயில் ஓடும் நீர் சலசலக்காது என்பது சரியாகப்படவில்லலை.

நன்றி  சகோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை கிளவி சொற்களும் அதன் பொருள்களும்

01. கத கத - விரைவாக
02. கடகட - விரைவாக, ஒலிக்குறிப்பு
03. கரகர - காய்ந்து இருத்தல்
04. கம கம - மணம் வீசுதல்
05. கண கண - உடம்புச் சூடு
06. கலகல - சிரிப்பு
07. கடுகடு - போபமாக பேசுதல்
08. கறகற - தொந்தரவு
09.கலீர் கலீர் - சலங்கையொலி
10. கணீர் கணீர் - மணி ஒலி
11. கிணு கிணு - மெல்ல இரைதல்
12. கிறுகிறு - விரைவாக /சுற்றுதல்
13.  கிளு கிளு - சிரித்தல் / மகிழ்ச்சி
14. கிடுகிடு - விரைவாக /அச்சம்
15. கீச்சுகீச்சு - ஒலிக்குறிப்பு (பறவைகளின் ஒலி)
16. கீர்கீர் - ஒலிக்குறிப்பு (கத்துதல்)
17. குடுகுடு - விரைந்தோடித் திரிதல், நடத்தல்
18. குளுகுளு - தென்றல் காற்று / குளிர்
19. குபீர் குபீர் - குருதி பாாய்தல்
20. குறு குறு - மனம் உறுத்துதல்
21. குசுகுசு - ரகசியம் பேசுதல்
22. குமுகுமு - மிக மணத்தல்
23. குபுகுபு - புகை கிளம்புதல்
24. கொழு கொழு - பருத்தல்
25. சட சட - ஒலிக்குறிப்பு (பரபரத்தல்), சிறகுகளை அடித்துக் கொள்ளல், முறிதல்
26. சடார் சடார் - பொருட்கள் மோதுதல்/விழுதல்
27. சரசர - ஒலித்தல் ,உரசல் ஒலி
28. சலசல - ஒலிக்குறிப்பு , நீரின் ஓசை
29. சளசள - ஓயாத இரைச்சல் பேச்சு
30. சிலீர் சிலீர் - குளிர்தல்
31. சிடுசிடு - எரிச்சல் கலந்த கோபம்
32.  சுள்சுள் - வலித்தல்
33. சுறு சுறு - கோபம்
34. டாங்டாங் - ஒலிக்குறிப்பு (மணி ஒலி)
35. தடதட - நாத்தட்டுதல், முரட்டுத்தனமாக
36.  தரதர - தரையில் உராயும் வகையில் இழுத்தல்
37. தளதள - இளக்கம், சோபை
38. தழுதழு - நாத்தடுமாறுதல்
39. தகதக - ஜொலிப்பு ,எரிதல் , மின்னுதல்
40. திருதிரு - அச்சம் ,முழித்தல்
41. திடு திடு - விரைவான ஓட்டம்
42. துடு துடு - ஒலிக்குறிப்பு
43. துருதுரு - சுறுசுறுப்பு
44. துடி துடி - இரங்குதல் ,வலியால் அவதியுறல்
45. தொளதொள - இறுக்கமின்மை
46.  தொண தொண - இடைவிடாது பேசுதல்
47. நறு நறு - கோபம்
48. நற நற - பல்லைக் கடித்தல்
49. நெருநெரு - உறுத்தல்
50. நொளுநொளு - குழைவு
51. பள பள - மினுங்குதல்
52. பரபர - நிதான இழப்பு ,அவசரம் ,வேகமாக செயற்படல்
53. பகபக - வேக குறிப்பு
54. பளிச் பளிச் - மின்னுதல்
55. படபட - இதயத்துடிப்பு
56. பளார் பளார் - கன்னத்தில் அறைதல்
57. பளீர் பளீர் - மின்னல்
58. பிசுபிசு - பசைத்தன்மை
59. புறு புறு - முணுமுணுத்தல்
60. பொல பொல - கண்ணீர் வடிதல்
61. பொலுபொலு - உதிர்தல்
62. மடமட - வேகமாக நீர் குடித்தல்
63. மளமள - முறிதல்
64. மினுமினு - பிரகாசித்தல், மிளிர்தல்
65. மெது மெது - மென்மை
66. மொழு மொழு - வளர்ச்சி
67. மொறமொற - மிகக் காய்தல்
68. மொர மொர - கடித்தல்
69. வழவழ - உறுதியின்மை
70. வளவள - பயனின்றி பேசுதல்
71. வளுவளு - நொளு நொளுத்தல்
72. விதிர்விதிர் - அச்சம்
73. விசுக் விசுக் - வேகநடை
74. விண் விண் - வலித்தல்
75. விடுவிடு - வேகமாக
76. விறுவிறு - வேகமாக, பரபரப்புடன்
77. வெடுவெடு - கோபமான பேச்சு்
78. வெதுவெது - இளஞ்சூடு
79. வெலவெல - நடுங்குதல், பதறுதல்

இணையத்தில் எடுத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சடார், சிலீர், கலீர், கணீர் போன்றன இரட்டை சொற்களாய் பாவிக்கப்பட்டாலும், தனித்தும் பொருள் தருவதால் அவை இரட்டை கிளவிகள் அல்ல என்றே நினைக்கிறேன்.

உ+ம்

பெரும் காற்றில் ஆல மரம் சடாரெனெ முறிந்தது 

ஓடையின் நீர் அந்த அதிகாலையில் அவன் முகத்தில் பட்டபோது, சிலீரென்றிருந்தது

நிசப்தமாய் இருந்த அந்த அறையில் அவளின் ஒற்றை சலங்கை மட்டும் கலீர் என்ற ஒலியை ஏற்படுத்தியது

சிறுவயது முதலே அவன் கணீரென்ற குரலில் தேவாரம் பாடுவது வழக்கம்.

7 hours ago, நிழலி said:

பிரித்துப் பார்த்தால் பொருள் இல்லாமல் இருப்பது தான் இரட்டைக் கிளவி என்றால் குசுகுசு இரட்டைக்கிளவியிற்குள் அடங்காது தானே 😄

இரெட்டைகிளவிக்குள் மட்டு அல்ல ஐயா, இது எங்கேயும், எப்போதும் அடங்காது 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இரெட்டைகிளவிக்குள் மட்டு அல்ல ஐயா, இது எங்கேயும், எப்போதும் அடங்காது 😅

பறிஞ்சிடும்......வெட  வெட என தொடைகளும் நடுங்கிடும்.....!  😂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.