Jump to content

ஏன் இந்த அவசரம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு  யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் .

Bielefeld  நகரில் Ummelner  வீதியில் இருந்த  அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி,  அதன்மேல் தனது  ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான்.

வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.

ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே  இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்றாகக் குவித்து வைத்திருந்ததை பொலீஸார் கண்டனர். கூடவே தனது அடையாள அட்டையையும் அங்கே தவற விட்டு விட்டுச் சென்றிருக்கிறான்.

பொலீஸாருக்கு தன்னை பிடிப்பதற்கு எளிதாக தனது சைக்கிள்,ஜக்கெற், அடையாள அட்டை எல்லாவற்றையும் வைத்து விட்டு எதற்காக அந்த முப்பது வயது இளைஞன்  அவசரமாகத் தப்பி ஓடினான் என்பது தெரியவில்லை.

https://www.westfalen-blatt.de/OWL/Bielefeld/Bielefeld/4154866-Polizei-stellt-Diebesgut-sicher-Strafverfahren-gegen-Bielefelder-eingeleitet-Einbrecher-laesst-Ausweis-liegen

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, Kavi arunasalam said:

பொலீஸாருக்கு தன்னை பிடிப்பதற்கு எளிதாக தனது சைக்கிள்,ஜக்கெற், அடையாள அட்டை எல்லாவற்றையும் வைத்து விட்டு எதற்காக அந்த முப்பது வயது இளைஞன்  அவசரமாகத் தப்பி ஓடினான் என்பது தெரியவில்லை

அண்மையில் இன்னொரு செய்தியில் ஒரு இளைப்பாறியவர், தனக்கு வேலையும் இல்லை; நண்பர்களும் இல்லை மற்றும் வருமானமும்  இல்லாத நிலையில் வேண்டுமென்றே திருடி சிறை சென்றிருந்தார்.

யார் யாருக்கு என்னென்ன துர்பாக்கிய நிலையோ, யாரறிவார் பராபரமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

கூடவே தனது அடையாள அட்டையையும் அங்கே தவற விட்டு விட்டுச் சென்றிருக்கிறான்.

களவெடுக்கப் போகும் போது.... அடையாள அட்டையை ஏன்... கொண்டு போனவர்?  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழிலுக்கு புதிசாய் இருப்பார் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.