Sign in to follow this  
nunavilan

போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயார் – தினேஷ் உறுதி!

Recommended Posts

போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயார் – தினேஷ் உறுதி!

 

 

   by : Jeyachandran Vithushan

dinesh-4.jpg

போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக (உள்நாட்டுக்குள்) இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்!

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையைத் தொடங்கினார்.

இதன்போது கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40/1 மற்றும் அதற்கு முந்தைய 30/1, 34/1 ஆகியவற்றிலிருந்து விலகுவதற்கான முடிவினை அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயற்படுத்தப்பட முடியாது, மேலும் மக்களின் இறையாண்மையை மீறும் செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது, குறிப்பாக அமைச்சரவை அங்கீராம் வழங்கப்படவில்லை, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை, முன்னாள் ஜனாதிபதியிடமும் இந்த விடயம் ஆலோசிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே கடந்த அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானம் 40/1 மற்றும் 30/1 மற்றும் 34/1 இல் இருந்து முறையாக விலக நாம் தீர்மானித்துள்ளோம் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அவர் கூறினார்.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய விவகாரம் தொடர்பாக (உள்நாட்டுக்குள்) இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

http://athavannews.com/போர்க்குற்ற-விவகாரம்-தொட/

Share this post


Link to post
Share on other sites
25 minutes ago, nunavilan said:

போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக (உள்நாட்டுக்குள்) இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்!

சிங்களத்தின் மீண்டும் மீண்டும் இசைக்கும் அதே இராஜதந்திரம். நாட்டில் ஒரு செயல் இந்த அரங்கில் இன்னொரு கதை. 

எமது தாயக அரசியல் வாதிகள் மீண்டும் ஏமாறி விடுவார்கள்.  

Share this post


Link to post
Share on other sites

இதை நீங்கள் யுத்தம் முடிந்த பின்னர் இருந்த ஐந்து வருட ஆட்சியில் செய்திருக்கலாம்। அப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள், தீர்மானங்களை நிறைவேற்ற தவறியதால்தான் இவளவு பிரச்சினைகளும்। இப்போது இனி இது தாமதமாகி விட்ட்து போலத்தான் தோன்றுகிறது। எனவே இலங்கை மக்களின் கோரிக்கைக்கு ஏட்ப சர்வதேசம் தலையிட வேண்டிய சந்தர்ப்பமாகவே இது இருக்கிறது। 

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, nunavilan said:

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய விவகாரம் தொடர்பாக (உள்நாட்டுக்குள்) இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

1590-DD57-9836-4-CCF-B2-F3-220-AE15369-A

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றுமொரு ஆணைக்குழுவை அமைக்கும் இலங்கையின் அறிவிப்பை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார்.

இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கருத்து தெரிவித்துள்ள மிச்லே பச்செலெட் இலங்கையின் உள்ளுர் பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.


un_geneva_srilanka.jpg

இதன் காரணமாக இன்னொரு ஆணைக்குழுவை அமைப்பது இந்த நடவடிக்கைகளை முன்னகர்த்தும் என தான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர்,மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறும் என்பதற்கான உத்தரவாதம் இலங்கையின் அனைத்து சமூகத்தினரிற்கும் இல்லாதநிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/76668

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இலங்கைக்கு அண்மையில் உள்ளதும் இலங்கையின் பொருளாதார நிலையை ஒத்த பொருளாதாரத்தை கொண்டிருந்ததுமான நாடு சிங்கப்பூர். அதன் பொருளாதாரத்தை கட்டி எழுப்பியவர் லீ குவான் யூ. நபி யூஸுப் அவர்களின் பொருளாதார முறை ஏன்  லீ குவான் யூவின் பொருளாதாரத்திலும் பார்க்க இலங்கைக்கு பொருத்தமானது என விளக்குவீர்களா?  
  • கிஷோர் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம், ஆளாளுக்கு பிலுபிலு என்று பிடித்துக் கொண்டனர். “டேய், அங்கேயே நில்லு, குழாய் பக்கத்துல ஹேண்ட் வாஷ் வெச்சிருக்கேன், மொதல்ல அதைத் தடவி கைகளை நல்லாத் தேய்ச்சிக் கழுவிட்டு அப்பறம் உள்ள வா” என்றார் அம்மா. “கைகள் மட்டும் இல்லப்பா , கால்களையும் நல்லா கழுவிகிட்டு வா” என்றார் அப்பா. “உள்ள வந்ததும் மொதல்ல நீ போட்டுட்டு இருக்கற எல்லா துணிகளையும் சோப் தண்ணியில ஊறவை” என்றாள் அக்கா. ‘என்ன கொடுமை கிஷோரு இது’ என்று தனக்குத் தானே கூறி தலையில் அடித்துக் கொண்டே, “டேய், உன் பங்குக்கு நீ ஏதாவது சொல்றது தானே?” என்று தம்பியைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான் கிஷோர். “யார் என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்ட, அப்பறம் எதுக்கு என் எனர்ஜியை நான் வேஸ்ட் பண்ணனும்” என்று கூறிய தம்பியை கோபமாக முறைத்தான். “அவன் மூளையில பதியற மாதிரி நல்லா சொல்லு, எல்லாரும் சொல்றாங்களே, கொஞ்சமாவது மதிப்போம்னு நெனைக்கறானா பாரு. இவனுக்கெல்லாம் பட்டாதான் புத்தி வர போகுது பாரு” என்றார் அப்பா. “அவன்தான் ஏதோ தெரியாம செய்யறான்னா, நீ ஏன் குழந்தைக்கு சாபம் விடற” என்று சொன்ன பாட்டியை ஓடிச் சென்று கட்டிக் கொண்டான். “ரொம்ப தேங்க்ஸ் பாட்டி, நீங்கதான் என் நல்ல பாட்டி” என்றான். “வெளிய போகாதீங்க, யாரையும் தொடாதீங்கன்னு டிவி, ரேடியோ எல்லாத்துலயும் எவ்ளோ சொல்றாங்க, அதுவும் வயசானவங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கும், அவங்களுக்கு ஈஸியா பரவும்ன்னு வேற சொல்லி இருக்காங்களே, ஆனா நீ எதையும் மதிக்காம நடக்கறயே, டிரஸ் கூட மாத்தாம ஏன்டா பாட்டியைத் தொட்டுப் பேசற?” என்றாள் அக்கா. “அதெல்லாம் எதுவும் ஆகாது, சும்மா பயமுறுத்தாதே, எவ்வளவு நேரம்தான் வீட்டுலயே முடங்கி இருக்கறது, அதான் வெளிய போய் நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில கலந்து கிட்டேன்” என்று கூலாக சொல்லிவிட்டு உள்ளே சென்றான் கிஷோர். கரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் கிஷோர் இப்படி வெளியே செல்வது வீட்டில் உள்ளவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சொல்வதன் முக்கியத்துவத்தை இவன் எப்போதுதான் உணரப் போகிறானோ என நினைத்தனர். அதற்கு பிறகு அடிக்கடி வெளியே செல்லாமல் இருந்தான் கிஷோர். ஆனாலும் சில நாட்களுக்கு ஒரு முறையாவது வெளியே சென்று விட்டு வருவான். “டேய், வீட்டுல இருக்கப் பிடிக்கலைன்னு வெளியே போகாத டா, கரோனாவுடைய அறிகுறி தெரிஞ்சா அப்பறம் நீ தனிமைப்படுத்தப் படுவ, கொஞ்சம் யோசிச்சு நடந்துக்கோ” என்றாள் அக்கா. “ரொம்ப கவலைப்படாதே அக்கா, அதெல்லாம் என்னை மாதிரி இளைஞர்களுக்கு வராதாம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். ஆனால் கிஷோரின் நம்பிக்கை பொய்த்து விட்டது. ஒரு வாரத்திற்குப் பின் காய்ச்சல், இருமல், தும்மல் என வந்ததும் அனைவருக்கும் பயம் வந்தது. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உடனே மருத்துவர்கள் அவனை தனிமைப்படுத்தி கொரோனா இருக்கிறதா என பரிசோதனை செய்து பார்த்தனர். அவனது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்திப் பரிசோதனை செய்தனர். பிறகுதான் அந்த அதிர்ச்சியான தகவல் தெரிந்தது. கிஷோருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாயிற்று. அவன் இளைஞனாக இருந்ததால் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தது. அதனால் கரோனா தாக்கத்தில் இருந்து அவனால் மீண்டு வர முடிந்தது. ஆனால் கிஷோரின் பாட்டிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை கிஷோரால் தாங்க முடியவில்லை. “ அய்யோ! பாட்டி என்னால தான் உங்களுக்கு இது பரவிடுச்சு, , பட்டாதான் புத்தி வரும்ன்னு அப்பா சொன்னது உண்மையாயிடுச்சே, என்னை மன்னிச்சுங்க பாட்டி” என்று கூறி அழுதான் கிஷோர். ஆம், உண்மைதான். தீதும் நன்றும் பிறர் தர வாரா. விழிப்போடு இருப்போம். வீட்டிலேயே இருப்போம். கரோனா பரவுவதை தடுப்போம். நீதி : தீமையும் நன்மையும் அடுத்தவர்களால் வருவது இல்லை. நாமே உருவாக்கிக் கொள்வதுதான். https://www.hindutamil.in/news/vetrikodi/news/547643-small-story-3.html
  • அமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம் என்பது வெட்கங்கெட்ட குற்றச்சாட்டு: சீனா ஆவேசம் கோப்புப் படம்.   கடந்த டிசம்பரில் சீனாவில் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து வேகமாகப் பரவியுள்ளது, ஆனால் ஜனவரி 16ம் தேதி வரை பலிகள் எண்ணிக்கை இல்லை என்று கூறி வந்ததோடு மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றும் அபாயகரமான வைரஸ் என்ற உண்மையையும் மறைத்து உலக நாடுகளுக்கு சீனா பெரிய துரோகம் இழைத்து விட்டது என்று உளவுத்துறை தகவல்களை வைத்து அமெரிக்கா சீனாவைக் கடுமையாகச் சாடியது. மேலும் சீனா கூறும் பலி எண்ணிக்கை பொய்யானது என்றும் அதற்கு மேல்தான் அங்கு பலிகள் இருக்கும் எனவும் ட்ரம்ப் முதற்கொண்டு அனைத்து அரசியல்வாதிகளும் கடுமையாகச் சாடினர். இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுன்யிங் ஹுவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “சீனா மிகவும் வெளிப்படையாக உரிய நேரத்தில் கரோனா தகவல்களை உலகுக்கு அளித்தது. பன்னாட்டு பொதுச்சுகாதார பாதுகாப்பு குறித்து உலகச் சுகாதார அமைப்பும், கொள்ளை நோய், தொற்று நோய் நிபுணர்களும்தான் தீர்ப்பளிக்க வேண்டும். அமெரிக்க அரசியல்வாதிகள் அல்ல, ஏனெனில் இவர்கள் இயல்பாகவே பொய்யர்கள். பொய்கூறியே பழக்கப்பட்டவர்கள். உலகச் சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவரே சீனா மீதான இத்தகையக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார். சீனா கரோனா மீது மக்கள் நலன்களுக்காக விரைவு கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உலக அளவில் கரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தகவல்களை அவ்வப்போது அளித்துக் கொண்டுதான் இருந்தது. அமெரிக்கா திண்டாடுகிறது என்பதை வருத்தத்துடன் புரிந்து கொள்கிறோம் அதன் சுகாதார அதிகாரிகள் கடும் நெருக்கடியில் இருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்கிறோம், அமெரிக்க மக்களின் கடினமான நிலைக்காக உண்மையில் வருந்துகிறோம். இதனையடுத்து மனிதாபிமான உணர்வில் சீனா எங்களால் முடிந்த உதவியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கவே தயாராக உள்ளது. எனவே கரோனாவுக்கு எதிரான போரில் பொறுப்பாகச் செயலாற்ற வேண்டிய நேரமே தவிர குற்றம்குறை காண்பதில் நேரத்தை அமெரிக்கா செலவிடுதல் கூடாது. அரசியலுக்கும் மேலாக மக்களின் ஆரோக்கியம் முக்கியம். பொதுமக்கள் சுகாதார விவகாரத்தை அறமற்ற முறையிலும் வெட்கங்கெட்ட முறையிலும் அரசியலாக்கக் கூடாது. இது அமெரிக்க மக்கள் உட்பட உலக மக்களின் கண்டனங்களையும் ஈர்த்து விடும்” என்றார். https://www.hindutamil.in/news/world/547664-china-refutes-u-s-officials-accusations-of-concealing-extent-of-virus-1.html
  • Cocoville ஐச் சேர்ந்த திரு. முடுலிங்கவின் கதைகள் சில படித்திருக்கின்றேன். ஒரு சின்னக் கதையைச் சுத்தி பல விடயங்களைப் பின்னுவார். பல நாடுகளில் வேலை நிமித்தம் இருந்த அனுபவம் அவருக்கு கைகொடுக்கின்றது.  ஷோபாசக்தி முத்துலிங்கத்தைக் கிண்டலடித்து எழுதிய கதை!  
  • பெஷாவரில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது | கோப்புப் படம்: ஏபி   பாகிஸ்தானைச் சேர்ந்த தப்லிக் கி ஜமாத் உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு ஜமாத் உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ராய்விந்த் நகரத்தையும் தனிமைப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டு, நகரத்துக்குள்ளேயும், நகரத்திலிருந்து வெளியேறும் பொதுமக்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தப்லிக் ஜமாத் போதகர்கள் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.     அதே போல, ஜமாத்தை சேர்ந்த ஐந்து நைஜீரிய பெண்கள் உட்பட 50 உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு லாகூருக்கு 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கசூரில் இருக்கும் தனிமை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிந்த் மாகாணத்தில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்த 38 பேருக்கு தொற்று பரவியிருப்பதாக செய்தி வந்துள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியதால், சிந்த் மற்றும் பஞ்சாப் காவல்துறை ராய்விந்த் மர்காஸில் (ஜமாதின் பாகிஸ்தான் பிரிவு தலைமையிடம்) இன்னும் சிலரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மார்ச் மாதம், கூட்டம் கூட்டுவது கிருமி தொற்றை பரப்பலாம் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி தப்லிக் ஜமாத் தங்களது ஆண்டு கூட்டத்தை கூட்டியதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கூட்டம் 5 நாட்கள் நடந்தது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இதை ரத்து செய்யக்கோரி முன்னரே அறிவுறுத்தியுள்ளனர். "அரசு அச்சப்பட்டது தற்போது நிஜமாகியிருக்கிறது. சில தப்லிக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தான் அதன் பரவுலுக்குக் காரணமாகியுள்ளனர்" என லாஹூர் நகரின் துணை காவல்துறை ஆணையர் தனிஷ் அஃப்ஸல் தெரிவித்துள்ளார். மேலும் ராய்விந்த் தப்லிக் ஜமாத் மார்கஸ் கட்டிடத்தில் தற்போது 600 போதகர்கள் தஞ்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். "சுகாதார குழு இதுவரை அங்கிருந்த 110 பேரை பரிசோதித்துள்ளது. அதில் 41 போதகர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. ராய்விந்த் பகுதிக்குள்ளும், வெளியே போக நினைப்பவர்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு காவல்துறை, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் காவலில் உள்ளனர்" என்று கூறியுள்ளார். இன்னும் சில ஜமாத் போதகர்கள் மசூதிகளிலும், பல்வேறு மாவட்டத்தில் இருக்கும் அவர்களது மையங்களிலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தனிஷ் கூறியுள்ளார். பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியா, மலேசியா, ப்ரூனே ஆகிய நாடுகளிலும் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களே கரோனா கிருமி தொற்றை பரப்பியவர்களாகப் சந்தேகிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஊரடங்கை மீறி கூட்டத்தை நடத்தியதற்காக ஜமாத் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் மர்காஸில் கடந்த மாதம் ஜமாத் கூட்டத்தில் பங்குபெற்ற 53 பேருக்கு இதுவரை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் காஸாவில் கரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட நோயாளிகள் இருவரும் பாகிஸ்தானில் தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள். பாகிஸ்தானில் வியாழக்கிழமை மதியம் வரை கரோனா தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 2,250 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. 32 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். பஞ்சாபில் அதிகபட்சமாக 845 பேருக்கும், சிந்த் மாகாணத்தில் 709 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-க்யூ கட்சி, தப்லிகி ஜமாத்துக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகர், பர்வேஸ் இலாஹி, ஜமாத்துக்கு எதிரான பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த ஜமாத்தின் போதகர்கள் எங்கும் குழப்பம் ஏற்படுத்தியதில்லை என்றும், அதன் உறுப்பினர்கள் அமைதியின் தூதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மசூதிகளிலிருந்து கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஜமாத் உறுப்பினர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு மற்ற மசூதிகளுக்கோ, தப்லிகி மையங்களுக்கோ மாற்றப்பட்டு, தனிமைபடுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-க்யூ கட்சியின் தலைவரும் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து, ஜமாத் உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். - பிடிஐ https://www.hindutamil.in/news/world/547593-pak-places-raiwind-under-complete-lockdown-after-tablighi-jamaat-members-tested-coronavirus-positive-2.html