Jump to content

உடனடியாக கொள்வனவு செய்ய தீர்மானம்

Recommended Posts

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில், மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்காக 128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

இது தொடர்பில் நேற்று முன்தினம் இலங்கை மின்சார சபைக்கு அறிவித்தப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/235248/உடனடியாக-கொள்வனவு-செய்ய-தீர்மானம்

Link to comment
Share on other sites

20 minutes ago, ampanai said:

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில், மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்காக 128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது.

தனியார் நிறுவனம் எவ்வாறு மின்சாரம் பெறுகின்றது? சூரிய ஒளியில் ? இந்திய நிறுவனம்? 

ஒரு கள்வனுக்கு இன்னொரு கள்வனை தெரிந்திருக்கும், மக்களுக்கு அந்த கள்வனை தெரியாமல் இருக்கும்  

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

தனியார் நிறுவனம் எவ்வாறு மின்சாரம் பெறுகின்றது? சூரிய ஒளியில் ? இந்திய நிறுவனம்? 

ஒரு கள்வனுக்கு இன்னொரு கள்வனை தெரிந்திருக்கும், மக்களுக்கு அந்த கள்வனை தெரியாமல் இருக்கும்  

இலங்கையில் இன்னமும் சூரிய கலங்கள் மூலமாக, அல்லது காற்றடிகள்மூலமாக பெருமளவில் கொளவனவு செய்யக்கூடிய அளவில் தனியார் திட்ட்ங்கள் இன்னமும் அமுல் படுத்தப்படவில்லை। இந்தியாவின் தனியார் மின் வழங்கும் கம்பனிகளும் இன்னும் உருவாகவில்லை ।

இருந்தாலும் இலங்கையில் உள்ள தனியார் கொம்பனிகளிடம்  டீசலில் இயங்கும் பெரிய மின்பிறப்பாக்கிகள் இருக்கின்றன। இங்கும் பெரிய ஊழல்கள் காணப்படடாலும் வேறு வழிகள் இல்லை।  

Link to comment
Share on other sites

5 hours ago, Vankalayan said:

இருந்தாலும் இலங்கையில் உள்ள தனியார் கொம்பனிகளிடம்  டீசலில் இயங்கும் பெரிய மின்பிறப்பாக்கிகள் இருக்கின்றன। இங்கும் பெரிய ஊழல்கள் காணப்படடாலும் வேறு வழிகள் இல்லை।  

தெளிவு படுத்தியமைக்கு நன்றி. 

ஆனாலும், டீசல் மூலம் அசுத்தமான காற்றை சுவாசித்து வேறு வருத்தங்கள் வரலாம் 😞 

Link to comment
Share on other sites

17 hours ago, ampanai said:

தெளிவு படுத்தியமைக்கு நன்றி. 

ஆனாலும், டீசல் மூலம் அசுத்தமான காற்றை சுவாசித்து வேறு வருத்தங்கள் வரலாம் 😞 

நிலக்கரி அனல் மின் நிலையங்களை விட இது பரவாயில்லை। புத்தளம் , கல்பிட்டி பகுதிக்கு சென்றால் மக்கள் படும் அவதியையும் , சுகாதார சீர்கேடுகளையும் காணலாம்। இங்கு எல்லா இடங்களும் கருமையான ஒரு தூசி படலத்தை காணலாம்। இதை தவிர்க்க சில முன்னேட்பாடுகளை சீன நிறுவனம் மேட்கொண்டாலும் அது பலனளிக்கவில்லை। உலக நாடுகள் நிலக்கரி மின் நிலையங்களை இப்போது தவிர்த்தாலும் இலங்கையில் அது இப்போதைக்கு சாத்தியமில்லை ।

Link to comment
Share on other sites

6 hours ago, Vankalayan said:

தகவலுக்கு நன்றி. உங்களிடம் இருந்து பலதையும் அறியக்கூடியதாக / விளங்கக்கூடியதாக உள்ளது.  

ஆனால், புதிதாக ஒரு முழு மின்சார வண்டியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதற்கும் மின்சாரம் தேவை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.