Sign in to follow this  
தமிழ் சிறி

ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்!

Recommended Posts

Journalist-P.Saththiyamoorthy-Remembrance-Day.jpg

ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்!

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான பு.சத்தியமூர்த்தியின் நினைகூரல் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் ஆகியோரினால் நினைவுரையாற்றப்பட்டது.

இறுதி யுத்த காலத்தில் ஊடகப் பணியில் அர்ப்பணிப்புடன் பங்கெடுத்திருந்த ந.சத்தியமூர்த்தி இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார். அவரது உன்னதமான ஊடகப் பணியினை கௌரவித்து விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Journalist-P.Saththiyamoorthy-Remembrance-Day-2.jpg

http://athavannews.com/ஊடகவியலாளரும்-நாட்டுப்ப/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அவரை விலங்கு என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? அவர் பசுவையே விலங்கு என்று கூறமாட்டார்.
    • இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாத்திரம் இதுவரை 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 250 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/79234
    • என்ன திடீரென்று ஞானோதயம் வந்தது மாதிரி.....!  😁
    • கேள்வி கேட்டீர்கள்.👂 பதில் தந்தேன்.😎 நீதிமன்ற தீர்ப்பாக்கி விட்டீர்கள். எதிர்தரப்பு யாரோ? 😆கட்டுரையாளரா? எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அவருக்கு. தண்டனையை நீங்கள் எதிர்த்து மேன்முறையீடு செய்யாததனால், தண்டனையாக தந்த “அல் ஜசீராவையும் சிசிரிவி5ஐயும் மட்டும் அடுத்த ஆறுமாதம் பாருங்கள்” என்பதை நீங்கள் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?🪒
    • கொவிட் 19 தொடர்பில் செய்தி அறிக்கையிடலுக்கான சுகாதார அமைச்சின் பரிந்துரைகள்கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றமைக்காக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் ஊடக நிறுவனங்களினால் கீழ் காணும் நடைமுறைகளை பின்பற்றினால், கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்கும் திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். 01. கொவிட் 19 தொடர்பில் செய்தி எழுதும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களை மாத்திரம் பயன்படுத்தவும். 02. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள், நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது, இனம் மற்றும் மதங்களை குறிப்பிட வேண்டாம். 03. வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபர் நோயாளி மாத்திரமே என்பதை விடுத்து, அவர் நோயை பரப்பும் நபர் என்ற விதத்தில் செய்தி எழுத வேண்டாம். 04. எச்சரிக்கை குறித்து தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி எழுதப்பட வேண்டுமே தவிர, தனிநபரின் கருத்துக்களை சமூகமயப்படுத்த வேண்டாம். 05. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள் மற்றும் நோயாளர்கள் ஆகியோரின் படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம். 06. உயிரிழந்த நபரொருவரின் உணர்வுப்பூர்வமான படங்கள் மற்றும் வீடியோக்களை "தெளிவின்மைப்படுத்தி" பயன்படுத்துவது சிறந்ததாக அமையும். 07. மக்கள் மத்தியில் முறுகல் ஏற்படும் விதத்தில் செய்தி அறிக்கையிடலை தவிர்க்கவும். 08. கொவிட் 19 நிலைமை மக்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், எதிர்காலம் குறித்து சிறந்த எதிர்பார்ப்பு மற்றும் ஒவ்வொருவருக்கு இடையில் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.